Archive

Archive for March, 2010

உங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும் ?.

March 20, 2010 2 comments
காதல்


உங்கள் ராசிக்கு காதல் எப்படி இருக்கும் ?.

மேஷம்

இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்..

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.

கடகம்

இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்

கன்னி

கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை

கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும்,மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம்

எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது.துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.

விருட்சிகம்

விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.

தனுசு

இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார்.தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்

மகரம்

இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.

மீனம்

மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்



http://tulsiramanastrology.com/Love.aspx

உருத்திராட்சம் அணிவது ஏன்?

March 19, 2010 3 comments

உருத்திராட்சம் அணிவது ஏன்?


உருத்திராட்சம் எப்படி உண்டானது? அதை மனிதர்கள் எவ்வாறு அணிய வேண்டும்? எந்த மந்திரங்களைக் கூறித் தா¢க்க வேண்டும்? அதில் எத்தனை பேதமுகங்கள் உள்ளன என்று காலாக்னி உருத்திரரைப் பூதாண்டார் கேட்டார்.

இக்கேள்விக்கு காலாக்னி உருத்திரர். ‘ஆயிரம் திவ்ய வருஷங்கள் நான் கண்களை மலர்த்திக் கொண்டிருந்தேன். எனது மலர்த்திய கண்களிலிருந்து நீர்த்துளிகள் பூமியின் கண்ணே விழுந்தன. அக்கண்ணீர்த் துளிகள் அன்பர்களுக்கு அனுக்ரகம் செய்ய வேண்டிய காரணத்தால் ஸ்தாவரமாகிப் பொ¢ய உருத்திராட்சங்களாயின’ என்றார்.

உருத்திராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர். பெண்களுக்கு மாங்கல்யம் போலச் சிவத் தொண்டர்களுக்கு அணிகலனாகத் திகழ்வது இது. இதைக் கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவர்.

உருத்திராட்சத்தை தரிசித்தால் லட்சம் மடங்கு புண்ணியம். தொட்டால் கோடி மடங்கு புண்ணியம். அணிந்தால் நூறு கோடி புண்ணியம். ஜெபித்தால் நூறுகோடி மடங்கு புண்ணியம் அடைவதாகப் புராணங்கள் கூறுகின்றன.

நெல்லிக்காய் அளவுள்ள உருத்திராட்சம் உத்தமம். இலந்தைப்பழ அளவு மத்திபம். கடலை அளவு அதமம். புழுக்கள் குடைந்ததும், நசுக்கியதும், நோயுற்றதும் அணியக்கூடாத உருத்திராட்சங்கள்.

இரே அளவுள்ளதும், உறுதியானதும், பொ¢யதும், சம முத்துகள் பொன்றுள்ளதுமான உருத்திராட்சங்களைப் பட்டுக் கயிற்றில் கோத்து உடலில் அணிய வேண்டும்.

இனி உருத்திராட்சத்தின் முகங்களையும் அதன் அதிதேவதைகளையும் காண்போம். இருமுக உருத்திராட்சம் பரத்துவ சொரூபம். இதை அணிந்தால் பரத்துவத்தை அடையலாம்.

இருமுக உருத்திராட்சம் அர்த்தநா¡£ஸ்வரா¢ன் உருவம் உடையது. இதனை அணிந்தால் எப்போதும் இன்பம் உண்டாகும்.

மும்முக உருத்திராட்சம் மூன்று அக்னியின் சொரூபம் கொண்டது. இதனை அணிவது அக்னி தேவர்க்கு இன்பமூட்டும்.

நான்கு முக உருத்திராட்சம் பிரம்மனின் சொரூபம். இதை அணிந்தால் பிரம்ம தேவன் இன்பமடைகிறான்.

ஐந்து முக உருத்திராட்சம் பிரம்ம சொரூபம் கொண்டது. இதனை அணிவதால் நரஹத்தி அழிகிறது.

ஆறுமுக உருத்திராட்சம் அதிதேவதை சுப்ரமண்யர். இதை அணிந்தால் அதிக செல்வமும் ஆரோக்கியமும் கிடைப்பதுடன், பக்தியும், அறிவும், செல்வமும், சுத்தியும் எய்தும்.

அறுமுக உருத்திராட்சத்திற்கு விநாயகரை அதிதேவதை என்றும் சொல்வார்கள்.

ஏழு முக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை சப்தமாதா. இதனை அணிந்தால் ஞானமும், ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்கும்.

எட்டு முக உருத்திராட்சம் அணிந்தால் அஷ்ட வசுக்களும், கங்கையும் ப்¡£தி அடையும். அதிதேவதை அஷ்டவசு.

இன்பது முக உருத்திராட்சத்தை அணிந்தால் நவசக்திகளும் இன்பமடையும். இதன் அதிதேவதை நவசக்தி.

பத்துமுக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை எமன். இதனை அணிந்தால் பாவங்களுக்கெல்லாம் பா¢காரம் ஏற்படும்.

பதினொரு முக உருத்திராட்சத்திற்கு அதிதெய்வம் பதினொரு உருத்திரர். இது சகல செளபாக்கியங்களையும் விருத்தியடையச் செய்கிறது.

பன்னிரண்டு முக உருத்திராட்சம் மகாவிஷ்ணுவின் சொரூபம். இது பன்னிரு ஆதித்ய சொரூபம் என்று அழைக்கப்படுகிறது.

பதின்மூன்று உருத்திராட்சம் போகத்தையும், சித்தியையும், சுகத்தையும் கொடுக்கிறது. இதனை அணிந்தால் காமதேவன் மகிழ்ச்சியடைகிறான்.

உருத்திர நேத்திரத்தில் உண்டாகிய பதினான்கு முக உருத்திராட்சம் சகலவிதமான நோய்களையும் நீக்கி என்றும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.

108 உருத்திராட்சம் கொண்ட மாலையை எப்போதும் மார்பில் அணிந்திருப்பவன் அடுத்தடுத்து செய்த அஸ்வமேதயாக பலத்தை அடைகிறான்.

உருத்திராட்சத்தின் அடி பிரம்மா. நாளம் விஷ்ணு. முகம் உருத்திரர். பிந்து சமஸ்தேவர்கள். அர்ச்சனை, ஹோமம் முதலியவற்றின்போது இதனை அணிந்தால் அஸ்வமேத யாகத்தின் பலனைக் கொடுப்பதோடு, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது.

உருத்திராட்ச மாலையைக்கொண்டு ஜெபித்தால் அதிக பலம், அதிக புண்ணியம். தலையில் அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். குறிப்பாகச் சிவனடியார்களால் போற்றப்படும் இரு முகம், ஐந்து முகம், பதினொரு முகம், பதினான்கு முகம் கொண்ட உருத்திராட்சங்களை அன்போடு பூசித்து அணிகின்ற மானிடர்கள் தா¢த்திரம் உடையவராய் இருந்தாலும் எல்லாரையும்விட அவரே செல்வம் நிரம்ப உடையவராகிறார்.

தீட்சை பெற்ற பெண்களும் உருத்திராட்சத்தை அணியலாம். உருத்திராட்ச தா¢சனம் பாவத்தைப் போக்கும். தொட்டால் சகல வெற்றிகளையும் கொடுக்கும். குவிக்கும்.

பிறப்பு – இறப்பு தீட்டுக்காலங்களில் உருத்திராட்சம் அணியக்கூடாது. சிவன் நாமத்தை இடைவிடாமல் உச்சா¢ப்போரும், புனிதம் மிக்க உருத்திராட்சத்தை அணிந்திருப்போரும் சிவ பக்தர்களில் தலைசிறந்தோர் என்று கூறுகின்றனர்.

‘ஆயமாமணி ஆயிரம் புனைந்திடில் அவரை
மாலயன் நான்முகன் புரந்தரன் வானவர் முதலோர்
பாயுமால் விடைப் பரமெனப் பணிகுவர் என்றால்
தூயமாமணி மிலைந்தவர் மனிதரோ சொல்வீர்’

என்று உருத்திராட்சத்தின் மேன்மையைப் பிரம்மோத்தர காண்டம் சிறப்பித்துக் கூறுகின்றது.


 

http://www.tamil-temples.com/ArticleDetails.asp?id=158

படைப்பிலிருந்து படைத்தவரை நோக்கி

March 17, 2010 Leave a comment

உங்கள் மனிதத் தன்மை பொங்கி வழியட்டும் .தெய்வீகம் அங்கே நிகழும்.

