Archive

Archive for the ‘கிருஷ்ணர்’ Category

18.முடிவு- துறவின் பக்குவம்

November 19, 2009 2 comments

அர்ச்சுனன்: எங்கும் பரந்துள்ள பெருமானே! நான் சன்னியாஸ யோகம் ( சாங்கிய யோகம்)தியாக யோகம்(கர்ம யோகம்) இரண்டின் தத்துவங்களையும் தனித்தனியாக அறிந்து கொள்ள விரும்புகிறேன்.எனக்கு உபதேசித்து அருள வேண்டும்.

பகவான்: அர்ச்சுனா! நான் சன்னியாசம் ,தியாகம் குறித்து சித்தாந்த வழிகளான தரிசனா சாரியர்களின் நால்வகை கருத்துக்களை விவரிக்கிறேன்.
1. பல வித்துவான்கள் காம்ய கருமங்களை ( தாம் விரும்பிச் செய்து வரும் காரியங்களை)துறப்பது சன்னியாசம் என்கிறார்கள்.
2. எல்லாக் காரியங்களுக்கும் உள்ள பயனைத் துறப்பது தியாகம் என்கிறார்கள் சிலர்.
3. சிலர் கருமங்களை ( காரியங்களை) குற்றமாகக் கருதிவிட்டு விடுவது தியாகம் என்கிறார்கள்.
4. வேறு சிலருடைய கருத்து வேள்வி( ஆசார அநுட்டானங்கள்)தானம் இவைகளைத் துறக்கலாகாது என்பது.

அர்ச்சுனன்: கண்ணபிரானே! இவை வேதாந்த வித்தகர்களின் கருத்துக்கள்- ஆனால் இந்த விஷயத்தில் உங்களுடைய கருத்து என்ன?

பகவான்:அர்ச்சுனா!பர வம்சத்தவரில் தலை சிறந்த வீரப் பெருமகனே!சன்னியாசம்,தியாகம் இவ்விரு தத்துவங்களுக்குள் முதலில் தியாகம் பற்றிய என்னுடைய கருத்தை அறிந்து கொள்.தியாகம் மூன்று வகப்படும் எனும் கருத்தைச் சொன்னேன்.வேள்வி,தானம்,தவம் மூன்று கருமங்களையும் துறந்துவிடக்கூடாது.செய்யாதிருந்தால் கட்டாயம் செய்ய வேண்டும்.காரணம் அவைகளில் ஒவ்வொன்றும் சான்றோர்களை,சிந்தனையாளர்களை பரிசுத்தபடுத்தவல்லது.

அர்ச்சுனன்: இந்த அளவிற்கு கருமங்களைச் செய்தால் போதுமா கண்ணா?
 பகவான்: பார்த்தனே! இப்போது விவரித்த மூன்று வகை வேள்வி தானம், தவம், ஆகிய கருமங்களையு இது தவிர சாஸ்திரத்தின் மூலம் செய்ய வேண்டிய கருமங்களையும் , பற்றுதலையும் , பயனையும் ஒழித்தே இக்கருமங்கள் யாவும்  செய்யப்பட வேன்டும் என்பது எனது நிச்சயமான , உத்தமமான கொள்கை.

அர்ச்சுனன்: பகவானே! மூன்று வகைப்பட்ட தியாகத்தின் சொரூபம் என்ன?

  பகவான்: அர்ச்சுனா!ஏற்படுத்தப்பட்ட கருமங்களைத் துறப்பது எவருக்கும் ஏற்புடையதல்ல.மதிமயக்கம் காரணமாக இவைகளைத் துறப்பது தாமஸ ( தீமைதரும்) தியாகம்( விட்டுவிடல்).

விதிக்கபட்ட கருமங்களுக்கும் ஏற்படுத்தப்பட்ட கருமங்களுக்கும் என்ன வித்தியாசம்?சாஸ்திரங்கள் என்ன காரியங்களைச் செய்து வர வேண்டும் என்று விதித்திருக்கின்றனவோ, அவை விதிக்கப்பட்ட கருமங்கள்.எல்லா விதிக்கப்பட்ட காரியங்களையும் ஒரு மனிதன் கடைப்பிடிக்க முடியாது.

சாஸ்திரங்களில் வாரத்தின் எல்லாத் தினங்களுக்கும் ( திங்கள், செவ்வாய் முதலிய தினங்கள்,பிரதமை,துதியை முதலான திதிகள்)விரத அநுட்டானங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன ,ஒரு மனிதன் இவைகளை எல்லாம் கடைப்பிடிக்க முனைந்தால் அவன் உண்டு உறங்கி பணி செய்வது இயலாது போகும்.ஆகையால் எல்லா விரத அநுட்டானங்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் விதிக்கப்பட்டவை அல்ல என்பது தெரிகிறது.

மனிதர்களின் வருணம்( இனம்) பிருமச்சாரியம், கிருகஸ்தம் முதலான ஆசிரம ( வாழ்கை, நிலை, சூழ்நிலை,இடம், காலம் சர்ர்ந்தது)இவைகளுக்கேற்ப எந்தக் கடமைகள் அவசியமாகின்றனவோ, அவை ஏற்படுத்தப்பட்ட கருமங்கள்.

உதாரணமாக பிராமணர், சஷ்த்திரியர், வைசியர் , சூத்திரர், இந்த நான்கு வருணத்தார்களில் எவர் எவருக்கு வாழ்க்கைக்கும் உடல் வளர்ச்சிக்கும் எத்தனை நியமங்கள் ( நெறி முறைகள்) ஒதுக்கப்பட்டுள்ளனவோ,அவை ஏற்படுத்தப்பட்ட கருமங்கள்.

அர்ச்சுனன்:ராஜஸ தியாகத்தின் சொரூபம் என்ன?

பகவான்: செய்ய வேண்டிய கருமங்களைச் செய்வது கஷ்டமாக இருக்கிறது என்று கருதி உடல் வருத்தம் ஏற்படுமே என்கிற பயத்தில் கடமைகளைக் கைவிடுவது ராஜஸதியாகம். இதனால் அமைதி கிட்டாமல் போகும்.

அர்ச்சுனன்:சாத்துவீக தியாகத்தின் சொரூபம் என்ன?

பகவான்: ஏற்படுத்தப்பட்ட ஏற்கப்பட்ட கருமங்களைச் செய்வது மனிதனின் அவசியமான கடமை என்கிற உணர்வுடன் பயன் விரும்பும் சுயநல நோக்கமில்லாமல் அக்கருமங்களைச் செய்து வருவது சாத்வீகத் தியாகம்.

அர்ச்சுனன்: தியாகம் செய்யும் மனிதன் எப்படிப்பட்டவர்?

பகவான்: அர்ச்சுனா! அவன் சுயநலம் கொண்டதும் மறுக்கப்பட்டதுமான கருமங்களைக் கை விடுகிறான் .ஆனால் வெறுப்போடு ஒதுக்குவதில்லை.சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கடமையாகிய ( செய்யவேண்டிய) காரியங்களைச் செய்கிறான்.அதில் ஆசை பாசம் வைப்பதில்லை.இத்தகைய அறிவாளியான தியாகி எவ்வித ஐயப்பாடும் தயக்கமும் இல்லாமல் தன் நெறிநிலையில்  திடமாக வாழ்கிறான். செயல்படுகிறான்.

அர்ச்சுனன்: கருமங்களைச் செய்வதில் ஆசாபாசம் கூடாது, செய்யாமல் விட்டுவது வெறுப்பினால் அல்ல. இவ்வளவு தொல்லையை ஏன் மேற்கொள்ள வேண்டும்? கருமமே செய்யாமல் இருந்துவிட்டால் என்ன?

பகவான்: அர்ச்சுனா! உடல், உருவம்  கொண்ட மனிதனால் கருமங்களைத் தானாக துறப்பது இயலாது.கருமங்களால் ஏற்படும் துயரங்களைத் துறக்கலாம்.அதாவது பலன்களை எதிர்பார்த்துக் கருமங்களைச் செய்யும் மனப்போக்கை மாற்றிக் கொள்ளலாம் கரும பலன்களைத் துறக்கும் மனிதன் தியாகி.

அர்ச்சுனன்: கருமபலன்கள் எத்தனை வகைப்படும்?

பகவான்: கருமபலன்கள் மூன்று வகைப்படும்
1. இஷ்டம்- அதாவது எந்தச் சூழ்நிலையை மனிதன் விரும்புகிறானோ அது
2.அநிஷ்டம் – எந்தச் சூழ்நிலையை விருப்பமில்லையோ அது
3. மிசிரம்-(இரண்டும் கலந்தது)-எதில் சில பகுதிகள் விரும்பதக்கதும் சில பகுதிகள் விரும்பத்தாகாதுமாக உள்ளதோ அத்தகையது.இம்மூன்று வகை கரும பலன்களும் பயன் கருதி கருமங்களை செய்பவர்களை பின் தொடரும் .இறந்த பிறகும் தொடரும் .பயன்பற்றி ஆசாபாசம் கொல்ளாதவர்களுக்கு கரும பயன்களின் பாதிப்பு இராது.

அர்ச்சுனன்: பகவானே! மூன்றுவகை பயன்களைக் கொண்ட கருமம் ஏற்பட எது காரணமாக அமைகின்றது?
பகவான்: அர்ச்சுனா! கருமங்களை அழிவுக்குட்பட்டவை என்று கூறும் சாங்கிய சித்தாத்தங்களில் எல்லா கருமங்களிற்கும் பயனளிக்கும் நிலைக்கு 5 காரணங்கள் கூறப்பட்டுள்ளன.

அர்ச்சுனன்: பகவானே! அந்த 5 காரணங்கள் எவை?


பகவான்: அர்ச்சுனா! சரீரம், செய்பவன், பலவகை கருவிகள்,பலவகை செயல்கள் வழிவந்த தொடர்பு அனுபவம் இவ் ஐந்தும் காரணங்கள்.மனத்தாலும் சாஸ்திர சம்மதமான சாஸ்திர விருத்தமான செயல்களை ஆரம்பிக்கிறான்.இதற்கு அவ் ஐந்து காரணங்களும் தூண்டுதல் ஆகும்.

அர்ச்சுனன்:  பகவானே! கருமங்களுடன் கூட ஆத்மாவிற்கு சம்பந்தம் இல்லையென்றால்,பின் எவருடைய தூண்டுதலால் அவை ஏற்படுகின்றன? அவற்றிற்கு காரணம் யார்?

பகவான்: அர்ச்சுனா! ஞானம்( அறிவு) ஞேயம்(அறியத்தக்கது).பரிக்ஞாதா( நன்கு அறிந்தவர்)இம்மூன்று பேர்களாலும் கருமத்திற்கு தூண்டுதல் ஏற்படுகிறது.கரணம்( கருவி)கருமம், கர்த்தா( செய்பவன்)இம்மூன்றாலும் கருமங்களின் (செயல்களின்) சேகரிப்பு நிகழ்கிறது.

அர்ச்சுனன்: கருமங்கள் செய்யப்படுவதற்கு ஏற்படுவற்கும் ஐந்துகாரணங்களை கூறுவதின் நோக்கம் அல்லது கருத்து என்ன பகவானே?

பகவான்: அர்ச்சுனா! கருமம்( செயல்) உடல் வாக்கு உள்ளங்களால் ஏற்படுவது.ஆத்மாவால் செய்பவன் தன்மையில்லை.ஆனால் எவன் கருமங்களைச் செய்வது ஆத்மா என்று கூறுகிறானோ அவன் மதிகெட்டவன்.உண்மையை அறியாதவன்.அவனுடைய புத்தி சுத்தமானதல்ல.

அர்ச்சுனன்:  பகவானே! ஆத்மாவை செயல்புரிபவன் ( கர்தா) இல்லையென்று கருதுவதால் என்ன ஆகிறது?

பகவான்: அர்ச்சுனா! என்னுடைய உள்ளத்தில் நான் தான் செய்கிறேன்.எனும் செருக்கு இல்லையோ, எவருடைய புத்தி கரும பலன்களில் நாட்டம் கொள்வதில்லையோ,கரும பலன்களை அனுபவிக்க முயல்வதில்லையோ, அவன் எதைச் செய்தாலும் அதன் பந்தத்தில் சிக்குவதில்லை.எல்லா உயிரினங்களையும் அவன் கொன்றாலும் அவன் கொலையாளி இல்லை.அதன் விளைவோ,பாதிப்போ அவனை கட்டுபடுத்துவதுமில்லைஅவன் பாதிக்கப்படுவதில்லை.

அர்ச்சுனன்:  பகவானே! கருமங்களுடன் கூட ஆத்மாவிற்கு சம்பந்தம் இல்லையென்றால்,பின் எவருடைய தூண்டுதலால் அவை ஏற்படுகின்றன? அவற்றிற்கு காரணம் யார்?

பகவான்: அர்ச்சுனா! ஞானம்( அறிவு) ஞேயம்(அறியத்தக்கது).பரிக்ஞாதா( நன்கு அறிந்தவர்)இம்மூன்று பேர்களாலும் கருமத்திற்கு தூண்டுதல் ஏற்படுகிறது.கரணம்( கருவி)கருமம், கர்த்தா( செய்பவன்)இம்மூன்றாலும் கருமங்களின் (செயல்களின்) சேகரிப்பு நிகழ்கிறது.

அர்ச்சுனன்:பகவானே! கருமங்களின் தூண்டுதல் ,சேகரித்தல், இவ்விரண்டிலும்  முக்கியமானது எது? அவைகளின் முக்கிய பேதங்கள் எவை?
பகவான்:அர்ச்சுனா! குணங்களின் ( இயல்புகள்) தொடர்பால் ஒவ்வொரு பொருளிலும் ஏற்படும் வெவ்வேறு பேதங்களை( வித்தியாசங்களை)குறிப்பிடும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது இதுதன் அதாவது குணங்களிற்கு ஏற்ப ஞான்ம்,கர்மம்,கர்த்தா( செய்பவன்)இம்மூன்று முக்கிய பேதங்கள் ஏற்படுகின்றன.இவை பற்றியும் அர்ச்சுனா நீ நன்கு தெரிந்து கொள்.

அர்ச்சுனன்: பகவானே! ஞானத்திற்கு உள்ள மூன்று பிரிவுகளில் சாத்வீக ஞானம் எது?

பகவான்: அர்ச்சுனா!சித்தி பெற முயலும் சாதகர்( பயிற்சியாளர்)எந்த மெய்யறிவால்(ஞானம்) எல்லா பிரிவுகளும் கொன்ட பிராணிகளிடத்தில் பிரிவு பேதங்களை ( வித்தியாசங்களை) காணாமல் ஒரே நித்திய நிலையை காண்கிறாரோ அவருடைய மெய்யறிவுதான் சாத்வீக ஞானம்.

அர்ச்சுனன்: பகவானே! இராட்சத ஞானம் எது?


பகவான்:  எப்படிப்பட்ட ஞானத்தால் பகுத்தறிவு உள்ள மனிதன் பல பல பிரிவுகள், வித்தியாசங்கள் கொண்ட பிராணிகளிடம் வெவ்வேறான தன்மைகளை காண்கிறார்களோ,உணர்கிறானோ அதுதான் இடாட்சத ஞானம்.
அர்ச்சுனன்: கண்ணா ! தாமஸ ஞானம் எது?
பகவான்:  அர்ச்சுனா! பிறந்து அழியும் சரீரத்தையே பூரண தத்துவமான ஆத்மா என்று கருதி ஆசாபாசம் கொண்டிருப்பது.பகுத்தறிவிற்கு பொருந்தாது.அது தத்துவ ஞானம் அற்றது.இழிவானது.தாமஸ ஞானம் எனப்படும்.

அர்ச்சுனன்: கண்ணா ! மூன்றுவகை கருமங்களில் சாத்வீக கருமம் எது?

பகவான்: எந்த ஏற்படுத்தப்பட்ட கருமங்கள் பயன் சார்ந்த ஆசை பாசம் இல்லாத மனிதனால் விருப்பு, வெறுப்பு, செருக்கு ஏதும் இல்லாமல் செய்யப்படுகிறதோ அவை சாத்வீகமானவை.

அர்ச்சுனன்: இராட்சத கர்மம் எது கண்ணா?

பகவான்: எந்தக் கருமம் அனுபவிக்கும் ஆர்வம் கொண்ட மனிதனால் செருக்கும் , முனைப்புமாக செய்யப்படுகிறதோ அது இராட்சத கர்மம்.

அர்ச்சுனன்: தாமஸ கர்மம் எது கண்ணா?

பகவான்: அர்ச்சுனா! எந்தக் காரியம் விளைவு.நட்டம், கேடு,வன்மைச்செயல்,தன் திறமை ஆகியவைகளை கருத்தில் கொள்ளாமல் கண்மூடித்தனமாக மோகத்துடன் ( ஆவலுடன்)ஆரம்பிக்கபடுகிறதோ அது தாமஸ கர்மம்.

அர்ச்சுனன்: கண்ணா! மூன்றுவகை கர்த்தாக்களில் ( செய்பவர்) சாத்வீக கர்த்தா எவர்?

பகவான்: அர்ச்சுனா எவர் செய்யும் கருமத்தில் சுயநல ஈடுபாடு இல்லாமல் செருக்கு இல்லாமல் பொறுமையும் உற்சாகமும் கொண்டு வெற்றி தோல்விகளில் ( இலாப நஷ்டங்களில்)சமநிலையோடு ( மகிழ்ச்சியோ வருத்தமோ கொள்ளாமல்) இருந்து வருகிறாரோ அவர்தான் சாத்வீக கர்த்தர்.

அர்ச்சுனன்:இராட்சத கர்த்தா எத்தகையவர் கண்ணா?

பகவான்: அர்ச்சுனா! எவை ஆசை பாசம் கொண்டவராக செய்வினைப் பயனில் நாட்டம் உள்ளவராக, வன்முறைகளில் ஈடுபட்டுள்ளவராக தூய்மை இல்லாதவராக, மகிழ்ச்சி துயரங்களிற்கு அடிமைப்பட்டவராக இருக்கிறாரோ அவர் தான் இராட்சத கர்த்தர்.

அர்ச்சுனன்: தாமச கர்த்தா என்பவர் எப்படி இருப்பர் கண்ணா?

பகவான்: அர்ச்சுனா! எவன் கவனக்குறைவாகவும், செய்யத்தக்கது, தகாதது எனும் விவேகம் இல்லாமலும் இருக்கிறானோ,கல்வி கேள்விகளில் ஈடுபடாமல் இருக்கிறானோ, திமிரும் வீம்பும் வீண்பிடிவாதமும் கொண்டிருக்கிறானோ, செய்நன்றி இல்லாதிருக்கிறானோ,சோம்பேறியோ,துயரத்தில் ஆழ்ந்திருகிறானோ, செயல் புரிவதில் வீணாக காலம் கடத்துபவனோ அவன் தான் தாமஸ ( தமோ குணம் நிரம்ம்பிய) கர்த்தா( செயல் புரிபவன்).

அர்ச்சுனன்: பகவானே! ஞானம் ,கர்மம்,கர்த்தா மூவர்க்கும் உல்ள மூன்றுவகைப் பிரிவுகளைச் சொன்னீர்கள்.இவைகளத் தவிர மேலும் என்னென்ன பிரிவுகள் ( பேதங்களை நான் தெரிந்த்து கொள்ள வேன்டும்?

பகவான்: அர்ச்சுனா! கர்மங்களைச் சேகரிக்கும் கருவிகளில் புத்தியும் சக்தியும் ( மிகுந்த பிடிவாததுடன் கூடிய தாரண சக்தி)கொள்ளவேண்டியது அவசியம் குணங்களைச் சார்ந்த புத்தியும் , ஞாபக சக்தியும் மூன்று வகைப்படும்,அதாவது காரியத்தில் ஈடுபாடு ,விடுபாடு ( பிரவிருத்தி, நிவிருத்தி) செய்யத்தக்கது,தாகதது,அச்சம்,அச்சமின்மை,தளை,விடுதலை,( பந்தம், மோட்சம்) அவைகளைச் சரிவர உணரும் அறிவுதான் சாத்வீக புத்தி.

அர்ச்சுனன்: பகவானே1 இராட்சத புத்தி எத்தகையது?

பகவான்: ஹே பார்த்தா! எந்தவொரு அறிவு தர்மம் செய்யத்தக்கது,தகாதது ஆகியவகைளை சரியாக அறிவதில்லையோ அது இராட்சத புத்தி எனப்படும்.

அர்ச்சுனன்: பகவானே! தாமஸ புத்தி எவ்வாறு இருக்கும்?

பகவான்: – பிருதையின்( குந்தி) மைந்தனே!தமோ குணத்தின் ஆதிக்கத்திற்கு  ஆள்பட்ட புத்தி தருமத்தை அதர்மமாக்கவும் அதர்மத்தை தர்மமாகவும் இதேபோல் எல்லாவற்றையும் மாறாகவே அறியும் அறிவு தாம்ஸ புத்தி இதற்கு நல்லதெல்லாம் தீயதாகவும் தீயவையெல்லாம் ந்ல்லவையாகவும் தோன்றும்,இதன்படியே செயல்புரியவும் தோன்றும்.

அர்ச்சுனன்: பகவானே! சாத்வீகமான திருதி ( தாரணசக்தி) எது?

பகவான்: ஹே பார்த்தா! சமத்துவ உணர்வுடன் கூடிய ( திருதி) பிறழாத உறுதி புத்தியுடன் துணையுடன் மனிதன் மனம், பிராணன், புலன்கள் சார்ந்த செயல்களை ஏற்கிறான்.அவற்றை முறைப்படுத்துகிறான்,இத்தகைய ஞாபகசக்தி தான் சாத்வீகமானது.

அர்ச்சுனன்: இராட்சத புத்தி( திருதி) எத்தகையது பகவானே?

பகவான்: அர்ச்சுனா! பயனை விரும்பும் மனிதன் எந்த நினைவாற்றலின் துணையைக் கொண்டு அறம், பொருள், இன்பம் மூன்றையும் மிக்க ஈடுபாடுடன் ஏற்கிறானோ அது இராட்சத புத்தி எனப்படும்.

அர்ச்சுனன்: பகவானே! தாமஸ புத்தி எப்படிப்பட்டது?

பகவான்: ஹே பார்த்தா! தீய புத்தியுள்ளவன் எந்தத் தாரண ஞாபக சக்திமூலம் தூக்கம்,அச்சம்,கவலை,துயரம்,கர்மம் ஆகியவைகளை விடாதிருக்கிறானோஅதுதான் தாமஸ குணம் உள்ள புத்தி.

அர்ச்சுனன்: பகவானே!தாமஸ குணமுள்ளவன் உறக்கம் முதலிய கீழ் நிலை இயல்புகளை ஏன் கைவிடாமல் மேற்கொண்டிருக்கிறான்?

பகவான்: அர்ச்சுனா! இலைகளால் சுகம் கிடைப்பதால் கைவிடவிரும்புவதில்லை.

அர்ச்சுனன்: பகவானே! அந்த சுகம் எத்தகையது? நான் அறிந்து கொள்ளலாமா?

பகவான்: பரதவம்சத்தின் தலை சிறந்தவனே! அந்த சுகம் மூன்று வகைப்படும்.சாத்வீக சுகம்,இராட்சஜசுகம்.தாமஸ சுகம்.இவற்றில் எந்தச் சுகத்தில் வழக்கமான ஈடுபாடு காரணமாக மனநிறைவு கிட்டுகிறதோ, எதனால் துக்கங்கள் விலகுகின்றனவோ, எது பரமாத்மாவிடம்பற்றுதல் கொண்ட அறிவின் மகிழ்ச்சியோடு பிறந்ததோ,எது உலகில் வாழ்வில் ஈடுபாடு கொன்ட காரணத்தால் ஆரம்பத்தில் நஞ்சு போலும் இறுதியில் அமுதம் போலும் அமைகிறதோ அதுதான் சாத்வீகமான சுகம்.

அர்ச்சுனன்:தாமஸ சுகம் எப்படியிருக்கும் பகவானே?

பகவான்:தூக்கம் , சோம்பல், மதிமயக்கம் காரணமாக ஏற்படும் தாமஸ சுகம் தொடக்கத்திலும் இறுதியிலும் மோகாந்த காலத்தில் மூழ்கிவிடும்.பின்னர் துன்பங்களைத் தரும்.

அர்ச்சுனன்: பகவானே!சாத்வீகம்,இராட்சதம், தாமஸம் எனும் முக்குணங்களின் செயற்கையால் இன்னும் எந்தப் பொருட்களில் எல்லாம் மூன்று வித்தியாசங்கள் ஏற்படுகின்றன?

பகவான்:அர்ச்சுனா! ஒரு பேருண்மையை புரிந்து கொள்.இம்மூன்று குணங்களின் செயற்கையால் பாகுபாடு ( பேதம்) காணாத பொருள் எதுவும் இந்த பிரபஞ்சத்தில் இருக்க முடியாது .பூமியிலும் ,மேலுலகிலும்,மனிதர்களிடமும் தேவர்களிடமும்,மற்ற இடங்களிலும், இனங்களிலும் எந்தவொரு பொருளும், இயற்கை ஏற்படுத்தியுள்ள அம் மூன்று குணங்களையும் சார்ந்திராமல் தனித்திருக்க முடியாது.இவை எங்கும் எவற்றிலும் எக்காலத்திலும் வியாபித்திருக்கின்றன.

அர்ச்சுனன்: இந்தக்  குணங்களில் இருந்து விடுபட என்ன வழி பகவானே?

பகவான்:அர்ச்சுனா! இந்த உலகத்தில் படைக்கப்பட்ட மனிதர்களின் இயல்பான குணங்களை அடிப்படையாக கொண்டுதான் பிராமணர்,சத்திரியர்,வைசியர்.சூத்திரர்( அந்தணர்,அரசர்,வணிகர்,உழவர்)எனும் நான்கு வகை வர்ணங்கள்( இனங்கள்) வகுக்கப்பட்டன.ஆகையால் நால்வகையினரும் தம்மினத்திற்கு ஏற்புடைய கருமங்களை சரிவரச் செய்து வருவதால் தான் முக்குணங்களின் பாதிப்பிலிருந்து விடுபடவழி வகுக்கும்.

அர்ச்சுனன்: பகவானே! பிராமணருக்கு விதிக்கப்பட்ட கருமங்கள் எவை?அவற்றை அறிய ஆவலாய் உள்ளேன்?

பகவான்: அர்ச்சுனா!

1, உள்ளத்தை அடக்கி வாழுதல்.
2. புலன்களை தம்வசப்படுத்தி வாழுதல்.
3. அறநெறிகளை பேணிவளர்க்க உடல்வருத்தம் போன்ற சிரமங்களை சகித்து கொள்ளல்.
4.உள்ளும் புறமும் தூய்மையுடன் இருத்தல்.
5.பிறர் புரிந்த குற்றங்களை பொறுத்தல் மன்னித்தல்.
6.உள்ளம் உடல் இரண்டையும் வலிமையுடன் வைத்திருத்தல்
.

7.வேதங்கள் சாஸ்திரங்கள் ஆகியவைகளை நன்கு பயின்று நல்லறிவு வளர்த்தல்.
8.வேல்வி முதலான தூய நெறிகளை நடைமுறைப்படி செயல்படுத்தல்.
9. பரமாத்மா வேதம் முதலியவற்றில்  நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டு நல்ல ஆத்திகனாக மக்களுக்கு முன் மாதிரியாக வாழவேண்டும்.இவைதான் பிராமணர்களின் இயல்பான கருமங்கள்.

அர்ச்சுனன்: பகவானே!சத்திரியர்களுக்குரிய( அரசர்களுக்குரிய) காரியங்கள் எவை?

பகவான்:

1. திறமையும்  துணிவும் மிகுந்த வீரம்.
2. பொலிவு( தேஜஸ்)
3.உறுதி
4.மக்கள் பராமரிப்பு ஆட்சி பரிபாலனம்.
5.போர்க்களத்தில் புறம்காணத தீரம்.
6.தானதர்மங்களில் தராள குணம்.
7.ஆட்சிபுரியும் நிர்வாக திறமை இவைகளே சத்திரியர்களுக்குரிய இயல்புகள் செயல்கள்.

அர்ச்சுனன்: பகவானே! வைசியர்களுக்குரிய இயல்புகள் எவை?

பகவான்:
1. நிலசாவுபடிக்கு உதவுதல்,பயிரிடல்,விவசாயம்
2. பசுக்களை பராமரித்தல்
3. நேர்மையுடன் வியாபாரம் தொழில் நடத்துதல் இவைகளே வைசீயர்களுக்கு வணிகர்களுக்குள்ள இயல்பான செயல்கள்.

அர்ச்சுனன்: பகவானே! சூத்திரர்களுக்கு உள்ள பணிகள் எவை?

பகவான்: தம்மினத்தவர்களோடு மற்ற மூன்று இனத்தவர்களையும் வாழ்வித்தலும்,வளர்த்து வலிமையுள்ளவர்களாக ஆக்குவதும் பயிர்த்தொழில் மூலம் மக்களுக்கு பணிபுரிவதும் இவர்களுக்குரிய பணிகள்.

அர்ச்சுனன்: பகவானே! இந்த நான்கு வர்ணத்தார்களும் தமக்கென விதிக்கப்பட்ட பணிகளை செய்து வருவதால் என்ன ஆகும்?

பகவான்: அர்ச்சுனா! இந்த நால்வகை இனத்தவரும் ஒன்றுபட்டு இணைந்து செயல்படுவதால் சமூகமும் நாடும் மேம்பாடும் ஒவ்வொரு இனத்தவரும் தமக்குரிய பணிகளில் சுயநல வேட்கையில்லாமல் பற்றுதலான ஈடுபாடுடன் முனைந்திருப்பவர்கள் பரமாத்மாவை அடைகிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! அவர்கள் எவ்விதம் பரமாத்மாவை அடைகிறார்கள்?

