Home > ஆன்மிக சிந்தனைகள், பொது > இந்து மதம்-அறிமுகம்

இந்து மதம்-அறிமுகம்


பெயர் வந்தவிதம்

பாரசீகத்தினர் சிந்து நதிக்கு கிழக்குப் பக்கம் வசிப்பவர்களை சிந்துக்கள் என்றும் அவர்களது இறையுணர்வு முறையை (மதத்தை) சிந்து மதம் என்றும் அழைக்கலாயினர். பாரசீக மொழியில் ச எழுத்து ஹ சப்தத்துடன் பேசப்படும். ஆகவே சிந்து ஹிந்துவாயிற்று.


இயல்பாக விளைந்த ஒன்றை கோட்பாடுகள், விதிமுறைகள் என்று கட்டம் கட்டும் முயற்சி பின்னர் நடந்தது. இன்றைய இந்து மதத்தை ஒரு வரியில் சொல்லுவதாக இருந்தால் ‘வேதத்தை நம்புபவர்கள்’ என்று சொல்லலாம். இவர்களது விதிமுறைகள் என்று ஆரம்பித்தால் ஒரு வரியில் சொல்வதானால் ‘எல்லாமே’ என்று வேண்டுமானால் சொல்லலாம். மற்றபடி ஒரு வரியிலோ அல்லது ஒரு பக்கத்திலோ கூட சொல்லுவது கடினம்.

ஆரம்பம்

இயல்பாக தோன்றிய ஒன்றிற்கு ஆரம்ப கால வரலாறு அறிவது கடினம். இந்துப் பெரியோர்களைக் கேட்டால் மனிதகுலம் தோன்றிய போதிலிருந்து இருந்து வருவதாக கூறுவார்கள். ஐரோப்பிய அறிஞர்கள் இந்து மதம் கிறிஸ்துவுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கூறுகிறார்கள். ஆனால் இதைத் தவறென்று நிரூபிக்க கிறிஸ்துவுக்கு 5000 ஆண்டுகள் முந்தைய கல்வெட்டுக்கள், சிலைகள் ஏராளமாக இந்தியாவில் இருக்கின்றன.

இயல்பு

பழங்காலத்தில் பூமியில் இருந்த மதங்களில் இன்றளவும் உயிர்ப்புடன் இருந்து உலகிலுள்ள பெரிய மதங்களில் ஒன்றாக இருப்பது இந்து மதம் மட்டுமே. மற்றப் பெரிய மதங்களான புத்த மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாம் ஆகியவை கடந்த சுமார் 2500 வருடங்களில் தோன்றியவை. இதில் புத்த மதம் நேரடியாக இந்து மதத்திலிருந்து தோன்றியது.

கிறிஸ்தவ மதம், இஸ்லாம் ஆகியவை தோன்றிய போது அந்த இடங்களில் ஏற்கனவே ஆதிக்கத்தில் இருந்த மதங்கள் அவற்றை எதிர்க்க முயன்று அழிந்து போயின. இந்து மதத்தில் புதுக் கருத்துக்களுக்கும் வழிமுறைகளுக்கும் எப்போதுமே இடம் இருப்பதால் அத்தகைய நிலை ஏற்படவில்லை. மேலும் மற்ற மதங்கள் வெளியிலிருந்து புகும் போதும், அவற்றைப் புகுத்திய அரசர்கள் வலுக்கட்டாயமாக திணிக்காதவரை, இந்து மதம் அதை எதிர்த்ததில்லை. மாறாக இருபுறமும் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றமே நிகழ்ந்தது.

எண்ணற்றக் கடவுள்கள், சிலை வழிபாடுகள், இயற்கை வழிபாடுகள் எல்லாம் இந்து மதத்தில் உண்டு. உருவமற்ற எங்கும் நிறைந்த கடவுள் தத்துவமும் மிகச் சிறந்த விளக்கங்களுடன் இதில் உண்டு. ஒன்றுக்கொன்று எதிர் மறையான கருத்துகள் இதில் ஏராளம். இவை குழப்பம் ஏற்படுத்துவதற்கு பதிலாக இவற்றில் ஈடுபடும் மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகின்றன. இந்த எதிர்மறைகளில் இருந்து நேரடி இறையுணர்விற்கு இவை சிந்திக்கும் மனிதனை தூண்டிவிடுகின்றன.

  1. vedaprakash
    January 26, 2010 at 1:49 pm | #1

    நீங்கள் உபயோகிக்கும் அந்த நிறத்தில் என்னால் ஒன்றும் படிக்க முடியவில்லை.

    கண்கள் கூசுகின்றன!