படைத்தவரை நீங்கள் நேசித்தால் அவரே அனைவரையும் விட மிகச் சிறந்தவர்.என நீங்கள் எண்ணினால் படைப்புக்கும் மேலான நிலையில் அவரை வைத்துப் போற்றுகிறீர்கள்.ஏனெனில் அவர் தான் படைத்தவரைப் பார்ப்பது அவரோடு இருப்பது தான் மிக உயர்ந்த அனுபவமாக இருக்கும்.உங்களுக்கு நம்பிக்கை இல்லாத பட்சத்தில் தான் இருப்பு மனம் இல்லாத தன்மை போன்றவை பற்றியெல்லாம் பேசுகிறீர்கள்.நம்பிக்கை இல்லாத வினாடியிலிருந்து இந்த விஷயம் மிகவும் சிக்கலாகி விடுகிறது.அதற்கு பிறகு மணிக்கணக்கில் வாதங்களில் ஈடுபட வேண்டியிருக்கும்.

ஏனென்றால் அன்பு அங்கே இல்லாமல் போகிறது.நம்பிக்கை என்றாலே நிபந்தனை இல்லாத அன்பு. நீங்கள் ஒருவர் மேல் அன்பு வைத்து யார் மேல் வைத்திருக்கிறீர்களோ அவர் பதில்வினை ஆற்றாவிட்டாலும் கூட உங்கள் நேசம் அப்படியே இருக்கிறது.நீங்கள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அத்தகைய நேசத்தை உண்ர்ந்திருக்க கூடும்.இன்னொருவர் நேசத்தை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார் .வெளிப்படுத்தி இருக்க மாட்டார்.ஆனால் நீங்கள் நேசித்துக் கொண்டிருப்பீர்கள்.ஒருமுறை ஒரு மாணவன் தன் கல்லூரியின் பேராசிரியரிடம் போய் உங்கள் உதவி வேண்டும் என்றார்.பேராசிரியர் கண்டிப்பாக உதவுகிறேன் என்றார். அதற்கு அந்த மாணவன் இது கல்வி சார்ந்தது இல்லை வேறு விஷயம் என்றார்.பேராசிரியருக்கு புரியவில்லை.என்னவென்று சொல்லுங்கள் என்றார். கல்லூரியிலேயே மிக அழகான பெண்ணின் பெயரைச் சொல்லிய அந்த மாணவன் நான் அந்த பெண்ணை நேசிக்கிறேன்.எங்கள் காதல் ஐம்பது சதவீதம் வெற்றியாகி விட்டது மீதம் ஐம்பது சதவீதம் வெற்றியாக நீங்கள் தான் உதவ வேண்டும் என்றார்.ஐம்பது சதவீதம் வெற்றி என்றால் என்ன அர்த்தம்? என்று பேராசிரியர் கேட்டார்?அந்தப்  பெண்ணை உயிருக்குயிராக நேசிக்கிறேன் ,ஆனால் அவள் இன்னும் எதுவும் சொல்லவில்லை அதைத்தான் ஐம்பது சத வீதம் வெற்றி என்று சொன்னேன் என்றார்.இந்த அளவுக்கு நேசம் வைத்திருப்பவர்கள் மற்றவர்கள் அதை தனக்கு வழங்க வேண்டும் என்று கூட நினைக்க மாட்டார்கள்.

கடவுள் நம்முடைய அன்புக்கு பதில்வினை ஆற்றாவிட்டாலும் பரவாயில்லை. அவர் இருக்கிறார் என்று நீங்க உறுதியாக நம்புகிறீர்கள்.நாம் பெரும்பாலும் யார் அருகில் இல்லையோ அவர்களைத்தான் பெரிதும் நேசிக்கிறோம்.பலரும் இறந்து போனவர்கள் மிகுந்த நேசம் வைத்திருக்கிறார்கள்.ஏன்னென்றால் அவர்கள் இங்கு இல்லை.அவர்கள் இங்கு இருந்த போது அவர்களின் முகத்தை கூட பார்க்க விரும்பவில்லை.அவர்களுடன் பேச்சு வார்த்தை கூட கிடையாது.ஆனால் அவர்கள் இறந்த பிறகு நேசிக்க தொடங்குவீர்கள்.இங்கு இல்லாதவர்களை நேசிப்பது உங்கள் பழக்கமாகிவிட்டதால் தான் கடவுளிடம் கூட உங்கள் நேசம் அப்படி இருக்கிறது.அவர் இங்கேயே இருந்து அவரோடு உங்கள்  உணவையும் வாழ்க்கையும் பகிர்ந்து கொள்ள நேரிட்டால் கடவுளோடு உங்களுக்கு நிறைய பிரச்சனை ஏற்பட்டிருக்கும்.உங்கள் அனுபவித்தில் அவர் இப்போது இங்கே இல்லை என்பதால் தான் அவரை நேசிப்பது மிகவும் எளிதாக இருக்கிறது.

அன்பு என்பது மகிழ்ச்சியானது அல்ல. அது ஒரு ஆழமான அற்புதமான வலி.மிக மோசமான காயம் ஏற்படுத்துகிற அற்புதமான் வலி.உங்களுக்குள் ஒன்று கிழிந்து சின்னபின்னமாக ஆனாலும் கூட சொல்லப் போனால் எல்லா விஷயங்களும் கிழிந்து போகிற அளவுக்கு உங்களுக்கு வலி ஏற்படுகிற போது தான் அன்பு என்றால் என்னவென்பதை உணர்வீர்கள்.மிக மகிழ்ச்சியாக இருந்தால் அது அன்பு அல்ல. அது ஒரு வசதி.ஒரளவு அன்பை அது உணரக்கூடும் ஆனால் அன்பை உணர்ந்திருப்பீர்களேயானால் அதை ஒரு வலியாக , சுகமான வலியாக உணர்ந்திருப்பீர்கள்.இப்படி எல்லாவற்றைப் பற்றியும் எல்லோரைப் பற்றியும் உணரத் தொடங்கி விடுவீர்களேயானால் உங்கள் உடல், மனம் சார்ந்த எல்லைகளை கடந்து போகிற நிலை தானாகவே நிகழும்.

அதற்கென்று நீங்கள் முயற்சி எடுக்கத்தேவை இல்லை. உங்கள் உடல் சார்ந்த எல்லைகளை கடந்து போக நீங்கள் நினைத்தால் நீங்கள் உங்களை காயப்படுத்திக் கொள்வீர்கள் ஆனால் இது அன்பின் வழியாக நிகழ்கின்ற போது இயல்பாக நிகழ்கிறது.இதன் எல்லைகளை இனிமேலும் எல்லைகளாக இருப்பதில்லை.யாராவது ஒரு முனிவரோ, ஞானியோ கடவுளை நேசிப்பது பற்றி பேசி இருக்கக் கூடும். ஆனால் உஙகளுக்கு இருக்கிற , சிந்திக்கிற அறிவு, தர்க்க அறிவு, சந்தேகிக்கிற அறிவு, கேள்வி கேட்கிற அறிவு கடவுளை பற்றி, கடவுளைப் நேசிப்பது பற்றிப் பேசாது.அது ஒரு பொருட்டாக இருக்காது.கடவுளைப் பற்றியோ படைத்தவரைப் பற்றியோ  நீங்கள் யோசிக்கத் தொடங்கியதன் நோக்கமே நீங்கள் படைப்பை உணர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் இந்த உலகிற்கு வருவதற்கு முன்பாகவே “படைப்பு” என்று எதை அழைத்தீர்களோ அது இருக்கிறது.எனவே இதை யாரோ படைத்திருக்க வேண்டும்.என்று யூகித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

அதன் பிறகு படைத்தவ்ர்களுக்கு என்று சில பெயர்களைக் கொடுக்கத் தொடங்கிவிட்டீர்கள்.எனவே படைத்தவரைப் பற்றி எங்களுடைய எண்ணமே படைப்பின் மூலமாகத்தான் வந்திருக்கிறது.நீங்கள் படைப்பை வெறுத்தால் உங்கள் பக்கத்தில் இருக்கிற மனிதர் வெறுத்தால் அதன் பிறகு கடவுளின் மேல் அன்பு செலுத்துவதாகச் சொல்வதில் எந்த அர்த்தமுமில்லை.இது உங்களை எங்கேயும் கொண்டு சென்று சேர்க்காது.எனென்றால் நீங்கள் படைப்பை வெறுக்கத் தொடங்கி விட்டீர்களேயானால் அதைப் படைத்தவரோடு உங்களுக்கென்ன வேலை?படைப்போடு நீங்கள் ஆழமாக நேசிப்பை உருவாக்கிக் கொண்டால்தான் இதைப் படைத்தவரோடு தொடர்பை ஏற்படுத்த முடியும்.எனவே, தெய்வீகத்தின் பெயரால் மனிதத் தன்மையை இழந்து விடாதீர்கள்.உங்கள் மனிதத் தன்மை பொங்கி வழிகிற போது தெய்வீகம் தானாக நிகழும்.உஙள் பக்கத்தில் இருப்பவரை நேசியுங்கள் என்று யேசுநாதர் சொன்னது மிகவும் முக்கியமானது.