பகவான்:அர்ச்சுனா! பரமாத்மாவிடமிருந்து எல்லா உலகங்களும் உயிரனங்களிலும் உற்பத்தியாகின்றன.எல்லாப் பிராணிகளிடத்திலும் எல்லா இடங்களிலும் பரமாத்மா வியாபித்திருக்கிறார்.பரமாத்மாவிற்கு மனிதன் செய்யும் பூசை அவன் அவனுக்கு ஏற்பட்ட பணிகளை ஒழுங்காக செய்வதுதான் .அதன்மூலமே மனிதன் காரிய சித்தியடைகிறான்.அதாவது பரமாத்மாவிடம் ஒன்றிணைகிறான்.

அர்ச்சுனன்: கண்ணா! மனிதன் தன் இனத்திற்கேற்பட்ட கருமங்களை மட்டும் ஏன் செய்து வரவேன்டும்? பிற இனத்திற்குரிய பணிகளையும் ஏன் இணைத்துச் செய்யக் கூடாது?

பகவான்: தம்பி அர்ச்சுனா! அவரவர் தமக்கு ஏற்பட்ட அவைகளுக்கென்ற விதிக்கப்பட்ட கர்மங்களை சரிவரச் செய்து வந்தாலே போதும்.தன்னினத்திற்குரிய செயல்களை விட பிற இனத்தின் செயல் உயர்ந்ததாகவோ, சிறந்ததாகவோ இருந்தாலும் அதை மேற்கொள்ளலாகாது.தனக்கென உரிய செயலை அது தாள்வானதுஎன்று கருதி புறக்கணிக்கவும் கூடாது.இயல்புக்கு ஏற்ப ஏற்படுத்தப்பட்டுள்ள சுயதர்மமான கடமைப் பணிகளை செய்யும் மனிதன் ஒருபோதும் பாவத்திற்கு இலக்காவது இல்லை.குந்தியின் மைந்தனே!குற்றம் குறை இருந்தாலும் மனிதன் சுயதர்மத்தை ( கடமைப்பணியை) விட்டுவிடலாகாது.நெருப்பு எரியத்தொடங்கும்போது புகையைக் கக்குவது போல் ஒவ்வொரு கருமம் தொடக்கத்தில் ஏதாவது குற்றம் குறையுள்ளதாக இருக்கும்.

அர்ச்சுனன்: பகவானே! கருமங்களில் சிறிதளவுகூட குறையில்லாதிருக்க ஏதாவது உபயம் ( வழிவகைகள்) உள்ளதா?

பகவான்:அர்ச்சுனா! இருக்கிறது. சாங்கியயோகத்தால் சாதிக்கலாம்.எவருடைய புத்தி எல்லா இடங்களிலும் முற்றிலும் பற்றுதல் இல்லாமல் இருக்கிறதோ, எவருடைய உடல் கட்டுபாட்டில் உள்ளதோ , எவர் எந்தப் பொருளிலும் சிறிதளவு கூட ஆசாபாசம் வைப்பதில்லையோ அத்தகையவர் சாங்கிய யோகம் மூலமாக ” நைஷகர்மியசித்தி”( செயல் ஒழிந்த பிரம்ம நிலை)அடைகிறார்.அதாவது அவருடைய எல்லா செயல்களும் செயலற்றுப் போகின்றன.செயல்களால் ஏற்படும் சிறிதளவு தோஷம் கூட அவரைத் தீண்டுவதில்லை. ( 49)

அர்ச்சுனன்: பகவானே! நீங்கள் குறிப்பிட்ட  நைஷகர்மியசித்தியை அடையும் வழிமுறைகள் என்ன?

பகவான்:அர்ச்சுனா! அந்தக்கரணம் பரிசுத்தமாக இருப்பது சித்தி இதைப் பெற்ற மனிதன் ஞானத்தின் மேலான நிலையான பிரம்மத்தை எந்த வழிமுறையில் அடைகிறானோ ,அதை சுருக்கமாக சொல்லுகிறேன்.நன்கே அறிந்து கொள்.அர்ச்சுனா! அந்த மனிதன் சாத்வீக புத்தி கொண்டவன்,வைராக்கிய சித்தமுள்ளவன்.தனிமையில் தன்வயத்தில் வாழப் பழக்கப்பட்டவன்.ஆகார நியமம் கொண்டவன்.துணிவுடன் புலன்களை அடக்கி வைத்துக்கொள்ளும் சாதகன்,,உள்ளம்,உரை,செயல் இவற்றை கட்டுப்படுத்தி புலனுகர்ச்சியை தியாகம் செய்பவன்.அவன் விருப்பு , வெறுப்பை கடந்து பராமாத்மா தியானத்தில் லயிக்கிறான். அவன் அகங்காரம், பிடிவாதம்,செருக்கு,காமம் , வென்சினம், பொருள் சேகரிக்கும் பேராசை ஆகியவைகளை துறந்து மமதையில்லாமல் மன அமைதியாக வழ்ந்து பிரம்ம நிலையை அடைய தகுதி பெறுகிறான்.

அர்ச்சுனன்: பகவானே! பிரம்ம நிலையை அடையத் தகுதி பெற்ற பின் என்னாகிறது?

பகவான்:அர்ச்சுனா! பிரம்ம மயமான நிலையை அடைந்து மகிழ்ச்சி கொண்ட சாதகன் எதற்காகவும் , எவருக்காகவும் ,வருத்தமோ விருப்பமோ கொள்ளுவதில்லை.சகல பிராணிகளிடமும் அந்த ஞானி சமநிலையுடன் அன்பும் பரிவும் காட்டுகிறான்.இத்தகைய சாதக புருஷருக்கு பரமாத்வாகிய என்னிடம் பராபக்தி (உத்தமமான பக்தி) நிறைந்திருக்கிறது.

அர்ச்சுனன்: பராபக்தி ஏற்படுவதால் என்ன ஆகிறது பகவானே?

பகவான்: இந்த உத்தம பக்தியால் சாதக புருஷன் என்னுடைய சத்திய சொரூபத்தை உள்ள படி அறிகிறான் தத்துவ ஞானத்தின் துணைகொண்டு நல்லுணர்வுடன் அதன் பயனாக என்னுள் ஐக்கியம் அடைகிறான்.

அர்ச்சுனன்: பகவானே!உங்களை அடைவதற்கு வேறு சிறந்த உபாயமும் உள்ளதா?

பகவான்: மிகச் சிறந்த வழியிருக்கிறது.

அர்ச்சுனன்: எம்பெருமானே! அது என்ன என்பதை அறியத்தரும்படி வேன்டுகிறேன்?

பகவான்: அர்ச்சுனா! எந்த உத்தமமான பக்தன் என்னையே சரணாகதியாக அடைகிறானோ,என்னையே எண்ணியே எண்ணி எனக்கே சமர்ப்பணமாக எல்லா காரியங்களையும் செய்து வருகிறானோ அவன் என் அருளால் சாசுவதமான உத்தம நிலையை ( பரமபதம்)அடைகிறான்.

அர்ச்சுனன்: பகவானே! இந்த நிலைக்கு நான் செய்ய வேண்டியது என்ன?

பகவான்: தம்பி அர்ச்சுனா!நீ என்றுமே என்னிடம் முழு ஈடுபாட்டுடன் இரு.நீ செய்யும் எல்லாக் காரியங்களையும் எனக்கே அர்ப்பணித்து விடு.நீ செய்யும் எல்லாச் செயல்களிலும் பொருள்களிலும் நீ கொண்டிருக்கும் பற்றுதலை அகற்றிக் கொள்.எல்லாவற்றிலும் சமநிலையை மேற்கொள்.எல்லாவற்றிலும் சமநிலையை மேற்கொள்.எப்போது என்னிடமே சிந்தையை செலுத்தி வாழ்ந்து வா.என் சார்பிலேயே செயலாற்றுவதாக கருதிக்கொள்.

அர்ச்சுனன்: பகவானே! உங்களிடமே எப்போதும் சிந்தையை செலுத்தி வாழ்வதில் என்ன ஆகும்?

பகவான்:  அர்ச்சுனா!என்னிடம் சிந்தையை செலுத்தி வாழ்வதால் என் அருள் உனக்கு இலகுவில் கிட்டுகிறது.இதனால் இன்னல்கள் இடையூறுகளில் இருந்து விடுபடுவாய்.ஒருவேளை நீ மமதையின் காரணமாக என்னையும் என் பேச்சையும் மதிக்காது போனால் உனக்கு வீழ்ச்சி ஏற்படுவது நிச்சயம்.

அர்ச்சுனன்: எப்படியான வீழ்ச்சி எனக்கு ஏற்படும்?

பகவான்:  அர்ச்சுனா! அகங்காரத்தை துணைகொண்டு நீ இப்போது போர்புரிய வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறாயே,இந்த தீர்மானம் பொய்யானது.காரணம் உன்னுடைய சத்திரய சுபாவம் ( இயல்பு) உன்னை போரில் ஈடுபடுத்தத்தான் செய்யும்.குந்தியின் மைந்தனே!தன் இயல்புக்கேற்ப விதிக்கப்பட்ட அல்லது ஏற்கப்பட்ட கர்மத்திற்கு கட்டுப்பட்டவன் நீ.உன் மதிமயக்கம் ( மோகம்) காரணமாக போர் புரிய விரும்பதாதது நீடிக்காது.இந்த போரையே நீ ஷத்திரிய சுபாவத்திற்கு ஆட்பட்டு அதன் தூன்டுதல்களுடன் செய்யத்தான் போகிறாய். தொடர்ந்து செய்.நீயே வெற்றி பெறுவாய்.

அர்ச்சுனன்: பகவேனே! இந்தசத்திரிய சுபாவம் போர்புரிதல் எனும் சுயதர்ம கர்மத்தை எப்படிச் செய்யத் தூண்டும்.எப்படி செய்விக்க முடியும்?

பகவான்:  அர்ச்சுனா! எல்லப் பிராணிகளுக்கும் புகுந்திருக்கும் அந்தர்மியாமியான சர்வேஸ்வரன்( பரமாத்மா) தன்மானத்தினால் சரீரம் எனும் இயந்திரத்தில் அமர்ந்து எல்லாப் எல்லாப் பிராணிகளையும் அவரவர் இயல்புப்படி ( சுபாவ சுய தர்மப்படி) இயக்குகிறான்.செயல் புரிய வைக்கிறான்.ஆட்டிப்படைக்கிறான்.

அர்ச்சுனன்: பகவேனே! இந்தப் பரவசமான ( பிறசக்திக்கு ஆள்பட்டிருக்கும்) நிலையிலிருந்து வெளிவர என்ன வழி?( சுபாப தர்மத்தின் ஆதிக்கத்திலிருந்து எப்படி விடுபடுவது)

பகவான்:  பரதவம்சத்தின் வீரப் புதல்வனே!நீ “எல்லாமே அவன் தான்” எனும் நம்பிக்கையுடன் அந்தர்யாமியான சர்வேஸ்வரினிடம் சரணடைந்து விடு.அவருடைய பேரருளால் உனக்கு இந்த உலகத்திலிருந்து விடுபட்ட நிம்மதியுடன் சாசுவதமான பரமபதம் கிடைக்கும்.இது மிக மிக ரகசியமான சரணாகதி தத்துவம்.இந்த அரிய தத்துவத்தை உனக்கு உபதேசிக்கிறேன்.நீ இதுபற்றி நன்கு சிந்தித்து உன் விருப்பப்படி தெரிவு செய்.

பகவானே! நான் என்னுடைய விருப்பப்படி எதுவும் செய்யவில்லை.நீங்களே கூறுங்கள்.நான் என்ன செய்ய வேண்டும்.

பகவான்: அப்படியானால் மிக்க ரகசியமான பரம தத்துவத்தை மறுபடியும் கேள்.நீ எனக்கு மிகவும் பிரியமானவன்.ஆதலால் உன் நன்மைக்கு வேண்டியதைக் கூறுவேன்.

அர்ச்சுனன்: சர்வேசா ! எனக்கு நன்மை தரும் இதமான அருளுரை எது?
பகவான்: நீ என்னையே போற்றி ஆராதிக்கும் பரம பக்தனாகி விடு.என்னிடமே உன் மனதைச் செலுத்து.இப்படி இருப்பதால் நீ என்னைப் பெறுவாய்.இதை நான் உனக்குச் சத்திய பிரதிக்கினையாகக் கூறுகிறேன்.என் அன்புக்கு உரியவன் நீ.உன்னை மிகவும் நேசிக்கிறேன்.

அர்ச்சுனன்: நான் நீங்கள் அறிவுறுத்துமாறு செய்ய இயலாமல் போனால் என் நிலை என்ன பகவானே?

பகவான்: அர்ச்சுனா! எல்லாத் தருமங்களையும் விட்டுவிட்டு என்னையே சரணாகப் பற்றிக்கொள்.நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிடுத்து விடுகிறேன்,நீ கவலை கலக்கம் இல்லாமல் தெளிவாக பூரண நம்பிக்கையோடு இரு.

அர்ச்சுனன்: பகவானே!நீங்கள் மிகவும் சுலபமானதும்,உத்தமமானதுமான தத்துவத்தை உபதேசித்திருக்கிறீர்கள்.இதை நான் மற்றவர்களுக்கெல்லாம் தெரிவிக்கலாமா?

பகவான்: கூடாது.கூடாது.இது மிகவும் பத்திரமாக ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டியது.சகிப்புத்தன்மையில்லாத மனத்திட்பம் இல்லாத,நம்பிக்கை இல்லாத எவடுக்கும் சொல்லி விடாதே!மேலும் எவர் என்னிடம் பக்தி கொள்ளவில்லையோ, இத்தத்துவத்தை கேட்க விரும்பவில்லையோ, குற்றமுள்ள நெஞ்சும் நோக்கமும் கொண்டிருக்கிறார்களோ ,அவர்களுக்கெல்லாம் இந்த அரிய ரகசிய தத்துவத்தை சொல்லிவிடாதே.

அர்ச்சுனன்: இதைத்தவிர நீங்கள் கூறிய மற்ற விஷயங்களை எவருக்குச் சொல்லலாம்?
பகவான்: என்னிடம் பக்தி கொன்டவர்களிடம் சொல்.எந்த ஞானவான் என்னிடம் பராபக்தி( மிக ஆழ்ந்த பக்தி சிரத்தை)கொண்டிருப்பதால் உந்தப்பட்டு மிக அரிய ரகசியத் தத்துவங்கள் நிரம்பிய இந்த பகவத் கீதையை ( பகவான் கருத்துரை) என் பக்தர்களுக்கு எடுத்துச் சொல்கிறானோ, அவன் என்னைப் பெறுகிறான்.மேலும் அவனைப் போல் என்னும் இல்லை.இப்பூமண்டலத்திலேயே அவனுக்கு நிகரான என் அன்பன் வேறு எவனும் இல்லை.

அர்ச்சுனன்: இதகைய அரிய உயரிய பணியைச் செய்ய முடியாது போனால்?

பகவான்: எனக்கும் உனக்கும் இடையில் இப்போது நிகழ்ந்த இந்த உடையாடல்களைக் கவனத்துடன் பயின்றால் போதும்.அவன் ஞானக்ஞம் செய்து என்னைப் பூசித்து போற்றியதாகும்.இதுவே எனது கொள்கை.

அர்ச்சுனன்:இதைப் பயிலவும் இயலாது போனால்?

பகவான்: இந்த உரையாடல்கள் மூலம் உபதேசிக்கப்பட்ட தத்துவங்களைப் பிறரும் கூற ஒருமுறை கவனமாக ,சிரத்தையுடன் கேட்டுக் கொண்டாலும் போதும்,கேட்பவன் பாவபந்தங்களிலிருந்து விடுபடுகிறான்.புண்ணியசாலிகள் மேலான உலகில் இடம் பெறுகிறான்.
அர்ச்சுனா! நான் உபதேசித்ததை எல்லாம் மனப்பூர்வமாக,கவனமாகக் கேட்டுக் கொண்டாயா?அக்ஞானத்தால் ஏற்பட்டிருந்த உன் மோகமயக்கம் விலகிவிட்டதா?

அர்ச்சுனன்:அச்சுதா!எம் பெருமானே!என் மோக மயக்கம் விலகியது.நல்ல தெளிந்த நினைவு ஏற்பட்டிருக்கிறது.இதெல்லாம் உங்கள் அருளால் ஏற்பட்டதுதான்.உங்கள் கீதோபதேசத்தைக் கேட்டதால் மட்டும் அல்ல.உங்களது கிருபைக்கே இந்த சக்தி உள்ளது.நான் ஐயம் திரிபு இல்லாமல் தெளிவாக திடமாக இப்போது இருக்கிறேன்.இப்போது நான் மேலான மகிமையான ஆணையைச் சிரமேற்கொண்டு போர் செய்து என் கடமையை நிறைவேற்றுவேன்.

போர்க்களத்தில் நடந்த சகல நிகழ்ச்சிகைளையும் திருதராஷ்டின மன்னனுக்கு சொல்லிக் கொண்டு வந்த சஞ்சயனை மகாராஜாதிரும்பவும் அவனிடம் வினவுகிறார்.அதற்கு சஞ்சயன் சொல்கிறான் மகாராஜாவே பகவான் வாசுதேவருக்கும் மகாத்மா அர்ச்சுனனுக்கும் இடையில் நிகழ்ந்த சகல உரையாடலையும் கேட்கும் பாக்கியம் பெற்றேன்.மிகவும் அற்புதமான இந்த தத்துவ விளக்க கருத்துரையை கேட்கும் போதும் அவற்றை நினைக்கும் போதும் என்னுடம்பு சிலிர்க்கிறது.பேரின்பம் பொங்குகிறது.

திருதராஷ்டின மன்னர்: சஞ்சயா!உனக்கு இந்த உரையாடலைக் கேட்கும் பாக்கியம் எப்படிக் கிட்டியது?
சஞ்சயன்: இது மிகவும் இரகசியமான தத்துவங்களை நிறைந்த உரையாடல். போர்க்கள நிகழ்ச்சிகளை தாங்கள் அறிய வேண்டும் என்ற ஆர்வத்தினால் வியாச பகவானின் அருளாசியால் எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது .சாட்சாத் சர்வேசுவரனான , யோகேஸ்வரனான ஸ்ரீ பரமாத்மா திருவாய் மலர்ந்தருள பரம பக்தனான அர்ச்சுனன் கேட்டுக்கொண்டிருக்க அந்த நிலையிலேயே ( குருபரம்பரை வழியாக இல்லாமல்) நான் கீதோபதேசத்தை செவிமடுத்திருக்கிறேன்.

 திருதராஷ்டினன்: சஞ்சயா! இதைக்கேட்டு கொண்டிருந்ததால் இதன் மூலம் உனக்கு ஏற்பட்ட பிரபாவம் என்ன?

சஞ்சயன்: பேரரசே! பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் பக்த  அர்ச்சுனனும் தமக்குள் நிகழ்த்திய இந்த அற்புதமான் உரையாடலை நினைத்து நினைத்து புல்லரித்து போனேன்.மகிழ்ந்து பெருமிதம்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

திருதராஷ்டினன்: சஞ்சயா! இப்பெருமித மகிழ்ச்சிக்கு உனக்கு வேறு காரணமும் உள்ளதா?

சஞ்சயன்: உள்ளது மகராஜா பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் மிக அற்புதமான ஒப்புயர்வில்லாத அந்த விஸ்வரூப தரிசனத்தை நான் என்னுக்குள் நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் பேராச்சரியம் ஏற்படுகிறது.அதை எண்ணி எண்ணி ஆனந்தப்பரவசம் அடைகிறேன்.

திருதராஷ்டினன்: சஞ்சயா! இப்போழுது நீ என்ன தீர்மானத்திற்கு வந்திருக்கிறாய்?

சஞ்சயன்: மகாராஜா! எந்த இடத்தில் எவர்தரப்பில் யோகேஸ்வராரன ஸ்ரீகிருஷ்ண பகவான் இருக்கிறாரோ, எங்கு காண்டீப தனுர்தாரியான மாவீரர் அர்ச்சுனன் இருக்கிறாரோ ,அங்கு தான் வெற்றி ஐஸ்வரியம்,திடமான நீதி, நெறி இடம் பெறும். இதுவே திண்ணம், இதுதான் எனது திடமான தீர்மானம்

17.நம்பிக்கையின் பிரிவுகள்

November 19, 2009 Leave a comment

அர்ச்சுனன்: வேண்டுகோள்:
 கிருஷ்ண பரமாத்மாவே சாஸ்திர நியமங்களையும் விதிமுறைகளையும் அறியாத மனிதர்கள் பக்தி சிரத்தையுடன் உங்களைப் பூசிக்கிறார்கள்.வேள்வி முதலான புனித அநுட்டானங்களை மேற்கொள்கிறார்கள். அவர்களுடைய பக்தி சிரத்தை சாத்வீகமானதா? ராஜஸமானதா? அல்லது தாமசமானதா?( அமைதியானதா? ஆடம்பரமானதா? கொடுமையனதா?)

பகவான்: அர்ச்சுனா!! மனிதர்களின் இயல்பு வழியாக ஏற்படும் சிரத்தை ஈடுபாடு மூன்று வகைப்படும்.அவை சாத்வீகம் ராச்சதம், தாமசம்.

அர்ச்சுனன்: மனித இயல்பின் மூலம் ஏற்படும் அந்த ஈடுபாடு ஏன் 3 வகைப்பட வேண்டும்?

பகவான்: பரத வம்சத்து புதல்வனே! எல்லா மனிதர்களிடமும் இடம்பெற்றுள்ள சிரத்தை அவர்களுடைய அந்தக் கரணம் எனும் உள்மன உணர்வுக்கு ஏற்றவாறு அமைகிறது. ஈடுபாடு கொண்டு முனைபவன் சிரத்தை மயமானவன்.ஆகையால் எந்த மனிதனுக்கு எத்தகைய சிரத்தையுள்ளதோ அதன் சொரூபமாக அவன் இயல்பும் அமையும்.அவனது செயலும் நிலையும் அந்த இயல்புப்படியே அமையும்.

அர்ச்சுனன்: அப்படியானால் பகவானே அந்த சிரத்தையை எப்படி இனம் கண்டு கொள்வது?

பகவான்: சாத்வீகமான இயல்பு கொன்ட மனிதன் தேவதைகளை பூசித்து ஆராதிக்கின்றான்.இராட்சத இயல்பு கொண்டவன் யட்சர்களையும்,இராட்சதர்களையும் பூசிக்கிறார்கள்.தாமச குணம் கொண்டவர்கள் பூதங்கள் பிரேதங்களை பூசிக்கிறார்கள்.

அர்ச்சுனன்: சிரத்தை ஈடுபாடு இல்லாத மனிதர்களுக்கு என்ன அடையாளம்?

பகவான்: அர்ச்சுனா! சிரத்தையில்லாத மனிதர்கள் வீண் பெருமை கர்வம், பேராசை தீவிர ஈடுபாடு பிடிவாதம் உள்ளவர்களாக இருப்பார்கள்.சாத்திர விதிகளுக்கு புறம்பாக கொடும் தவத்தை மேற்கொள்கிறார்கள்.ஐம்பூதப் பொருட்களால் ஆன சரீரத்தையும் அந்தக் கரணத்தில் உள்ள என்னையும் துன்புறுத்துகிறர்கள்.இத்தகைய அஞ்ஞானிகளை நீ அசுர சுபாவம் உள்ளவர்கள் என்பதை உணர்ந்து கொள்.

அர்ச்சுனன்: பகவானே! இதுவரையில் நீங்கள் பூசை, ஆராதனை, தவம் மூலமாக சிரத்தை கொண்டவர்கள், சிரத்தை இல்லாதவர்கள் என்னும் மனிதர்களை இனம் காண்பதைப் பற்றி உபதேசித்தீர்கள்.ஆனால் எவர் பூசை தவம் செய்யாதிருக்கிறார்களோஅவர்களை எப்படி அறிந்து கொள்வது?

பகவான்:அர்ச்சுனா! உணவின் சுவையைக் கொண்டு அதனை விரும்புபவர்களை அடையாளம் காணலாம்.( உணவு பழக்கம் மூலம் உண்பவர்களின் தராதரம் தெரியவரும்). காரணம் எல்லா மனிதர்களுக்கும் மூன்றுவகை உணவுகள் பிரியமானவை.இதைப் போல் வேள்வி,தவம், தானம் மூன்றும் மூன்று வகைப்பட்டவர்களுக்கும் பிரியமானவை. இந்த வித்தியாசத்தை இப்போது சொல்கிறேன் கேள்.

அர்ச்சுனன்: சாத்வீகமான மனிதனின் சுவை ஈடுபாடு எத்தகைய உணவில் ஏற்படுகின்றது?

பகவான்:அர்ச்சுனா! ஆயுள்,சாத்வீக குணங்கள்,உடல் வலிமை,ஆரோக்கியம்,சுகம்,மகிழ்ச்சி இவைகளை வளர்ப்பவையும் ,நிலையாக இருப்பவையும் இதயத்திற்கு வலிமை அளிப்பவையும் சுவையானவையும், ஈரப்பசை கொண்டவையுமான உணவுப்பண்டங்கள் சாத்வீகமான மனிதனிற்கு பிரியமானவைகள்.

அர்ச்சுனன்: இராட்சத மனிதனிற்கு பிடித்தமான உணவுகள் எவை?

பகவான்:மிகக் கசப்பும், புளிப்பும், உப்பும் உள்ளவை.மிகச் சூடானவை,காரமானவை,எரிச்சல் ஏற்படுத்துபவை.இத்தகைய பதார்த்தங்கள் இராட்சத குணம்படைத்தவர்களுக்கு பிடித்தவை.இவை துன்பத்தையும் சோகத்தையும், வருத்தத்தையும் நோயையும் ஏற்படுத்துகின்றன.

அர்ச்சுனன்: தாமச இயல்பு கொண்டவர்களுக்கு விருப்பமானவை எவை?

பகவான்: அர்ச்சுனா! அரைகுறையாக வெந்து சுவையில்லாதது,கொடுநாற்றம் கொண்டது.( மதுவகை,வெங்காயம்,உள்ளிப்பூண்டு போன்றவை)பழையது, ஊதிப்போனது, தீண்டத்தகாதது( இறைச்சி, மீன்,முட்டை முதலியவை).இப்பொருட்களில் தாமச குணமுள்ள மனிதர்களுக்கு ருசி சுவை மிக விருப்பம் அதிகம்.

அர்ச்சுனன்: பகவானே! ஆகாரவகைகள் மூன்றுவகைப்படுவதை அறிந்தேன்.இதேபோல் வேள்வி,தவம், தானம் இவையும் மூன்று வகைப்படும் என்றீர்கள்.இவைகளுக்குள்ள வேள்வியின் பிரிவுகளைப் பற்றி கூற வேண்டும்?

(முதலில் யசனம், பூசனம், போசனம், வேள்வி வழிபாடு உணவு மூன்றின் மூலமாக ஈடுபாடு சிரத்தையை அறியச்செய்தார்.அதன்மூலம் சாஸ்திர விதிகளை அறியாமை காரணமாகப் புறக்கணிக்கப் படுபவர்களை இனம் காணமுடியும்.ஆனால் சாஸ்திர விதிமுறைப்படி வேள்வி வழிபாடு உண்ணுதல் புரிபவர்களின் வித்தியாசங்ளை அறியச் செய்வதே இங்கு வேள்வி,தவம்,தான்ம் மூன்றுக்குரிய மூவகைப் பேதங்களையும் போதிக்கலானார்)

பகவான்: அர்ச்சுனா! வேள்வி செய்வது,நம் கடமையெனும் உணர்வோடு, மனப் பக்குவத்தோடு பயனை பற்றிச் சிந்திக்காமல் , சாஸ்திர விதிமுறைப்படி செய்யப்படும் வேள்வி சாத்வீகமானது.

அர்ச்சுனன்: இராட்சத வேள்வி எத்தகையது?

பகவான்: பரதகுல செல்வனே! பயனை எதிபார்த்து சுயநலத்திற்காக செய்யப்படுவதும் பிறர் பராட்ட வேண்டும் என்னும் நோக்கத்தில் பகட்டாக செய்யப்படுவதும் இராட்சத வேள்வி எனப்படும்.

அர்ச்சுனன்: பகவானே! தாமச வேள்வி எத்தகையது?

பகவான்: சாஸ்திர விதிகளிற்கு புறம்பானதும் அன்னதானம் இல்லாததும் மந்திர உச்சரிப்பு அற்றதும் தட்சணை அளிப்பு இல்லாததும் சிரத்தையற்றதுமான வெறும் பகட்டு வேள்வி தாமச வேள்வி எனப்படும்.

அர்ச்சுனன்: பகவானே! தவம் எத்தனை வகைப்பட்டது என்பதை உபதேசிக்க வேன்டுகிறேன்?

பகவான்: அர்ச்சுனா!தவஸ்( தவம்) மூன்று வகைப்பட்டது.உடலால் வாக்கால், மனத்தால் புரிவது.தேவதைகள், பிராமணர்கள், குருமார்கள்,ஜீவன் முத்தர்களான் மகாபுருஷர்கள் இவர்களை போற்றி பூசிப்பது.நீர், மண் முதலியவற்றால் உடலைப் பரிசுத்தமாக்கி கொள்வது.உடல்சார்ந்த பணிகளை எளிதாகவும், நேரியதாகவும் வைத்திருத்தல்( பதட்டம் பிடிவாதம் கொள்ளாது இருத்தல்) பிரம்ம சரியத்தை கடைப்பிடித்தல். உடலால் பிறருக்கு தீங்கு செய்யாதிருத்தல் .இதுதான் உடல் சார்ந்த தவம்.

அர்ச்சுனன்: வாக்கினால் புரியும் தவம் எத்தகையது கண்ணா?

பகவான்: எரிச்சல் ஊட்டுவதும் ஆத்திரம் ஊட்டுவதுமாக இல்லாத, உண்மையாக,பிரியமான நலம் தரும் வார்த்தைகளைப் பேசுவது.கல்வி வேள்விகளில் ஈடுபட்டிருப்பது.ஜெபம், அர்ச்சனை முதலியவற்றை பயில்வது.இவைதான் வாக்கினால் புரியும் தவம்.

