Archive

Posts Tagged ‘மகாபாரதம்’

18.முடிவு- துறவின் பக்குவம்

November 19, 2009 2 comments

அர்ச்சுனன்: எங்கும் பரந்துள்ள பெருமானே! நான் சன்னியாஸ யோகம் ( சாங்கிய யோகம்)தியாக யோகம்(கர்ம யோகம்) இரண்டின் தத்துவங்களையும் தனித்தனியாக அறிந்து கொள்ள விரும்புகிறேன்.எனக்கு உபதேசித்து அருள வேண்டும்.

பகவான்: அர்ச்சுனா! நான் சன்னியாசம் ,தியாகம் குறித்து சித்தாந்த வழிகளான தரிசனா சாரியர்களின் நால்வகை கருத்துக்களை விவரிக்கிறேன்.
1. பல வித்துவான்கள் காம்ய கருமங்களை ( தாம் விரும்பிச் செய்து வரும் காரியங்களை)துறப்பது சன்னியாசம் என்கிறார்கள்.
2. எல்லாக் காரியங்களுக்கும் உள்ள பயனைத் துறப்பது தியாகம் என்கிறார்கள் சிலர்.
3. சிலர் கருமங்களை ( காரியங்களை) குற்றமாகக் கருதிவிட்டு விடுவது தியாகம் என்கிறார்கள்.
4. வேறு சிலருடைய கருத்து வேள்வி( ஆசார அநுட்டானங்கள்)தானம் இவைகளைத் துறக்கலாகாது என்பது.

அர்ச்சுனன்: கண்ணபிரானே! இவை வேதாந்த வித்தகர்களின் கருத்துக்கள்- ஆனால் இந்த விஷயத்தில் உங்களுடைய கருத்து என்ன?

பகவான்:அர்ச்சுனா!பர வம்சத்தவரில் தலை சிறந்த வீரப் பெருமகனே!சன்னியாசம்,தியாகம் இவ்விரு தத்துவங்களுக்குள் முதலில் தியாகம் பற்றிய என்னுடைய கருத்தை அறிந்து கொள்.தியாகம் மூன்று வகப்படும் எனும் கருத்தைச் சொன்னேன்.வேள்வி,தானம்,தவம் மூன்று கருமங்களையும் துறந்துவிடக்கூடாது.செய்யாதிருந்தால் கட்டாயம் செய்ய வேண்டும்.காரணம் அவைகளில் ஒவ்வொன்றும் சான்றோர்களை,சிந்தனையாளர்களை பரிசுத்தபடுத்தவல்லது.

அர்ச்சுனன்: இந்த அளவிற்கு கருமங்களைச் செய்தால் போதுமா கண்ணா?
 பகவான்: பார்த்தனே! இப்போது விவரித்த மூன்று வகை வேள்வி தானம், தவம், ஆகிய கருமங்களையு இது தவிர சாஸ்திரத்தின் மூலம் செய்ய வேண்டிய கருமங்களையும் , பற்றுதலையும் , பயனையும் ஒழித்தே இக்கருமங்கள் யாவும்  செய்யப்பட வேன்டும் என்பது எனது நிச்சயமான , உத்தமமான கொள்கை.

அர்ச்சுனன்: பகவானே! மூன்று வகைப்பட்ட தியாகத்தின் சொரூபம் என்ன?

  பகவான்: அர்ச்சுனா!ஏற்படுத்தப்பட்ட கருமங்களைத் துறப்பது எவருக்கும் ஏற்புடையதல்ல.மதிமயக்கம் காரணமாக இவைகளைத் துறப்பது தாமஸ ( தீமைதரும்) தியாகம்( விட்டுவிடல்).

விதிக்கபட்ட கருமங்களுக்கும் ஏற்படுத்தப்பட்ட கருமங்களுக்கும் என்ன வித்தியாசம்?சாஸ்திரங்கள் என்ன காரியங்களைச் செய்து வர வேண்டும் என்று விதித்திருக்கின்றனவோ, அவை விதிக்கப்பட்ட கருமங்கள்.எல்லா விதிக்கப்பட்ட காரியங்களையும் ஒரு மனிதன் கடைப்பிடிக்க முடியாது.