அடுத்த வீட்டில் இருக்கும் மனிதரோடு காதல் வயப்படுமாறு அவர் சொல்லவில்லை.இப்பொழுது உங்களுக்கு பக்கத்தில் இருப்பவரை நேசியுங்கள் என்று சொன்னார்.அருகில் இருப்பவர் யாராக இருந்தாலும் எத்தகையவராக இருந்தாலும் அவரை நீங்கள் நேசிக்க வேண்டும். அவர் மனதில் எத்தனையோ தீய எண்ணங்கள்  ஒடிக்கொண்டிருக்கும் உங்களுக்கு தெரியாது அவர் நல்லவரா?தீயவரா?அவரை நீங்கள் விரும்புகிறீர்களா?இல்லையா? இதெல்லாம் பொருட்டில்லை.அவர் எப்படி இருகிறாரோ அப்படியே நீஙகள் ஏற்றுக்கொண்டு அவருக்கு அன்பு செலுத்துங்கள். இதை நீங்கள் செய்தால் இந்த படைப்போடு நீங்கள் ஒன்றி விடுவீர்கள்.படைப்போடு கலந்து விடுவதுதான் படைத்தவரோடு கலப்பதற்கு ஒரு வழி.அதுதான் கடவுளை சென்றடைவதற்கான கதவு.இந்த படைபை நிராகரித்து விட்டால் படைத்தவரைப் பற்றி எதையும் நீங்கள் தெரிந்து கொள்ள இயலாது.எனவே,கடவுளை நேசிப்பதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

உங்கள்  சுவாசத்தில், நீங்கள் எடுத்து வைக்கிற ஒவ்வொரு அடியில், நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலில் அன்பை கொண்டு வாருங்கள்.அது யாரைக் குறித்தோ, எதை குறித்தோ இருக்க வேண்டுமென்று அவசியமில்லை.உங்களை சுற்றியிருக்கிற எல்லவற்றோடும் இரண்டறக் கலக்கிற ஏக்கத்தோடு உஙகளை வளர்த்துக் கொள்ள முடிந்தால்,இந்த படைப்பே படைத்தவருடன் உங்களை கொண்டு சென்று சேர்க்கும்.

நன்றி : சத்குரு வாசுதேவ்

www.ishayoga.org

 

யார் கடவுள் ?

March 16, 2010 1 comment

கடவுள் மனிதனை படைத்தாரா என்று எனக்கு தெரியாது ஆனால் மனிதன் பல கடவுள்களை படைக்கிறான்.
கடவுள் என்பவர் ஒருவர் என்றால் எதற்காக இத்தனை கடவுள்கள்.

பிறந்த குழந்தைக்கு கடவுள் யார் என்று தெரியுமா ?

தெரியாது!

எந்த
குழந்தையும் எவற்றையும் தானே கற்றுகொள்வதில்லை மாறாக குழந்தை பருவத்தில்
தன் பெற்றோரிடமிருந்து கற்றுக்கொள்வது தான் அதிகம். குழந்தைகளுக்கு ஒரு
குணம் உண்டு, உற்று கவனித்தால் தெரியும் என்னவென்றால், மற்றவர் என்ன
செய்கிறார் அல்லது கூறுகிறார் என்பதை முதலில் உற்று கவனிக்கும் பிறகு அதை
செய்து பார்க்கும், நம்பவில்லை என்றால் முயற்சித்து பாருங்கள். ஆதலால்
நாம் அனைவரும் நம் முன்னோர்களிடம் கற்றுகொண்டது தான் அதிகம். அவர்கள்
கூறிய தெய்வத்தை தான் நாம் வணங்குகிறோம்.

இது அனைவருக்கும்
தெரிந்ததே, இருப்பினும், ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள்,
என்பது போல் , ஒரு காலகட்டத்திற்கு பிறகு எவராலும் தங்களை மாற்றி
கொள்ளமுடிவதில்லை.

கடவுள் மனிதனை தன் சாயலாக படைத்தார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் !
மனிதன் இது எப்படி சாத்தியம் என்று நினைத்தனோ என்னமோ !
கடவுளை வேறு உருவங்களில் படைக்க ஆரம்பித்துவிட்டான்.

மனிதர்கள் மிகவும் புத்திசாலிகளல்லவா.

திக்கற்றவனுக்கு தெய்வம் துணை!
நம்பிக்கை தான் கடவுள்!
தன் மேல நம்பிக்கை கொண்டவனுக்கு கடவுள் தேவை இல்லை.(தன் நம்பிக்கை)
தன் மேல நம்பிக்கை அற்றவனுக்கு தெய்வம் தான் துணை….

ஏமாறாதீர்கள்:

நம் மக்கள் கடவுளை நம்புகிறார்களோ இல்லையோ கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களை அதிகமாக நம்புகிறார்கள்.

கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார், பின் எதற்காக கடவுளை தேடி அலைகிறீர்கள்!


புரிந்து விட்டது. நீங்கள் கடவுளை தேடி அலையவில்லை மாறாக நீங்கள் உங்கள்
வாழ்கையில் சந்தோஷமாக இருக்க, பொன், பொருள், படிப்பு மற்றும் பல
காரியங்களுக்காக கடவுளை தேடி அலைகிறீர்கள்.

மனிதனின் இந்த சிறுமையான உலக இன்பங்களின் காரணமாக, மனிதன் கடவுளை புரிந்து கொள்ளவும் முடியவில்லை மற்றும் உணரவும் முடிவதில்லை.

காதல் கண்ணை மறைக்கும் என்பார்கள், அது போல் உலக இன்பங்கள் கடவுளை உணரும் ஞான கண்களை மறைக்கிறது.

Source- http://www.eegarai.net

கடவுள் எங்கே இருக்கிறார்?

March 15, 2010 1 comment
கடவுள் எங்கே இருக்கிறார்?

நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.

“நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”

“நிச்சயமாக ஐயா..”

“கடவுள் நல்லவரா?”

“ஆம் ஐயா.”

“கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?”

“ஆம்.”

“எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?”

(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)

“உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?”

“ஆம் ஐயா..”

“சாத்தா‎ன் நல்லவரா?”

“‏இல்லை.”

“எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?”

“கடவுளிடமிருந்துதா‎ன்.”

“சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?”

“ஆம்.”

“அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?”

(மா‎ணவர் பதில் சொல்லவில்லை)

“இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?”

……

“அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?”

…….

“ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?”

“ஆம் ஐயா..”

“நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது ‘கடவுள் ‏ இல்லை’ என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?”

“ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.”

“ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே..” ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.

(‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)

“ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?”

“நிச்சயமாக உள்ளது.”

“அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?”

“நிச்சயமாக.”

“இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை.”

(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)

“ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). “வெப்பம் ‏இல்லை” என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.”

(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)

“சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?”

“ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.”

“நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?”

“சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?”

“ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது.”

“பிழை?? விளக்கிக் கூற முடியுமா?”

“ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.

அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎�
�். மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.

இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் “வாழ்வு இனி இல்லை” என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏

“சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?”

“”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்.” பேராசிரியர் பதிலுரைத்தார்.

“உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?”

(பேராசிரியர் த‎ன் தலையை ‘இல்லை’ என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)

“அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ‘ஒருவகையா‎ன’ அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?”

(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)

“இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?”

(வகுப்பறை ‘கொல்’லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)

“யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?”

“அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று.”

“மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?”

(மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)

“நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!”

“அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.”

இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.

இது ஒரு உண்மைச் சம்பவம். ‏

இறுதிவரைப் பி‎ன்வாங்காமல் விவாதித்த அந்த மாணவர்?

வேறு யாருமல்ல.

ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.
Posted Image

http://www.nilacharal.com

உங்கள் துணை எப்படிப்பட்டவர்

March 14, 2010 1 comment

காதல்! உலகத்தில் இருபது முதல் அறுபதுவரை அத்தனைபேரையும் கட்டிப்போடும் மந்திர சக்தி. காதலில் ஜெயிப்பது தோற்பதை விட அதை கடந்து வராதவர்கள் ஒருசிலர். அப்படி கடக்காதவர்கள் பிறவிப்பயன் அற்றவர்களே. ஒவ்வொருவருக்கும் காதல் வந்தபின் அவரவர் துணையை
பற்றி அறிய ஆவலாக இருக்கும். அவர் தன் மேல் அன்பு எவ்வளவு வைத்திருக்கின்றார், தனக்காக என்ன எல்லாம் செய்வார் இப்படி பல. அப்படியானவர்களுக்கு இந்த பதிவு.(திருமணமானவர்களும் தங்கள் துணை பற்றி அறியலாம்.)

இதை நானாக சொல்லவில்லை நான் இன்னொரு இடத்தில் படித்ததை உங்களிடம் பகிருகின்றேன். (யான் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறவேண்டும்.)

முதலில் உங்கள் பிறந்த ஆண்டு, மாதம், திகதி ஆகியவற்றை கூட்டி எடுங்கள். அதுதான் உங்கள் காதல் எண்.(இதேபோல உங்கள் துணையின் எண்ணையும் கூட்டி எடுங்கள்) உதாரணம்: பிறந்த திகதி 8 பிறந்த மாதம் 8 ஆண்டு 1988 என்றால் 8+8+1+9+8+8=42 பின் 4+2 அதையும் கூட்டுங்கள். 6 என்பது தான் காதல் எண்.

எண் ஒன்று.

ஆண்.

உங்கள் துணையிடம் விசுவாசமாகவும், பெருந்தன்மையோடும், நன்றிமிக்கவர்களாகவும் இருக்கும் நீங்கள் மனைவியின் செயலை குறை சொல்வதை தவிர்ப்பது நல்லது. அதன் பின் உங்கள் வாழ்க்கை சொர்க்கம்தான்.

பெண்.

வாழ்க்கையின் இறுதிவரை அனுபவித்து வாழும் நீங்கள் தன் துணை தன்னைவிட எல்லா விடய்த்திலும் உயர்ந்து நிர்க்கவேண்டும் என எதிர்பார்ப்பவர்.(சமையலிலுமா தெரியவில்லை.) அப்படிப் பட்டவர் கிடைத்து விட்டால் பாராட்டவும் தவறமாட்டார். லட்சியவாதி ஆனா நீங்கள் நகைச்சுவை உணர்வோடு புத்திசாலிகளாகவும் இருப்பீர்கள்.

எண் இரண்டு.

ஆண்.

காதல் மன்னன் பட்டம் உங்களுக்குத்தான். உங்கள் துணையை அனுசரித்து போவதில் நீங்கள் தான் கில்லாடிகள். அவரின் எத்தகைய பிரச்சனைகளையும் இலகுவாக அணுகி தீர்த்து வைப்பீர்கள்.

பெண்.
கணவர் எள் கொண்டு வா என்றால் என்னை கொடுப்பவர் நீங்கள். உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் தொட்டால்சினுங்கிகளான நீங்கள், நீங்கள் செய்யும் எல்லா விடயங்களையும் உங்கள் அழகையும் உங்கள் துணை பாராட்ட வேண்டுமென எதிர்பார்ப்பவர். சுற்றி இருப்பவர்களை கலகலப்பாக வைத்திருப்பீர்கள்.

எண் மூன்று.

ஆண்.

இந்த காலத்து ராமனுங்க நீங்க. இன்னொருபுறம் வாரி வழங்கும் கர்ணன். எல்லா விடயங்களையும் விளையாட்டாக எடுக்கும் நீங்கள் சிறந்த பேச்சாளர். பொறாமை என்றால் அது என்ன விலை என கேட்பவர்கள்.

பெண்.

ஆண்மை நிறைந்த ஒருவரை எதிர்பார்க்கும் நீங்கள் அழகை பெரிதாக பார்க்கமாட்டீர்கள். நாகரிகம் பிடிக்காது. எல்லா கருமமும் உங்களுக்கு தூசு. எதற்கும் அஞ்சா நெஞ்சம் கொண்டவர்கள்.

எண் நான்கு.

ஆண்.

உங்கள் துணையை அதிகமாக நேசிப்பீர்கள். தூர சிந்தனையோடு பெருந்தன்மையான நீங்கள் உங்களவருகாக உயிரைக்கூட கொடுப்பீர்கள். பூரண சுதந்திரம் கொடுக்கும் நீங்கள் தான் கணவராக வரவேண்டுமென எல்லோரும் எதிர்பார்ப்பர்.

பெண்.

உங்களை யார் நேசித்தாலும் அவரிடம் விசுவாசமாக இருப்பீர்கள். உங்களை நேசிப்பவர் சந்தோசமாக இருக்க நீங்கள் தான் காரணமாக இருப்பீர்கள்.

எண் ஐந்து.

ஆண்.

பெண்களிடையே உங்களுக்கு மவுசு அதிகம். உங்கள் கடைக்கண் பார்வைக்கு பலர் ஏங்குவர். ஆனால் உங்கள் போக்கு அவர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் அதேசமயம் சந்தோசத்தையும் கொடுக்கும். புரியாத புதிரான நீங்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்வீர்கள்.

பெண்.

இவள் தான் பெண் என சொல்லவைக்கும் நீங்கள் பேராசையும் கொண்டவர்கள். ஆனால் உங்களை மனைவியாக அடைந்தவர்களுக்கு வாழ்க்கை சொர்க்கம்தான்.

எண் ஆறு.

ஆண்.

கடவுளும் காதலும் வேறு இல்லை என வாழ்பவர். பெண்களை மதிக்க தெரிந்தவர்கள். அழகாய் போற்றும் நீங்கள் கவிதைகள் எழுதுவதில் கில்லாடிகள்.

பெண்.

குப்பைமேட்டை கூட கோவிலாக்கும் நீங்கள் உங்கள் துணைதான் உலகம் என வாழ்வீர்கள். தாய்மை உணர்வு மிக்க நீங்கள் அது எல்லோரிடமும் இருக்கவேண்டும் என எதிர்பார்பதோடு நல்ல வாழ்க்கை வாழ்வீர்கள்.

எண் ஏழு.

ஆண்.

கற்பனையிலேயே காலத்தை கடத்தும் நீங்கள் காரியத்தில் கண்ணானவர்கள். உங்கள் துணை உங்களை காதலிக்கும் போதே அவள் ஏன் என்னை காதலித்தாள், என்னிடம் எதை எதிர்பார்க்கின்றாள் என தேவை அற்றவர்ரை யோசித்தே உங்கள் வாழ்க்கையை நாசமாக்கி விடுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கை வெற்றி உங்கள் கையிலேயே.

பெண்.

உங்களுக்கு சாப்பிடுவது, உடை அணிவது ஏன் தூங்குவது கூட ஏனோ தானோ தான். பணம், உதவி எல்லாமே உங்களுக்கு அனாவசியம். அபூர்வப்பிரவிகளான நீங்கள் யாருக்கும் அடங்கா தனிக்காட்டு ராணிகள். ஆனால் வெளிவேசம் போடத்தெரியாதவர்கள்.

எண் எட்டு.

ஆண்.

பொறாமையாலே அழியும் நீங்கள் சமூக அந்தஸ்திலும், பொருளாதார ரீதியாகவும் பெரியவர்கள். சொர்க்கமான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் ஆனால் மனம் தளர மாட்டீர்கள். வெற்றியின் சிகரம் உங்களுக்காக காத்திருக்கும். பிறக்கும்போதே சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் உங்களுடன் வந்துவிடும்.

பெண்.

கலை, கவர்ச்சி நிறைந்த நீங்கள். முதலில் அகம்பாவம் பிடித்தவர் போல இருப்பீர்கள். ஆனால் பழகிப்பார்த்தால் நீங்கள் தான் தேன். நினைத்ததை அடைய தவறமாட்டீர்கள். அதிகாரமும், பணமும் கொண்ட ஒருவர்தான் உங்கள் துணையாக வருவார். அதை எதிர்பார்ப்பவர் நீங்கள்தான். உங்களுக்கு உணர்ச்சி கூடினால் ஒருவரை உச்சத்திலும் ஏற்றுவீர்கள் அங்கிருந்து தள்ளியும் விடுவீர்கள்.

எண் ஒன்பது.