அர்ச்சுனன்: மனத்தால் புரியும் தவம் எது கண்ணா?

பகவான்: அர்ச்சுனா! மனத்தை மகிழ்சியாக வைத்து கொள்வது.எப்போழுதும் இனிதாகப் பழகுவது.சிந்திக்கும் திறன்,மனவடக்கம்,தூயகருத்து இவற்றை முறையாக பயன்படுத்துவது தான் மானசீக தவம்.

இம்மூன்று வகை தவங்களையும் மிக்க ஈடுபாட்டுடன் பயனீட்டும் ஆசையில்லாமல் நன்றாக செய்து வந்தால் அதுதான் சாத்வீகமான தவம் எனப்படும்.

அர்ச்சுனன்: இராட்சத தவம் எது கண்ணா?

பகவான்: அர்ச்சுனா! எந்தத் தவம் சொந்த நலனுக்காகவும் , கெளரவுத்துக்காகவும் , போற்றுதலுக்காகவும் செய்யப்படுகிறதோ மேலும் பிறரை வியக்க வைக்க வேண்டிய பாசாங்காக செய்யப்படுகிறதோ,அதுதான் ரஜோகுணம் மேலோங்கிய பகட்டுத்தவம் .இதனால் நல்ல பலன் ஏற்படாது.கிடைக்கும் சிறிதளவு பலனும் அழிந்தே போகும்.

அர்ச்சுனன்: பகவானே! தாமசகுணம் மேலோங்கும் தவம் எது?

பகவான்: எந்த தவம் அறியாமையும் பிடிவாதமும் கொண்டு தம்மை வருத்திக்கொண்டு பிறரையும் துன்புறுத்திக் கொண்டு செய்யப்படுகிறதோ அது தாமச தவம் எனப்படும்.

அர்ச்சுனன்: பகவானே! இப்போது தானம் மூன்றுவகைப்படுவது எப்படி என்பது உபதேசிக்க வேண்டுகிறேன்?

பகவான்: அர்ச்சுனா! தானம் கொடுப்பது நம் கடமை எனும் கருத்துடன் பிரதிபலன் எதையும் எதிர்பராமல் செய்ய வேண்டும்.மேலும் இடம் , காலம், தகுதி அறிந்து நல்லவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.இத்தகைய தானம் சாத்வீகமானது.

அர்ச்சுனன்: இராட்சத தான்ம் எத்தகையது பகவானே?

பகவான்: அர்ச்சுனா! எந்தத் தானம் பிரதி உபகாரம்  பெறுவதற்காகவோ அல்லது பிரதி பலனை எதிர்பார்த்து கொடுக்கப்படுகிறதோ,மேலும் கொடுத்து தொலைக்க வேண்டியிருக்கிறதே என்று வேண்டா வெறுப்பாக கட்டாயமாக அளிக்கபடுகிறதோ அதுவே இராட்சத தானம்.

அர்ச்சுனன்: தாமச தானம் எத்தகையது?

பகவான்: எந்தத் தானம் மரியாதையில்லாமல் அலட்சியமாக அவமதிப்புடன் தகுதியற்றவர்களுக்கு தகாத காலத்தில் அளிக்கப்படுகிறதோ அது தாமச தானம்.

அர்ச்சுனன்: பகவானே! சிரத்தையுள்ள மனிதன் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட வேள்வி,தவம்,தானம் முதலிய அறப்பணிகளை எவ்வாறு தொடங்க வேண்டும்?

பகவான்: அர்ச்சுனா! ஓம்,தத்,சத்( பிரணவ சொருபமான பரமாத்மா தான் உண்மையில் நிலையானது) எனும் மூன்று சொற்களால் குறிக்கப்படும் பரமாத்மா தான் படைப்பின் தொடக்கத்தில் வேதங்களையும் பிராமண சாஸ்திர கிரந்தங்களையும் வேள்விகளையும் படைத்தது.ஆகையால் பரமாத்மாவின் பெயரைப் போற்றி வேள்வி முதலான பணிகளை தொடங்க வேண்டும்.

அர்ச்சுனன்: பகவானே! ஓம் என்ற பிரணவம் எங்கு பயன் படுத்தப்படுகிறது?

பகவான்: அர்ச்சுனா! வைத்தீக சித்தாத்தங்களை ( கோட்பாடுகளை) ஏற்றுக் கொண்ட மனிதர்களுக்கு சாஸ்திர விதிப்படி ஏற்படுத்தப்பட்ட வேள்வி, தானம்,தவம் எனும் பணிகளை ஓம் என்று உச்சரித்துத் தான் ஆரம்பிக்கப்படவேண்டும்.அதுதான் தொன்று தொட்ட வழக்கம்.

அர்ச்சுனன்: பகவானே! தத் எங்கே பயன்படுத்தப்படுகிறது?

பகவான்:அர்ச்சுனா! தத் எனும் பெயரால் கூறப்படும் பரமாத்மாவிற்கு எல்லாமே உள்ளது.எல்லாம் அதற்கே உரிமையானவை என்கிற எண்ணம் நம்பிக்கையாக அமைய வேண்டும் .இந்த திட நம்பிக்கையுடன் உலக பந்தங்களிலிருந்து முத்தி பெற விரும்பும் மனிதர்கள்  பயனைக் கருதாமல் வேள்வி முதலிய கடமைகளை செய்துவர வேண்டும்.

அர்ச்சுனன்: பகவானே!  சத் எங்கே பயன்படுத்தப்படுகிறது?

பகவான்:பார்த்தா!பரமாத்மாவின் சத் எனும் திருநாமம் எல்லா இருப்பிற்கும் ( நிலைப்பாடு)சிரேஷ்டமான தன்மைக்கு பயன்படுத்தப்படுகிறது.போற்றத் தகுந்தது.சிரேஷ்டமான செயலுடன் “சத்” எனும் சொல் சேர்க்கப்படுகிறது.வேள்வி, தவம், தானம் இவைகளில் மனிதனுக்கு நிலைகூட “சத்” எனப்படுகிறது.எவ்வளவுதான் சொல்கிறது? அந்த பராத்மாவிற்காக செய்யப்படும் செயல்கள் யாவுமே “சத்” என்ப்படும்.

அர்ச்சுனன்: பகவானே!  சத் என்பதற்கு மாறான அசத் காரியங்கள் எவை?

பகவான்:பார்த்தனே! சிரத்தையில்லாமல் செய்யப்படும் வேள்வி கொடுக்கப்படும் தானம், அநுட்டிக்கப்படும் தவம் முதலிய காரியங்களை சத் எனப்படும்.அசத் காரியங்களுக்கான பலன் இப்பிறவியிலும் இறந்த பிறகும் கூட ஏற்படுவதில்லை .அதாவது அசத்துக்கு எங்குமே நல்ல பலன் ஏற்படுவதில்லை.

16.தெய்வீக மற்றும் அசுர இயல்புகள்

November 19, 2009 Leave a comment

அர்ச்சுனன்: மிகவும் ரகசியமான் அந்தத் தத்துவங்களைஅறிந்துகொள்ள தகுதி கொண்டவர் யார்?

கண்ணன்: இறையருளும் செல்வமுள்ள பக்தன் அந்தத் தகுதியை கொண்டவனாகிறான்.
இறைவன்( தேவன்) பரமாத்மா   இறைவனின் அருட்செல்வம் நற்குணம் இதைத்தான் இறையருட்செல்வம் (சம்பத்) என்பர்.இதன் மூலமாக பரமாத்மாவை அடைய முடியும்.

அர்ச்சுனன்: கண்ணா இறையருட் செல்வங்கள் பெற்றவனின் ( இலட்சணங்கள்)என்ன?

பகவான்: அர்ச்சுனா!

1. என்னிடமே திட நம்பிக்கையுடன் ஈடுபட்டு அச்சமின்றி வாழுதல்.
2. அந்தக் கரணத்தில்( உள்மனதில்) என்னை அடைய வேண்டும் எனும் திடமான் தீவிர நிச்சயம் கொள்வது.
3. என்னை தத்துவ விளக்கத்துடன் அறிவதற்கு ஒவ்வொரு சூழ்நிலையிலும் சமநிலையில் இருப்பது.
4.சாத்வீக தானம் செய்வது.
5 ஐம்புலன்களையும் சுயகட்டுப்பாட்டில் வைத்திருத்தல்
6 தன் கடமைகளை முறையாக செய்து வருதல்.
7.சாஸ்திரங்களின் தீர்ப்புகளை( சித்தாத்தங்களை) விழுமிய கருத்துகளாக கொன்டு சொந்த வாழ்வில் செயல்படுத்தல்.
8. தன் கடமைகளைச் செய்து வரும்போது ஏற்படும் இன்னல் இடையூறுகளை மகிழ்ச்சியுடன் பொறுத்துக் கொள்வது.

9. உடலாலும் உள்ளத்தாலும் வாக்காலும் எளிமையாக வாழ்வது.
10. உடல்,உள்ளம் வாக்குகளால் எந்தப்  பிராணிக்கும் சிறிதளவாகிலும்துன்பம் தராது இருத்தல்
11. கண்டதையும் , கேட்டதையும் , அறிந்ததையும்  உள்ளபடியே இனிய சொற்களால் சொல்வது.
12. எவரிடமும் எதனிடமும் குரோதம் ( வெறுப்பேறிய வென்சினம்) கொள்ளாது இருத்தல் .எல்லாமே ஈஸ்வர சொரூபம் என்ற உணர்வுடன் பழகுதல்.

13. உலகியல் ஆசை அபிலாசைகளை துறப்பது.
 14. அந்தக் கரணத்தில் விருப்பு வெறுப்புகளால் எழும் கொந்தளிப்புகளை அடக்குவது
 15.கோள் பேசாதிருத்தல்.
 16. எல்லா உயிரினங்களிடத்திலும் இரக்கம் பரிவு கொண்டு பழகுதல்.
 17. உலகியல் பொருட்களில் பேராசை கொள்ளாது இருத்தல்.
 18. எந்நேரமும் மென்மையான இதயம் கொண்டிருத்தல்.
  19. செய்யத்தகாததை செய்வதில் வெட்கப்படுதல்.
 20 சபலசித்தம், அவசரப்படுதல் இரண்டும் இல்லாதிருத்தல்.

 21. உடல், வாக்கு இரண்டிலும் செல்வாக்கும் பொலிவும் கொண்டிருத்தல்.
22. தண்டனை அளிக்கும் அதிகாரம் , திறமை இருந்தாலும் குற்றவாளியின் குற்றத்தை மன்னித்தல்.
23. எந்தச் சூழ்நிலையிலும் தைரியமும் பொறுமையும் கொண்டிருத்தல்.
24. உடலை தூயதாக வைத்திருத்தல்.
25 பழிவாங்கும் உணர்ச்சி இல்லாதிருத்தல்.
26. உயர்வு மனபன்மையும் செருக்கும் கொல்ளாது இருத்தல்.

பரதவம்சத்து வீரனே! இவையாவும் தெய்வீக சம்பத்து ( இறையருள் செல்வம்) பெற்ற மனிதனின் இலட்சணங்கள், இந்த இயல்புகளைக் கொண்டிருக்கும் மனிதன் தான் என்னிடம் பக்தி செலுத்த தகுதி பெற்றவன்.

இந்த இடத்தில் ஓர் சந்தேகம் எழும்.மேற்கூறிய இலட்சணங்கள் கொண்ட மனிதன் தான் ஆன்டவனிடம் பக்தி செலுத்த தக்கவர்கள்.மற்றவர்கள் அல்லர்.தீய இயல்புகள் கொண்டவர்கள் பக்தி புரியக் கூடாதா?பக்தி புரியலாம்.தீயமனிதன் மன்ம்திருந்தி ஆண்டவனை வழிபட்டு மேன்மையை பெற முயன்றால் அவனுக்கு நற்பலன் கிட்டும்.அவன் விரைவிலேயே   அறநெறி சீலராக மாறுகிறான்.திருந்திய மேம்பட்ட அந்த மனிதரிடமும் இறையருள் செல்வம் இடம் பெறுகிறது. பகவத்கீதை அத்தியாயம் 9 சுலோகம் 30.3

அர்ச்சுனன்: பகவானே! தெய்வீக சம்பத்துக்கு அருகதையற்றவன் எவன்?

கண்ணன்: அசுரத்தன்மையுள்ள செல்வத்தைக் கொண்டவன்.( அசு என்றால் உயிர் . உயிர் நிலைகளிலேயே பற்றுக்கொண்டு வாழ்பவர்கள்.அவைகளை விரும்புவர்கள்”அசுரர்” எனப்படுவர்.உடலைப்பேணி உடல் இன்பத்திற்கககவே வாழ்ந்தும்
 வாழ விரும்பியும் இந்த உடலே நான் தான் என்று கருதுபவர் அசுரர்.நான் இறக்க மாட்டேன்.எப்போதும் வாழ்ந்து மகிழவேண்டும்.சுகபோகங்களை அநுபவித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.இந்த நினைப்பும் இதற்கான முனைப்பும்தான் அசுர சம்பத்து ( தீயசெல்வம்) எனப்படும்.

அர்ச்சுனன்: பகவானே! அசுரசம்பத்துக் கொண்டவனின் அடையாளங்கள் எவை?

பகவான்: அர்ச்சுனா! 

1. வெளிப்பகட்டுடன் செயற்கைப் பெருமையை காட்டிக் கொள்ளுதல்.
2.கர்வம் கொள்ளுதல் , பற்றுதல் கொண்டுள்ள பொருட்களை வைத்துக் கொண்டு செருக்குடன் பெருமைப்படுதல்.
3.செருக்கடைய வைக்கும் பொருட்களிலும் கருத்துக்களிலும் ஈடுபட்டு பெருமிதம் கொள்ளுதல்.
4. குரோதம் கொள்ளுதல்.
5.மனம், வாக்கு செயல்களில் கடுமையும் கொடுமையும் கொள்ளாதிருத்தல்.
6.நல்லது பொல்லாதது.உண்மை -பொய், கடமை -கடமையில்லாதது,செய்யத்தக்கது செய்யத்தகாததுமுதலியவற்றை பகுத்தறிந்து கொள்ளும்  விவேகத்திற்கு மதிப்பு அளிக்காது இருத்தல்.

அர்ச்சுனா! இவைதான் அசுரசம்பத்தைப் பெற்ற மனிதருக்குள்ள அடையாளங்கள். இவர்கள் என்னிடம் பக்தி செலுத்த தகுதியற்றவர்கள்.

அர்ச்சுனன்: பகவானே! இந்த இறையருட் செல்வத்திற்கும்  அசுர இயல்பிற்கும் ஏற்படும் இயல்புகள் என்ன?

கண்ணன்: அர்ச்சுனா! தெய்வீகச் செல்வம் பிறவிப் பெருந்தளைகளைப் போக்கி முத்தியெனும் வீடுவேறு அளிக்க வல்லது.அசுரசம்பத்து பந்தங்களை ஏற்படுத்தி ஜனன மரணச் சூழல்களில் சிக்க வைக்கிறது.எனவே இவற்றையிட்டு நீ கவலைபடாதே.நீ தெய்வீகச் செல்வத்தை பெற்றிருப்பவன்.

அர்ச்சுனன்: பகவானே! அசுரசம்பத்து எப்படி பந்தங்களில் சிக்க வைக்கிறது?

கண்ணன்: அர்ச்சுனா! இந்த உலகில் இருவகைப் பிராணிகளின் படைப்பு நிகழ்கிறது.தெய்வீக  சிருஷ்டி , அசுரத்தனமான சிருஷ்டிதெய்வீக சம்பத்து பற்றி  விளக்கமாக சொன்னேன்.இப்போது அசுரசம்பத்து  அசுர இயல்பான செல்வம் பற்றி விரிவாக கேட்டுக் கொள்.அசுரசம்பத்துள்ளவர் எதில் ஈடுபடவேண்டும்.எதிலிருந்து விலகியிருக்க வேன்டும் எனும் முறையை அறிந்து கொள்வதில்லை.அவர்களிடம்தூய நடத்தைகளும் இருப்பதில்லை.அவர்கள் சத்தியத்தை கடைப்பிடிப்பதில்லை.

அர்ச்சுனன்: பகவானே! அசுரசம்பத்துக் கொன்ட மனிதரிடம் ஆசார அநுஷ்டானங்கள் முதலியவை ஏன் இருப்பதில்லை? அவைகளை அவர்கள் ஏன் கடைப்பிடிப்பதில்லை?

கண்ணன்: அர்ச்சுனா! அவர்களுடைய நோக்கமே விபரீதமானது.அவர்களுடைய கருத்து இந்த உலகம் பொய்.இதிலுள்ள சாஸ்திரம்,அற்நெறி,தர்மம் எதுவும் உண்மையில்லை.இந்த உலகில் தர்மம்,அதர்மம்,புண்ணியம்,பாவம் முதலியவற்றிற்கு சிறிதும் மதிப்புக் கிடையாது.இந்த உலகை படைத்தவன் கடவுள் இல்லை.ஆணும்பெண்ணும் ஒருவரையொருவர் விரும்பினார்கள்.அந்த இருபாலரின் சேர்க்கையால் இந்த மானிட சமூகமும் பிறந்தது.உலகம் உருவாகிற்று.ஆகையால் இந்த உலக உற்பத்திக்கு காரணம் காம இம்சைதான் .இதைதவிர வேறு எதுவும் எவருக்கும் காரணமில்லை.

அர்ச்சுனன்: பகவானே! அசுரசம்பத்துக் கொண்டவர்களின் செயல்கள் எவ்வாறு இருக்கின்றன?
கண்ணன்: அர்ச்சுனா! மேல்சொன்ன நாத்திக நோக்கை புகலடைந்த அவர்கள் தனது நித்திய அளிவற்ற சொருபமான ஆத்மாவை ஒப்புக்கொள்வதில்லை.அவர்களுடைய அறிவு கீழ்த்தரமாக உள்ளது.அவர்களுடைய செயல்கள் யாவும் அச்சமூட்டுபவை.உக்கிரமானவை..அவர்கள் இந்த உலகிற்கே எதிரிகள். இத்தகைய அசுரத்தன்மை கொண்டவர்களின் திறமை , வலிமை எல்லாம் பிறரை அழிப்பதற்காகவே ஏற்பட்டிருக்கிறது.

அர்ச்சுனன்: நாத்திக நோக்கைப் புகலடைந்த அசுரத்தன் மையர் என்ன செய்கிறார்கள்?

கண்ணன்: அவர்கள் எப்போதுமே நிறைவேறாத பேராசைகளுக்கு அடிமையாகிறார்கள். பகட்டு, செருக்கு, மமதைவெறி நிறைந்து செயல்படுகிறார்கள்.மிக மோசமான வழிமுறைகளை கடைப்பிடிக்கிறார்கள்.அவர்கள் மதிமயக்கம் காரணமாக பல தீய கருத்துகளைப் பிடிவாதமாக மேற்கொண்டு சமூகத்தைச் சீர்குலைந்து வருகிறார்கள்.

அர்ச்சுனன்: அவர்களின் கருத்துக்கள் எத்தகையவை பகவானே?

கண்ணன்:அர்ச்சுனா அவர்கள் மரண காலம் வரையும் தொடரும் பெரும் கவலைகளுக்கும் குழப்பங்களுக்கும்  அடிமையாகிறார்கள்.பெளதீக பொருட்கள் சேகரிப்பதிலும் ,அவற்றைச் சேமிப்பதிலும் அவற்றால் அநுபவிப்பதிலுமே ஈடுபட்டிருப்பவர்கள்.உலகில் வாழ்வது , உண்டு உறங்கி சுகித்திருப்பதற்கே என்று தீர்மானிப்பத்ற்கு எல்லாமே இந்த சுயநல வாழ்க்கைதான் என்ற நிர்ணயத்துடன் அவர்கள் செயல்படுகிறார்கள்.

அர்ச்சுனன்: அவர்கள் எந்த நோக்கத்தை முன்னிட்டு செயல்படுகிறார்கள் பகவானே!

கண்ணன்: அர்ச்சுனா! ஏராளமான ஆசைகளில் சிக்கிய அவர்கள் கொடூரமான அசுரத்தன்மை கொண்டவர்கள்.காமம் குரோதம்,மதம் மாச்சரியம் முதலிய தீய இயல்புகளை சரணடைகிறார்கள்.சுகபோகம் தான் வாழ்க்கை என்று நம்பி அநியாய வழிகளில் பொருளீட்டுகிறார்கள் இதற்காக பலமுறைகேடுகளையே மேற்கொள்கிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! அவர்களுடைய இலட்சிய ஆசைகள் எத்தகையவை?

கண்ணன்: அர்ச்சுனா! இன்று இவ்வள்வு பண்ம் சம்பாதித்துவிட்டோம்.இனி இதைக்கொண்டு எம் மனோரதங்களை நிறைவேற்றிக்கொள்வோம்.இவ்வள்வு செல்வம் இப்போது இருப்பது இந்தளவு செல்வத்தை சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை கொள்கிறார்கள்.

அர்ச்சுனன்: அவர்களுக்கு மேலும் என்னவெல்லாம் ஆசைகள் ஏற்படுகின்றன?

கண்ணன்: அர்ச்சுனா! அவர்கள் இவ்வாறு சிந்திக்கிறார்கள்.அதாவது நாம் அந்த சத்துருவை அழித்துவிட்டோம்.இதேபோல் மற்ற எதிரிகளையும் அழிப்போம். நாம் சர்வ வல்லமை கொண்டவர்கள் .பல வெற்றிகளைக் கண்டவர்கள்.வலிமை மிகுந்தவர்கள்.சுகபோகிகள், செல்வந்தர்கள்,ஏராளமான மனிதர்கள் நம்மிடம் நம் தரப்பில் துணையிருக்கிறார்கள்.இங்கு நமக்கு நிகர் எவருமில்லை .எவரால் நம்மை எதிர்க்க முடியும்? நம் விருப்பப்படியே யக்ஞங்களைச் செய்வோம்.தான தர்மங்களைச் செய்வோம்.பிறகு ஆனந்தமாக கேளிக்கைகளில் மூழ்கி மகிழ்வோம்.இவ்வாறு எல்லாம் அறியாமையில் மதிமயங்கி மனேரதங்களை ( தனது தீவிர விருப்பங்களை)வளர்த்துக் கொள்கிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! இப்படியானவர்கள் இறந்த பிறகு எந்தக் கதியை அடைகிறார்கள்?

கண்ணன்: அர்ச்சுனா! பலதரப்பட்ட பிரமைகளிலும் பேதமைகளிலும் சிக்கிய நாத்தியர்கள் மோக வலைக்குள் கட்டுண்டு கிடக்கிறார்கள்.இதனாலேயே பொருள்களைச் சேகரிப்பதிலும் அநுபவிப்பதிலும் தீவிர விருப்புடன் ஈடுபட்டிருப்பதால் கொடிய பயங்கரமான நரகத்தில் விழுகிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! சுகபோகங்களில் விருப்புற்று வாழும் அந்த அசுர சொத்துக்காரர்களை அழிவுப் பாதையில் தள்ளும் இயல்புகள் தன்மைகள் எவை?

கண்ணன்: இவர்கள் தம்மையே மதிப்பு மிக்கவர்களாகவும் தாங்களே மேம்பட்டவர்களாகவும் கருதுகிறார்கள்.இவர்கள் மிகவும் பிடிவாதக்காரர்கள்.செல்வமும் செல்வாக்கும் இருப்பதில் செருக்குள்ளவர்கள்.

அர்ச்சுனன்: இத்தகையவர்கள் சுபகாரியங்களையும் செய்யலாம் அல்லவா?

கண்ணன்: ஆம் அர்ச்சுனா. செய்யலாம் செய்கிறார்கள்.ஆனால் பகட்டாக போலித்தனமாக செய்கிறார்கள்.தம் பெருமையை பறை சாற்றிக் கொள்வதற்காக செய்கிறார்கள்.முறைப்படி ஒழுங்காக செய்வதில்லை.செய்வதாக பெயர்பெறவே விரும்புகிறார்கள்.

அர்ச்சுனன்: ஏன் அவர்கள் இப்படிச் செய்கிறார்கள் பகவானே?

கண்ணன்: காரணம் இதுதான்.அர்ச்சுனா அகந்தை , வீண் பிடிவாதம், கர்வம், பேராசை, வென்சினம் இவைகளை சரணடைந்து இவைகளால் ஈற்கப்படுகிறார்கள்.

அர்ச்சுனன்: அவர்களுடைய தன்மைகள் மேலும் எத்தகையது?

கண்ணன்: அசுரத்தன்மையுள்ல அந்தமனிதர்கள் தம்மிடமும் பிறரிடமும் அந்தர்யாமியாக உள்ள என்னை வெறுக்கிறார்கள்.என்னிடமும் என் பக்தர்களிடமுள்ள பண்புகளை குற்றமாக தீமையாகக் கருதுகிறார்கள்.

அர்ச்சுனன்: இத்தகைய அசுரத்தன்மையின் விளைவுகள் என்ன?

கண்ணன்: அர்ச்சுனா! அந்த வெறுப்புற்ற , குரூரமான, கொடிய இயல்புகளைக் கொண்ட மனிதர்களை மிகவும் நீசர்கள் புனிதமற்றவர்கள் என்பதால் அவர்களை நாய்,கழுதை, புலி, காக்கை,ஆந்தை, கழுகு, பாம்பு, தேள் முதலிய அசுரத்தன்மை கொண்ட இனங்களில் பிறந்து மறுபடியும் இறக்கும்படி செய்து வருகிறேன்.

அர்ச்சுனன்: அதன் பிறகு என்ன ஆகிறது பகவானே?

கண்ணன்:  குந்தியின் மைந்தனே! அந்த மூடர்கள் என்னை அடைய முடியாமல் எல்லா பிறவிகளிலும் அசுரப் பிறவிகளாக பிறக்கிறார்கள். பிறகு அதனிலும் மோசமான நரகங்களில் வீழ்கிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! அவர்கள் அதமப் பிறவியிலும் அதமகதியான நரகத்திலும் உழல்கிறதிற்கு காரணம் என்ன?

கண்ணன்:  அர்ச்சுனா! தீவிர இச்சை , குரோதம், பேராசை இவை மூன்றுவகையான நரகங்களுக்கு வாசல்கள்.இவையே மனிதனை கீழ்நிலையில் தள்ளுபவை.ஆகையால் இம்மூன்று தீய இயல்புகளையும் விட்டு விட வேண்டும்.

அர்ச்சுனன்: காமம், குரோதம், உலோபம்  இம் மூன்று இழி இயல்புகளையும் துறப்பதால் என்ன ஆகும்?

கண்ணன்:  குந்தியின் மைந்தனே! எந்த மனிதன் நரகத்திற்கு இட்டுச் செல்லும் அம்மூன்று இயல்புகளையும் அண்டவிடாமல் , தன் ஆத்ம சேஷமத்திற்காக அறநெறியுடன் வாழ்கிறானோ அவன் மேலான நற்கதியை அடைகிறான். சாஸ்திரங்களுக்குப் புறம்பான செயல்களைத் துறந்து விட்டு , தன் மேம்பாட்டுக்காக , பற்றுதல், பேராசை இல்லாமல் கடமைகளைச் செய்து வருவதால் அவன் நன்னெறியாளனாக மதிக்கப்படுகிறான்.

அர்ச்சுனன்: மேலான நற்கதி ( பரமகதி)எவருக்குக் கிட்டுவதில்லை பகவானே?

கண்ணன்:  எந்த மனிதர்கள் சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து விட்டு தம் மனம் போனபடி நடந்து கொள்கிறார்களோ, தம் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பச் செயலாற்றுகிறார்களோ , நல்லவைகளை ஒதுக்கியும், தீயவைகளை மேற் கொண்டும் வாழ்கிறார்களோ, அவர்களுக்கு நற்கதி கிட்டுவதில்லை.மேலும் அவர்களுக்கு அந்தக்கரண சுத்தி ( உள்ளத்தூய்மை) ஏற்படுவதில்லை. உண்மையான சுகம் கிட்டுவதில்லை.நற்கதி கிட்ட வாய்பே இல்லை.

அர்ச்சுனன்: நல்ல செயல், தீய செயல் இவைகளை எப்படி இனம் கண்டு கொள்வது?

கண்ணன்:  செய்யத்தக்கது.தகாதது பற்றி சாஸ்திரம் தான் பிரமாணம். இதை அறிந்து கொண்டு சாஸ்திரம் விதித்துள்ள கடமைகளைச் செய்து வரவேண்டும்.சாஸ்திரத்தில் மறுக்கப்பட்டதை ஏற்கப்படாததை செய்யலாகாது.செய்யத்தக்கது.தகாதது எனும் காரியங்களுக்கும் சாஸ்திரப்பிரமாணம் தான் எடுத்துக்காட்டு.

 

15.புருஷோத்தம யோகம்

November 19, 2009 Leave a comment

அர்ச்சுனன்: கிருஷ்ண பரமாத்மாவே! பிரும்மம் அழிவற்ற  அமுதம் சனாதனதர்மம் முதலியவற்றின் ஆதாரம்( புகலிடம்) நீங்கள் தான்.ஆனால் இந்த உலகிற்கு ஆதாரம் யார்?