சாஸ்திரங்களில் வாரத்தின் எல்லாத் தினங்களுக்கும் ( திங்கள், செவ்வாய் முதலிய தினங்கள்,பிரதமை,துதியை முதலான திதிகள்)விரத அநுட்டானங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன ,ஒரு மனிதன் இவைகளை எல்லாம் கடைப்பிடிக்க முனைந்தால் அவன் உண்டு உறங்கி பணி செய்வது இயலாது போகும்.ஆகையால் எல்லா விரத அநுட்டானங்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் விதிக்கப்பட்டவை அல்ல என்பது தெரிகிறது.

மனிதர்களின் வருணம்( இனம்) பிருமச்சாரியம், கிருகஸ்தம் முதலான ஆசிரம ( வாழ்கை, நிலை, சூழ்நிலை,இடம், காலம் சர்ர்ந்தது)இவைகளுக்கேற்ப எந்தக் கடமைகள் அவசியமாகின்றனவோ, அவை ஏற்படுத்தப்பட்ட கருமங்கள்.

உதாரணமாக பிராமணர், சஷ்த்திரியர், வைசியர் , சூத்திரர், இந்த நான்கு வருணத்தார்களில் எவர் எவருக்கு வாழ்க்கைக்கும் உடல் வளர்ச்சிக்கும் எத்தனை நியமங்கள் ( நெறி முறைகள்) ஒதுக்கப்பட்டுள்ளனவோ,அவை ஏற்படுத்தப்பட்ட கருமங்கள்.

அர்ச்சுனன்:ராஜஸ தியாகத்தின் சொரூபம் என்ன?

பகவான்: செய்ய வேண்டிய கருமங்களைச் செய்வது கஷ்டமாக இருக்கிறது என்று கருதி உடல் வருத்தம் ஏற்படுமே என்கிற பயத்தில் கடமைகளைக் கைவிடுவது ராஜஸதியாகம். இதனால் அமைதி கிட்டாமல் போகும்.

அர்ச்சுனன்:சாத்துவீக தியாகத்தின் சொரூபம் என்ன?

பகவான்: ஏற்படுத்தப்பட்ட ஏற்கப்பட்ட கருமங்களைச் செய்வது மனிதனின் அவசியமான கடமை என்கிற உணர்வுடன் பயன் விரும்பும் சுயநல நோக்கமில்லாமல் அக்கருமங்களைச் செய்து வருவது சாத்வீகத் தியாகம்.

அர்ச்சுனன்: தியாகம் செய்யும் மனிதன் எப்படிப்பட்டவர்?

பகவான்: அர்ச்சுனா! அவன் சுயநலம் கொண்டதும் மறுக்கப்பட்டதுமான கருமங்களைக் கை விடுகிறான் .ஆனால் வெறுப்போடு ஒதுக்குவதில்லை.சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கடமையாகிய ( செய்யவேண்டிய) காரியங்களைச் செய்கிறான்.அதில் ஆசை பாசம் வைப்பதில்லை.இத்தகைய அறிவாளியான தியாகி எவ்வித ஐயப்பாடும் தயக்கமும் இல்லாமல் தன் நெறிநிலையில்  திடமாக வாழ்கிறான். செயல்படுகிறான்.

அர்ச்சுனன்: கருமங்களைச் செய்வதில் ஆசாபாசம் கூடாது, செய்யாமல் விட்டுவது வெறுப்பினால் அல்ல. இவ்வளவு தொல்லையை ஏன் மேற்கொள்ள வேண்டும்? கருமமே செய்யாமல் இருந்துவிட்டால் என்ன?

பகவான்: அர்ச்சுனா! உடல், உருவம்  கொண்ட மனிதனால் கருமங்களைத் தானாக துறப்பது இயலாது.கருமங்களால் ஏற்படும் துயரங்களைத் துறக்கலாம்.அதாவது பலன்களை எதிர்பார்த்துக் கருமங்களைச் செய்யும் மனப்போக்கை மாற்றிக் கொள்ளலாம் கரும பலன்களைத் துறக்கும் மனிதன் தியாகி.

அர்ச்சுனன்: கருமபலன்கள் எத்தனை வகைப்படும்?