ஆண்.

சுறுசுறுப்போடு, உறுதியோடு செயற்பட்டு எல்லாவற்றையும் அடைவீர்கள். எதை கொடுத்தாலும் சிறப்பாக செய்யும் நீங்கள் அரசியலில் நுழைந்தால் அதிரடிதான்.

பெண்.

உங்களோடு வாழ்வது தான் வாழ்க்கை என துணையை ஏங்கவைக்கும் சாமர்த்திய சாலிகள்.

இப்போ, உங்கள் துணையையும் உங்களையும் ஒப்பிட்டு இருப்பீர்கள். இது உங்களுக்கும் பொருந்துகிறதா என சோதித்து விட்டு உங்கள் வாழ்க்கையை சந்தோசமாக வாழுங்கள். நம்பவேண்டியத்தை நம்புங்கள் தேவை அற்றத்தை நம்பாதீர்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.

புதியவர்கள் ஒரு முறை மீட்டுக்கொள்ளட்டும்

Source-http://www.topicattivo.com/462384219399-

எட்டுக்கு இணை ஏதுமில்லை

March 13, 2010 Leave a comment

எட்டுக்கு இணை ஏதுமில்லை

மனிதனை ஆட்டி வைப்பவை ஒன்பது கிரகங்கள் என்பது சோதிடம். உலகத்தையே ஆட்டிப்படைப்பதும் இந்த ஒன்பது எண்கள்தான் என்பது அறிவியல். ஜனநாயகமே இந்த எண்ணிக்கையில்தானே அடங்கியிருக்கிறது. வான்இயற்பியல் (Astro Physics) விஞ்ஞானியைக் கேட்டால் உலகம் காலம் என்பதில் தோன்றி அதிலேயே ஒடுங்குவதாகக் கூறுவார்கள். அந்தக் கால தத்துவத்திற்கும் இந்த ஒன்பது எண்கள்தான் அடிப்படை. கம்ப்யூட்டருக்கு எந்த மொழியும் தெரியாது. அதற்கு 0 என்பது மட்டும்தான் தெரியும். அந்தப் பூஜ்யத்தில் அது சாம்ராஜ்யத்தைப் படைத்துக் கொண்டிருக்கிறது. எனவே ஒன்பது எண்களுமே சிறப்பானவை தான் இருந்தாலும் நம்மவர்களுக்கு எட்டு என்ற எண்ணைக் கேட்டாலே ஒரு பயம். அந்த எண்ணில் ஏதாவது ஒன்று அவர்களுக்கு அமைந்து விட்டாலோ எப்போது இது வெட்டுமோ? என்ற எண்ணம் வந்து வந்து பயமுறுத்தும். நாட்களிலே அஷ்டமி என்றால் ஐயோ! வேண்டாம் என்பார்கள். இன்னும் சிலருக்கு 8 என்ற எண்ணைப் பார்த்தாலே அச்சம். அதன் கோணலே அவர்களுக்குப் பிடிக்காது. சோதிடர்கள் ஒருவரிடம் உனக்கு அஷ்டமத்துச்சனி என்று சொல்லிவிட்டால் போதும், சனி அவரைப் பாடாய்ப் படுத்துகிறதோ இல்லையோ; அந்த அஷ்டமம் அவர்கள் மனத்தைப் பாடாய்ப் படுத்திவிடும். எட்டைப் பற்றிய உண்மையான செய்திகளைத் தெரிந்து கொண்டால் நம் வீணான அச்சம் தொலையும். எட்டின்மேல் நமக்குப் பாசம் வருகிறதோ இல்லையோ! ஆனால் ஒரு பக்தி தோன்றும். எண்ணிப்பார்த்தால் எல்லாமே எட்டுக்குள்தான் என்ற ஞானம் தோன்றும்.

மனிதப் பிறப்பில் எட்டாம் மாதம் ஒரு திருப்புமுனை. தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தை அப்போதுதான் முழு வளர்ச்சி பெறுகிறது. அப்போது கருப்பையில் இடம் போதாமல் நெருக்கத்தில் சிக்கி, இருக்கும் இடத்திற்கேற்பத் தன் கைகால்களை மடக்கிக் கொள்கிறது. தன் உடல் உறுப்புகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முதல் அறிவை அப்போதுதான் அது பெறுகிறது. அப்போது அதன் கருப்பை வடிவம் 8 என்ற எண் வடிவம். சைவர்களின் திருமுறைகள் பன்னிரண்டு. அவற்றுள் எட்டாம் திருமுறை திருவாசகம். வார்த்தைகளுக்கு எட்டாத தெய்வ அனுபவத்தை முதன்முதலாக வார்த்தைகளில் வடித்துக் கொடுத்த ஒப்பற்ற நூல். கடல் போன்ற தமிழ் நூல்களில் ஆறு மிகச்சிறந்த நூல்களில் ஒன்று. அதனை இயற்றிய மாணிக்கவாசகர் கருப்பையில் நம் முதல் வடிவத்தை எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும் என்று கூறுகிறார். அந்த நெருக்கத்தில் சிக்கித் துன்புற்று இறந்து போகாமல் பிழைத்துப் பிறந்திருக்கிறோமே! இதற்கு நாம் எட்டிற்கு நன்றி சொல்ல வேண்டாமா!

எட்டாம் மாதத்தில் தாயின் கருப்பையில் உடலைக்குறுக்கிக் கொண்டு துன்பப்படும் ஓர் உயிருக்கு, நாம் செய்த தீவினையால் தானே மீண்டும் ஒரு தாயின் கருப்பைக்கு வந்தோம். இந்தப் பிறவியில் நிச்சயம் நாம் தவறு ஏதும் செய்யக்கூடாது என்ற ஞானம் அதற்குத் தோன்றுவதாகக் கீதை ஓரிடத்தில் கூறுகிறது. ஆனால் பிறந்த பின் அந்த ஞானத்தை மனிதன் மறந்து போகிறான். மீண்டும் அந்த ஞானம் அவனுக்கு 80 வயதில் (இருந்தால்) நிச்சயம் தோன்றும். அதனால் எட்டை ஒரு ஞான எண்ணாகக் கூறுவார்கள். எட்டாம் எண் கூட்டுத்தொகை உடையவர்கள் ஒன்று தீவிர பக்தர்களாகவோ, தத்துவவாதிகளாகவோ, சமுதாயத் தொண்டர்களாகவோ இருப்பார்கள். ஒருவர் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் குருவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களோ இருந்தால் அவர்கள் இப்பிறவியில் ஞானம் பெற்று முத்தியடைவார்கள் என்று சோதிடம் கூறுகிறது. பாரதத்தின் ஒப்பற்ற தவஞானி ஆதி சங்கரருக்கு எட்டாம் இடத்தில் குரு; மரணமில்லாமல் பெருவாழ்வை சாதித்துக் காட்டிய வள்ளலார் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் புதனும், சனியும். சைவ சித்தாந்தத்தின் வேத நூலாக சிவஞானபோதத்தின் எட்டாம் நூற்பா ஞானம் உணர்த்தும் முறையைக் கூறுகிறது. இந்த ஒரு நூற்பாவை மட்டும் ஏதேனும் ஒரு திருமடத்திலோ அல்லது ஒரு துறவியிடமோ தான் பாடங்கேட்க வேண்டும் என்ற மரபு இன்றும் உண்டு. வைணவர்களின் வேதநூல் நாலாயிரத் திவ்விய பிரபந்தம். இதில் உள்ள பாடல்கள் காலப்போக்கில் மறைந்து போயின. வீரநாராயண புரத்தில் வைணவர்கள் சிலர் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியின் எட்டாம் திருவாய்மொழியின் ஐந்தாம் பத்தைப் பாடியதைக் கேட்ட நாதமுனிகள் பின்னர் நாலாயிரம் பாடல்களையும் மீட்டுக்கொடுத்தார். ஆதலால் எட்டாம் எண் ஞானத்திற்குரிய எண். இந்த எண்ணில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் உள்ளத்தளவில் அவர்கள் பக்குவம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

எட்டாம் எண் யோகத்திற்கும் உரியது. தவமுனிவர்கள் மேற்கொள்ளும் யோகம் எட்டுவகைப்படும். அவை இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பனவாகும். இந்த எட்டுவகை யோகங்களும் இடகலை, பின்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளை அடிப்படையாகக் கொண்டவை. அடி வயிற்றுக்குக் கீழே இடப்புறமிருந்து இடகலைநாடியும் வலப்புறமிருந்து பின்கலை நாடியும் தொடங்கிச் சுழிமுனை என்ற நாடியுடன் சேர்ந்து மீண்டும் பிரிந்து புருவமத்தியில் ஒன்று சேர்கின்றன. இதன் வடிவம் எட்டு.