கிருஷ்ணர்: இந்த சம்சாரம் எனும் அகில உலகமும் ஒரு பெரிய ஆலமரம் போன்றது.அதற்கு ஆதாரம் , புகலிடம் வேர் எல்லாம் நான் தான்.அந்த மரம் மேல் நோக்கி வளர்ந்திருப்பது மூலப்பகுதி கீழ்நோக்கி இறங்கியிருப்பது கிளைப்பகுதி.நாளை பகல்வரையிலும் கூட ஸ்திரமாக இல்லாத காரணத்தால் இதை அசுவத்தவிருட்சம் என்கிறார்கள்.இதற்கு தொடக்கமும் முடிவும் இரண்டுமே அறியப்படாததாலும் இதை அவ்யயயம் ( குலைவு இல்லாதது) என்கிறார்கள்.வேதங்களில் கூறப்பட்டுள்ள  விருப்புற்றுச் செய்யும் அநுஷ்டானங்களின் வர்ணனைகள் இந்த மகாவிருட்சத்தின் இலைகள் அத்தகைய சம்சார விருட்சத்தை எந்த ஞானி உள்ளதை உள்ளபடி உணர்கிறானோ அவனே உண்மையில் வேதங்களின் தத்துவத்தை உணர்ந்தவன் ஆகிறான்.

அர்ச்சுனன்: இந்த சம்சார விருட்சத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் வாசுதேவா?

கிருஷ்ணர்: இந்த சம்சார விருட்சத்தின் கிளைகள் சத்துவம்.ரசஸ், தமஸ் என்னும் முக்குணங்கள் மூலமாக வளர்ந்து கீழே, நடுவில் ,மேலே உல்ள உலகங்களில் பரவியிருக்கின்றன.ஒலி, உணர்வு,உருவம்,சுவை,மணம்( சத்தம்,ஸ்பரிசம், ரூபம் ரசம்,கந்தம்)என்னும் ஜ்ந்து விடயங்களும் அக்கிளைகளில் சிறுபிரிவுகளில் உள்ள தளிர்கள்.இவ்விடயங்களைப்பற்றி சிந்திப்பதே புதுப்புதுசிறு கிளைகளிலுள்ள தளிர்கள் வெளிப்படுவற்கு காரணமாகிறது.ஆனால் இந்த மகா விருட்சத்தின் அடிப்பகுதியான மூலாதாரம் இந்த மனித உலகம் தான்(.பூலோகம்) ஏனெனில் இந்த மனித உலகில் செய்யப்படும் கருமங்களின் பலன் தான் மற்ற உலகங்களில் அநுபவிக்க முடிகிறது.

அர்ச்சுனன்: கண்ணா!இந்த மகாவிருட்சத்தின் சொரூபம் என்ன?அப்படியானால் இதனுடன் தொடர்பு இல்லாதிருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

கண்ணன்:அர்ச்சுனா!இந்த சம்சாரம் எனும் விருட்சத்தின் உண்மை போன்றதும், அழகானதும், சுகமானதுமான சொரூபம் மக்களுக்கு காணக்கிடைக்கிறது.இப்படிப் தோற்றம் அளிக்கும் சொரூபம் உண்மையாகவே உள்ளதா என்பதை சிந்தித்துப் பார்த்தால் கிடைப்பதில்லை.இதற்கு ஆதியோ, அந்தமோ நிலைப்பாடோ இல்லை.இந்த சம்சார விருட்சத்தின்வேர்ப்பகுதி மிகவும் வலுவானது.இதன் கிளைகள் ஓரினத்தன்மை .பந்தபாசம் தீவிர விருப்பம் முதலியவை. பற்றில்லாமை எனும் வாளின் துணைகொண்டு இம்மரத்தை வெட்டி ஒதுக்கி விட்டு, பரம்பொருளின் பரமபத நிலையை எட்ட வழிகாண வேண்டும்.

அர்ச்சுனன்:  வழி காண இயலாவிட்டால் மாற்று வழி என்ன பகவானே?

கண்ணன்:ஆதி முதல்வன் பரமாத்மா. அவரைத்தான் புகழடைய வேண்டும்.அவரை அடைந்த பிறகு மனிதன் திரும்பி உலகியல் வாழ்விற்கு வருவதில்லை.அவர் மூலமாகத்தான் அநாதி காலமாக ( ஆரம்பம் எது என்று அறிய இயலாத காலம்)இந்தப் படைப்புகள் பரவியுள்ளன.

அர்ச்சுனன்: பரமாத்மாவை சரணடைவதால் என்ன ஆகும் கண்ணா?

கண்ணன்; பரமமத்மாவை சரணடையும் மனிதர்கள் தன்மானம் மோக மயக்கங்களிருந்து விடுபடுகிறார்கள். பிறபொருள்களில் பற்றுதல் இல்லாததால் அவர்களிடம் கர்வம், மமதை, முதலிய குற்றங்கள் இருப்பதில்லை.அவர்கள் எப்போதும் பகவானிடத்திலேயே நிலைத்திருக்கிறார்கள்.அவர்களுக்கு எதிலும் எந்தவிதமான ஆசாபாசமும் இருப்பதில்லை.மேலும் அவர்கள் சுகம், துக்கம் எனும் சிக்கல்களிலிருந்து விடுபட்டு அழியாத ( அமரத்துவ) நிலையை எட்டுகிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே!அந்த அழியாத நிலை எப்படி?
கண்ணன்; சூரியன், சந்திரன், அக்கினியால் அந்த இருப்பிடத்தை பிரகாசப்படுத்த முடியாது.அங்கு சென்ற அடைந்த பின் மனிதன் திரும்பவும் பூவுலகத்திற்கு திரும்புவதில்லை.அம்மனிதனுக்கு மறுபிறவி கிடையாது. அதுதான் அழிவில்லாத பரமபதமெனும் மகோன்னதமான நிலை.

அர்ச்சுனன்: கன்ணா! அங்கு சென்றடைந்த மனிதர்கள் ( பரம பக்தர்கள்) ஏன் பூவுலகத்திற்கு திரும்புவதில்லை?

கண்ணன்; அர்ச்சனா! இந்த மானிட உடம்பில் ஜீவனமாக( உயிராக) குடிகொண்டிருக்கும் ஜீவாத்மா எக்காலத்திலும் என்னுடைய அம்சம் தான்.ஆகையால் பரமபதநிலையில் என்னிடம் வந்து சேர்ந்த பின் திரும்பவும் பெளதீக உலகிற்கு வருவதில்லை.ஆனால் இந்த ஜீவாத்மாக அறியாமையினால் ஒரு தவறு செய்து விடுகிறது இயற்கையின் ( பிரகிருதி)விளைவுகளான ஜம்புலன்கள் மனம் இவைகளின் செய்கைகள் எல்லவற்றையும் தன்னுடையவை என்றும்தன்னால் செய்யப்படுவை என்றும் எண்ண்ணிக் கொள்கிறது. இத்தவறின் காரணமாக ஜீவாத்மா சம்சாரக் கடலில் மறுபடியும் வந்து மூழ்கிப் போகிறது.

அர்ச்சுனன்: ஜம்புலன்கள் , மனம் முதலியவற்றை தம்முடையவை என்று கருதுவதால் என்ன ஆகிறது?

கண்ணன்; அர்ச்சுனா! காற்று எப்படி வாசனையுள்ள இடத்தில் இருந்து அதை எடுத்துச் செல்கிறதோ, எங்கும் பரப்புகிறதோ.அதேபோல் சரீரம் , புலன்கள் முதலியவற்ற்கு உரிமையாளனாக தன்னை எண்ணிக்கொண்டு இயங்கும் ஜீவாத்மா.அந்திம நிலையில் தன் உடலை திறக்கும் போது அவ்வுடலில் அதுவரையும் இருந்து வந்த மனத்தையும் இந்திரியங்களையும் ( புலன்கள்) எடுத்துக் கொண்டு வேறு உடலில் பிரவேசிக்கிறது.இவ்வாறாக அது இறந்தும் பிறந்தும் கொண்டு இவ்வுலக வாழ்வில் உழன்று கொண்டே இருக்கிறது.

அர்ச்சுனன்: பகவானே! ஜீவத்மா புதிய சரீரத்தில் புகலடைந்து என்ன செய்கிறது?

கண்ணன்; அர்ச்சுனா! அங்கு அது மனத்தின் உதவியுடன் காதுகள், சருமம்( தோல்) கண்கள், நாக்கு, மூக்கு, இவ்ஜந்து புலன்களின்மூலமாக சத்தம் ( ஒலி) பரிசம்( உணர்வு) ரூபம்( உருவம்) ரசம்( சுவை) கந்தம்( மணம்) என்னும் விடயங்களில் ( பொருள் சார்ந்த உணர்வு) விருப்பத்துடன் ஈடுபட்டு வருகிறது.

அர்ச்சுனன்:  பகவானே! விருப்பத்துடன் ஜம்புலன்களின் உணர்வுகளை அநுபவித்துக் கொண்டிருப்பதால் என்ன ஆகிறது?

கண்ணன்; குணங்களுடன் கூடப் பிறந்ததும் , இறந்ததும் சுகதுக்கங்களை அநுபவித்துக்  கொண்டிருக்கிறபோதும் இந்த ஜீவாத்மா இயல்பாகவே எதிலும் ஒட்டாமல் இருந்து வருகிறது. இந்த உண்மையை பெளதீக சுகங்களில் ஈடுபட்டிருக்கும் மூட மனிதர்கள் அறிந்து கொள்வதில்லை.

அர்ச்சுனன்: அப்படியானால் எவர் தான் இந்த உண்மையை அறிந்து கொள்கிறார்கள்?

கண்ணன்; மெய்யறிவாகிய ஞானம் எனும் கண்களைப் பெற்ற விவேகிகளான மனிதர் உண்மையை அறிந்து கொள்கிறார்கள்.

அர்ச்சுனன்: அப்படியானால் எவர் தான் இந்த உண்மையை அறிந்து கொள்கிறார்கள்?

கண்ணன்; மெய்யறிவாகிய ஞானம் எனும் கண்களைப் பெற்ற விவேகிகளான மனிதர் உண்மையை அறிந்து கொள்கிறார்கள்.அர்ச்சுனா! எவர்கள் தம் அந்தக்கரணத்தை ( உள்மனதை) பரிசுத்தமாக்கிக் கொண்டிருகிறார்களோ தங்களுக்குள் எப்போதும் பெற்ற மகத்துவத்தை உணர்ந்திருக்கிறார்களோ அத்தகைய யோகிகள் தம்முள் உறைந்திருக்கும் ஆத்ம தத்துவத்தை நன்கு அறிகிறார்கள்.இதனால் இவர்களுடைய ஞானக்கண்கள் திறக்கின்றன.ஆனால் எவருடைய அந்தக் கருணம் பரிசுத்தமாக இல்லையோ, அத்தகைய விவேகமற்றவர்கள் எவ்வளவு முயன்றாலும் ஆத்மாவின் மகத்துவத்தை அறிய முடியாத அவர்களுடைய ஞானக்கண்களும் திறப்பதில்லை.

அர்ச்சுனன்: தனக்குத்தானே தன்னுள் உறைந்திருக்கும் தத்துவம் என்பது என்ன?

கண்ணன்; அர்ச்சுனா! நான் தான் சூரியனிடம் வந்து சேர்ந்த பேரோளி உலகம் முழுவதையும் பிரகாசப்படுத்துகிறது.இதே போல் சந்திரனிடமும் அக்கினியிடமும் உள்ள பேரொளி எங்கும் ஒளிர்கிறது.அந்தப் பேரோளி என்னுடையது தான் இதுதான் என்னுள் உறைந்திருக்கும் தத்துவம் இதன் கருத்து.சூரியன் , சந்திரன், தீ மூன்றிலும் நான் தான் பேரோளிச் சொரூபமாக இருந்து எல்லா உலகங்களையும் ஒளிமயமாக்குகிறேன்.எங்கும் பேரொளி பரப்பி வருகின்றன.

அர்ச்சுனன்: பகவேனே! நீங்கள் மேலும் என்னவெல்லாம் செய்கிறீர்கள்?

கண்ணன்; அர்ச்சுனா! நான் தான் பூவுலகில் பிரவேசித்து என் சக்தியால் எல்லா உயிரனங்களையும் வாழ வைக்கிறேன். மேலும் நான் தான் ரசமயமான சந்திரனாக உருவெடுத்து சகல மூலிகைகளையும் மற்றும் தாவரங்களையும் வளர்த்துச் செழிக்க வைக்கிறேன்.

அர்ச்சுனன்: மேலும் என்னவெல்லாம் செய்கிறீர்கள் சர்வேஸ்வரா?

கண்ணன்; அர்ச்சுனா! பிராணிகளின் உடலுள் உறைந்திருக்கும் நான் தான் பிராணன். அபானன் எனும் மூச்சுக் காற்றுக்களுடன் இணைந்த வைசுவாணரம் எனும் ஜடாராக்கினியாக  இருந்து ராணிகள் புசிக்கும் நான்குவகை ( போஜ்யம்- சுவைத்துப்புசிக்கத்தக்க உணவு பேயம் -பருகத்தக்க உணவு சோஷ்யம் – உறிஞ்சி சுவைக்கும் உணவு லேகியம் நாக்கினால் நக்கி ஏற்று உட்கொள்ளும் உணவு)பண்டங்களைப் புசித்து சீரணிக்க வைக்கிறேன்.

அர்ச்சுனன்:  மேலும் தங்களிற்குரிய சிறப்பியல்கள் எவை பகவானே?

கண்ணன்; அர்ச்சுனா! நான் தான் எல்லாருடைய இதயத்திலும் குடி கொண்டிருகிறேன். என்னால் தான் நினைவாற்றால் , பகுத்தறிவு மயக்க நீக்கம் ( ஜயம் தெளிதல்) ஏற்படுகின்றன எல்ல வேதங்களின் மூலமாகவும் நான் தான் அறியத்தகுந்தவன்.வேதங்களின் தத்துவங்களை நிர்ணயம் செய்பவனும் நானே வேதங்களை அறிந்தவனும் நானே.

அர்ச்சுனன்: பகவானே! நீங்கள் எவருடைய இருதயத்தில் எழுந்தருளி இருக்கிறீர்களோ அவர்கள் யார்?

கண்ணன்: இந்த உலகில் சஷரர் அழிபவர்.அசஷரர் அழிவற்றவர் என இருவகைப் புருஷர்கள் உல்ளனர்.இவர்களுள் எல்லாப் பிராணிகளின்  சரீரங்களும் அழியக் கூடியவை.அவற்றுள் இடம் பெற்றிருக்கும் அவர்களை இயக்கி வரும் ஜீவாத்மா அழிவற்றது.

அர்ச்சுனன்: பகவானே! சரர், அசுரர் இவ்விரு வகையினைத் தவிர வேறு வகையினரும் உள்ளனரா?

கண்ணன்:உள்ளனர். அவ்விருவரையும் தவிர உத்தம புருஷர் ஒருவர் இருக்கிறார்.அவர் தான் பரமாத்மா,பரம்பொருள்.அவர் தான் மூவுலகங்களையும் பாதுகாத்து பராமரித்து வருகிறார். அவர் அழிவற்றவர்.எல்லோருக்கும் தலைவரான ஈஸ்வரர்.

அர்ச்சுனன்:  உத்தம புருஷர் அந்நியமாக இருப்பவர்.ஆனால் நீங்கள் யார் பகவானே?

கண்ணன்: தம்பி அர்ச்சுனா! அந்த உத்தம புருஷன் நான் தான்.நான் சரம் எனும் அழிவு நிலையை கடந்தவன்.அசுரம் எனும் அழியா நிலையிலும் மேம்பட்டதான உத்தம புருஷன் நிலையிலும் நான் தான் இருக்கிறேன்.உத்தம புருஷன் நிலையில் நான் உலகில் பரமாத்மா என்று அழைக்கப்படுகிறேன்.மூவுலங்களையும் பாதுகாத்து பராமரிக்கும் பொறுப்பினை ஏற்றிருக்கும் அழிவற்ற ஈஸ்வரனும் நான் தான் இதனால் தான் உலகத்தின் மக்களாலும் வேதங்களாலும் நான் புருஷோத்மன் எனும் திருநாமத்தால் பிரபல்யம் அடைந்திருக்கிறேன்.

அர்ச்சுனன்: பகவானே! நீங்கள் புஷோத்தமன் எனும் திருநாமத்தால் பிரபல்யம் அடைந்திருப்பதால் மனிதருக்கு என்ன பயன்?

கண்ணன்: பரம வம்சத்து வீரனே! அர்ச்சுனா! மதிமயக்கம் இல்லாத உத்தம பக்தன் என்னை புருஷோத்தமன் என அறிந்து கொள்கிறான்.அதனால் அவன் எல்லாவற்றையும் அறிந்தவன் ஆகிறான். அவன் பெறுவதற்கென்று வேறு ஒன்றும் மிஞ்சுவதில்லை.என்னிடமே ஈடுபாடு கொன்டு போற்றி பரவசப்படுகிறான்.

அர்ச்சுனன்: பகவானே! அப்படியானால் மற்ற மனிதர்களும் ஏன் உங்களிடம் ஈடுபாடு கொண்டிருப்பதில்லை? போற்றிப் பூசித்து வாழ்வதில்லை?

கண்ணன்: அர்ச்சுனா! நான் இதுவரையிலும் உனக்கு உபதேசித்ததெல்லாம் மிகவும் ரகசியமான தெய்வ தத்துவங்கள் இதை அறிந்து கொண்டதன் மூலம் என் பக்தன் அறிய வேண்டியதை அறிந்தவனாகவும் செய்ய வேண்டியதை செய்பவனாகவும் அடைய வேண்டியவற்றை அடைந்தவனாக ஆகிறான்.

கீதாசாரம்
எது நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ
அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையது எதை இழந்தாய்
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் ?
அதை
நீ இழப்பதற்கு
எதை படைத்திருந்தாய்
அதை நீ வீணாக்குவற்கு
எதை நீ எடுத்துக்கொண்டாயோ
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது
எதை கொடுத்தாயோ
அது இங்கையே கொடுக்கப்பட்டது
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றவனுடையதாகிறது
மற்றொருநாள் அது வேறொருவருடையதாகிறது
இந்த மாற்றம் உலக நியதியாகும்








14.ஜட இயற்கையும் முக்குணங்கள்

November 19, 2009 Leave a comment

பகவான்: அர்ச்சுனா!

ஞானங்களில் சிறந்த பரமஞானத்தை நான் உனக்கு மறுபடியும் போதிக்கிறேன் .இதை அறிந்ததால் எல்லாச் சிந்தனையாளர்களான ஞானிகள் பரம சித்தியை அடைந்திருக்கிறார்கள். எல்லா ஞானங்களிலும் தலை சிறந்த உத்தம ஞானம் இது.

அர்ச்சுனன்:  உத்தம ஞானத்திற்கு மேலும் என்ன மகிமை பகவானே?

கண்ணன்: அந்த ஞானத்தின் மூலம் என்னுடைய தருமநிலையை அடைந்த மகான்கள் எனது மேலான தன்மையை அடைகிறார்கள். அவர்கள் மஷா சிருஷ்டி காலத்தில் பிறப்பதுமில்லை. மஹா பிரளய காலத்தில் வருந்துவதுமில்லை.அமரத்துவம் பெற்றவர்கள்.

அர்ச்சுனன்: மஷா சிருஷ்டி காலத்தில் பிராணிகள் எப்படிப் பிறக்கின்றன?
 
கண்ணன்: பரமவம்சத்தின் பெருமகனே! என் மூல பிரகிருதிதான் உற்பத்தி இடம். நான் அதில் உயிரை( ஜீவன், சேதனன்) கருவாக அமைக்கிறேன்.அதிலிருந்து  எல்லாப் பிராணிகளும் உற்பத்தியாகின்றன.குந்தியின் மைந்தனே! வெவ்வேறு கருவறையிலிருந்து எவ்வளவு பிராணிகள் பிறக்கின்றனவோ,அவைகளின் உற்பத்தியில் தாயின் சொரூபமாகவும் ,தாயாகவும் என் மூல பிரகிருதி உள்ளது.விதை தூவும் பணியில் தந்தையின் இடத்தில் நான் இருக்கிறேன்.

 (மகா சிருஷ்டியின் ஆரம்ப காலத்தில் ஜீவன்களுக்கு அவைகளின் குணம், செயல், இயல்புகளுக்கு ஏற்ப பிரகிருதியுடன் தொடர்பை ஏற்படுத்தி வைப்பதுதான் பகவானின் விதை தூவும் பணியாகும்)

அர்ச்சுனன்: பகவானே! நீங்கள் எல்லா ஜீவன்களுக்கும் பிதா, இருந்தாலும் அந்த ஜீவன்கள் சம்சார பந்தத்தில் ( பிறப்பு -இறப்பு  எனும் தளையில்) ஏன் சிக்கி கொள்ளுகின்றன?
 
கண்ணன்: வீரத்திருமகனே! சத்துவம் ரஜஸ்,தமஸ், இம் மூன்று குணங்களும் பிரகிருதியில் இருந்து பிறக்கின்றன.ஆனால் இவைகளுடன் தொடர்பு கொள்ளுவதால்  அழிவில்லாத ( ஆத்மாவை) தேகத்தில்( உடலில்) இவை சிக்க வைத்து விடுகின்றன.

அர்ச்சுனன்:  சத்துவ குணத்தின் சொரூபம் என்ன?அது தேகியை (உடலுள் உறைபவனை) தேகத்துடன் எப்படிப் பந்தப்படுகிறது?

கண்ணன்: புனிதனான அர்ச்சுனா! அம் மூன்று குணங்களிலும் சத்துவ குணம் இயல்பாகவே நிர்மலமானது, மாறுதலற்றது,எங்கும் பிரகாசிப்பது,ஆனால் அது சுகம்,ஞானம் இரண்டிலும் உள்ள ஈடுபாட்டினால் தேகியை ஆத்மாவை தேகத்தினுள் கட்டுப்பட வைக்கிறது.

அர்ச்சுனன்:  ரஜோ குணத்தின் சொரூபம் என்ன? அது தேகியை தேகத்திலும் எப்படிக் கட்டுப்படுத்துகிறது?

கண்ணன்: குந்தியின் மைந்தனே! ஆசையையும் பற்றுதலையும் ஏற்படுத்தும் ரஜோ குணத்தைத் தீவிர விருப்பின் சொரூபம் என்பதை உணர்ந்து கொள்.அது கருமங்களில் ஏற்படும் ஈடுபாட்டினால் தேகியை ஆத்துமாவை தேகத்தினுள் கட்டுப்படுத்தி வைக்கிறது.

அர்ச்சுனன்:  தமோ குணத்தின் சொரூபம் என்ன? அது தேகியை எப்படிக் கட்டுப்படுத்துகிறது?

கண்ணன்:  தமோ குணம் அக்ஞானத்திலிருந்து ஏற்படுகிறது.எல்லாப் பிராணிகளையும் மதிமயங்க வைக்கிறது.அது அறியாமை, பேதமை, சோம்பல், தூக்கம் மூலமாக தேகியை ஆத்துமா அவை தேகத்தில் கட்டுப்படுத்தி வைக்கிறது.

அர்ச்சுனன்:  பகவானே! கட்டுபாட்டிற்கு முன்னதாக  அம்முக்குணங்களும் என்ன செய்கின்றன?

கண்ணன்:  பரதவம்சத்து பெருமானே!சத்துவ குணம் சுகபோகத்தில் ஈடுபடுத்தி மனிதனிடம் தன் அதிகாரத்தைக் காட்டுகிறது.ரஜோ குணம் கருமத்தில் ஈடுபடுத்தி தன் உரிமையை மனிதரிடம் நிலை நாட்டுகிறது.தமோ குணமோ ஞானத்தை மறத்து தவறு இழைக்கும் பேதமையில் ஈடுபடுத்தி மனிதனை ஆட்கொண்டு விடுகிறது. தாழ்வுக்கு கீழ்நிலைக்கு தள்ளி விடுகிறது.

அர்ச்சுனன்: பகவானே! இம் மூன்று குணங்களிலும் ஒவ்வொன்றுக்கும் எப்படி மனிதர்டம் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது? வலுவடைகிறது?

கண்ணன்:  பரமவம்சத்து வீரனே! ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் அழுத்தி விட்டு சத்துவ குணம் வளர்கிறது.சத்துவ குணத்தையும்  தமோ குணத்தையும் அழுத்தி விட்டு ரஜோ குணம் வளர்கிறது.இதேபோல் சத்துவ குணத்தையும் , ரஜோ குணத்தையும் அழுத்தி விட்டு தமோ குணம் மேலே எழும்புகிறது.

அர்ச்சுனன்:மேம்பட்டு எழும்பும் சத்துவகுணத்தின் இலட்சணங்கள் எவை?

கண்ணன்:எப்போது இந்த மனித சரீரத்தில் எல்லாப் புலன்களிலும் அந்தக்கணமெனும் உள்ளத்திலும் தூய்மையும் பகுத்தறிவும் வளர்கின்றனவோ, அந்நிலையில் சத்துவ குனப் வளர்வதை உனர்ந்துகொள்ள வேண்டும்.

அர்ச்சுனன்: வளரும் ரஜோ குணத்தின் இலட்சணங்கள் எவை பகவானே?

கண்ணன்: மனிதரின் அந்தக்கரணத்தில் ( உள்மனம்) பண  ஆசையும், செயலாற்றும் முனைப்பும், சுக போகங்களுக்காகவும் சொத்துக்கள் சேர்க்கவும்.புதுப்புதுக் காரியங்களைத் தொடங்குவதும், மன அமைதி இன்மையும், தீவிர ஆசையும் எப்போது அதிகரிக்கின்றனவோ, அப்போது ரஜோ குணம் தலை தூக்குவதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அர்ச்சுனன்: வளரும் தமோ குணத்தின் இலட்சங்கள் எவை?

கண்ணன்: எப்போது புலன்களிலும் அந்தக்கரணத்திலும் உணர்வுத் தூய்மை இல்லாதிருக்கிறதோ, எக்காரியத்தையும் முறையாகச் செய்ய மனம் ஈடுபடுவதில்லையோ, செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமலும் செய்யக்கூடாத காரியத்தைச் செய்வதும் அதிகரிக்கிறதோ, உள் மனதில் மோக மயக்கம் பரவியுள்ளதோ, அப்போது தெரிந்து கொள்ளலாம்.தமோ குணம் மேலோங்கியுள்ளது.

அர்ச்சுனன்: இம்மூன்று குணங்களும் மாறி மாறித் தற்காலிகமாக மேலெழும் நிலையில் மனிதன் மரித்து விட்டால் , அவனுக்கு என்ன கதி கிடைக்கும்?

கண்ணன்: சத்துவ குணம் மேலோங்கியிருக்கும் போது மனிதன் மரித்தானானால் புன்ணியாத்மாக்கள் மட்டுமே எட்டத்தக்க நிர்மலமான உத்தம லோகங்களுக்குப் போய் சேருகிறான்.

ரஜோ குணம் மேலோங்கியிருக்கும் தருணத்தில் இறந்தால் மனித குலத்தின் மறு பிறவி பெறுகிறான்.
தமோ குணம் மிகுந்திருக்கும் நிலையில் மரித்தால் பிராணிகளாக மிருகம், பறவை முதலியவைகளாகப் பகுத்தறிவு இல்லாத இனத்தில் பிறக்கிறான்.

அர்ச்சுனன்: பகவானே! இந்தக் குணங்களால் இத்தகைய பிறவி நிலைகள் ஏன் ஏற்படுகின்றன?

கண்ணன்: காரணம் இதுதான். குணங்களின் ( இயல்புகள்) செயல் போக்கு எப்படி இருக்கினறன்வோ அதே போலத்தான் ( அவைகளுக்கு ஏற்ப) காரியங்களும் அமைகின்றன.ஆகையால் சாத்வீக குணத்தின் காரியங்களுக்கான பயன் தூயதாக இருக்கிறது.ராட்சத குணத்தின் பலன் துயரம், துன்பம் தாமஸ குணத்தின் பயன் அஞ்ஞானம், மடமை சாத்வீகம் முதலிய காரினனின் செயல்பாடுகளுக்கு ஏற்பதாக சாத்வீகம் முதலிய குணங்களின் செயல்பாடுகளுக்கு ஏற்பத்தான் சாத்வீகம் முதலிய காரியங்களின் பலனும் அமைகிறது.

அர்ச்சுனன்: விருத்தி எனும் செயல் போக்கு அல்லது செயட்பாட்டிற்கும் அதைச் சார்ந்த கர்ம ( காரியம்)விற்கும் அடிப்படையில் எது உள்ளது?

கண்ணன்:  சத்துவம்,ரஜஸ், தமஸ், மூன்று குணங்களும் ( இயல்புகள்) சத்துவ குணத்திலிருந்து நல்லறிவு ( ஞானம்) ஏற்படுகிறது.ரஜோ குணத்திலிருந்து உலோபம் எனும் பேராசை ஏற்படுகிறது.தமோ குணத்திலிருந்து மதிமயக்கம், மோகம், அறியாமை தீயபழக்கம், குறைபாடு எல்லாம் ஏற்படுகின்றன.

அர்ச்சுனன்:  இம்மூன்று குணங்களிலும் நிலைத்திருப்பவர்களின் இறுதி நிலை எத்தகையது?

கண்ணன்:  சத்துவ குணத்தில் நிலையாக இருப்பவர்கள் சுவர்க்கம் முதலிய மேல் உலகங்களுக்குப் போகிறார்கள். ரஜோ குணத்தில் இருப்பவர்கள் மானுடவுலகில் பிறக்கிறார்கள். நிந்திக்கத்தக்க தமோகுணத்தில் இருப்பவர்கள் நரகம் முதலிய துன்பம் மிகுந்த உலகில் உழல்வார்கள்.

அர்ச்சுனன்:   அப்படியானால் உங்களை எத்தகைய மனிதன் வந்தடைகிறான் பகவானே?

கண்ணன்:   செய்பவனின் குணமே செயலின் காரணமாக அமைகிறது.இதை அறிபவன் செயல், குணம் இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டவானாக தன்னை உணர்ந்தவனாய் எனது ஸ்வரூபத்தையே அடைகிறான்.அவன் விவேகி. உடலை உருவாக்கும் சத்துவம் முதலிய முக்குணங்களையும் கடந்து பிறப்பு, இறப்பு, மூப்பு சார்ந்த துன்பங்களிலிருந்து விடுபட்டு அமரத்துவ நிலையை அநுபவிக்கிறான்.