    ஏன் நிறத்தை மாற்றக் கூடாது?

    • January 27, 2010 at 5:16 pm | #2

      நிறம் மாற்றப்பட்டுள்ளது. உங்கள் ஆர்வத்துக்கு நன்றி.

  2. March 29, 2010 at 4:06 am | #3

    என்னுடைய இந்து நண்பர் ஒருவர் இறைவனுக்கு,மனைவியும்,பிள்ளைகளும் உண்டு என்றும்,அவர்களும் இறைவன் தான் என்றும் ,சொன்னதுடன்,அவர்களின் பெயர்களையும் பட்டியல் போட்டார்.நேரடியாக அது பிழை என்று சொல்லி அவரின் நம்பிக்கையை பாழ்படுத்த நான் விரும்பவில்லை, ஆனால் அவர் சொன்ன கருத்துக்கள் இந்து வேதங்களுக்கு முரணாக உள்ளதையே நான் காண்கிறேன்.யாராவது ஒரு இந்து எனக்கு இதை விளக்கிட முடியும் என்றால்,ரொம்ப மகிழ்ச்சி.அவர் முரண்பட்ட வேத வசனங்களை இதோ ……

    ————————————————-

    ‘ஏகாம் எவாத்விதியாம்’
    ‘அவன் ஒருவனே!அவனன்றி மற்றொருவர் இல்லை’
    -சந்தோக்யா உபனிஷத் 6:2:1-
    (The principal Upanishad by S.Radha Krishnan page 447&448)
    (Sacred books of the east volume1> the Upanishad part 1, page 93)

    இறைவன் ஒருவன் என்னும் போது,இறைவனுடைய பிள்ளைகளும்,மனைவிகளும் எப்படி இறைவன் ஆக முடியும் என்பதே என்னுடைய முதல் சந்தேகம் ?

    ————————————————-

    ஸ்வேதஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 6 : 9
    ‘நசாஸ்யா காஸிக் ஜனிதா நா சதிபஹ்’
    ‘அவனைப் பெற்றவர் யாரும் இல்லை. அவனைப் படைத்தவர் யாரும் இல்லை’
    (The principal Upanishad by S. Radha krishnan page 745)
    (And in sacred books of the east volume 15> The Upanishadpart 2, page 263)

    யஜீர் வேதா அதிகாரம் 32 : 3
    ‘அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை.அவனே வணங்குவதற்கு தகுதியானவன்.’
    (The Yajurveda by Devi Chand M.A page 377)

    இறைவனைப் பெற்றவர் யாரும் இல்லை என்னும் போது , இறைவனுக்கு பிறந்த பிள்ளைகள் நிச்சயம் இறைவன் ஆக முடியாது அல்லவா இதுவே என்னுடைய இரண்டாவது சந்தேகம்?

    ————————————————

    அடுத்து என் மனதில் எப்போதும் எழும் ஒரு கேள்வி,வேதங்கள் சொல்வதைப் பாருங்கள்.

    யஜீர்வேதா அதிகாரம் 40 :9
    ‘அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே’
    ‘இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.’

    இயற்கை பொருள்களை வணங்கியவர்கள் இருளில் நுழைவர் என்று வேதங்கள் சொல்லும் போது ,இந்துக்கள் ஏன் இயற்கைப் பொருளான கல்லை சிலை வடித்து வணங்குகின்றனர் ?

    இது ஒரு இருளில் நுழையும் செயல் இல்லையா ?

    ———————————————–

    நீங்கள் சிலையில் வடித்துள்ளவை இறைவன் அல்ல என்று உங்கள் வேதங்களே சொல்கிறது மேலும் அவற்றை எதிர்க்கிறது.

    ‘எவருடைய அறிவு அவரிடமிருந்து எடுக்கப் பட்டு விடுகிறதோ அவரே போலி தெய்வங்களை வணங்குவர்.’

    - பகவத் கீதை – அதிதியாயம் 7 – வசனம் 20

    ‘நம்மை படைத்த இறைவனை கற்பனை செய்ய நம்மால் முடியாது’

    -ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் 4 – 19
    -யஜூர் வேதம் 32 – 3

    ———————————————–

    உண்மையிலேயே இந்த வேத வசனங்களை நான் ஆதரிக்கிறேன்,இவை முற்றிலும் உண்மையான கருத்துக்களையே பகர்கிறது,ஆனால் நடை முறையில் உள்ள இந்து மதம் இவற்றை எங்கும் செயற்படுத்தியதாக எனக்கு தெரியவில்லை.யாராவது விளக்க முடியுமானால் விளக்குங்கள்

  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 50 other followers