இந்த யோகமுறையால் நம்மால் பின்வரும் எட்டுவிதமான சித்திகளை அடையமுடியும். நம் உடலை அனுவாகச் சுருக்கலாம். எவ்வளவு பெரிய உருவாகவும் பெருக்கலாம். எந்தப் பொருளையும் ஊடுருவிச் செல்லலாம், உடலை மிகமிக இலேசானதாக மாற்றலாம், தேவைப்படுவதை அடையலாம். எல்லாவற்றிலும் நிறைவானவனாக விளங்கலாம், யார் மீதும் எந்தப் பொருள்மீதும் தன் ஆட்சியைச் செலுத்தலாம்.

எதனையும் தன்வசமாக்கலாம். இதனை யோக முறையில் அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்று கூறுவார்கள். யோகத்திற்குரிய எட்டு உடையவர்கள் யோகம் பயிலத் தொடங்கினால் அதில் எளிதில் முன்னேறிச் செல்வார்கள். அவர்கள் அதைப் பயிலாவிட்டாலும் அவர்களுக்கு நிர்வாகத் திறமை, ஆளுமைப்பண்பு, எவரையும் கவரும் ஆற்றல் இயல்பாக அமைந்திருக்கும்.

மனிதப் பிறப்பில் பல நபர்கள் 8 ஆம் தேதியில் பிறந்து சாதித்துள்ளனர். இதில் மன்மோகன் சிங், எம்.ஜி.ஆர், அத்வானி, ஜோதிபாசு, முரசொலி மாறன் உள்பட பல தலைவர்கள் 8ஆம் எண்ணில் பிறந்துள்ளனர்.

எட்டு என்ற எண் தெய்வங்களோடு தொடர் புடைய எண்ணாகும். மனிதர்களைப் போலவே இறைவனுக்கும் குணங்கள் உண்டு. அந்தக் குணங்கள் எல்லாம் அவனுக்கு இருப்பதாக அருளாளர்கள் கூறுவார்கள். உண்மையில் பரம்பொருள் குணங்களும் வடிவங்களும் இல்லாதது. இறைவன் குணாதீதன், அதாவது குணங்களைக் கடந்தவன். இருப்பினும் அவனுக்கு குணங்களைக் கற்பிக்கும்போது எட்டு என்ற எண்தான் எல்லையாக அமைந்தது. இறைவனுக்குத் தன் வயத்தனாதல், தூய உடம்பினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை, இயற்கை உணர்வினன் ஆதல் ஆகிய எட்டுக் குணங்களை சைவ ஆகமங்கள் எடுத்துக் கூறுகின்றன.
எட்டுக் குணங்களைக் கொண்ட சிவபெருமான் எட்டு இடங்களில் எட்டு வீரச் செயல்களை நிகழ்த்திய தாகவும் கூறுவர். அந்த இடங்கள் அட்ட வீரட்டத் தலங்கள் எனப்படும். இறைவன் வரம்பற்ற ஆற்றல் உடையவனாக இருந்தாலும் அவன் நிகழ்த்திய வீரச் செயல்கள் எட்டுதான். திருவள்ளுவர் இறைவனைப் பற்றிக்கூறும்போது அவனை எண்குணத்தான் என்று எட்டுக்குச் சிறப்பு கொடுத்தே கூறுகிறார். சிவபெருமானுக்குத் தோள்களும் எட்டுதான். இறைவன் வடிவங்கள் கூறுவதும் எட்டுதான். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர் ஆகிய எட்டும் அவன் திருவடிவங்கள்.
எட்டு எண்ணில் பிறந்தவர்களுக்கு எல்லாம் இருக்கும்; ஆனால் இருக்காது. இறைவன் எல்லாம் உடையவன். இந்த உலகமும், வானமும் அண்டங் களும் அவற்றில் உள்ள அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவை. எனவே, இறைவனை உடையவர் என்றே வழங்குவார்கள். கல்வெட்டுகளில் அந்தக் கோயில்கள் எழுந்தருளியுள்ள இறைவனை அந்த ஊரின் பெயரைச் சேர்த்து உடையவர் என்றே கூறுகின்றன.

ஆனால், அவனுக்கென்று எதுவுமே இல்லை. அவனுக்குத் தாயும் தந்தையும்கூட இல்லை. அவன் ஓர் அனாதை. இதை மாணிக்கவாசகர் தாயும் இலி; தந்தையிலி; தான் தனியன் கானேடி!.


மாணிக்க வாசகரின் திருவாசகம் உள்ளத்தை உருக்கும்; உடம்பில் கலந்து உயிரில் கலக்கும். மாணிக்க வாசகர் சொல்லச் சொல்லத் தில்லை நடராசப் பெருமானே ஓர் ஏடெழுதும் பிள்ளையாக வந்து தம் திருக்கரத்தால் எழுதிய ஞானநூல். வெளிநாட்டினரின் உள்ளங்களைக் கவர்ந்த ஒப்பற்ற நூல். முத்தியில் பெறும் இன்பம் எப்படி இருக்கும் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதை முதன் முதலாக வார்த்தைகளில் வடித்துக்கொடுத்த தெய்வத்திருநூல். இது சைவர்களின் பன்னிரண்டு திருமுறைகளில் எட்டாவதாகத்தான் வைக்கப்பட்டிருக்கிறது.

எட்டுக்கும், மேலுலகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. தெய்வங்கள் எல்லாம் இந்த உலகத்திற்குத் தேவையான செல்வங்களை மட்டும் கொடுக்கக்கூடியவை. பிறவாமையைக் கொடுக்க அவற்றால் முடியாது. அவனது நடனம் ஆனந்த நடனம். அதைக் கண்டுவிட்டால் போதும் என்றும் ஆனந்தந்தான்.
ரஷியாவில் அணுஉலை ஒன்றில் கொதித்துக் கொண்டிருந்த அணுக்கலவையிலிருந்து ஒரு சிறிய துளி வெளியில் விழுந்து விட்டது. அதைத் தொலைவிலிருந்த கட்டுப்பாட்டு அறையிலிருந்து கணிப்பொறிகள் மூலமாக விஞ்ஞானிகள் பார்த்தார்கள். அந்த ஒரு சிறு துளி வெளியில் வந்து விழுந்தவுடன் ஆடிய ஆட்டம் இதுவரையில் உலகில் கண்டறியாத அற்புத நடனமென்றும், அந்த நடனத்தின் அழகை வார்த்தைகளால் விளக்க முடியாது என்றும் கூறினார்கள். அந்த அணுவிலும் தாண்டவமாடும் தில்லை ஆடலரசன் காலைத் தூக்கி நின்றாடும் கோலத்தைச் சுற்றி நேர்க்கோடுகள் வரைந்தால் அது எண் கோணமாகும். அந்த ஆனந்தக் கூத்தன் அந்த எட்டில் நின்று ஆடித்தான் இந்த உலகத்தைப் படைக்கிறான்; நிலை நிறுத்துகிறான். அழிக்கின்றான். ஆம்;

ஆவதும் எட்டாலே; அழிவதும் எட்டாலே; போவதும் எட்டாலே; வருவதும் எட்டாலே.