அர்ச்சுனன்:   சர்வேசா! முக்குணங்களையும் கடந்த மாமனிதர் எத்தகைய இலட்சணங்களைக் கொண்டிருப்பார்?

கண்ணன்:   பாண்டுவின் செல்வனே! சத்துவ குணத்தின் போக்கு ஒளிமயமாகவும் ரஜோ குணத்தின் போக்கு காரியத்தில் ஈடுபாடாகவும்,தமோ குணத்தின் போக்கு மோகம் ( மதி மயக்கம்) ஆகவும் வெளிப்படும்போது அவைகளை அவ்விவேகி வெறுப்பதில்லை.வெளிப்படாதிருக்கும் போது இவைகளுக்காக ஆசைப்படுவதுமில்லை.இக் குணங்களிடம் விருப்பு வெறுப்பு இல்லாமல் இருப்பார்.இக் குணங்ககளால் பாதிக்கப்பட்டாலும் இருப்பார்.மேலும் குணங்களே தம்மை வெளிப்படுத்திக் கொண்டும் செயல்படுத்திக் கொண்டும் இருப்பதை உணர்கிறார்.தம் சொரூபத்திலேயே நிலைத்திருக்கிறார்.தாமாக எந்தச் செயலிலும் ஈடுபட இயலாது என்பதை உணர்ந்து அமைதியாக வாழ்கிறார்.

அர்ச்சுனன்:  குணங்களைக் கடந்த மனிதரின் செயல்பாடுகள் எப்படி அமைகின்றன?

கண்ணன்:  அம் மாமனிதரின் நடவடிக்கைகள் சத்துவ நிலை கொண்டவை.திட சித்தம் கொண்ட அம்மனிதர் தம் சொரூபத்தில் எப்போதும் இருந்து வருகிறார்.அவருடைய சமநிலைப்போக்கு எல்லாவற்றிலும் நிரந்தரமாக இருப்பது.சுகத்திலும் , துக்கத்திலும் மண்கட்டியிலும் , தங்கக்கட்டியிலும் , உடல் பொறிகள் சார்ந்த விருப்பு வெறுப்புகளிலும், புகழ்ச்சியிலும், இகழ்ச்சியிலும், மதிப்பு அவமதிப்புகளிலும், பகைவர்  நண்பர்களிடமும் சமநிலை பிறழாமல் இருப்பவர். அவர் ஆவல், ஆர்வம், ஈடுபடு கொன்டு எந்தப் புதிய காரியத்தையும் தொடங்குவதில்லை. இதனாலேயே அவர் குணங்களைக் கடந்தவர் என்று சொல்லப்படுகிறார்.

அர்ச்சுனன்:  குணங்களைக் கடந்து இருப்பதற்கு  என்ன வழி கண்ணா?

கண்ணன்:   எந்த மனிதன் திடமான பக்தி ஈடுபாட்டுடன் என்னைப் போற்றுகிறானோ, அவன் மூன்று குணங்களையும் கடந்து பிரும்மத்தை அடையும் தகுதியைப் பெறுகிறான்.

அர்ச்சுனன்:  பகவேனே! உங்களிடம் திட பக்தி கொண்டிருப்பவன் பிரும்ம நிலையை எப்படி அடைய முடியும்?

கண்ணன்:   தம்பி அர்ச்சுனா! பிரும்மம் அழிவற்ற அமுதமான நிலைகளுக்கும், சனாதன தர்மத்திற்கும், ஒப்பற்ற பரமானந்த சுகத்திற்கும் புகலிடம் நான் தான். இவையெல்லாமே என்னுடைய பெயர்கள், நிலைபாடுகள். பிரும்மத்தை அடைபவன் என்னை வந்தடைகிறான்.

13.இயற்கையும், அனுபவிப்பவனும் உணர்வும்

November 19, 2009 Leave a comment

அர்ச்சுனன்: ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவே! உங்களுடைய ஸகுண -ஸாகரா சொரூபத்தை உபாசிப்பவர்கள் உங்களுக்கு மிகவும் பிரியமானவர்கள் என்பதை உனர்ந்து கொண்டேன்.ஆனால் உங்களுடைய நிர்குன – நிராகரா( குணமும் உருவும் இல்லாத) சொரூபத்தை உபாசிப்பவர்களை எப்படிக் கருதுகிறீர்கள்?
கண்ணன்: தம்பி! அத்தகைய சாதக உப்பாசகர்கள் விவேகிகள்.பகுத்தறிந்து முறையாகச் சிந்தித்தும் செயல்பட்டும் வாழ்பவர்கள்.

அர்ச்சுனன்: அத்தகைய விவேகம் எவருக்கு ஏற்படுகிறது?

கண்ணன்: சேஷ்த்திரம் சார்ந்ததாக ஏற்படும் அறிவு விவேகம் இதைப் பெற்றவன் சேஷ்த்திரக்ஞன்,அதாவது குந்தியின் மைந்தனே! கவனமாய்க் கேள்!இந்த உருவமான சரீரம் சேஷ்த்திரம் எனப்படும்.எந்த அறிவாளி இந்த உடலின் தன்மையை , தத்துவத்தை அறிந்து கொள்கிறானோ அவனைத்தான் சேஷ்திரக்ஞன்( சேஷ்த்திரம் எனும் சரீரத்தை அறிந்தவன்)என்பார்கள் அவனை ” சரீரி” ( உடலில் உறைபவன் ஜீவாத்மா) என்றும் கூறலாம்.

அர்ச்சுனன்: சேஷத்திரக்ஞனின் சொரூபம் என்ன?

கண்ணன்: பரத வம்சத்து வீரனே! எல்லா சேஷத்திரங்களிலும் சேஷத்திரங்ஞனாக நானே இருந்து வருகிறேன்.இந்த தத்துவத்தை நீ உணர்ந்து கொள்.
( இங்கு இவ்வாறு கூறுவதன் உட்கருத்து சரீரம் பிரகிருதியின் அம்சம். அதாவது இயற்கையின் பகுதி.ஆகையால் உடலைப் பற்றிக் கவலைப்படாதே.இதனிடம் ஆசை, பாசம் வைக்காதே.நீ என்னுடைய அம்சம். ஆதலால் நீ முற்றிலும் என்னையே சார்ந்திரு.
மற்றொரு கருத்து உடல் என்பது இயற்கையின் ( பிரகிருதியின்) மாறுபாடுஆன்மா என்பது இறைவனின் அம்சம்.ஆகையால் நான் எனது என்ற உடலுடன் கூடிய விவகாரங்களை விடுத்து முழுவதும் சச்சிதானந்த சொரூபமான இறைவனான என்னுடன் ஏற்பட்டுள்ள எப்பொழுதும் இயற்கையான நித்திய சம்பந்தத்தை ( ஸ்வதஸ்ஸித்த ஏக்தா நினைவில் கொள்).

அர்ச்சுனன்: இந்தக் தத்துவத்தை உணர்ந்து கொள்ளுவது என்பது என்ன பகவானே?

கண்ணன்: சேஷத்திரம் , சேஷத்திரக்ஞன் இருவருமே வேறுபட்டவர் .இதைச் சரியாக உணர்வது தான் ஞானம் சேஷ்த்திரம்( சரீரம்) உலகத்துடன் இணைந்தது.சேஷத்திரக்ஞன்( சரீரி) என்னுடன் இணைந்தது.இதைச் சரியாக உணர்ந்து கொள்ளுவது ஞானம் தான்.

அர்ச்சுனன்: சேஷத்திரம். சேஷத்திரக்ஞன் பற்றிய ஞானம் பெற எந்த  விஷயங்களை அறிந்துகொள்வது அவசியமாகிறது?

கண்ணன்: ஆறு விஷயங்களை அறிந்து கொள்வது அவசியம்.சேஷத்திரங்கள் நான்கும் சேஷத்திரக்ஞன் பற்றி இரண்டும். சேஷத்திரம் எது? எத்தகையது?எந்த மாறுதலைக் கொண்டது? எதிலிருந்து பிறந்தது? சேஷதிரக்ஞன் எத்தகையவன்?என்ன பெருமை கொன்டவன் இதையெல்லாம் உனக்குச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

அர்ச்சுனன்: இது விரிவாக எங்கே விவரிக்கப்பட்டிருக்கிறது?

கண்ணன்: ரிஷிகளின் வாக்குகளும் வேத வாக்குகளும்,யுக்தி யுத்தமாயும் நிர்ணயம் செய்யப்பட்டதுமான பிரும்ம சூத்திரங்களும் இதை விரிவாகக் கூறியிருக்கின்றன.

அர்ச்சுனன்: இது விரிவாக எங்கே விவரிக்கப்பட்டிருக்கிறது?

கண்ணன்: ரிஷிகளின் வாக்குகளும் வேத வாக்குகளும் ,யுக்தி யுத்தமாயும் நிர்ணயம் செய்யப்பட்டதுமான பிரும்ம சூத்திரங்களும் இதை விரிவாகக் கூறியிருக்கின்றன ( அடிப்படையான இயற்கை) ஷமஷ்டி புத்தி,ஸமஷ்டி அகங்காரம் முதலான ஜம்போருள் பூதங்கள் பத்து புலன்கள் ( கர்மேந்திரியங்கள் 5, ஞானேந்திரியங்கள் 5) மனம், ஜம்புலன்களுக்கும் இலக்காகும் விஷயங்கள் ஆக மொத்தம் இருபத்து நான்கு தத்துவங்களைக் கொண்டது சேஷத்திரம்.

(மூலப்பிரகிருதி ,( இயற்கை) எல்லாவற்றிக்கும் தாய்,அந்த பிரகிருதியிலிருந்து புத்தி எனும் பெண் பிறந்தாள்.புத்தியிலிருந்து அகங்காரம் எனும் மகன் பிறந்தான்.அகங்காரத்தின் சந்ததிகள்-நிலம்.நீர்.தீ.காற்று, வானம் ஜம்பெரும் பூதங்கள் இவைகளில் இருந்து பத்து புலன்களும், ஒரு மனமும்,புலன்களின் இலக்குகளின் சப்தம்,ஸ்பரிசம், ரூபம், ரஸம், அந்தம் இவை ஜந்து புலன் இலக்குகள்.புலன்கள் மனம், மற்றும் புலன் இலக்குகள் இவைகளில் இருந்து எந்த ஒரு சந்ததியும் பிறக்கவில்லை.

அர்ச்சுனன்: இந்த சேஷத்திரம் என்ன மாறுதல்களைக் கொண்டது?

கண்ணன்: இச்சை , துவேஷம், சுகம் துக்கம் சரீரம் பிராணசக்தி,தாரண சக்தி( தாங்கும் ஜீவ சக்தி) இந்த ஏழு மாறுதல்களைக் கொண்டது சேஷத்திரம் இது சுருக்கமான விளக்கம்.

அர்ச்சுனன்:மாறுதல்களுடன் கூடிய இந்த சேஷத்திரம் தன்னிலும் வேறுபட்டதாக எப்படித் தோன்றுகிறது?

கண்ணன்: சேஷத்திரம் எனும் சரீரம் தன்னிலும் வேறுபட்ட “இது” எனும் குறியீட்டைப் பெற அல்லது வெளிப்படையாகப் புலப்பட இருபது சாதனங்களைப் பெற்றிருக்கிறது.அவையாவன:

1. தன்னுள் மேன்மை சார்ந்த கர்வம் இல்லாமை
2. தன்னுள் செய்கைத் தன்மை இல்லாமை
3. உடல் ,உள்ளம், வாக்கு எதனாலும் எவருக்கும் துன்பம் செய்யாமை.
4. மன்னிக்கும் தன்மை

5.உடல் , மனம் , வாக்குகளில் எளிமை.

6. ஞானம் பெற குருவிடம் சென்று அவருக்கு தொண்டு புரிவது.
7. உடலையும் , உள்ளுணர்வையும் தூய்மையுடன் வைத்துக்கொள்வது.
8.தன் இலட்சியத்திலிருந்து பிறழாமல் திடமாகச் செயலாற்றுதல்.
9 மனதைக் கட்டுப்படுத்தி வைத்திருத்தல்.
10 புலன்களின் இலக்குகளான விஷயங்களுடன் ஒட்டுறவு கொள்ளாமல் வைராக்கியத்துடன் இருத்தல்.

11. நான் – எனது செருக்கின்றி அகங்காரம் இல்லாமல் இருத்தல்.
12. வைராக்கிய உணர்வு ( பற்றில்லாமை) பெற பிறப்பு , இறப்பு, முதுமை,வியாதிகள்-இவைகளில் கேடு காணுதல்
13. எதிலும் பற்றுதலும் விருப்பமும் இல்லாதிருத்தல்.
14. மனைவி, மக்கள், வீடு முதலியவைகளில் அளவுக்கு அதிகமாக பற்றில்லாதிருத்தல்
15. அநுகூலம் -பிரதிகூலம் ஆகிய முரண்பட்ட விளைவுகள் ஏற்படும் போது சித்தத்தை சமநிலையில் வைத்திருப்பது.
16. என்னிடம் சஞ்சலமில்லாத தூய பக்தி கொண்டிருத்தல்,கூடவே உலகியல் வாழ்வில் பற்றற்று வாழ்தல்.
17. ஏகாந்தமான ( தனி) இடத்தில் வசிக்கும் வழக்கத்தை மேற்கொள்ளல்.
18.மக்கள் கூட்டத்தில் கலந்து உறவாடும் விருப்பமோ,ஆர்வமோ இல்லாதிருத்தல்.
19.பரமாத்மாவின் நிலைப்பாட்டை தினமும் இடைவிடாமல் சிந்தித்தல்.
20.எல்லா இடங்களிலும் எல்லா ஜீவராசிகளிடமும் பரமாத்மாவையே பார்க்கவும் உணரவும் செய்தல்.
 
இந்த இருபது சாதனங்கள் ( கருவிகள்) மூலம் சரீரம் தனித்தன்மையுடன் தெரியவரும்.சர்ரிரத்தை “இது” எனும் உருகில் ( தன்னிலும் வேறுபட்டதாக) காண்பது தான் ஞானம்.இதற்கு மாறாக சரீரத்தைத் தன் சொரூபமாக பர்ர்ப்பது அக்ஞானம்.
அர்ச்சுனன்: பகவானே! இந்த ஞானத்திலிருந்து கிட்டும் தத்துவம் என்ன?

 கண்ணன்: அறிய வேண்டிய தத்துவம் பரமாத்மா.இதை நான் விபரிக்கிறேன்.இதை அறிந்து கொள்ளுவதால் அமரத்துவ நிலை ஏற்படும்.

அர்ச்சுனன்: அறிய வேண்டிய அந்தக் தத்துவத்தின் சொரூபம் என்ன?

 கண்ணன்: தொடக்கமும் முடிவும் இல்லாத பிரப்பிரமம் இது.அதை உள்ளது( ஸத்) என்றோ, அல்லது அல்லது( அஸத்) சொல்லமுடியாது.

(பரம்பொருளை உண்டு -இல்லை என்ற வார்தைகளால் விவரிக்க முடியாது.இல்லை எனும் உணர்வு இருந்து விட்டால் உண்டு என்னும் சொல்லை பயன்படுத்தவே முடியாது.ஆவனை இன்னை எனும் சொல்லாலும் விவரிக்கமுடியாது.ஏனெனில் இல்லாத பொருளில் ஆராய்ச்சியேஎழுதுவதில்லை.எனவே ஸத் ( உண்டு) என்ற சொல்லோ,அஸத்( இல்லை) என்ற சொல்லோ அவனை வவிரிக்கும் திறனற்றவை.அவன் உண்மையும் இன்மையும் கடந்தவன்.)

அர்ச்சுனன்: எனினும் அந்தத் தத்துவம் எத்தகையது?

 கண்ணன்: அந்த பராமாத்ம தத்துவம் எல்லா இடங்களிலும் கைகள்,கால்களுடன் வியாபித்திருப்பது.மேலும் அதன் கால்கள்,தலைகள் ,முகங்கள்,காதுகள் எல்லா இடங்களிலும் பரவியிருக்கின்றன.எல்லாப் புலன்களுக்கும் அப்பாற்பட்டது.எல்லாப் புலன் விஷயங்களையும் பிரகாசப்படுத்துவது( வெளிப்படுத்துவது).அதற்கு எதிலும் பற்றுதல் இல்லை .ஆனால் உலகம் முழுவதையும் பேணி வளர்ப்பது.அதற்கு என்று தனிக்குணங்கள்( இயல்புகள்) இல்லை.ஆனால் குனங்களை ஆண்டு அனுபவிக்கும் திறன் பெற்றது.

அர்ச்சுனன்: ஒரே தத்துவத்தில் எதிர் எதிரான அடையாளங்கள்( இலக்கணங்கள்) எப்படி ஏற்பட்டன?

 கண்ணன்:  பல எதிரியான தன்மையான் ஒரே பரமாத்ம தத்துவத்தில் கலந்துள்ளன. அதனுள் எந்த எதிர் விளைவும் ஏற்படுவதில்லை.காரணம் அசை பொருள்.அசையாப்பொருள்( ஸ்தாவரம், ஜங்கமம்)எனும் எல்லாப் பிராணிகளின் வெளியிலேயும் உள்ளேயும் அதுதான் நிரம்பியுள்ளது. எல்லாப் பொருள்களாகவும், பிராணிகளாகவும்,அதுதான் விளங்குகிறது.
அதைத்தவிர வேறு எதுவும் இல்லை.மிகத் தொலைவிலும் அதுதான். மிக அருகாமையிலும் அதுதான்.

தூரமும் சமீபமும் மூன்று வகைப்படும் இடம்,காலம்,பொருள் சார்ந்தவை.வெகு தூரத்தில் மிக சமீபத்திலும் அதுதான் உள்ளது.காலம் சார்ந்த மூன்றுவகைகள்-முன்பு இன்று நாளை முக்காலங்களிலும் அது இருப்பது. பொருள் சார்ந்த மூன்று நிலைகள்பொருள்களுக்கு முன்பும் அதுதான் இருந்தது.பிறகும் அதுதான் இருக்கும் பொருள்களாகவும் அதுவே இருக்கும்.இந்த சுலோகம் இந்த அத்தியாயத்தின் சாரம். இதன் பொருளை சரியாக உணர்ந்து சிந்தித்து வந்தால் மனிதன் உலகாயதக் காரியங்களில் உழன்று கொண்டிருந்தாலும் தனிமையில் செயல் துறந்திருந்தாலும் இக்கருத்தின் மூலம் விழிப்புணர்வு ( ஞானோதயம்) எளிதாக ஏற்படும்.

கண்ணன்: பரமாத்ம தத்துவம் மிக சூட்சுமாக இருப்பதால் அறிய இயலாது.அதாவது புலன்களுக்கும் உள்ளுணர்விற்கும் எட்டாதது.ஆகையால் அம் மேலான தக்துவத்தில் எதிடையான முரண்பாடுகள் கிடையாது.

அர்ச்சுனன்: இந்த முரண்பாடற்ற நிலைக்கு வேறு என்ன காரணம் பகவானே?

கண்ணன்: பரமாத்மா பிரிவு பேதங்கள் இல்லாதவர்.எனினும் அனேகம் பிரிவு பேதங்கள் கொண்ட பிராணிகளிலும் இடம் பெற்றிருப்பதால் பிரிவு பேதங்கள் கொண்டவர் போல் இருக்கிறார்.அப் பராமாத்மா தான் எல்லப் பிராணிகளையும் பொருள்களையும் உற்பத்தி செய்பவர்.உயிர் வளப்பவர், பாதுகாப்பவர்.முடிவில் அழிப்பவருங்கூட உற்பத்தி, வாழ வைத்தல் அழித்தல்( உற்பத்தி, ஸதிதி,பிரளயம்) இம்மூன்று நிலைகளும், செயல்களும் செய்பவரும் பரமாத்மாதான் அந்தப் பரம்பொருளை அறிந்து கொள்ளவேண்டும்.

அர்ச்சுனன்: பரமாத்மாவின் சொரூபம் என்ன?

கண்ணன்: ஜம்புலன்கள், மனம், புத்தி,முதலியவை மூலமாக எவ்வளவு உணர்வுகள்(ஞானம்) ஏற்படுகின்றனவோ,அவையாவும் பரமாத்மாவுடம் இருந்தே வெளிப்படுகின்றன.ஆகையால் அவர் எல்லா ஜோதிகளுக்கும் (ஞானம்) ஒளியூட்டும் ஜோதி,பிரகாசப்படுத்தும் பரமஜோதி அவரிடத்தில் அஞ்ஞானம் கிடையாது.ஞான சொரூபமும் அறிய வேண்டிய தத்துவமும் அவரே.சாதனங்களுக்கெல்லாம் தலையாய ஞானத்தின் மூலமாக அடையத் தகுந்தவரும் அவரே.எல்லா ஜீவராசிகளினிதயங்களிலும் அவர் குடி கொண்டிருக்கிறார்.

இந்த அத்தியாயத்தின் பதிமூன்றாம் சுலோகத்தில் விராட்(விசுவ)ரூபமும் இந்த சுலோகத்தில் ஜோதிசொரூபமான பரமாத்மாவும் விவரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அர்ச்சுனன்: இன்னும் எதையெல்லாம் நான் அறிய வேண்டும் அறிவதன் மகத்துவம் என்ன?

கண்ணன்: சேஷத்திரம்,ஞானம் அறியத்தக்கது-இம் மூன்றையும் முறையாக அறிந்து கொள்ளவேண்டும்.அவைகளைச் சுருக்கமாக நான் முன்பு உபதேசித்திருக்கிறேன்.இம்மூன்று தத்துவங்களையும் சரியாக அறிந்து கொள்ளும் என் பக்தன் என் தன்மையை அடைகிறான். அவனுக்கு என்னோடு இரண்டறக் கலந்துவிட்ட உணர்வு ஏற்படுகிறது.

அர்ச்சுனன்: அறியத்தக்க மூன்றையும் உணர்ந்து உங்களுடன் இரண்டறக் கலந்து ஒட்டுறவை உணருகிறான்.ஆனால் ஞான மார்க்கத்தில் செல்ல விரும்பும் சாதகன் என்ன அறிந்து கொள்ள வேண்டும்?

கண்ணன்: அத்தைகைய சாதனுக்கு இயற்கை( சேஷத்திரம்)புருஷன் ( சேஷத்திரக்ஞன்)இரண்டையும் தனித்தனியாக அறிவது அவசியம்.இவ்விரண்டுமே அனாதியானவை.

அர்ச்சுனன்: பிரகிருதி ( இயற்கை)யும் புருஷனும் அனாதியானவர் என்றால் இப்போது பரவியிருக்கும் குணங்களும் ( இயல்புகள், தன்மைகள்) மாறுதல்களும் எப்படி ஏற்பட்டன?

கண்ணன்: குணங்களும், மாறுதல்களும்( விகாரங்கள்)பிரகிருதி எனும் இயற்கையிலிருந்து ஏற்பட்டவை மேலும் காரியம்,காரணம்( கருவி)கர்திருத்வமம்( செய்பவரின் தன்மை)இம் மூன்றிலும் பிரகிருதிதான் காரணமாக இருக்கிறது.

அர்ச்சுனன்: சேஷத்திரக்ஞன் எனும் புருஷன் எதன் காரணாமாக அமைந்திருக்கிறான்?

கண்ணன்: புருஷன் சுக துக்கங்களை அனுபவிப்பதில் காரணமாக இருக்கிறான்.

அர்ச்சுனன்:புருஷன் சுக துக்கங்களை அநுபவிப்பதில் எப்போது காரணமாக அமைந்திருக்கிறான்?

கண்ணன்: பிரகிருதியில் இணைந்திருப்பதால் , அதனுடன் தன் தொடர்பை ஏற்பதால் புருஷன் குண இயல்புகளையும் அனுபவிக்கிறான்.குணங்களுடன் கூடியிருப்பதால் புருஷன் உயர்ந்தும் தாழ்ந்துமான இனங்களில் ( யோனிகள் எனும் பிறவிகளில் ) பிறக்கிறான்.

அர்ச்சுனன்:அந்தப் புருஷனின்  சொரூபம் என்ன பகவானே?

கண்ணன்: பல சொரூபங்கள் பிரகிருதியின் செயலுருவத்தோடு ( காரிய சரீரம்) தொடர்பு வைத்திருப்பதால் ” உபதிருஷ்டா” என்றும் இயற்கையுடன் கூடச் சேர்ந்து இசைவு தருவதால் ” அநுமந்தா” என்றும் தன்மைப் பிரகிருதியைப் பராமரித்து வளர்ப்பவனாக கருதுவதால் “பர்த்தா” என்றும் பிரகிருதியுடன் கூட சுகதுக்கங்களை அநுபவிப்பதால் “போக்தா” என்றும் தன்னைப் பிரகிருதியின் தலைவனாக கருதுவதால் ” மகேசுவரர்” என்றும் அழைக்கப்படுகின்றான்.ஆனால் இந்தப் புருஷனின் மூல சொரூபம் பரமாத்மா.இவன் பல சரீரங்களில் குடி கொண்டிருந்தாலும் சரீர சம்பந்தமற்றவன்.-எந்த உடலோடும் ஒட்டுறவு இல்லாதவன்.எதிலும் கலக்காதவன்.

அர்ச்சுனன்: இவ்வாறு பிரகிருதியையும் புருஷனையும் ( இவர்களுடைய சொரூபங்கள்) அறிவதால் என்ன பயன் பகவானே?

கண்ணன்:  இவ்வாறு பலவகை இயல்புகள் கொண்ட பிரகிருதியையும் இயல்புகளற்ற புருஷனையும் எந்த மனிதன் சரியாக உணர்ந்து கொள்ளுகிறானோ, அவன் சாஸ்திரங்களில் விதித்தவாறு உலகியல் பணிகளை மேற்கொண்டு கடமைகளை நிறைவேற்றி வருவான். அவனுக்கு மறுபிறவி கிடையாது. ஜனனம் மரணம் எனும் சம்சாரபந்தத்திலிருந்து விடுவிக்கப்படுகிறான்.

அர்ச்சுனன்: சேஷத்திரக்ஞன் எனப்படும் அப்புருஷனை( பராமாத்ம சொரூபத்தை)அறிந்து கொள்ள வேறு உபாயம் உள்ளதா பகவானே?

கண்ணன்:  உள்ளது அர்ச்சுனா! பல மனிதர்கள் தியான யோகத்தாலும் ,பலர் ஸாங்கிய யோகத்தாலும்,பலர் கர்ம யோகம் மூலமகவும் தம்முள் தம் சொரூபத்தை ( பரமாத்ம தத்துவத்தை) அறிந்து கொள்கிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! இவைகளைவிட எளிதான ( உபாயம்) வழி ஏதாவது இருக்கிறதா?

கண்ணன்: இருக்கிறது. எந்த மனிதர் தியான யோகத்தையும் சாங்கிய யோகத்தையும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களோஅவர்கள் ஜீவன் முக்தர்களான மஹா புருஷர்களின் கட்டளைப்படி வாழ்கிறார்கள்.அவர்களும் மரணத்தைக் கடக்கிறார்கள்.முக்தி பெறுகிறார்கள்.

அர்ச்சுனன்: அவர்கள் எப்படி மரணத்தைக் கடந்து முக்தி பெறுகிறார்கள்?

கண்ணன்: பரத வம்சத்து திலகமே! அசையும் பொருள்.அசையாப் பொருல்கள் யாவும்  சேஷத்திரம்,சேஷத்திரக்ஞன் இருவரும் இணைந்தால் உற்பத்தியானவை.இதனால் சேஷத்திரத்துடன் கூட சேர்க்கைஅயை ஒப்புக் கொள்ளாதிருக்கும் போது அத்தகைய அறிவாளிகள் பிரவித்தளையை அகற்றிக் கொள்கிறார்கள்.ஜன்மம் மரணம் அவர்களைத் தொடர்வதில்லை.அந்த அறிவாளிகள் முக்தர்களாகிறார்கள்.

அர்ச்சுனன்: சேஷத்திரத்தின் சேர்க்கையிலிருந்து விடுபடுவதற்கு மனிதன் என்ன செய்ய வேண்டும்?

கண்ணன்:  இரு காரியங்களை மேற்கொள்ளவேண்டும்,தாமே உருவாகி நிலை பெற்ற பரமாத்மாவின் சம்பந்தத்தை அறிந்து கொள்ளுவது,பிரகிருதி( சரீரம்) சார்ந்த சம்பந்தத்தை விடுவித்துக் கொள்ளுவது ஏற்றத் தாழ்வும் மாறாட்டங்களும் உள்ள உலகியல் வாழ்வில் சம நிலையோடு ஈடுபட்டிருக்கின்றவர் பரமாத்மா.அழியும் பொருள்களில் அழியாத உருவில் இருப்பவர். சர்வ வல்லமைகளும் கொண்ட பரமேசுவரர்.இந்த தத்துவத்தை அறிபவர் தாம் ஞானி.இந்த ஞானிக்கு பரமாத்ம சொரூபம் தம்மிடம் இருப்பதை உணர முடியும் .எல்லாஇடங்களிலும் சமமான ரூபமாக நிறைந்திருக்கும் பரமாத்மாவுடன் ஒருமைப்பாடு ஏற்படுவதால் அழியும் உடலோடு ஒருமைப்பாடு ஏற்படுவதில்லை.பிரகு அந்த ஞானி தம்மை அழித்துக் கொள்ளுவதில்லை. அதாவது சரீரம் அழிந்தாலும் தாம் அழிந்து போவதாக எண்ணமாட்டார்.இதனால் அந்த ஞானி பரமகதியான பரமாத்ம நிலையை அடைகிறார்.

அர்ச்சுனன்: பகவானே!நீங்கள் பரமாத்மாவுடன் ( ஜீவாத்மாவுக்கு) ஏற்படும் சம்பந்த்த்தை அறிந்து கொள்ளுவது பற்றிச் சொன்னீர்கள்.இப்போது பிரகிருதி சம்பந்தத்தை ( உடலுடன் உள்ள தொடர்பை) விடுவித்துக் கொல்ளுவது எப்படி என்பதைச் சொல்லுங்கள்?