பகவான்: கருமபலன்கள் மூன்று வகைப்படும்
1. இஷ்டம்- அதாவது எந்தச் சூழ்நிலையை மனிதன் விரும்புகிறானோ அது
2.அநிஷ்டம் – எந்தச் சூழ்நிலையை விருப்பமில்லையோ அது
3. மிசிரம்-(இரண்டும் கலந்தது)-எதில் சில பகுதிகள் விரும்பதக்கதும் சில பகுதிகள் விரும்பத்தாகாதுமாக உள்ளதோ அத்தகையது.இம்மூன்று வகை கரும பலன்களும் பயன் கருதி கருமங்களை செய்பவர்களை பின் தொடரும் .இறந்த பிறகும் தொடரும் .பயன்பற்றி ஆசாபாசம் கொல்ளாதவர்களுக்கு கரும பயன்களின் பாதிப்பு இராது.

அர்ச்சுனன்: பகவானே! மூன்றுவகை பயன்களைக் கொண்ட கருமம் ஏற்பட எது காரணமாக அமைகின்றது?
பகவான்: அர்ச்சுனா! கருமங்களை அழிவுக்குட்பட்டவை என்று கூறும் சாங்கிய சித்தாத்தங்களில் எல்லா கருமங்களிற்கும் பயனளிக்கும் நிலைக்கு 5 காரணங்கள் கூறப்பட்டுள்ளன.

அர்ச்சுனன்: பகவானே! அந்த 5 காரணங்கள் எவை?


பகவான்: அர்ச்சுனா! சரீரம், செய்பவன், பலவகை கருவிகள்,பலவகை செயல்கள் வழிவந்த தொடர்பு அனுபவம் இவ் ஐந்தும் காரணங்கள்.மனத்தாலும் சாஸ்திர சம்மதமான சாஸ்திர விருத்தமான செயல்களை ஆரம்பிக்கிறான்.இதற்கு அவ் ஐந்து காரணங்களும் தூண்டுதல் ஆகும்.

அர்ச்சுனன்:  பகவானே! கருமங்களுடன் கூட ஆத்மாவிற்கு சம்பந்தம் இல்லையென்றால்,பின் எவருடைய தூண்டுதலால் அவை ஏற்படுகின்றன? அவற்றிற்கு காரணம் யார்?

பகவான்: அர்ச்சுனா! ஞானம்( அறிவு) ஞேயம்(அறியத்தக்கது).பரிக்ஞாதா( நன்கு அறிந்தவர்)இம்மூன்று பேர்களாலும் கருமத்திற்கு தூண்டுதல் ஏற்படுகிறது.கரணம்( கருவி)கருமம், கர்த்தா( செய்பவன்)இம்மூன்றாலும் கருமங்களின் (செயல்களின்) சேகரிப்பு நிகழ்கிறது.

அர்ச்சுனன்: கருமங்கள் செய்யப்படுவதற்கு ஏற்படுவற்கும் ஐந்துகாரணங்களை கூறுவதின் நோக்கம் அல்லது கருத்து என்ன பகவானே?

பகவான்: அர்ச்சுனா! கருமம்( செயல்) உடல் வாக்கு உள்ளங்களால் ஏற்படுவது.ஆத்மாவால் செய்பவன் தன்மையில்லை.ஆனால் எவன் கருமங்களைச் செய்வது ஆத்மா என்று கூறுகிறானோ அவன் மதிகெட்டவன்.உண்மையை அறியாதவன்.அவனுடைய புத்தி சுத்தமானதல்ல.

அர்ச்சுனன்:  பகவானே! ஆத்மாவை செயல்புரிபவன் ( கர்தா) இல்லையென்று கருதுவதால் என்ன ஆகிறது?

பகவான்: அர்ச்சுனா! என்னுடைய உள்ளத்தில் நான் தான் செய்கிறேன்.எனும் செருக்கு இல்லையோ, எவருடைய புத்தி கரும பலன்களில் நாட்டம் கொள்வதில்லையோ,கரும பலன்களை அனுபவிக்க முயல்வதில்லையோ, அவன் எதைச் செய்தாலும் அதன் பந்தத்தில் சிக்குவதில்லை.எல்லா உயிரினங்களையும் அவன் கொன்றாலும் அவன் கொலையாளி இல்லை.அதன் விளைவோ,பாதிப்போ அவனை கட்டுபடுத்துவதுமில்லைஅவன் பாதிக்கப்படுவதில்லை.