எட்டு என்றதைக் கேட்டவுடன் பிடிக்காமல் போவதைப்போல இந்த நடராசனைக் கண்டாலும் யாருக்கும் பிடிக்காது. தப்பித் தவறி வீட்டுக்கு வந்து விட்டாலும் எடுத்துக்கொண்டு ஓடிப்போய் எங்காவது ஒரு கோயிலில் வைத்துவிட்டுத் திரும்பி பார்க்காமல் வந்து விடுவார்கள். எல்லோருமே இறப்புக்குப்பின் சொர்க்கத்துக்குப் போக நினைக்கிறார்கள். அந்தச் சொர்க்கத்திற்குப் போகும் நுழைவாயில் நம் வீட்டு வாசற்காலைப் போல இல்லை; அது எண் கோண வடிவில் இருக்கிறது. கோயில்களில் மூலவர் இருக்கும் கருவறைக்கு உள்ளே அதன் மேல் உள்ள விமானப் பகுதி எண் கோணவடிவில் அமைந்திருக்கும். அதை மூடியிருக்கும் கல்லும் எண்கோண வடிவில் அமைந்திருக்கும். உள்பகுதியில் உள்ள எண் கோணத்தை பிரம்மரந்திரம் என்பார்கள். இறைவன் சொர்க்கத்தின் நாயகன்; அவன் போவதும் வருவதும் அந்த எண்கோண வழியில்தான். தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள மூலவர் மிகவும் பெரிய உருவம். அவருக்குப் பெயரே தஞ்சைப் பெருவுடையார். அதற்குத் தகுந்தாற்போல் உள்கூட்ட எண்கோணம் மிகவும் பெரியது. அதை மூடத்தான் எட்டு டன் எடையுள்ள ஒரே கல் தேவைப்பட்டது. எண் கோண வடிவிலான அதை எப்படித் தூக்கிக் கீழேயுள்ள எண் கோணத்தில் பொருந்துமாறு நிறுத்தியிருப்பார்கள் என்று புரியாமல் இன்றும் வெளிநாட்டுக் கட்டிடக்கலை நிபுனர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

எகிப்திய பிரமிடுகளைப் பற்றி அறிந்திருக்கிறோம். அதன் உட்புறம் ஏக்கர் கணக்கில் பெரியது. அதன் நடுநாயகமாக இருக்கும் பகுதியில்தான் இறந்த எகிப்திய மன்னர்களின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் (மம்மி) அடங்கிய நவரத்தினப் பேழைகள் வைக்கப்பட்டிருக்கும். அதற்கு நேரான மேல் பகுதிதான் வெளியில் தெரியும் கூம்பு வடிவம். பேழைகளுக்கு நேராக மேலே உள்ள பகுதி எண் கோண வடிவில் அமைந்திருக்கும். அதை மேல்புறத்தில் மூடுவதற்கு ஒவ்வொன்றும் எட்டு டன் எடையுள்ள கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மம்மிகளுக்கு மேலேயுள்ள இந்த எண்கோல் வழியாகத்தான் அங்கே தூங்கிக்கொண்டிருக்கும் மன்னர்கள் தங்கள் அரசியருடன் பகலில் சொர்க்கலோகத்திற்குச் சென்று அங்குப் பகலெல்லாம் இருந்துவிட்டு இரவில் அதே எண்கோண வழியாக மம்மிக்குத் திரும்பி விடுகிறார்கள் என்பது அவர்கள் நம்பிக்கை.

குழந்தை பிறக்கும்போது அதன் தலையின் உச்சித் துர தோலால் மட்டுமே மூடப்பட்டிருக்கும். குழந்தை வளர வளரத்தான் மண்டையோடு வளர்ந்து கூடுகிறது. குழந்தை பிறக்கும்போதிருந்த உச்சித்துளை வட்டவடிவமானது அல்ல. அது எண்கோண வடிவிலானது. எனவே, அதையும் யோகித பிரம்மரந்திரம் என்றே கூறுவார்கள். உடலிலிருந்து உயிர் பிரியும்போது உச்சித் துளை வழியாகப் பிரிந்து சென்றால் அந்த உயிர் நேரே சொர்க்கத்திற்கும் மேற்பட்ட பல உயர்ந்த உலகங்களுக்குச் சென்று விடுகிறது. அது மீண்டும் பூமிக்கு வருவதில்லை. யோகிகள் நினைத்தால் தன் உடலில் பெரிய அக்கிணியை உருவாக்கிக் கொண்டு அதைத் தலை உச்சிக்குச் செலுத்திப் பிரம்மரந்திரத்தை வெடிக்கச் செய்து அதன் வழியாக மேலுக்கு மேலான உலகத்திற்கு செல்வார்கள். இதனைக் கபாலமோட்சம் என்பார்கள்.

புதுவைக்கு அருகிலுள்ள பொம்மையார்பாளையத்தில் மயிலம் பொம்மபுரம் ஆதினத்தின் சிவஞான பாலைய சுவாமிகள் திருமடம் இருக்கிறது. இந்த மடத்தின் குருநாதர் இங்குள்ள முருகன் சந்நிதியை ஒட்டிக் கீழே செல்லும் நிலவறையுள் சென்று ஞானாக்கினியால் தம்மை எரித்துக்கொண்டு இறைவனோடு ஐக்கியமானார். அவரை இன்றும் ஒடுக்கத்துச் சுவாமிகள் என்றே அழைப்பார்கள். ஞானிகள் எவ்வாறு விரும்புகிறார்களோ அவ்வாறே ஐக்கியம் ஆவார்கள்.

எண்சாண் உயரமுள்ள நம் உடலே ஒரு கோயில்; அதில் இதயமே மூலஸ்தானம். உள்ளம் பெருங்கோயில்; ஊன் உடம்பு ஆலயமாம் என்றார் திருமூலர். நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறைவன் கோயில் கொண்டுள்ளான். நாம் கருப்பையில் இருக்கும்போது அவன் எப்படி அங்கு வந்திருப்பான். உடல் ஓயும்போது எந்த வழியாகப் புறப்பட்டு போவான். கருவாய் இருந்தபோது நம் உச்சித்துளை வழியே வந்து வந்த வழியிலேயே சென்றிருப்பானோ அந்தக் கள்வன்?

அவையெல்லாம் மனித அறிவுக்கு எட்டாதவை; அதே திருமூலர் உள்ளத்தின் உள்ளே தான் அவன் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறான்; எனக்கு ஏற்படும் இரக்கம், கருணை எல்லாம் அந்த வள்ளலால் வந்தவை; என் ஓட்டை உடம்புக்குள் எப்படியோ வந்து புகுந்து எப்படியோ புறப்பட்டுத் தப்பிச் சென்று விடும் அந்த கள்ளர்கள் தலைவனை யாரால் அறிய முடியும்? என்று கேட்கிறார்.

உள்ளத்து ளேதான் கரந்துஎங்கும் நின்றவன்;
வள்ளல்; தலைமகன்; மலர்உறை மாதவன்;
பொள்ளல் குரம்பை புகுந்து புறப்படும்
கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே
திருமந்திரம்: 1531
இந்தக் கள்ளன் மண்டையோட்டின் உச்சித்துளை யாகிய உடம்புக்கோயிலின் பிரம்மரந்திரம் மூலம் வந்திருப்பானோ?
கருவுற்ற காலத்தே என்னை ஆண்டு
கடில்போது தந்தளித்த கள்வர் போலும்
என்று அப்பர் அடிகளும் கூறுகிறாரே. அப்படித்தான் இருக்குமோ?

அறிவுக்கெல்லாம் அறிவாக விளங்கும் அவனை அறிய யாரால் முடியும்? விஞ்ஞானிகளால் முடியாது; ஆனால் ஞானிகளால் முடியும். அவர்கள் அறிந்து கூறுவதை நம்புவோம்.

இப்போது உங்கள் உச்சந்தலையில் கைவைத்துச் சொல்லுங்கள்! எட்டு கெட்ட எண்ணா?

Credit- http://www.puducherryexpress.com

எண் – 9

March 13, 2010 1 comment

எண் -ஒன்பது: 9


9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் கூட்டெண் ஒன்பதாக உள்ளவர்களும் இந்த எண்ணின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளவர்கள் ஆவர்.

எண் ஒன்பதுக்குரிய கோள் செவ்வாய் ஆகும். எண் ஒன்பதுடன் எந்த எண்ணைக் கூட்டினாலும் விளைவு எண் அதே எண்ணாக வருவதால் இந்த எண்ணுக்குரியவர்களுடன் நட்பு கொள்வதால் எவ்வித நன்மையும் தீமையும் ஏற்படாது. நீர் மேல் தாமரை இலை போல வாழ்க்கையில் ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்வர். இவர்களை இல்லத் துறவிகள் என்று கூறினாலும் தகும். உடல் எச்செயலை செய்தாலும் மனம் மட்டும் இறைவனையே நினைத்துக் கொண்டிருக்கும். மெய்த்துறவிகளில் பலர் இந்த எண்ணுக்குரியவர்களாக இருப்பதைக் காணலாம்.