கண்ணன்: எல்லாச்செயல்களும் பிரகிருதி ( இயற்கை) வழியாகத்தான் ஏற்படுகின்றன.இந்த உண்மையை உணர்ந்து கொண்டுவிட்டால் எந்தச் செயலுக்கும் தான் காரணமில்லை என்பதை மனிதன் உணர்வான். மேலும் அந்த உணர்வுடன் அவன் எல்லாப் பிராணிகளின் தனித்தனியான தன்மைகளை ( உடல், உருவம்,செயல்,முதலியவைகளை) ஒரே பிருகிருதியில் அடங்கியவை என்பதையும் அவையாவும் பிரகிருதியில் இருந்து தான் உற்பத்தியானவை என்பதையும் உணிகிறான். அந்நிலையில் அவன் பிரும்மத்தை அடைகிறான்.பிறகு பிரகிருதியுடன் அவனுக்குத் தொடர்பு இருப்பதில்லை.

அர்ச்சுனன்: ஏன் அப்படி ஆகிறது கண்ணா?

கண்ணன்: குந்திதேவியின் புதல்வனே!மூல புருஷன் பிறப்பு இல்லாத அநாதி.எத்தன்மையும் இல்லாதவன்  அழிவற்ற பரமாத்ம சொரூபம் இது சரீரத்தில் குடியிருந்தாலுமுண்மையில் சரீரத்தின் செயல்களுக்குக் கட்டுப்பட்டதல்ல.செவதும் இதுவல்ல.அதாவது செய்வதும் அநுபவிப்பதும் பரமாத்ம சொரூபமான மூல புருஷன் இல்லை.

அர்ச்சுனன்: புருஷன் பிரகிருதியுடன் கலக்காமல் எப்படி இருக்க முடிகிறது?

கண்ணன்: ஆகாசம் எல்லாவிடங்களிலும் பரந்து விரிந்து இருந்தாலும் மிக சூட்சுமமாகவும் இருக்கிறது.அது எந்தப் பொருள்களிலும் பிராணியிடத்திலும் ஒட்டிக் கொண்டிருப்பதில்லை. இதைப் போலவே மூல புருஷன் எல்லாவிடங்களிலும் நிறைந்திருந்தாலும் எந்த உடலிலும் சிறிதும் ஒட்டிக்கொண்டிருப்பதில்லை.

அர்ச்சுனன்: புருஷன் ஏன் கர்த்தாவாக (செய்பவனாக) இருப்பதில்லை?
கண்ணன்: பாரத வீரனே! சூரியன் எல்லா உலகையும் ஒளியுடன் விளங்க வைக்கிறான்.ஆனால் சூரியனிடம் பிறரால் ஒளிவீசச் செய்யும் தன்மை ஏற்படுவதில்லை.இதைப் போலவே சேஷத்திரக்ஞன்( புருஷன்)எல்லாவிடயங்களையும் ஒளிரச் செய்கிறான்.ஆனால் அவனிடம் ஒளிபரவச் செய்யும் ஆக்கத்திறன் எவராலும் ஏற்படுவதில்லை.அவன் பிரகாசம் மட்டுமே.ஒளிபடைத்தவன். ஒளியைப் படைப்பவனோ பிரர் மூலம் உருவாக்கச் செய்பவனோ அல்லன்.
இதே போல் ஞான ரூபமான கண்ணால் சேஷத்திரம். ஷத்திரக்ஞன் இருவருக்குமுள்ள வித்தியாசத்தை உணர்பவன் ஞானி.மேலும் பிரகிருதியிலிருந்தும் அதன் காரியத்திலிருந்தும் தன்னை வேறுபட்டவனாக சம்பந்தமில்லாதவனாக ஞானி உணர்கிறான். இத்தகைய ஞானிகள் பரமாத்மாவை அடைகிறார்கள் .இவர்கள் தம் ஞான யோகத்தால் பராத்ம நிலையைப் பெறுகிறார்கள்.

12.பக்தித் தொண்டு

November 19, 2009 Leave a comment

அர்ச்சுனன்: பரமாத்மா! நீங்கள் இப்போது உபதேசித்தீர்களே! பலர் உங்களை சகுணசாகார( குணமும் உருவமுள்ள) சொரூபமாக ஏற்று ஈடுபட்டு உபாசிக்கிறார்கள்.வேறு பலர் உங்களுடைய அச்சர அவ்யத்த நிர்குண நிராகர( இயல்பும் உருவுமில்லாத) சொரூபமாக கருதி உபாசனை செய்கிறார்கள்.இவ்விருசாராரர்களில் எவை சிறந்தவர்?

பகவான்: அர்ச்சுனா! என்னிடத்திலே தன் மனத்தைச் செலுத்தி எப்போதும் இடையறாமல் என்னையே தியானித்து பக்தி சிரத்தையுடன் உபாசிக்கும் பக்தனைத்தான் நான் தலை சிறந்த உபாசனாகக் கருதுகிறேன்.

அர்ச்சுனன்: உங்களுடைய அவ்வியத்த ரூபத்தை( புலன்களுக்கு புலப்படாத சொரூபம்) உபாசிப்பவர்களை எப்படிக் கருதுகிறீர்கள்?

கண்ணன்: எல்லா இடங்களிலும் சமபுத்தி கொண்டவர்களும் ,உயிரினம் முழுவதும் நலமுடன் வாழவேண்டும் என்று விரும்புகிறவர்களும் அதற்காகவே பாடுபடுபவர்களுமான மனிதர்கள் தம் புலன்களை அடக்கி எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பவரும் , சிந்தனைக்கு அடங்காதவரும் அந்தர்யாமியும் ( கூடஸ்தர்)சஞ்சலமில்லாதவரும் குறிப்பிட்டு விளக்க இயலாதவரும் , திடசத்திய சொரூபராகவும் அழியாத -அட்சர ( ஓங்கார) சொரூபராகவும் வெளிப்படாதவருமான பரமதத்துவமான பகவானை உபாசிபபவர்களும் என்னை வந்தடைகிறார்கள்.

அர்ச்சுனன்: அப்படியானால் உங்களிடம் இடையறாது பக்தி செலுத்துபவர்கள் எப்படி தலை சிறந்தவர்கள் ஆவார்கள்?

கண்ணன்: அர்ச்சுனா எனது அவ்வியத்த ( புலப்படாத) சொரூபத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அதையே திடசித்தமாக தீவிரமாக உபாசிக்கிறார்கள்.அவர்களுக்கு தம் சாதனையில் அதிக கஷ்டம் ஏற்படுகிறது.காரணம் தம் உடலின்பால் பற்றுதல் கொண்டுள்ள தேக அபிமானிகளுக்கு அவ்யக்த சொரூபத்தை வெற்றிகரமாக உபாசித்து பெறுவது மிகக் கடினமானது.ஆனால் எந்த பக்தர்கள் எல்லாச் செய்கைகளையும் என்னிடமே அர்பணித்துவிடு என்னிடம் முழு ஈடுபாடு கொண்டிருக்கிறார்களோ மேலும் ” தேவனே மற்றறியேன்”எனும் ஒரே முனைப்புடன் என்னையே சிந்தித்து உபாசித்து வருகிறார்களோ, அத்தகைய உத்தம பக்தர்களை நான் இந்த அழியும் உலகிலிருந்து விடுவித்து சாசுவத நிலைக்கு இட்டுச் செல்கிறேன்.

அர்ச்சுனன்: பகவானே! அத்தகைய உத்தம பக்தனாக நான் எப்படி ஆகமுடியும்

கண்ணன்: அர்ச்சுனா! நீ என்னிடம் மனத்தைச் செலுத்திக் கொண்டேயிரு.புத்தியையும் என்னைச் சார்ந்தே சிந்திக்கச் செய்.பிறகு நீ என்னுள் இருப்பதை உணர்வாய்.இதில் சந்தேகமேயில்லை.இம்மாதிரி நீ உன் மனதையும் புத்தியையும் என்னில் நிலைப்படுத்திவைக்க இயலாமல் போனால் அப்பியாச யோகம்( தீவிரமான பயிற்சி)மூலம் என்னை அடைய விரும்பு.இதுவும் உன்னால் இயலாது போனால் எனக்காகப் பணி புரிந்துவா.எனககாகவே எல்லாச் செயல்களையும் மேற்கொள்.என்னக்காகத் தொழில் புரிவது மூலமாகவும் நீ என்னைப் பெற முடியும்.உன்னால் இதுவும் இயலாது போனால் பக்தி யோகத்தைப் பின்பற்று. என்னிடமே தீவிரமாக திட ஈடுபாட்டுடன் பக்தி செலுத்து.மனம் புத்தி இரண்டையும் உன் வசத்தில் வைத்துக்கொள்.எல்லாச் செயல்களையும் எனக்காகவே செய்துஅவைகளின் பயன்களையும் எனக்கே அர்பணித்து விடு.

அர்ச்சுனன்: பகவானே!இந்த முறையில் கருமபலன்களையும் துறந்து விடுவது நான்காம் தரத்து ( தாழ்வான) வழியாகும் இல்லையா?

கண்ணன்: இல்லை அர்ச்சுனா! யோகம் ( சமத்துவ ஈடுபாடு) இல்லாத அப்பியாசத்தைவிட சாஸ்திரஞானம் சிறந்தது.யோகம் இல்லாத சாஸ்திர ஞானத்தைவிட தியானம் சிறந்தது.யோகம் இல்லாதது.தியானத்தைவிட கர்ம பலன்களைத் துறக்கும் தியாகம் மிகச் சிறந்தது ஏனெனில் தியாகத்தால் உடனடியாக பேரமைதி கிட்டுகிறது.

அர்ச்சுனன்: என்பெருமானே! முன் சொன்ன நான்கு வழிகளில்( சமத்துவ ஈடுபாடுள்ள பயிற்சி,சாஸ்திரஞானம், தியானம், தியாகம் எனும் சாதனங்கள்) ஏதாவது ஒன்றின் மூலமாக உங்களை அடைந்த சித்தரான பக்தரின் இலட்சணங்கள் எவை? அவர்களிடம் என்ன என்ன  குணநலங்கள் உள்ளன?

கண்ணன்: அர்ச்சுனா! என்னைச் சேர்ந்த சித்தரான பக்தர் எந்தப் பிராணிகளிடமும் பகைமை பாராட்டமாட்டார்.எல்லா ஜீவராசிகளிடமும் அன்பும், பாசமும் ,கருணையும் கொண்டு இருப்பார்.தான், தனது எனும் செருக்கு இல்லாமல் இருப்பார்.பொறுமையும் மன்னிக்கும் குணமும் நிரம்பியவர்.இன்ப துன்பங்களில் சமபுத்தி கொண்டவர் எல்லாச் சூழ்நிலையிலும் எப்போதும் மனநிறைவும் மகிழ்ச்சியும் கொண்டிருப்பார். உடல், உள்ளம்,புலன்கள் தன்கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்திருப்பார்.மேலும் அவர் தன் புத்தி இரண்டையும் எனக்கே அர்ப்பணித்திருப்பார். அத்தகைய திடநிச்சயமுள்ள பரமபக்தர் எனக்கு மிகவும் பிரியமானவர்.

அர்ச்சுனன்:பகவானே! இன்னும் எவர்கள் எல்லாம் உங்களுக்குப் பிரியமானவர்கள்?

பகவானே: அர்ச்சுனா! எந்தப் பக்தர்களால் பிறருக்கு கோபதாபம் ஏற்படுவது இல்லையோ, எவரிடமும் பிறராலும் கோபதாபத்தை ஏற்படுத்தி விடமுடியாதோ, அத்தகைய பண்புமிக்க பக்தர் மகிழ்ச்சி, பொறாமை , பயம், உனர்ச்சிவேகம் ஆகியவையால் ஆட்கொள்ளப்பட முடியாதவர். இவர் எனக்கு மிகவும் பிரியமானவை.

அர்ச்சுனன்: பகவானே! இன்னும் உங்களுக்குப் பிரியமானவர்கள் மேலும் இருக்கிறார்களா?

கண்ணன்: அர்ச்சுனா! எவர் தமக்கென்று வாழாமல் எந்தப் பொருளையும் மனிதரையும் தமக்குத் தேவையென்றும் கொள்ளாமல் இருக்கிறாரோ, எவர் உள்ளும்புறமும் பரிசுத்தமாக இருக்கிறாரோ,எவர் திறமைசாலியோ, அதாவது மனித சரீரம் பெற்றதன் நோக்கமாக பகவானை அடையும் வழியில் செயலாற்றி வருகிறரோ,எவர் உலகியல் அநுபவங்களிலிருந்து ஒதுங்கி இருக்கிறாரோ,எவருடைய உள்ளத்தில் உணர்ச்சிக் கொந்தளிப்பு இடம்பெறாதோ, எவர் சுகபோம் சேமிப்பு உத்தம பக்தர் எனக்குப் பிரியமானவர்.

அர்ச்சுனன்: பகவானே! இன்னும் இந்த வரிசையில் மேலும் எவர்கள் இடம்பெறுகிறார்கள்?

கண்ணன்: அர்ச்சுனா!எவர் தமக்கு  நலன் ஏற்பட்டதும் மகிழ்ச்சி கொள்ளாமலும் தீங்கு ஏற்படும்போது வெறுப்படையாமலும் இருக்கிறாரோ, எவர் துன்பம் ஏற்படும்போது வருந்தாமலும், இன்பமளிக்கும் நிலைகளை விரும்பாமலும் வாழ்கிறாரோ, இதேபோல் சுபம்,அசுபம் இவ்விரு காரியங்களிலும் விருப்பு – வெறுப்பு கொள்ளாமல் தியாக உணர்வுடன் இருக்கிறாரோ அத்தகைய நடுநிலையில் வாழும் பண்பட்ட பக்தர் எனக்குப் பிரியமானவர்.

அர்ச்சுனன்: இதற்கு மேலும் உங்களுக்கு பிரியமானவர்கள் இருக்கிறார்கள்

கண்ணன்: ஆம் அர்ச்சுனா! எவர் பகைவன் -நண்பன், மானம்-அவமானம், ( புகழ்ச்சி-இகழ்ச்சி)அநுகூலம்- பிரதிகூலம் ( நன்மை- தீமை) சுகம்- துக்கம்( இன்பம்- துன்பம்)இவைகளில் சமபுத்தி கொண்டிருக்கிறார்களோ(இரண்டையும் சமமாககருதி ஏற்கிறார்களோ) ,எவர் போற்றுதல்,தூற்றுதல் இரண்டையும் ஒன்றுபோல் கருதி ஏற்றுக் கொள்கிறார்களோ, எவர் சிந்தனைத் திறன்பெற்றவரோ, கிடைப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்கிறாரோ, எவர் உடல் எதிலும் பற்றுதல் கொள்ளாமல் இருக்கிறாரோ, எவருடைய புத்தி நிலை பெற்றதாகவுள்ளதோ அத்தகைய பக்தர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.

( பகவான் இதுவரையில் ஜந்துவகை சித்தபக்தர்களின் இலட்சணங்களை விபரித்திருக்கிறார். இவர்களுடைய சுபாவங்கள்,சாதனைமுறைகள்தனித்தனியாக இருப்பதால் தனித்தனியாக கூறப்பட்டுள்ளன.சிலரிடம் சில தன்மைகள் கூடக்குறைய இருந்தாலும் தியாக பக்தி, திட பக்தி, இவ்ஜந்துவகை பக்தர்களுக்கும் பொதுவானவை.)

அர்ச்சுனன்: இதுவரையில் உங்களுக்கும் பிரியமான பக்த சிரேஸ்டர்களைப் பற்றி சொன்னீர்கள்.பகவானே! இவர்களில் உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார் என்பதைச் சொல்லுங்கள்?

கண்ணன்: அர்ச்சுனா! எவர் என்னுடன் மிக்க ஈடுபாட்டுடன், பேரன்பு கொண்டு என்னையே போற்றிப் பணிந்து ஆராதித்து இருக்கிறார்களோ,இதுவரையில் கூறியுள்ள சித்த பக்தர்களின் இலக்கணங்களை விருப்பத்துடன் கடைப்பிடித்து வருகிறார்களோ,அத்தகைய தலைசிறந்த சாதனையாளரான பக்தசிரேஸ்டர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.

11.விஸ்பருபம்

November 19, 2009 Leave a comment

அர்ச்சுனன்: பகவானே! என்னிடம் பேரன்பும், பேரருளும் கொண்டு  மிக்க ரகசியமான ஆன்மீக தத்துவத்தை ( எல்லாவற்றிக்கும் ஆதிமூலமாக நான் இருக்கிறேன் என்ற உங்கள் தத்துவத்தை) உபதேசித்தருளினீர்கள்.என் மதிமயக்கம் விலகியது.கண்ணபிரானே! உங்களிடமிருந்து எல்லா உயிரினங்களின் உற்பத்தியையும் பிரளயத்தைப் பற்றியும் அறிந்து கொண்டேன்.மேலும் உங்களுடைய அழிவற்ற ஒப்பற்ற மகத்துவ மகிமையையும் விரிவாகக் கேட்டு உணர்ந்தேன்.

கிருஷ்ண பரமாத்மாவே! நீங்கள் தான் எல்லாப் பொருள்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் தந்தை.பூசிக்கத்தக்க மகானும் நீங்களே.குருதேவர்களுக்கெல்லாம் அதிகுருவும் நீங்கள்.உங்க வைபவ மகிமை எல்லையற்றவை.பாதாளம் ,பூமி, வானம் இவ்வுலகங்களிலும் உங்களுக்கு நிகரானவர் கிடையாது.உங்களை எதிலும் எங்கும் எக்காலத்திலும் மிஞ்ச முடியாது.உங்களை சாஸ்டாங்கமாக வணங்கி போற்றத்தக்க ஈசனாகிய உமது அருளை வேண்டுகிறேன்.என் பிழைகளை பொறுத்தருளுங்கள்.பகவானே! மகன் செய்த பிழைகளை தந்தையும் , சிறிய நண்பனை பெரிய நண்பனும் மனைவியை கணவனும் எப்படி பெருந்தன்மையுடன் மன்னிக்கிறார்களோ, பொறுத்துக்கொள்கிறார்களோ,அதேபோல் என் தவறுகளையும் நீங்கள் பொறுத்தருள வேண்டும்.

கண்ணன்: அர்ச்சுனா! இப்போது நீ மேலும் என்ன அறிய விரும்புகிறாய்?

அர்ச்சுனன்: புருஷோத்மரே! நீங்கள் உங்களைப் பற்றி விபரித்தது எல்லாம் நிதரிசனமான உண்மைகள். பரமேஸ்வரா!நான் உங்களுடைய சர்வேஸ்வரா சொரூபத்தைத் தரிசிக்க விரும்புகிறேன்.உங்களுடைய ஒருஅம்சத்திலேயே அனந்த கோடி பிரமாண்டமும் பரவியுள்ளது.என்னால் உங்களுடைய பரமேஸ்வர சொரூபத்தை தரிசிக்க முடியுமானால் அருள் கூர்ந்து என் புறக் கண்களுக்கு தெரியுமாறு காட்சியளிக்க வேண்டுகிறேன்.

கண்ணன்: அர்ச்சுனா!உனக்கு தீவிர விருப்பம் இருக்குமானால் என் ஒரு சொரூபத்தை மட்டுமல்ல,பலப்பல திவ்விய சொரூபங்களையும் பார்.அவை ஆயிரக்கணக்கில் இருக்கும் , பலவைகளிலுமிருக்கும் பல வண்ணங்களிலும் இருக்கும்.பல ஆகிருதிகளில் இருக்கும்.

அர்ச்சுனன்: மேலும் என்னவெல்லாம் தரிசிப்பேன் பகவானே?

கண்ணன்: பரதவம்சத்து வீரப்புதல்வனே! நீ என்னுடைய சர்வேஸ்வர சொரூபத்தில் ( விஸ்வரூபம்) ஆதித்தியர்களையும் ,வசுக்களையும்.ருத்திரர்களையும் ,அசுவினி குமாரர்களையும்,மருத்துக்களையும் தரிசித்துக்கொள்.எந்த ரூபங்களை முன்பு நீ கண்டதில்லையோ அவைகளையெல்லாம் பார்த்துக் கொள்.பல வியக்கத்தக்க உருவங்களைப் பார்.

அர்ச்சுனன்: நான் எங்கே பார்ப்பேன் பகவானே?

கண்ணன்: உறக்கத்தையும் வென்ற  வீரனே!என் இந்த சரீரத்தில் ஏதாவது ஓர் அம்சத்தில் சாரசங்கள்( அசையும் அசையா பொருள்கள்)நிறைந்த முழு உலகத்தையும் நீ இப்போது பார்.இதைத்தவிர மேலும் ஏதாவது பார்க்க விரும்பினால் அதையும் பார்.

( அர்ச்சுனன் சர்வேஸ்வர சொரூபத்தைத் தவிர போரில் எவர்தரப்பில் வெற்றி இடம்பெறும் என்பதையும் அறிய விரும்பியதால் அவனுக்குள்ள சந்தேகத்தையும் தன் விஷ்வரூப சொரூபத்தின் மூலம் போக்கவே வேறு ஏதாவது பார்க்க விரும்பினால் பார் என்று கூறினார்.)

அர்ச்சுனன்: கண்ணா! நீங்கள் அடிக்கடி நீ பார் என்று கூறுகின்கிறீர்கள்.எனக்கோ எதுவும் தென்படவில்லையே நான் எதைப் பார்ப்பேன்?

கண்ணன்: அர்ச்சுனா! நீ இந்தப் பெளதீகக் கண்ணால் என்நிலை எதையுமே பார்க்க முடியாது.நான் உனக்கு தெய்வாம்சம் பொருந்திய திவ்விய சச்சு( திவ்விய பார்வை)எனும் அகக் கண்ணை அளிக்கிறேன்.அதன் மூலம் நீ என் சர்வேஸ்வ வல்லமையைப் பார். என் பரம்பொருள் நிலையை உணர்ந்துகொள்.

மகாயோகேஸ்வரரான பகவான் கிருஷ்ண பரமாத்மா அர்ச்சுனனுக்கு தம் பரமேஸ்வர சொரூபத்தை ( விஸ்பரூப தரிசனத்தை) காண்பித்தருளினார்.

அந்த விஸ்வரூப தரிசனத்தில் அனேக திருமுகங்கள், கண்கள், அனேகவிதமான அற்புதக் காட்சிகள் பலப்பல திவ்வியாஅபரணங்கள்,நிறையக் கைகள்,அவைகளில் விதம் விதமான அஸ்திர சாஸ்திரங்கள் திவ்விய மாலைகள்,ஆடைகள் அணிந்திருக்கும் திருக்கோலம்,எல்லாத் திசைகளிலும் காட்சியளிக்கும் திவ்விய மங்கள திருவுருங்கள் இப்படிப்பட்ட அதிசயமான எல்லையற்ற திருகோலங்களைக் கொண்ட சர்வேஸ்வர சொரூபத்தை காட்டியிருக்கிறார்.இது விபரிக்க இயலாத விஸ்பரூபம்.

அர்ச்சுனன்: ஆகாசத்தில் ஆயிரக்கணக்கான சூரியர்கள் ஒரே சமயத்தில் உதயமானால் எப்படி இருக்கும்? அவையெல்லம் உச்சிப்பொழுதில் ஒரே சமயத்தில் பிரகாசிக்கும் போது எவ்வளவு ஓளி வெள்ளம் பரவும்?இவையெல்லாம் பரமாத்மாவின் விசுவரூபத்தில் எதிரில் மிகச்சொற்பம்?

அர்ச்சுனன் அந்த விசுவரூபத்தை நன்றாகப் பார்த்தான்.
அர்ச்சுனன் சர்வேஸ்வரனான் கிருஷ்ண பரமாத்மாவின் சரீரத்தினுடைய ஒரு பாகத்தில் உலகம் முழுவதையும் பற்பல பிரிவுகளுடன் கூடிய நிலையில் கண்டார்.

பகவானுடைய விஸ்வரூபத்தை தரிசித்ததும் அர்ச்சுனன் பேராச்சரியத்தில் திகைத்து போனார். அவருடைய உடல் சிலிர்த்துப் புளகாங்கிதமடைந்தது. அர்ச்சுனன் பரம பக்தர்.அவர் தலை குனிந்து இரு கரங்களையும் குவித்து வணங்கினார். உள்ளமுருகித் துதிக்கத் தொடங்கினார்.

அர்ச்சுனன்: சர்வேஸ்வரா! உங்களுடைய சரீரத்தில் எல்லாத் தேவதைகளையும் ,எல்லா பிராணிகளையும் கொண்ட பூத சமுதாயங்களையும் பார்க்கிறேன்.கூடவே தாமரை மலரில் வீற்றிருக்கும்பிரும்ம்மாவையும் ,கைலாசத்தில் காட்சியளிக்கும் சங்கரரையும் எல்லா மகரிஷிகளையும் உத்தமமான் சர்ப்பங்களையும் தரிசிக்கிறேன்.

விஸ்வரூபரே! விஸ்வேஸ்வரே! நான் உங்களைப் பல கைகளும் வயிறுகளும்,முகங்களும்,கண்களும் கொண்டவராகத் தரிசிக்கிறேன்.மேலும் எண்ணற்ற உருவங்களில் காண்கிறேன்.உங்களுடைய ஆரம்பம்,மத்தி,முடிவு எதையும் என்னால் பார்க்க முடியவில்லை.ஆனால் உங்கள் சென்னியில் மணிமகுடம்,கைகளில் சதங்கை சக்கரம் முதலான் பலவகை ஆயுதங்கள் முகத்தில் ஒளிவெள்ளம்,நாலா பக்கங்களிலும் ஜொலிக்கும் அக்கினிப்பிழம்புகள்! என் ஊனக்கண்ணால் சரியாகப் பார்க்கவும் முடியவில்லை.என் பார்வைக்கு அடங்கவும் இல்லை உங்கள் விசுவரூபம்.

உலக நாயகரே!நீங்கள் மேலான அழியாத அஷ்ர பிரும்மம்.நீங்கள் அகில உலகத்திற்கும் மூலாதாரம்.நீங்கள் சனாதனமான( சாசுவதமான) தர்மநெறிகளை ரட்சிக்கும் சனாதன புருஷர்.எங்கும் எல்லாமுமாக வியாபித்திருக்கிறீர்கள்.

( இவ்விதம் சஞ்சயனும் தான் கண்டவற்றை விபரமாக மகராஜா திருதாரஷடிரருக்கு எடுத்துரைத்தார்.)

கண்ணன்: அர்ச்சுனா! நீ பார்க்கிறாயா? அல்லது இப்படியெல்லாம் சிந்தித்து உணர்கிறாயா? 

அர்ச்சுனன்: பகவானே! நான் உங்களைத் தரிசித்துக் கொண்டு இருக்கிறேன்.ஆரம்பம்,நடு,முடிவு எதுவும் தெரியவில்லை.எல்லையற்ற மகிமை புலப்படுகிறது.கணக்கில்லாத கைகள்,சந்திர சூரியர்களைப்போல் பிரகாசிக்கும் கண்கள்,கொளுந்து விட்டெறியும் அக்கினி போன்ற முகங்கள் எல்லாவற்றையும் தரிசிக்கிறேன்.நீங்கள் உங்கள் தேஜஸினால் உலகம் முழுவதையும் இயக்கி வருவதையும் உணர்கிறேன்.உங்களைப் பல வடிவங்களில் தரிசிக்கிறேன்.

ஹே மகாத்மா சுவர்க்கத்திற்கும் பூமிக்கும் உள்ள இடைவெளியும் பத்துத்திசைகளும் ( நான்கு திக்குகள் நான்கு  துணைத் திசைகள் ஆகாயம்,பாதாளம் ஆக பத்து திசைகள்) உங்களாலேயே நிரம்பியிருக்கின்றன,உங்களுடைய இந்த அற்புதமான உக்கிர விஸ்வரூபத்தை பார்த்து மூன்று உலகங்களும்( சுவர்க்கம், பூமி,பாதாளம்)நடுங்கி கொண்டிருக்கிறன. ஆகா! நான் முன்பு சொர்க்கலோகத்தில் பார்த்த தேவதைகள் உங்கள் திருமேனிக்குள் பிரவேசிப்பதைப் பார்க்கிறேன்.அவர்களில் பலரும் பயபக்தியுடன் கைகுவித்து வணங்கியபடி , உங்கள் திருநாமங்களை , குணங்களைத் துதித்துக் கொண்டே செல்லுகிறார்கள்.மகரிஷிகள் சித்த புருஷர்கள் கூட்டம் கூட்டமாக ” பொங்கும் மங்களம் எங்கும் தங்குக”! எனும் சுலோகங்களைக்  கூறிக்கொண்டும், உங்களைத் துதித்துக்கொண்டும் காட்சியளிக்கிறார்கள்.

உருத்திரர், ஆதித்தியர், வசுக்கள்.ஸாத்தியகணர், விசுவதேவர்,அசிவனீ குமாரர்,மருத்கணர்,பிதரர் கந்தர்வர், யக்கூர்,அசுரர்,சித்தர் சமுதாயங்கள் உங்களையே பேராச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பரம்பொருளே! உங்களுடைய  அதிசயமான விஸ்வரூபத்தைக் கண்டு எல்லாப் பிராணிகளும் நடுநடுங்கிப் போயிருக்கின்றன.அனேகம் முகங்கள்,கண்கள்,புஜங்கள்,தொடைகள்,கால்கள்,வயிறுகள்,பயங்கரமான் கோரைபற்கள் யாவும் கொண்ட விஸ்வரூபம் எவரைத்தான் பயப்படுத்தாது? நானும் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறேன்.