அர்ச்சுனன்:  பகவானே! கருமங்களுடன் கூட ஆத்மாவிற்கு சம்பந்தம் இல்லையென்றால்,பின் எவருடைய தூண்டுதலால் அவை ஏற்படுகின்றன? அவற்றிற்கு காரணம் யார்?

பகவான்: அர்ச்சுனா! ஞானம்( அறிவு) ஞேயம்(அறியத்தக்கது).பரிக்ஞாதா( நன்கு அறிந்தவர்)இம்மூன்று பேர்களாலும் கருமத்திற்கு தூண்டுதல் ஏற்படுகிறது.கரணம்( கருவி)கருமம், கர்த்தா( செய்பவன்)இம்மூன்றாலும் கருமங்களின் (செயல்களின்) சேகரிப்பு நிகழ்கிறது.

அர்ச்சுனன்:பகவானே! கருமங்களின் தூண்டுதல் ,சேகரித்தல், இவ்விரண்டிலும்  முக்கியமானது எது? அவைகளின் முக்கிய பேதங்கள் எவை?
பகவான்:அர்ச்சுனா! குணங்களின் ( இயல்புகள்) தொடர்பால் ஒவ்வொரு பொருளிலும் ஏற்படும் வெவ்வேறு பேதங்களை( வித்தியாசங்களை)குறிப்பிடும் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது இதுதன் அதாவது குணங்களிற்கு ஏற்ப ஞான்ம்,கர்மம்,கர்த்தா( செய்பவன்)இம்மூன்று முக்கிய பேதங்கள் ஏற்படுகின்றன.இவை பற்றியும் அர்ச்சுனா நீ நன்கு தெரிந்து கொள்.

அர்ச்சுனன்: பகவானே! ஞானத்திற்கு உள்ள மூன்று பிரிவுகளில் சாத்வீக ஞானம் எது?

பகவான்: அர்ச்சுனா!சித்தி பெற முயலும் சாதகர்( பயிற்சியாளர்)எந்த மெய்யறிவால்(ஞானம்) எல்லா பிரிவுகளும் கொன்ட பிராணிகளிடத்தில் பிரிவு பேதங்களை ( வித்தியாசங்களை) காணாமல் ஒரே நித்திய நிலையை காண்கிறாரோ அவருடைய மெய்யறிவுதான் சாத்வீக ஞானம்.

அர்ச்சுனன்: பகவானே! இராட்சத ஞானம் எது?


பகவான்:  எப்படிப்பட்ட ஞானத்தால் பகுத்தறிவு உள்ள மனிதன் பல பல பிரிவுகள், வித்தியாசங்கள் கொண்ட பிராணிகளிடம் வெவ்வேறான தன்மைகளை காண்கிறார்களோ,உணர்கிறானோ அதுதான் இடாட்சத ஞானம்.
அர்ச்சுனன்: கண்ணா ! தாமஸ ஞானம் எது?
பகவான்:  அர்ச்சுனா! பிறந்து அழியும் சரீரத்தையே பூரண தத்துவமான ஆத்மா என்று கருதி ஆசாபாசம் கொண்டிருப்பது.பகுத்தறிவிற்கு பொருந்தாது.அது தத்துவ ஞானம் அற்றது.இழிவானது.தாமஸ ஞானம் எனப்படும்.

அர்ச்சுனன்: கண்ணா ! மூன்றுவகை கருமங்களில் சாத்வீக கருமம் எது?

பகவான்: எந்த ஏற்படுத்தப்பட்ட கருமங்கள் பயன் சார்ந்த ஆசை பாசம் இல்லாத மனிதனால் விருப்பு, வெறுப்பு, செருக்கு ஏதும் இல்லாமல் செய்யப்படுகிறதோ அவை சாத்வீகமானவை.

அர்ச்சுனன்: இராட்சத கர்மம் எது கண்ணா?