இந்த எண்ணுக்குரியவர்களில் சிலர் வேறுமாதிரியான பண்புகளைக் கொண்டிருப்பர். எண் ஒன்பதுடன் எந்த எண்ணைப் பெருக்கினாலும் விளைவு எண் ஒன்பதே வருவதால், எண் ஒன்பதுக்கு உரியவர்களை யார் எதிர்த்தாலும் தோல்வியே பெறுவர். இதனால் இவர்களுக்கு எதிரிகள் என்பதே கிடையாது. இது எப்படி சாத்தியம் எனில் இவர்கள் தமது எதிரிகளை நண்பர்களாக மாற்றிக் கொள்ளவோ இல்லையேல் அழித்துவிடவோ செய்கிறார்கள். எதிரியை நண்பனாக்கிக் கொள்ள பெருந்தன்மையும் புத்திசாலித்தனமும் வேண்டும். எதிரியை முற்றிலுமாக அழிப்பதற்கு கடுமையான வலிமை தேவை. இவை எல்லாவற்றையும் இந்த எண்ணுக்குரியவர்கள் கொண்டிருப்பர் என்பதில் ஐயமே இல்லை.

சித்தர்கள், ஞானிகள், துறவிகளில் பலர் இந்த எண்ணுக்குரியவர்களே. அதே சமயம் ராணுவ வீரர்களில் பலரையும் இந்த எண்ணில் காணலாம். இறைவனை எப்போதும் மறவாமல் இருப்போர் நற்கதி அடைவர் என்பதால் நற்கதி அடைவதற்கு உதவி செய்யும் கோள் செவ்வாய் ஆகிய முருகன் என்று கூறலாம்.

செவ்வாயின் நிலை கெட்டிருந்தால், இந்த எண்ணுக்குரியவர்கள் இரக்கமின்றி உயிர்களை வேட்டையாடுதல், கூலிப்படை நடத்துதல், போன்ற கொடூரமான செயல்களைச் செய்வர்.

எண் ஒன்பதிற்கு எழுத்துக்கள் எவையும் இல்லை.

காரிய சித்தி மாலை(விநாயகர் அஷ்டகம்)

March 11, 2010 2 comments

காரிய சித்தி மாலை(விநாயகர் அஷ்டகம்)

காரிய சித்தி மாலை(விநாயகர் அஷ்டகம்)
(காசிப முனிவர் இயற்றியது, கச்சியப்பர் மொழிபெயர்த்தது)
**************************************************

பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்.

பொருள்: எல்லாவிதமான பற்றுகளையும் அறுத்தும், நற்குணங்களின் உற்பத்தியிடமாகவும் இவ்வுலகையே உண்டாக்கியும், காத்தும் மறைத்தும் லீலைகள் செய்பவனும் வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் அறுபத்து நான்கு கலைகளுக்கும் தலைவனாக இருக்கும் இருக்கும் முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானை அன்புடன் தொழுவோம்.

உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ்
உலகிற்பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.

பொருள்: எல்லா உலகங்களையும் நீக்கமற ஒருவனாய் நின்று காப்பவர், உலகில் நிகழும் மாற்றங்கட்கு அப்பால் ஆனவர். மேலாம் ஒளியானவர். உலக உயிர்களின் வினைப் பயனைக் களைபவர், அவரே பெருந்தெய்வம் கணபதி ஆவார். அப்பெருந்தெய்வத்தின் திருவடிகளை மகிழ்வோடு சரண் அடைவோம்.

இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம்.

பொருள்: நம் துன்பங்கள் முழுவதும் யார் திருவருளால் தீயில் விழுந்த பஞ்சு போல் பொசுங்குமோ, உலக உயிர்களை யார் அமரர் உலகில் சேர்ப்பிப்பாரோ, எக்கடவுள் திருவருளால் நாம் செய்த பாபங்கள் தொலையுமோ அந்த நீண்ட தந்தங்களையுடைய கணபதியின் பொன்னார் திருவடிகளைச் சரண் அடைவோம்.

மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

பொருள்: எல்லா மூர்த்தங்களுக்கும் மூல மூர்த்தமாக இருப்பவரும், எல்லா ஊர்களிலும் எழுந்தருளி இருப்பவரும், கங்கை முதலான எல்லா நதிகளிலும் நிறைந் திருப்பவரும், எல்லாவற்றையும் அறிந்தும் ஏதும் அறியாதார் போல் இருப்பவரும், எல்லா உயிர்களுக்கும் நாளும் நலம் புரிபவரும், அறியாமையை அகற்றி நல்லறிவைத் தருபவரும் ஆகிய கணபதிப் பெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து நாம் சரண் அடைவோம்.

செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யி இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.

பொருள்: செயல்களாகவும், செய்யப்படும் பொருள்களாகவும் இருப்பவர். எல்லாப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். நாம் செய்யும் வினைப் பயனாக இருப்பவர். அவ்வினைப் பயன்களில் இருந்தும் நம்மை விடுப்பவர். அவரே முழுமுதற் கடவுள் கணபதி ஆவார். அந்த் மெய்யான தெய்வதை நாம் சரண் அடைவோம்.

வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.

பொருள்: வேதங்களுக்கு எல்லம் தலைவனாக இருப்பவனும், யாவராலும் அறிந்து கொள்ளுதற்கு அரிய மேலானவனாக இருப்பவனும், வேதத்தின் முடிவாக இருந்து நடம் புரியும் குற்ற மற்றவனும், வெட்ட வெளியில் எழும் ஒங்காரத்தின் ஒலி வடிவாக இருப்பவனும், தன்வயத்தனாதல்; தூய உடம்பினன் ஆதல்; இயற்கை உணர்வினன் ஆதல்; முற்றும் உணர்தல்; இயல்பாகவே பாசங்களில் இருந்து நீங்குதல்; பொருள் உடைமை; முடிவில் ஆற்றல் உடைமை; வரம்பில் இன்பம் உடைமை, இவற்றை முறையே வட நூலார் சுதந்தரத்துவம் விசுத்த தேகம்; நிரன்மயான்மா ; சர்வஞ்த்வம்; அநாதிபேதம்;அநுபத சக்தி; அநந்த சக்தி; திருப்தி ஆகிய எட்டுக் குணங்களைக் கொண்டவனும், ஆன முழு முதற்கடவுளாம் விநாயகப் பெருமானின் திருவடிகளைச் சரண் அடைவோம்.

மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.

பொருள்: மண்ணில் ஐந்து வகையாக (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) இருப்பவரும்,ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், கடல் நீர் என நான்காக இருப்பவரும், வேள்வித்தீ,சூரியன், சந்திரன் எனத் தீயில் மூன்றாக இருப்பவரும், காற்றில் புயற் காற்றாக இருப்பவரும், எங்கும் ஒன்றாய் இருக்கும் வான் வெளியாய் இருப்பவரு மாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளை அன்புடன் சரண் அடைவோம்.

பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.

பொருள்: எந்தப் பந்தமும் அற்றவன்; பசுவாகிய ஆன்மாவும், பதியாகிய இறைவனும் அவனே! அறிவினால் அவனை அறியமுடியாது. அவன் பந்தமே இல்லாதவன். ஆனால் எல்லா உயிர்களையும் பந்தப்படுத்துபவன். அவன் மேலானவன். அறிவுடையவன். அத்தகைய கணபதியை நாம் சரண் அடைவோம். பசு பதி இரண்டுமே இறைவன். பசு பதியோடு ஒடுங்குவதே அழியா இன்ப நிலையாகும். இதையே துரியம், துரியாதீதம் என்று சைவ சித்தாந்தம் கூறும்.

Quote
நூற்பயன்

இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும்.

பொருள்; இத்தோத்திரப் பாடல்களை மூன்று நாட்கள் சந்தியா நேரத்தில் யார் பாராயணம் செய்கின்றார்களோ அவர்கள் செய்யும் நற்காரியங்களில் வெற்றிபெறுவார்கள். தொடர்ந்து எட்டு நாட்கள் படித்தால் மனம் மகிழும் படியான நலம் பெறுவார்கள். சதுர்த்தியன்று நற்சிந்தையுடன் எட்டுத் தடவவைகள் பாராயணம் செய்தால் அணிமா, கரிமா, இலஹிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசீதை போன்ற (எட்டு) அட்டமாசித்துளையும் பெறுவார்கள்.

திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச்செப் பினர் மறைந்தார்

பொருள்: தொடர்ந்து இரு மாதங்கள் நாள் தோறும் முறையாகப் பாராயணம் செய்தால் அரசர்களும் வசியம் ஆவார்கள். தினமும் இருபத்தோரு முறைகள் பாராயணம் செய்தால் குழந்தைச் செல்வம், கல்விச் செல்வம் நலம் போன்ற சகல செவங்களும் வந்துசேரும்

உரை எழுதியவர்: திருப்பனந்தாள் புலவர் க. துரியானந்தம்..

Follow

Get every new post delivered to your Inbox.

Join 50 other followers