எங்கும் பரந்துள்ள திருமாலே! பல வண்ணங்கள் உள்ள வானம் வரையில் உயர்ந்தும் பரந்தும் இருக்கும் உங்களுடைய திருமுக மண்டலத்தையும், திவ்விய ஜொலிக்கிற மிகப் பெரிய நேத்திரங்களையும் மிகப் பிரகாசமான ரூபங்களையும் காணும் நான் பயத்தால் பரிதவிக்கிறேன்.நிம்மதியாக இருக்க முடியவில்லை பிரளய கால அக்கினிபோல ஜொலிக்கிறீர்கள்! பெரும் கோரைப் பற்கள் காரணமாக உங்கள் மாபெரும்முகங்கள் உரியினங்கள் முழுவதையுமே பயன்படுத்துகின்றன.தேவேசா! ஜகந்நிவாசா நீங்கள் மகிழ்ச்சியுடன் என் கண்கள் குளிர மனம்மகிழக் காட்சியளியுங்கள்.

பகவானே! எப்படி நதிகள் நீர்ப் பெருக்குகள் தாமாகவே கடலை நாடி பிரவகிக்கின்றனவோ, அதேபோல் இந்த மானிட உலகைச் சார்ந்த பீஷ்மர், துரோரணர் முதலான மாவீரர்கள் உங்களுடைய ஒளிமிக்க வாய்க்குள் நுழைந்து மறைகிறார்கள்.வீட்டில் பூச்சிகள் எப்படி மோக வசப்பட்டு எரியும் தீயை நாடி விரைந்து தம் அழிவைத் தாமே தேடிக் கொள்கின்றனவோ, அதேபோல் துரியோதனன் முதலானவர்கள் உங்களுடைய பயங்கரமான வாய்க்குள் வேகமாக புகுந்து ஓடுகிறார்கள்.நீங்களே எல்லோரையும் கபளீகரம் செய்கிறீர்கள் .மேலும் நான்கு புறமும் உள்ள எல்லோரையும் தொடர்ந்து விழுங்கி விடுகிறீர்கள்.மஹா விஷ்ணு தேவா! உன்களிடமிருந்து விளிப்படும் மிக உக்கிரமான ஒளிவெள்ளத்தின் வெம்மையால் இந்த உலகமே பரிதவிக்கிறது.

அர்ச்சுனன்: ஹே பரமதேவரே! உங்களை வணங்குகிறேன்.நீங்கள் மகிழ்சிப்பொலிவுடன் காட்சி அளியுங்கள்.ஆதிரூபமான உங்களுடைய இந்த விஸ்வரூபத்தில் தத்துவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன். இந்த பயங்கரமான உக்கிர சொரூபம் கொண்ட நீங்கள் யார்?

கண்ணன்: அர்ச்சுனா! எல்லா உலகங்களையும் நாசம் செய்வதற்காகவே வியாபித்திருக்கும் காலதேவன் நான்.

அர்ச்சுனன்: நீங்கள் இங்கு எதற்கு வந்திருக்கிறீர்கள்

கண்ணன்: இப்போது இந்த மனிதர்களை எல்லாம் சம்ஹாரம் செய்ய இங்கு வந்திருக்கிறேன்.

அர்ச்சுனன்: இங்கு உங்களிடமிருந்து எவராவது உயிர் தப்புவாரா?

கண்ணன்: இங்கு உனக்கு எதிர் தரப்பில் உன்னுடன் போராட நிற்கிறார்களே வீரர்கள்,அவர்கள் உன்னுடன் போராடாமல் ஒதுங்கினாலும் உயிர் பிழைக்கமாட்டார்கள்.இவர்கள் யாவரும் என்னால் முன்னதாகவே கொல்லப்பட்டுவிட்டார்கள்.நீ யுத்தம்புரிய ஆயத்தமாகு! போரிட்டு வெற்றி பெற்று புகழைத்தேடிக் கொள்! இந்தப் பகைவர்களை அழித்த பின் செல்வங்கள் செழித்திருக்கும் பேராசைப் பரிபாலித்துப் புகழை பெறு.

அர்ச்சுனன்: அப்படியானால் நான் எதற்கு யுத்தம் செய்ய வேண்டும்?

கண்ணன்: வலது இடது கையாலும் அம்பெய்து சாதனை புரியும் வீரனே!( ஸவ்யஸாசி) நீ இந்தப் போருக்கும் வெற்றிக்கும் துணைகாரணமாக இரு.அதுவே போதும்.

அர்ச்சுனன்: ஆனால் கண்ணபிரானே! பீஷ்மர்,துரோணர்,ஜெயத்திரதன், கர்ணன் முதலான மாவீரர்களை வெல்வது எப்படி?

கண்ணன்: பீஷ்மர் முதலான மாவீரர்களை நான் முன்பே கொன்றாகி விட்டது.என்னால் கொல்லப்பட்ட இம்மாவீரர்களை நீ கொல்.நீ அஞ்சாதே.போர் புரி.இந்தப் போரில் எல்லாச் சத்துருக்களையும் வெல்வாய்.

பகவான் கேசவனின் வாக்குகளைக் கேட்ட பின்பும் பயத்தால் நடுங்கியவாறே அர்ச்சுனன் இரு கைகளையும் குவித்து வணங்கி விட்டு குரல் தழு தழுக்க அவரைத் துதிக்கலானான்.

அர்ச்சுனன்: எல்லா உயிர்களுக்கும் உறைந்திருக்கும்  அந்தர்யாமியான பகவானே! உங்களுடைய திருநாமங்களையும் திவ்விய மங்கள் குணங்களையும் துதித்துப் பாடுவதால் எல்லா உலகமும் மகிழ்ச்சியில் மலர்ந்திருக்கிறது.அநுராக உணர்வு பரவுகிறது.பக்தர்கள் உங்கள் திருநாமங்களையும் ,குணங்களையும் துதிப்பதைக் கேட்டதும் அரக்கர்கள் பயந்து நடுங்கி எல்லாத் திசைகளிலும் ஓடி ஒளிகிறார்கள்.சித்தர்கள் சென்னிசாய்த்து வணங்குகிறார்கள்.இதெல்லாம் நிகழ்வது முறைதான்.

கண்ணன்: இதெல்லாம் நிகழ்வது முறைதான் என்று எப்படி நினைக்கிறாய்?

அர்ச்சுனன்: காரணம்,நீங்கள் முடிவு இல்லாத மகத்துவங்களைக் கொண்டவர்.எல்லா தேவதைகளுக்கும் தலைவர், எல்லா தேவதைகளுக்கும்தலைவர்,எல்லா உலகங்களுக்கும் ஆதாரம் நீங்கள் தான்.நீங்கள் அசுர ( அழியாத)சொரூபம் ஸத், அஸத் இரண்டும் எல்லாமே நீங்கள் தான்.மாத்மாவான நீங்கள் எல்லாக் குருமார்களுக்கும் குருதேவர். பிரும்ம தேவரையும் படைத்தவர் நீங்கள்.இப்பேர்ப்பட்ட உங்களைச் சித்தர்களும் தேவர்களும் போற்றி வணங்காமல் எப்படி இருப்ப்பார்கள்? உபாசனைக்கு உரியவரே நீங்கள் தானே!
தெய்வங்களுக்கு முழுமுதற்கடவுள் நீங்கள். சராசரங்கள் நிறைந்த இந்த உலகத்திற்கெல்லாம் ஆதாரம் நீங்கள்.எல்லாவற்றையும் அறிந்தவரும் எவராலும் அறிய வேண்டியவரும் நீங்கள்தாம்.சகலருக்கும் புகலிடம் நீங்கள்.எங்கும் வியாபித்திருப்பதும் உங்கள் ரூபங்களே, சொரூபங்களே
 

 பரமாத்மாவே! வாயு,யமராஜன்,அக்கினி, வருணன்,சந்திரன்,பிரஜாபதி,பிதாமகரான பிரும்மாவிற்கும் தந்தை நீங்கள்.ஆகையால் உங்களை ஆயிரமாயிரம் முறை வணங்குகிறேன்.உங்களுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்,நமஸ்காரம் சர்வேஸ்வரா! முன்பக்கம் வணங்குகிறேன் பின் பக்கம் இருந்து வணங்குகிறேன் எல்லா பக்கங்களிருந்தும் வணங்குகிறேன்.அனந்தவீர்ய! நீங்கள் எல்லையற்ற பரந்த பராக்கிரமத்தை உடையவர்கள்.எனவே நீங்கள் தான் எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கிறீர்கள்.ஆகையால் எல்லாமே நீங்கள் தான்.

பகவானே! உங்களுடைய அளப்பரிய மகிமைகளையும் சொரூபங்களையும் அறியாமல் நான் உங்களை சாதாரணமாக நண்பனாகவும்,மைத்துனராகவும், உறவினராகவும் கருதியிருந்தேன்.

இப்பாசபந்தம் என்னை அறியாமலேயே உங்களை ஹே கிருஷ்ணா!ஹே யாதவா! நண்பா!… என்றெல்லாம் கூறி அழைத்து வந்தேன்.மேலும் உங்களை இடையர் இனத்து நண்பன் என்கிற முறையில் பலர் முன்னிலையிலும் பரிகசித்தும் விமர்சித்தும் விளையாடியிருக்கிறேன்.எத்தனையோ தடவைகள் உங்களை மதிக்காமலும் இருந்திருக்கிறேன்.இதற்கெல்லாம் நான் இப்போது வருந்துகிறேன்.உங்களிடம் அடிபணிந்து மன்னிப்பு வேண்டுகிறேன்.

கண்ணன்: நல்லது தம்பி அர்ச்சுனா! இப்போது நீ என்ன விரும்புகிறாய்? உனக்கு என்ன வேண்டும்?

அர்ச்சுனன்: சர்வேஸ்வரா! உங்களுடைய அதி ஆச்சரியமாக ஒப்பற்ற இந்த விஸ்வரூப தரிசனத்தை கண்டு நான் அக மகிழ்கிறேன்.ஆனால் கூடவே மனதில் அச்சமும் சூழ்ந்திருக்கிறது .ஆகையால் என் பெருமானே! நீங்கள் மனம் குளிர்ந்து மகிழ்ச்சியுடன் எனக்கு காட்சி அளியுங்கள்.புருஷோத்மனான திருமாலின் திருவுருவத்துடன் தரிசனமளிக்க இறைஞ்சுகிறேன்.தலையில் கிரீடம் ,திருக்கரங்களில் கதை,சங்கு,சக்கரம்,பத்மம்,எனும் திருச்சின்னங்கள்,மந்தகாசம்,நீலமேக சியாமள வண்ணம்,பட்டுப் பீதாம்பரம் இந்த திவ்விய திருக்கோலத்தில் உங்களை தரிசிக்கவே இப்போது விரும்புகிறேன்.ஆயிரம் ஆயிரம் கரங்கள் கொண்ட விஸ்வமூர்த்தியான என் பெருமானே! இதே சதுர்புக சொரூபத்தில் காட்சியளியுங்கள்.

பகவான்: அர்ச்சுனா! நான் உன் பக்திப்பரவசத்தால் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்.என் திற மகிமையால் உனக்கு இதுவரையில் எவரும் காணாத அபூர்வமான் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டினேன்.உனக்கு முன்னால் எவரும் இதை தரிசித்ததில்லை.நீ பாக்கியசாலி தான்.

அர்ச்சுனன்: சர்வேஸ்வரா! உங்களுடைய அளப்பரிய உருவும் பொலிவும் கொண்ட விஸ்வரூபத்தை மனிதன் எதன் உதவி கொண்டு தரிசிக்க முடியும்?

கண்ணன்: எந்த சாதனத்தின் உதவி கொண்டும் தரிசிக்க முடியாது.இந்த பூவுலகில் மனித சமுதயத்தில் என் அருள்பாலிப்பிற்கு பாத்திரமான் உன்னைப் போன்றவர்களைத் தவிர வேறு எவராலும் தரிசிக்கவே முடியாது.வேதம் பயின்றாலும், யாக யக்ஞ்ங்கள் செய்தாலும் தான தர்மங்கள் செய்தாலும் மிகக் கடினமான தவம் புரிந்தாலும் செயற்கரிய சாதனைகள் செய்தாலும் என் விஸ்வரூபத்தை தரிசிக்கும் பாக்கியம் கிட்டாது.

அர்ச்சுனன்:  ஆனால் பகவானே! இப்போது உங்களது மிகப் பயங்கரமான் சொரூபத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறேனே.நான் என்ன செய்வேன்?

கண்ணன்: தம்பி! இந்த மாபெரும் என் உக்கிர சொரூபத்தை கண்டு நீ பயப்படக்கூடாது. உன் மனதில் மோக மயக்கம், மூடத்தனம்,பேதமை எதுவும் கொள்ளக்கூடாது.இப்போது அச்சம் தவிர்த்து மகிழ்ச்சியுடன் மனநிறைவுடன் என் அதே சதுர்புச ரூபத்தை மறுபடியும் தரிசி.

இந்த சமயத்தில் பகவான் கிருஷ்ண பரமாத்மா அர்ச்சுனன் விரும்பியவாறே நான்கு கைகளுடன் திருமால் திருவுருவைக் காட்டினார்.பிறகு இரு கைகள் உள்ள அழகிய கண்ணபிரானாக காட்சியளித்தார்.பயந்திருந்த அர்ச்சுனனைத் தேற்றினார்.உற்சாகப்படுத்தினார்.

அர்ச்சுனன்:  ஜனார்த்தனா! உங்களுடைய அழகிய மானிட ரூபத்தை தரிசித்து தன்னியானேன்.என் இயல்பான நிலையை இப்போது அடைந்திருக்கிறேன்.

கண்ணன்:  அர்ச்சுனா! நீ இந்த மானிட உருவத்திற்கு முன்பு கண்டாயே என் மகா விஷ்ணு சொரூபத்தை, சதுர்ப்புச ரூபத்தை இதுவும் மிகவும் அரிதான தரிசனம் தான்.தேவதைகளும் கூட இதை தரிசிக்க ஏங்கிக் காத்திருக்கிறார்கள்.நீ என் விஸ்வரூபத்தை தரிசித்தாயே.அதை வேதங்கள் மூலமாகவோ, தவசித்திகள் மூலமாகவோ,தானதர்மங்கள் வழியாகவோ எதனாலும் தரிசிக்கமுடியாது.

அர்ச்சுனன்:  பகவானே! அப்படியானால் உங்களை எவ்விதம் தரிசிக்க முடியும்?

கண்ணன்:  எதிரிகளை அழிக்க வல்ல அர்ச்சுனா! என் சதுர்புச சொரூபமான மகாவிஷ்ணு ரூபத்தை பரிசுத்தமான பக்தி மூலம் தான் தரிசிக்கமுடியும்.கூடவே தத்துவஞானம் பெற்று என்னை உணர்ந்து கொள்ளவும் முடியும் .என்னை அடையவும் முடியும்.

அர்ச்சுனன்:  பகவானே! பரிசுத்தமான ( சஞ்சலமில்லாத) திடபக்தி எப்படியிருக்கும்?

கண்ணன்:  பாண்டு புத்திரனே!எல்லாச் செயல்களையும் எனக்காகவே செய்ய வேண்டும்.என்னையே சிந்தித்தும் ,துதித்தும், பூசித்தும் இருக்க வேண்டும்.என்னிடம் மட்டுமே பக்தி செலுத்தி வாழவேண்டும்.எதிலும் ஆசாபாசம் கொள்ளக்கூடாது.எந்தப் பிராணியிடமும் பகைமை பராட்டலாகாது.உன்னைபோல இவ்வாறு பக்திப் புகழுடன் என்னையே புகலாகக் கொண்டு வாழும் பக்தன் என்னைப் பெறுகிறான்.நான் அந்த தூயபக்தனை ஆட் கொள்கிறேன்.

 

10.பூரணத்தின் வைபவம்

November 19, 2009 Leave a comment

கிருஷ்ண பரமாத்மா அன்பனே! நீ மறுபடியும் என் மேலான வாக்கை கேள்.உன் நலன் கருதி இதைச் சொல்லுகிறேன் .நீ என்னிடம் ஆழ்ந்த அன்பு கொண்டிருக்கிறாய். இதுவே என் பரமவசனம்.( எல்லாவற்றிக்கும் அடிப்படையான தன்னிலை சுயரூபம் பர்றிப் பகவான் உபதேசிப்பதுதான்பரமவசனம்)

அர்ச்சுனன்: உங்களுடைய மேலான வாக்கு என்பது என்ன பகவானே?

கண்ணன்: இந்த உலகம் முழுவதும் என்னிடமிருந்து நானே வெளிப்படுத்தியது.இதை முழுவதுமாக தேவதைகளோ,மகரிஷிகளோ அறிவதில்லை.காரணம்நான் எல்லா விதத்திலும் அந்தத் தேவதைகளுக்கும் மகரிஷிகளுக்கும் ஆதி முதலானவன்.

அர்ச்சுனன்: எல்லாவற்றிக்கும் மூலாதாரமான உங்களை தேவதைகள்,மகரிஷிகள் முதலானவர்களே அறிந்து கொள்ளாமலிருக்கும் போது சாமானிய மனிதன் உங்களை எப்படி உணர்ந்து கொள்ளுவான்?அவனுக்கு மங்கள நலன்கள் எப்படி ஏற்படும்?

கண்ணன்: அர்ச்சுனா! எந்த மனிதன் என்னைப் பிறவியும், மரணமும் இல்லாதவராகவும்,எல்லா உலகங்களுக்கும் தலைவராகவும் காவலனாகவும் உணர்கிறானோ,அதையே திடமாக நம்புகிறானோ அவன் ஞானி.எல்லாப் பாவங்களிலுமிருந்தும் அவன் விடுபடுகிறான்.

அர்ச்சுனன்: பகவனே! அப்படியானால் உங்களின் மேலான பரம வசனத்தை நான் எப்படி அறிந்து கொள்வது?

கண்ணன்: அர்ச்சுனா! பகுத்தறிவு,மெய்யானம், மோக மயக்கம் இல்லாது இருத்தல்.பொறுத்தல்( மன்னித்தல்)சத்தியம், புலனடக்கம்,மனவடக்கம்,சுகம்,துக்கம்,பிறப்பு, இறப்பு,பயம்,அபயம்,அகிம்சை,சமத்துவம்,மகிழ்ச்சி,தவம்,தானம்,புகழ், அவதூறு இவை யாவும் பலவகையாலும் பிராணிகளுக்கு என்னிடம் இருந்துதான் ஏற்படுகின்றன.இந்த நிலைமைகள்மட்டுமல்ல என்னிடம் பரிபூர்ண பக்தி கொண்டவர்களும் உலக மக்களை சிருஷ்டித்தவர்களுமான ஏழுமகரிஷிகளும்,இவர்களுக்கு முந்தியவர்களான ஸனகர் .ஸனந்தனர்,ஸனாதனர்,ஸனத்குமாரர் எனும் மாகன்களும் புதினான்கு மனுக்களும்( சுவாரோசிஷ்ர்,சுயாம்புவர்,ரைவதர்,உத்தமர் முதலான மனு மகராஜாக்கள்) இவர்கள் எல்லோரும் என் மனதில் இருந்து பிறந்தவர்கள்,இவர்களுக்கும் வ்ழிகாட்டும் ஆசானும் நான் தான்.

அர்ச்சுனன்; பகுத்தறிவு, மெய்யறிவு,( புத்தி,ஞானம்) முதலானவையும் மகரிஷகள் முதலானவர்களும் என்னிடமிருந்து உற்பத்தியானவர்கள் என்று சொல்லுவதில் உங்கள் நோக்கம் என்ன?

கண்ணன்: அர்ச்சுனா! எந்தப் புத்திமான் என்னுடைய ஜசுரிய வைபவத்தையும் ,மேலான திறமையையும் சிரத்தையுடனும் திட சிந்தனையுடனும் ஒப்புக்கொள்கிறானோ,அவனுக்கு என்னிடம் சஞ்சலம் சந்தேகமில்லாத பக்தி ஏற்பட்டு விடுகிறது.இதில் சிறிதும் ஜயப்பாடு இல்லை.

(பகவானுடைய திறமைக்கு “யோகம்” என்று பெயர். இந்த யோகத்தால் வெளிப்படும் செல்வங்களை ” விபூதி”என்பர்.)

அர்ச்சுனன்; திட சிரத்தையுடனும், சிந்தனையுடனும் ஒப்புக் கொல்வது என்றால் என்ன பகவானே?

கண்ணன்: நானே உலகம் முழுவதற்கும் மூலகாரணம்.என்னிடமிருந்து அகில உலகமும் செயல்படுகிறது.இந்த சாசுவ தத்துவத்தை திடமாக நம்பி, என்னிடம் பேரன்பும் ,பரம பக்தியும் கொன்டு என்னை ஆராதித்து வருபவர்கள் புத்திமான்களான ஞானிகள்.

அப்புத்திமான்கள் என்னிடத்தில் மனதையும் பிராணன்களையும் அர்ப்பணித்து வாழும் பக்த ஜனங்கள் ,தமக்குள் கலந்துரையாடும் போது என் குணங்களையும்,பிரபாவங்களையும் பேசியும் கேட்டும் மகிழ்கிறார்கள்.என்னையே இதயபூர்வமாக விரும்பி அன்பு செலுத்துகிறார்கள்.

இந்த பக்தர்கள் என்னிடம் எப்போதும் ஈடுபட்டிருந்து என்னையே போற்றி பக்தி செலுத்தும் அந்த அன்பர்களுக்கு நான் சமத்துவ உணர்வுள்ள புத்தி யோகத்தை அளிக்கிறேன்.இதன் மூலம் பக்தியோகிகளான அவர்கள் என்னை அடைகிறார்கள்.

அர்ச்சுனன்; கண்ணா!இதல்லாமல் வேறு ஏதாகிலும்  நீங்கள் அவர்களுக்கு செய்கிறீர்களா?

கண்ணன்:  அந்த பக்தர்களுக்கு  அருள்பாலிக்க அவர்களது அந்தரங்கத்தில் , சொருபத்தில் இருக்கும் நான் அவர்களைப் பலவீனப்படுத்தும் அஞ்ஞான இருளை ஒளிரும் ஞான தீபத்தால் போக்கி விடுகிறேன்.

(ஞான ஒளியின் மகிமையால் அர்ச்சுனன் தன் உணர்வை கண்ணபிரானிடம் பெருமிதத்துடன் விண்ணப்பித்துக் கொண்டான்)

அர்ச்சுனன்; பகவானே! பக்தர்களிடம் நீங்கள் கொண்டிருக்கிற தெய்வீகமான ,சிறப்பான அருள்பாலிப்பைக் கேட்டு நான் நெஞ்சுருகி கரைந்து போகிறேன்.பிரபுவே! நீர்க்குணமாயும் ,நிராகாரமாயும்,உள்ள பிரம்மம் நீங்கள்.எல்லோருக்கும் மேலான புகலான இடமும் மிகப்புனிதமானவரும் நீங்கள் தான்.சாகவதமான திவ்விய புருஷர்.ஆதிதேவர்,பிரவித்தளைகள் இல்லாதவர்.எங்கும் வியாபித்திருப்பவர் நீங்கள்.உங்கள் மகிமையை சொரூப தத்துவங்களை எல்லா ரிஷிமுனிவர்களும்,தேவரிஷிநாரதர், அசிதர்,தேவலர்,வியாஸர்முதலானோரும் சொல்லுகிறார்கள்.இப்போது நீங்களும் எனக்கு உபதேசித்தருளி இருக்கிறீர்கள்.இவைகளை நான் கேட்கும்போதும் சிந்திக்கும்போதும் என் மனம் பரிபக்குவம் அடைகிறது.

கண்ணன்: அர்ச்சுனா! நான் இதுவரையில் சொன்னவைகளில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அர்ச்சுனன்; நம்பிக்கை இருக்கிறது கேசவா!நீங்கள் கூறியவை யாவும் முற்றிலும் உண்மை என்றே நம்புகிறேன்.பகவானே! நீங்கள் அவதரிப்பதை ,தரிசனமளிப்பதை திவ்விய சக்கதியுள்ள தேவர்களாலும் அறியமுடிவதில்லை.அதிசயமான் மாய சக்க்தியுள்ளவர்கள் அல்லது அசுரர்களும்கூட அறியமுடிவதில்லை.

கண்ணன்: அர்ச்சுனா! தேவர்களே அறிய இயலாத போது வேறு எவரால் அறியமுடியும்?

அர்ச்சுனன்; உயிர்களைப் படைத்தவா1 உயிர்களுக்கு இறைவா! தேவதேவா! அகிலாண்ட நாயகனே! புருசோத்மனே!நீங்கள் சுயமாகவே உங்களை அரிந்திருப்பவர்.ஆகையால் நீங்கள் உங்களுடைய வைபவ ஜசுவரியங்கள்மூலமாக உலகம் முழுவதிலும் வியாபித்திருகிறீர்கள்.அந்த மகத்தான் ஜசுவரியங்களான விபூதிகளை பற்றி உங்களால்தான் விபரிக்க முடியும்.விளங்க வைக்க முடியும்.

கண்ணன்: என் விபூதிகளைப் பர்றி அறிந்து நீ என்ன செய்யப் போகிறாய்?

அர்ச்சுனன்; யோகியே! எப்போதும் பலவகை சிந்தனைகளில் ஈடுபட்டிருக்கும் நான் உங்களை எப்படி அறிந்து கொள்ள முடியும்?

 பகவானே! எந்தக் கருத்து நிலைகளில் உங்களை சிந்தித்திருப்பேன்? ஜனார்த்தனா! நீங்கள் உங்களது திருநிறைச் செல்வமான விபூதி பற்றியும் ஆதார சக்தியான யோக நிலை பற்றியும் எனக்கு மறுபடியும் விரிவாக உபதேசித்தருளுங்கள்.உங்கள் அமுதமயமான வாக்குகளைக் கேட்டு எனக்கு திருப்தி ஏற்படுவதாய் இல்லை.

பகவான்: அப்படியே ஆகட்டும் அர்ச்சுனா! என் திவ்விய விபூதிகளைஉனக்குச் சுருக்கமாக சொல்கிறேன்.குருகுலச்செல்வனே! என் விபூதிகளின் பரந்து விரிந்து நிறைந்திருக்கும்.நிலைக்கு எல்லையே இல்லை.அவைகளின் பிரபாவங்களிர்கு முடிவும் இல்லை.

அர்ச்சுனன்:பரம்பொருளே! உங்களது திவ்விய விபூதி  எவை? எவ்விதமானவை?
கண்ணன்: சிறந்த பக்தனே!எல்லாப் பிராணிகளின் முதலிலும்,நடுவிலும் ,முடிவிலும் நான் தான் இருக்கிறேன்.மேலும் பிராணிகளின் அந்தக் கரணத்தில் ஆத்மா ரூபமாகவும் நான் தான் இருக்கிறேன்.அதிதிதேவியின் புத்திரரில் விஷ்ணுவாகவும்( வாமனர்) ஒளிபடைத்த பொருட்களில் கதிரவனாகவும்,மருத்துக்களில் தேஜாஸாகவும், நட்சத்திரங்களின் அதிபதியான சந்திரனாகவும் நான் விளங்குகிறேன்.வேதங்களில் நான் சாமவேதம், தேவதைகளில்  நான் இந்திரன் இந்திரியங்களில் மனம்,பிராணிகளில் சைதனியம் ( பிராணசக்தி)நானே.ருத்திரர்களில் நான் சங்கரராகவும்,யசஷராசஷகர்களில் குபேரனாகவும்,வசுக்களில் அக்கினியாகவும்,பல உரிய சிகரங்களைக் கொன்ட மாமலைகளுள் மேரு இமயமலை பர்வதமாகவும் நான் இருக்கிறேன்.பார்த்தனே! வைதீக தர்ம அநுட்டானங்களை நடத்தி வைக்கும் புனிதர்களான புரோகிதர்களுள் பிருஹஸ்பதி என் சொரூபம் தான் என்பதை உணர்ந்துகொள்.

அர்ச்சுனன்:கண்ணா! மேலும் உங்களுக்கு என்னென்ன விபூதிகள் உள்ளன?

கண்ணன்: அர்ச்சுனா! சேனாதிபதிகளில் நான்  ஸ்கந்த தேவன் ( முருகன்)நீர் நிலைகளுள்)நான் சமுத்திரம்,மகரிஷிகளில் நான் பிருகு,வாக்குகளுள் ஓங்காரம் எனும் பிரணவம், யக்ஞங்களுள் ஜபக்ஞம் நிலையாய பொருள்களுள் இமயமலை ,மரங்களில் அரசமரம்.தேவ ரிஷிகளுள் நாரதர்,கந்தர்வர்களுள்சித்திராதன்,சித்தர்களில் கபில முனிவர் நான் தான்.குதிரைகளில் உச்சை சிரவஸ் ( கடலி கடந்த போது அமிர்தத்துடன் வெளிவந்தது) யானைகளுக்குள் ஜராவதம்,மனிதர்களுக்குள் அரசன் நானே.இவர்கள் எல்லோரும் என் விபூதி சொரூபங்கள் என் அம்சங்கள்.

அர்ச்சுனன்:பகவானே! இன்னும் எவைகளையெல்லாம் உங்கள் விபூதிகளாக நான் அறிந்து கொள்வது?

கண்ணன்: அர்ச்சுனா! அஸ்திர ஸஸ்திர ஆயுதங்களில் நான் வச்சுராயுதம்,பசுக்களில் காமதேனு,அறநெறியுடன் இல்லறம் நடத்தி மக்கள் செல்வத்தைப்பெற உதவும் காமதேவன் நான்.சர்ப்பங்களில் வாசுகி, நாகங்களில் சேஷநாகம்,( ஆதிசேஷசன்) ,நீர்வாழ் பிராணிகளின் அதிபதியான வருணன்,பிதிருதிக்களில் அர்யமா,ஆட்சி புரிபவர்களில் யமதர்மராஜன்,தைத்திரியர்களில்பிரகலாதன் கணக்கிடுபவர்களில் காலதேவன்,மிருகங்களில் சிங்கம்,பறவைகளில் கருடன்,புனிதப்படுத்துபவர்களில் வாயு,வில்லாளிகளில் ராமபிரான்,நீர்வாழ் ஜந்துக்களில் முதலை,நதிகளில் புனிதகங்கை,இப்படி எல்லாவற்றிக்கும் தலைசிறந்த நிலையில் நான் தான் விளங்குகிறேன்.