பகவான்: எந்தக் கருமம் அனுபவிக்கும் ஆர்வம் கொண்ட மனிதனால் செருக்கும் , முனைப்புமாக செய்யப்படுகிறதோ அது இராட்சத கர்மம்.

அர்ச்சுனன்: தாமஸ கர்மம் எது கண்ணா?

பகவான்: அர்ச்சுனா! எந்தக் காரியம் விளைவு.நட்டம், கேடு,வன்மைச்செயல்,தன் திறமை ஆகியவைகளை கருத்தில் கொள்ளாமல் கண்மூடித்தனமாக மோகத்துடன் ( ஆவலுடன்)ஆரம்பிக்கபடுகிறதோ அது தாமஸ கர்மம்.

அர்ச்சுனன்: கண்ணா! மூன்றுவகை கர்த்தாக்களில் ( செய்பவர்) சாத்வீக கர்த்தா எவர்?

பகவான்: அர்ச்சுனா எவர் செய்யும் கருமத்தில் சுயநல ஈடுபாடு இல்லாமல் செருக்கு இல்லாமல் பொறுமையும் உற்சாகமும் கொண்டு வெற்றி தோல்விகளில் ( இலாப நஷ்டங்களில்)சமநிலையோடு ( மகிழ்ச்சியோ வருத்தமோ கொள்ளாமல்) இருந்து வருகிறாரோ அவர்தான் சாத்வீக கர்த்தர்.

அர்ச்சுனன்:இராட்சத கர்த்தா எத்தகையவர் கண்ணா?

பகவான்: அர்ச்சுனா! எவை ஆசை பாசம் கொண்டவராக செய்வினைப் பயனில் நாட்டம் உள்ளவராக, வன்முறைகளில் ஈடுபட்டுள்ளவராக தூய்மை இல்லாதவராக, மகிழ்ச்சி துயரங்களிற்கு அடிமைப்பட்டவராக இருக்கிறாரோ அவர் தான் இராட்சத கர்த்தர்.

அர்ச்சுனன்: தாமச கர்த்தா என்பவர் எப்படி இருப்பர் கண்ணா?

பகவான்: அர்ச்சுனா! எவன் கவனக்குறைவாகவும், செய்யத்தக்கது, தகாதது எனும் விவேகம் இல்லாமலும் இருக்கிறானோ,கல்வி கேள்விகளில் ஈடுபடாமல் இருக்கிறானோ, திமிரும் வீம்பும் வீண்பிடிவாதமும் கொண்டிருக்கிறானோ, செய்நன்றி இல்லாதிருக்கிறானோ,சோம்பேறியோ,துயரத்தில் ஆழ்ந்திருகிறானோ, செயல் புரிவதில் வீணாக காலம் கடத்துபவனோ அவன் தான் தாமஸ ( தமோ குணம் நிரம்ம்பிய) கர்த்தா( செயல் புரிபவன்).

அர்ச்சுனன்: பகவானே! ஞானம் ,கர்மம்,கர்த்தா மூவர்க்கும் உல்ள மூன்றுவகைப் பிரிவுகளைச் சொன்னீர்கள்.இவைகளத் தவிர மேலும் என்னென்ன பிரிவுகள் ( பேதங்களை நான் தெரிந்த்து கொள்ள வேன்டும்?

பகவான்: அர்ச்சுனா! கர்மங்களைச் சேகரிக்கும் கருவிகளில் புத்தியும் சக்தியும் ( மிகுந்த பிடிவாததுடன் கூடிய தாரண சக்தி)கொள்ளவேண்டியது அவசியம் குணங்களைச் சார்ந்த புத்தியும் , ஞாபக சக்தியும் மூன்று வகைப்படும்,அதாவது காரியத்தில் ஈடுபாடு ,விடுபாடு ( பிரவிருத்தி, நிவிருத்தி) செய்யத்தக்கது,தாகதது,அச்சம்,அச்சமின்மை,தளை,விடுதலை,( பந்தம், மோட்சம்) அவைகளைச் சரிவர உணரும் அறிவுதான் சாத்வீக புத்தி.

அர்ச்சுனன்: பகவானே1 இராட்சத புத்தி எத்தகையது?