அர்ச்சுனன்:பகவானே! மேலும் நீங்கள் எந்தப் பொருட்களில் தலை சிறந்து விளங்குகிறீர்கள்?

கண்ணன்: அர்ச்சுனா! எல்லச் சிருஷ்டி யுகங்களிலும் முதல் ,நடு முடிவு மூன்றிலும் நான் தான் இருக்கிறேன்.வித்தைகளில் அத்தியாத்மா வித்தையாகவும், சாஸ்திர விவாதம் செய்பவர்களிடையே தத்துவ நிர்ணயம் செய்ய உதவும் வாதமாகவும் இருக்கிறேன்.எழுத்துக்களுக்கெல்லாம் அகரமாகவும்,ஸாமாஸாங்களில் ( சொற்கூட்டுதொகைச்சொல்)துஅந்த ஸமாஸாமாகவும்( ஆதியந்தம், உடலுயிர் முதலிய இருசொற்கூட்டு) விளங்குகிறேன்.அழிவர்ற கலத்தின் மகாகாலமாகவும் எல்லாத்திசைகளிலும் முகங்களைக் கொண்ட பரிபாலன தேவனாகவும் தாதா எனும் ஆட்சியாளர்) நான் இருக்கிறேன்.

அர்ச்சுனன்: பரம்பொருளே! நீங்கள் எந்தெந்த உருவங்களில் இருக்கிறீர்கள்?

கண்ணன்: அர்ச்சுனா! எல்லாவற்றையும் பறித்துக்கொள்ளும் மரணமும் ,பிறவிக்கு காரணமான உற்பத்தியும் நான் தான்.பெண் இனத்தில் நான் கீர்த்தி( புகழ்) ஸ்ரீ(செல்வம்),வாக்கு ,ஸ்மிருதி,(நினைவு)மேதாவிலாசம், தைரியம்,மன்னித்தல் யாவும் நான் தான்.பாடத்தக்க சுருதி (வேத இசை)களில் சிறந்த சாமகானம்,வேதத்திலுள்ள சந்தங்களில் ( பாவினம்) காயத்திரி சந்தஸ் நான் தான்.பன்னிருமாதங்களில் மார்கழி மாதமாகவும் ஆறு பருவங்களில் வசந்த பருவமாகவும் இருக்கிறேன். ஏமாற்றும் பித்தலாட்டங்களில் சூதாட்டம்,ஒளிபடைத்த தேஜஸ்விகளின் தேஜஸ்( ஒளி) நான்.வெல்பவர்களின் வெர்றி, உறுதி கொள்பவரின் தீர்மானம்.சாத்வீக இயல்பு உள்ளவர்களின் அடக்ககுணம் யாவும் நான் தான்.

அர்ச்சுனன்:பகவானே! மேலும் உங்களது சொரூபங்கள் என்ன?
 
கண்ணன்: அர்ச்சுனா! விருஷ்ணி வம்சத்தவர்களில் வாசுதேவனாகவும் பாண்டவர்களில் தனஞ்சயனாகவும் ( அர்ச்சுனன் எனும் நீ) முனிவர்களில் வேதவியாசராக கவிகளில் சுக்கராச்சாரியாராகவும் இருக்கிறேன்.அடக்கி ஆள்பவரின் தண்டிப்பு விதியாகவும்,வெற்றி விரும்புவர்களின் நீதிநெறியாகவும்,ரகசியக்கருத்துக்களின் மெளனமாகவும், ஞானவான்களின் ஞானமாகவும், நான் இருக்கிறேன்.இதற்கு மேலும் விபரிப்பானேன்? எல்லா உயிரினங்களுக்கும் மூலகாரணமான வித்தும் நான் தான்.அர்ச்சுனா!நான் இல்லாமல் சராசரம் ( அசையும் அசையாப்பொருள்) எதுவும் உயிர் வாழ முடியாது நான் தான் சர்வமும்.

அர்ச்சுனன்:பகவானே! உங்களுக்குள்ள எல்லா வைபவ ஜசுவரியங்களையும் ( விபூதிகளையும்) சொல்லிவிட்டீர்களா?
 
கண்ணன்: இல்லை வீரனே! என் திவ்வியத்தன்மையுள்ள ( தெய்வாம்சமான) விபூதிகளுக்கு முடிவேயில்லை.நான் உனக்கு இதுவரை சொன்னதெல்லாம் சுருக்கமான விளக்கம் தான் என்னாலேயே என் விபூதிகளை முழுவதுமாக சொல்ல இயலாது.

அர்ச்சுனன்: உங்களுடைய விபூதிகளை தெரிந்துகொள்ள சிறப்பான அடையாளம் எது?

கண்ணன்: அகில உலகிலும் ஜசுவரியம் (தெய்வாம்சம்) சார்பானவையோ, அழகும் பொழிவும் சார்ந்தவையோ, வலிமை பொருந்தியவையோ, அவையாவும் என்னுடைய தேஜஸ் கொண்ட ஒரு அம்சத்தால் ( சொரூபத்தால்) ஏற்பட்டவை என்பதை உனர்ந்து கொள்.அர்ச்சுனா! அகில உலகத்திலும் ( கோடிக்கணக்கான பிரமாண்டங்களிலும்)எனது ஏதாவது அம்சத்தின் மூலமாக வியாபித்திருக்கும் நான் இப்போது உன் எதிரில் உன் வேண்டுகோளை ஏற்று தேரோட்டியாக ஒருகையில் லகானும் மறுகையில்சாட்டையுமாக அமர்ந்திருகிறேன்.உன் விருப்பப்படி உன் உத்தரவை நிறைவேற்றுகிறேன்.இதற்கு மேலும் நீ அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?

09.மிக இரகசியமான அறிவு

November 19, 2009 Leave a comment

அர்ச்சுனன்: பரமாத்மாவே! நான் அடிக்கடி குறுக்கிட்டு பல கேள்விகளைக் கேட்டேன்.எல்லாவற்றிக்கும் பதிலளித்து வருகிறீர்கள்.நான் கேள்வி கேட்பதற்கு முன்பாக நீங்கள் என்ன சொல்ல விரும்பினீர்கள்?

கண்ணன்: அன்பனே! நான் முதலில் விஞ்ஞான பூர்வமான ஞானம் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன்.மிக்க ரகசியமாக பாதுகாக்க வேண்டிய அந்த விஞ்ஞானம் சார்ந்த ஞானத்தை( மேலான மெய்யறிவு) குற்றமற்ற உனக்காக மறுபடியும் சொல்கிறேன்.அதை அடைந்த பின் நீ பிறப்பு இறப்புகளைக் கொண்ட இவ்வுலக வாழ்கையிலிருந்து நிச்சயம் விடுதலை பெறுவாய்.

அர்ச்சுனன்: அந்த ஞானம் மிகக் கடினமாக இருக்குமோ பகவானே?

கண்ணன்: இல்லை அர்ச்சுனா! மேலான மெய்யறிவுடன் கூடிய பகுத்தறிவு ( விஞ்ஞான பூர்வமான ஞானம்) எல்லா வித்தைகளுக்கும் ராஜா போன்றது.எல்லா ரகசிய தத்துவங்களிற்கும் தலைவன் போன்றது.மிகக் புனிதமானது.மிக உத்தமமானது.கண்கூடான நற்பயனை அளிப்பது.அறநெறிக்கு உட்பட்டது.அழிவற்றது.மேலும் அநுட்டிப்பதற்கு( வாழ்க்கையில் பயன்படுத்த) மிக்க எளிதானது.

அர்ச்சுனன்: மிக்க எளிதான அந்த ஞான வித்தையை எல்லா மனிதர்களும் ஏன் பெறுவதில்லை? பெற முடிவதில்லை?

கண்ணன்: வீரம் மிக்கவனே! மனிதன் ஞானம், விஞ்ஞானமெனும் தர்ம நெறியில் சிரத்தையும் நம்பிக்கையும் கொள்ளாமலிருந்தால் என்னை அடையமாட்டான்.அழியும் உலகியல் வாழ்வில் உழன்று மாறி மாறி பிறவி எடுக்கிறான்.பிறப்பும் -இறப்பும் அவனை தொடர்கின்றன.

அர்ச்சுனன்: பகவானே! ஞானம் விஞ்ஞானம் எனும் தர்மநெறி வித்தை எது?

கண்ணன்: அர்ச்சுனா! நான் புலன்களிற்கு புலப்படாத வகையில் அந்தர்யாமியாக எல்லாப் பிராணிகளிடமும் குடிகொண்டு இருக்கிறேன்.எல்லாப் பிராணிகளும் என்னுள் ஒன்றி ஒடுங்கி இருக்கின்றன.இதேசமயம் நான் எல்லாப் பிராணிகளிடம் ஒட்டாமல் இருக்கிறேன்.இதேபோல் பிராணிகளும் என்னுள் கலந்துவிடுவதில்லை.அதாவது பிராணிகள் சுதந்திரமாக இருப்பதாக கருதினால் நான் எல்லாவற்றிலும் இருக்கிறேன்.எல்லா ஜீவன்களும் என்னிடம் உள்ளன.ஆனால் எங்கு பிராணிகள் சுதந்திரமாக இருப்பதில்லை என்று கருதினால் நான் பிராணிகளிடத்திலும்,அவை என்னிடத்திலும் இருப்பதில்லை எல்லாமே நான் தான்.

அர்ச்சுனன்: ஆனால் இந்த உலகத்தை உற்பத்தி செய்ததும்,ஆதாரமாக இருப்பதும் ஏதோ ஒரு சக்தியிருக்கும் இல்லையா?

கண்ணன்: தம்பி அந்த எதோவொரு சக்தி நான் தான்.என் அந்தர்யாமியான் ( உள்ளுறை நிலை) சொரூபம் எல்லாப் பிராணிகளையும் படைக்கிறது.எல்லாவற்றையும் தாங்குகிறது.சகலதையும் வளர்க்கிறது.அப்படியிருந்தும் அந்த என் சொரூபம் பிராணிகளிடம் ஒட்டாமல் இருப்பது என்னுடைய இந்த இறையாட்சியின் திறனை( ஈஸ்வர யோகத்தை) நீ நன்கு உணர்ந்து கொள்.

அர்ச்சுனன்: பகவானே! அப்படியானால் அந்தப் பிராணிகள் எப்படி இருக்கின்றன?

கண்ணன்: அர்ச்சுனா! எவ்வாறு எல்லா இடங்களிலும் புகுந்து புறப்படும் கார்று நிரந்தரமாக ஆகாயத்திலே இருந்து வருகிறதோ,அவ்வாறே எல்லாப் பிராணிகளும் என்னுள் என்றும் இருந்து வருகின்றன.

அர்ச்சுனன்: அப்படியானால் பிறகு அந்தப் பிராணிகள் உங்களிடம் இருந்து விட்டுப் போகுமல்லவா?

கண்ணன்: அப்படியில்லை.குந்தியின் மைந்தனே! இயற்கையுடன் தொடர்பு கொண்டுள்ள எல்லாப் பிராணிகளும் பிரளய காலத்தில் என் இயற்கை நிலையை அடைகின்றன.பிறகு மகா சிருஷ்டியின் ஆரம்பத்தில் நான் அவைகளை மறுபடியும் படைக்கின்றேன் ( உருவாக்கி வெளிப்படுத்துகின்றேன்.

அர்ச்சுனன்: அப்படியானால் பகவானே! நீங்கள் எக்காலம் வரைக்கும் படைப்பு பணியில் ஈடுபட்டிருப்பீர்கள்? ( அந்தப் பிராணிகளை உருவாக்கி கொன்டிருப்பீர்கள்?)

கண்ணன்: அர்ச்சுனா! எதுவரைக்கும் அப்பிராணிகள் தன் இயற்கை சுபாவ நிலைக்கு ஆட்கொண்டிருக்கின்றனவோ,அதுவரைக்கும் என் பிரகிருதி( இயற்கை) நிலையை வசப் படுத்திக்கொண்டு தொடர்ந்து அப் பிராணிகளை படைத்துக் கொண்டிருக்கின்றேன்.

அர்ச்சுனன்: பகவானே! நீங்கள் பிராணிகளை மாறி மாறி சிருஷ்டிக்கிறீர்கள்.அப்போது அப்படைப்புப் பணிகளில் நீங்கள் நெருக்கமாக ஈடுபட்டு நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறீர்கள் இல்லையா?

கண்ணன்: இல்லை தனஞ்சயா1 நான் அந்த படைப்ப் பணிகளை ஒட்டுதல் ,ஈடுபாடு,விருப்பு – வெறுப்பு ஏதும் இல்லாமல் சம்பந்தப்படாதவன் போலத்தான் செய்து வ்ருகிறேன்.ஆதலால் அச்செயல்கள் ( கருமங்கள்) என்னைக் கட்டுப்படுத்துவதிலலை.

அர்ச்சுனன்: அப்படியானால் சிருஷ்டிக்கும் பணிகளை எப்படி நிறைவேற்றுகிறீர்கள் பகவானே?

கண்ணன்: அர்ச்சுனா! இயற்கைதான் என் தலைமையில் அதாவது என்னிடமிருந்து சக்தி ஊக்கம் பெற்று சராசரங்களை ( அசையும் பொருள் அசையாப் பொருள் யாவும்)சிருஷ்டிக்கிறது.குந்திதேவியின் செல்வனே! என் வழிகாட்டும் தலைமை காரணமாகவே உலகங்களில் பலவைகையான மாறுதல்கள் மாறிமாறி ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அர்ச்சுனன்: பகவானே! உங்கள் தலைமையில் உங்கள் சக்தி ஊக்கத்தால்தான் உலகத்தில் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது.அப்படியிருந்தும் எல்லா ஜனங்களும் உங்களிடம் பக்தி சிரத்தையுடன் ஈடு கொள்ளாதிருப்பது ஏன்?
கண்ணன்: அறிவில்லாத மூடஜனங்கள் நான் எல்லாப் பிராணிகளுக்கும் தலைமை நிலையில் சர்வேஸ்வரனாக இருப்பதை எண்ணாமல் என்னை சாதாரண மனிதனாக எண்ணி அவ்விசுவாசம் கொண்டு அவமதிக்கிறார்கள்.குறைவாக மதிக்கிறார்கள்.

அர்ச்சுனன்: அந்த அறிவற்ற மூடமக்கள் எப்படிப்படவர்கள்?

கண்ணன்: அர்ச்சுனா! அறியாமையிலும்,ஆணவத்திலும் உழலும் மூடர்களும்,அசுர குணங்களும், அரக்க இயல்புகளும்,மோக மயக்கங்களும் கொண்டவர்கள்.இவைகளின் துணை கொண்டு வாழ்பவர்கள்.இவர்களுடைய தன் நம்பிக்கைகள்,சுபகாரியங்கள் ஞானம் எல்லாமே வீண்.போலித்தனமும் பொய்மையும்,குறைகளும் கொண்டிருப்பதால் இவை நற்பலனை அளிக்காதவை.

அர்ச்சுனன்: பகவானே!உங்களிடம் திட பக்தியும் ஈடுபாடும் கொண்டிருப்பவர் யார்?

கண்ணன்: அவர்கள் தான் மகாத்மாக்கள்.அவர்கள் என்னை சரியாக உணர்ந்தவர்கள்.எல்லா ஜீவராசிகளுக்கும் ஆதிமுதல் நான் தான்.எனக்கு அழிவோ சிதைவோ இல்லையென்பதை நம்புகிறார்கள்.என்னுடைய தெய்வீகமான அழியாச் செல்வத்தை துணை கொண்டு சஞ்சலமில்லாமல் என்னையே போற்றிப் பூசித்து வணங்கி வருகிறார்கள் அம்மகான்கள்.

அர்ச்சுனன்: உங்களைப் போற்றிப் பூசிப்பவர்களுக்கு என்ன அடையாளம் பகவானே?

கண்ணன்: நிரந்தரமாக என்னிடம் ஈடுபாடு கொண்டிருப்பதையே திடவிரதமாக( அறநெறி) கொண்ட மேன்மக்கள் பக்தி சிரத்தையுடன் என் திருநாமங்களைப் பாடி பரவசமடைகிறார்கள்.என்னை அடைவதற்கான முனைப்புடன் சாதனை செய்கிறார்கள்.என்னையே வணங்கி என் சொரூபத்தையே முழுஈடுபாட்ட்டன் உபாசிக்கிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! உங்களை உபாசிக்கிறவர்களுக்கு பக்தி யோகத்தைத்தவிர வேறு வழி ஏதாவது உள்ளதா?

கண்ணன்:  உள்ளது.அர்ச்சுனா! பலசாதகர்கள் ஞானயக்ஞம் மூலமாக என்னையே பூசித்தும் உபாசித்தும் வாழ்கிறார்கள்.மற்றும் பசாதகர்கள் தம்மைத் தனியாக என்ணிக்கொண்டு,உலகத்தை என் சொரூபமாக கருதியவாறு தலைவன் தொண்டன் எனும் உறவு முறையுடன் என்னை பலவகையிலும் உபாசித்து வருகிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! உலகத்தை உபாசிப்பது உங்களை உபாசிப்பதாக அமையுமா?

கண்ணன்: அர்ச்சுனா! நான் தான் க்ரது(யாகம்)யக்ஞம்,ஸ்வதா,ஔஷதம்,மந்திரம்,கிருதம்(நெய்) அக்கினி,வனம்( ஆதி செய்தல்)எல்லாம் நான் தான். அறிந்து கொள்ள வேண்டியவிதிமுறை,புனிதத்தன்மை,பிரணவம் எனும் ஓங்காரம்,ரிக்வேதம்,சாமவேதம்,யசுர்வேதம் எல்லம் நான் தான்.அகில உலகிற்கும் தந்தை தாய்,பாட்டானார்,பாதுகாவலன்,இலட்சியப் பாதை,உயிர், வளர்ப்பவன்,தலைவன்,சாட்சி,இருப்பிடம்,புகலிடம்,நண்பன்,,உற்பத்தி,பிரளயம்,நிலப்பரப்பு,ஆதாரம்,அழியாத வித்துக்கள் எல்லாமே நானே தான்.அர்ச்சுனா!நான் தான் சூரியனாக வந்து வெய்யில் காய வைக்கிறேன் நீரை ஏற்கிறேன்.அந்நீரை மழையாகப் பொழிகிறேன்.நான் தானமிர்தமும் ,அழியும் தன்மையும் சடமாகவும் ,சேதனமாகவும்( உணர்வுள்ளது-அல்லாதது)இருக்கிறேன்.நான் தான் எங்கும் எப்போதும் பரந்திருக்கிறேன்.

அர்ச்சுனன்: பகவானே! இந்த உலகம் முதற்கொண்டு எல்லாமே நீங்கள் தான் என்றிருக்கும்போது மனிதர்கள் உங்களைவிட்டு மற்றத் தேவதைகளை ஏன் பூஜிக்கவும் உபாசிக்கவும் செய்கிறார்கள்.

கண்ணன்:அர்ச்சுனா! சுகபோகங்களில்விருப்பமுள்ளமனிதர்கள் மூன்று வேதங்களிலும் (ரிக்,யகர்,சாமம்) கூறப்பட்ட யக்ஞம் முதலான சுபகாரியங்களை அநுஷ்டிப்பதின் மூலம் இந்திரனைப் பூஜித்து ( ஆராதித்தும் சுவர்க்க லோக வாசத்தை வேண்டுகிறார்கள்.மேலும் சோமரசத்தை பருகிறவர்கள் தடங்கலான பாவங்கள் இருந்து விடுபட்டு ,புண்ணிய பலத்தினால் விசாலமான சொர்க்கலோகத்தை அடைகிறார்கள்.அங்கு தேவதைகளுக்குரிய திவ்வியமான சுகபோகங்களை அநுபவித்து ஆனந்தம் பெறுகிறார்கள்,புண்ணியம் பலம் குறைந்ததும் மறுபடியும் மறுபிறவி மூலம் பூவிலகிற்கு திரும்பி வருகிறார்கள்.அர்ச்சுனா! இவ்வாறு மூன்று வேதங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் ஆசைகளை தூண்டும் அநுஷ்டானங்களை செய்பவர்களும் சுகபோகங்களை விரும்புவர்களான மனிதர்கள் அடிக்கடி பிறப்பதும் இறப்பதுமாக இவ்வுலக வாழ்வில் உழன்று கொண்டு இருக்கிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! ஜனன- மரண நிலை சார்ந்த அநுஷ்டானங்களில் ( வேள்வி முதலியவை) ஈடுபட்டிருக்கிற மனிதர்களிற்கு உரியது.ஆனால் சிறந்த ஞானியாக முதிந்தவர் உங்களைப் புகலாக்கொன்டிருந்தால் அவரது நிலை என்ன?

கண்ணன்:வேறெதிலும் எவரிடமும் பற்றோ,ஈடுபாடோ கொள்ளாமல் என்னையே சிந்தித்து என்னையே உபாசித்து இருப்பவர்கள் பரமபக்தர்கள்.அவர்களுடைய யோக சோமங்களை( அகநலம்,புறநலம் இரண்டையும்) நானே கவனித்துக் கொள்கிறேன்.என்னையே சார்ந்துள்ள என்னையே புகலாகக் கொண்டுள்ள பக்தர்களுக்கு நான் செய்யும் தொண்டு இதுவே.

அர்ச்சுனன்: பகவானே!உங்களை உபாசிக்காமல் வேறு தேவதைகளை மிக்க ஈடுபாட்டுடன் பக்தி சிரத்தையாக ஒருவர் உபாசித்து வந்தால் என்ன ஆகும்?

கண்ணன்: குந்தியின் செல்வனே! எந்த மனிதர்கள் பக்தி சிரத்தையுடன் இதர தேவதைகளை பூசிக்கிறார்களோ,அவர்களும் உண்மையில் என்னையே பூசித்தவர்களாவர்கள். ஏனென்றால் இருப்பது,மறைவது நல்லது.தீயது எல்லாமே நான் தான் எனும் தத்துவப்படி அவர்கள் பிறதேவதைகளை ஆராதித்தாலும் அது எனக்கே வந்து சேரும்.ஆனால் அந்த ஆராதனை விதிமுறைப்படி அநுட்டிக்கப்பட்டதல்ல.

அர்ச்சுனன்:  பகவானே! அந்த ஆராதனை உங்களைச் சேரும்போது அது விதிமுறைப்படி அமையாதது என்று ஏன் கருதவேண்டும்?
கண்ணன்:யக்ஞம் ( யாகம்) தானம்,தவம் முதலிய எல்லாச் சுபகாரியங்களையும் அநுபவிப்பவனும்,எல்லா உலகங்களுக்கு தலைவனும் நான் தான்.ஆனால் இதர தேவதைகளை உபாசிப்பவர்கள் என்னுடைய சர்வேஸ்வர தத்துவத்தை அறிவதில்லை.அதனால்தான் அவர்களிற்கு சரிவு ஏற்படுகிறது.

அர்ச்சுனன்:  அவர்களுக்கு ஏற்படும் சரிவு எத்தைகையது?

கண்ணன்: அர்ச்சுனா! தேவதைகளை உபாசிக்கிறவர்கள் தேவதைகளையும் பிதிருகளைப் பூசிப்பவர்கள்.பிதிருக்களையும்,பூதப் பிரேதங்களை வழிபடுபவர்கள் பூதப் பிரேதங்களையும் அடைகிறார்கள்.(அவைகளின் மூலம் பயன் பெறுகிறார்கள்) ஆனால் என்னையே உப்பசிப்பவர்கள் என்னைப் பெறுகிறார்கள்.

அர்ச்சுனன்:  பகவானே! உங்களை பெற உதவும் அவ்வித பக்தி ( திசைமாறாத திட பக்தி) மிகக் கடினமாக இருக்குமா?

கண்ணன்: இல்லை அது மிகச் சுலபமானது.சஞ்சலமில்லாத உண்மையான பக்தன் உள்ளன்புடன் எனக்கு இலையோ,மலரோ,கனியோ,தண்ணீரோ அல்லது எது கிடைகிறதோ,அதனை நைவேத்தியமாக அர்பணிக்கிறானோ,அதை நான் விருப்பத்துடன் ஏற்றுகொள்கிறேன்.

அர்ச்சுனன்:  பரமாத்வாவே! அவ்வித திடபக்தியைப் பெற நான் என்ன செய்யவேண்டும்?

கண்ணன்: அர்ச்சுனா! நீ எதைப் புசிக்கிறாயோ, எந்த நற்பணியை செய்கிறாயோ,எந்தவகைத் தவம்,யாக யக்ஞங்களைப் புரிகிறாயோ,இவைகளைத்தவிர செய்யும் எல்லாக்காரியங்களையும் உன் அன்புடன் எனக்கே அர்ப்பணம்செய்துவிடு.

அர்ச்சுனன்:  உங்களுக்கே அர்ப்பணித்து விட்டால் என்ன ஆகும் பகவானே?

கண்ணன்: அர்ச்சுனா! நீ சுபம்,அசுபம்( நல்லது-தீயது.தகுந்தது தகாதது) எல்லாக் காரியங்களின் விளைவான வினைப்பயன்களில் இருந்து விடுபட்டு என்னையே வந்தடைவாய்.

அர்ச்சுனன்:  பகவானே! எவர் எல்லாவற்றையும் உங்களுக்கு அர்ப்பணித்து விடுகிறாரோ,அவரை நீங்கள் எல்லாத் தளைகளிலிருந்தும் விடுவித்துவிடுகிறீர்கள்.ஆனால் அப்படிச் செய்யாதவர்களை கர்ம பந்தங்களான தளைகளில் சிக்கித் தவிக்க விடுகிறீகள்.உங்களிடம் இப்படியொரு பராபட்சபாதம்( ஒருதலைச்சார்பு) ஏன் இருக்கிறது?

கண்ணன்: இது பாரபட்சம் இல்லை அர்ச்சுனா! நான் எல்லாப் பிராணிகளிடமும் சரிசமமாக இருக்கிறேன்.எனக்கு எவரும் எது விதத்திலும் விரோதியுமில்லை.விருப்பமுள்ளதும் இல்லை. ஆனால் எவர் அன்புடன் போற்றுகிறாரோஅவர்கள் என்றும் என்னுடன் சிறப்பாக சேர்ந்து இருக்கிறார்கள். நானும் அதேவிதம் அவர்களுடன் குடிகொண்டிருக்கிறேன்.

அர்ச்சுனன்: பகவானே! ஒரு மனிதன் தீய நடத்தையுள்ளவனாக இருந்தாலும் உங்களைப் போற்றிப் பூசிக்கலாமா? உங்கள் பக்தனாக இருக்க முடியும்?

கண்ணன்: நிச்சயம் இருக்கலாம் மிகக் கெட்டவனாக,கொடியவனாக இருந்தாலும் அந்த மனிதன் பிறரைச் சார்ந்திருக்காமல் என்னையே புகலாகக்கொண்டு ஆராதித்து வந்தால் அவனை சாது என்றே கருத வேண்டும். ஏனெனில் அவன் நிச்சயம் மிக நல்லவைகளை செய்திருக்கிறான்.

அர்ச்சுனன்: அப்படியானால் அத்தீயவனை நல்லவனாக ( சாதுவாக) கருதலாமா பகவானே?

கண்ணன்: கூடாது அவன் அந்த சமயத்தில் மட்டும் ( என்னை மெய்யான பக்தியுடன் பூசுக்கும் போது) தர்மாத்மாவாக இருக்கிறேன். அர்ச்சுனா! என் பக்தன் ஒருக்காலும் நெறி தவறக்கூடாது.வீழ்ச்சியடையக்கூடாதுஎன்று நீ உறுதிபடுத்திக்கொள்.

அர்ச்சுனன்: உங்களிடம் திட பக்தி செலுத்தும் உரிமை ,தகுதி சாதுக்கள் அல்லாத பிறருக்கும் கிடைக்கும் இல்லையா?

கண்ணன்: கிடைக்கும்.பாவ வழியில் பிறந்தவர்கள் , பெண்கள்,வைசீகர்,தொண்டர்களான சூத்திரர் ஆகியோரும் என்னைப் புகலாகக் கொண்டு ( பூஜித்து வ்ழிபட்டு) என்னை அடைகிறார்கள்.மேலும் பிறப்பாலும் நற்செயலாலும் புனிதர்களான பிராமணர்கள் சத்திரியர்கள் என் பக்தர்களாகி என்னைப் பெறுவார்களென்று சொல்லவும் வேண்டுமா?

அர்ச்சுனன்: பகவானே! அத்தைய பக்தர்களாக நான் எப்படியாக முடியும்?

கண்ணன்: அர்ச்சுனா! உன்னுடைய இந்த பூதவுடல் சுகமில்லாதது,அழியக்கூடியது.எனினும் சாசுவதமான நிலையான சுகத்தைபெற நீ
இந்நிலையிலேயெ பூஜித்து உபாசித்து கொண்டிரு.என்னிடமே திடபக்தி கொண்டிரு.

அர்ச்சுனன்: பகவானே! உங்களை நான் எப்படி போற்றிப் பூசிப்பது?

கண்ணன்: அர்ச்சுனா! நீ எனக்கே விசுவாசமுள்ள பக்தனாக இரு.என்னிடமே உன் மனத்தை செலுத்திக் கொண்டிரு என்னையே போற்றிப் பூசித்துக் கொண்டிரு.என்னையே நிதமும் வணங்கி வா அவவிசுவாசம்  கொள்ளாதே.இவ்வாறு என்னோடு நீ உன்னைத் தானாகவே ஈடுபடுத்திக்கொண்டு, என்னையே சிந்தித்தும் வந்தித்தும் வாழ்வாயானால் நிச்சயம் என்னையே அடைந்துவிடுவாய்.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 50 other followers