பகவான்: ஹே பார்த்தா! எந்தவொரு அறிவு தர்மம் செய்யத்தக்கது,தகாதது ஆகியவகைளை சரியாக அறிவதில்லையோ அது இராட்சத புத்தி எனப்படும்.

அர்ச்சுனன்: பகவானே! தாமஸ புத்தி எவ்வாறு இருக்கும்?

பகவான்: – பிருதையின்( குந்தி) மைந்தனே!தமோ குணத்தின் ஆதிக்கத்திற்கு  ஆள்பட்ட புத்தி தருமத்தை அதர்மமாக்கவும் அதர்மத்தை தர்மமாகவும் இதேபோல் எல்லாவற்றையும் மாறாகவே அறியும் அறிவு தாம்ஸ புத்தி இதற்கு நல்லதெல்லாம் தீயதாகவும் தீயவையெல்லாம் ந்ல்லவையாகவும் தோன்றும்,இதன்படியே செயல்புரியவும் தோன்றும்.

அர்ச்சுனன்: பகவானே! சாத்வீகமான திருதி ( தாரணசக்தி) எது?

பகவான்: ஹே பார்த்தா! சமத்துவ உணர்வுடன் கூடிய ( திருதி) பிறழாத உறுதி புத்தியுடன் துணையுடன் மனிதன் மனம், பிராணன், புலன்கள் சார்ந்த செயல்களை ஏற்கிறான்.அவற்றை முறைப்படுத்துகிறான்,இத்தகைய ஞாபகசக்தி தான் சாத்வீகமானது.

அர்ச்சுனன்: இராட்சத புத்தி( திருதி) எத்தகையது பகவானே?

பகவான்: அர்ச்சுனா! பயனை விரும்பும் மனிதன் எந்த நினைவாற்றலின் துணையைக் கொண்டு அறம், பொருள், இன்பம் மூன்றையும் மிக்க ஈடுபாடுடன் ஏற்கிறானோ அது இராட்சத புத்தி எனப்படும்.

அர்ச்சுனன்: பகவானே! தாமஸ புத்தி எப்படிப்பட்டது?

பகவான்: ஹே பார்த்தா! தீய புத்தியுள்ளவன் எந்தத் தாரண ஞாபக சக்திமூலம் தூக்கம்,அச்சம்,கவலை,துயரம்,கர்மம் ஆகியவைகளை விடாதிருக்கிறானோஅதுதான் தாமஸ குணம் உள்ள புத்தி.

அர்ச்சுனன்: பகவானே!தாமஸ குணமுள்ளவன் உறக்கம் முதலிய கீழ் நிலை இயல்புகளை ஏன் கைவிடாமல் மேற்கொண்டிருக்கிறான்?

பகவான்: அர்ச்சுனா! இலைகளால் சுகம் கிடைப்பதால் கைவிடவிரும்புவதில்லை.

அர்ச்சுனன்: பகவானே! அந்த சுகம் எத்தகையது? நான் அறிந்து கொள்ளலாமா?

பகவான்: பரதவம்சத்தின் தலை சிறந்தவனே! அந்த சுகம் மூன்று வகைப்படும்.சாத்வீக சுகம்,இராட்சஜசுகம்.தாமஸ சுகம்.இவற்றில் எந்தச் சுகத்தில் வழக்கமான ஈடுபாடு காரணமாக மனநிறைவு கிட்டுகிறதோ, எதனால் துக்கங்கள் விலகுகின்றனவோ, எது பரமாத்மாவிடம்பற்றுதல் கொண்ட அறிவின் மகிழ்ச்சியோடு பிறந்ததோ,எது உலகில் வாழ்வில் ஈடுபாடு கொன்ட காரணத்தால் ஆரம்பத்தில் நஞ்சு போலும் இறுதியில் அமுதம் போலும் அமைகிறதோ அதுதான் சாத்வீகமான சுகம்.

அர்ச்சுனன்:தாமஸ சுகம் எப்படியிருக்கும் பகவானே?

பகவான்:தூக்கம் , சோம்பல், மதிமயக்கம் காரணமாக ஏற்படும் தாமஸ சுகம் தொடக்கத்திலும் இறுதியிலும் மோகாந்த காலத்தில் மூழ்கிவிடும்.பின்னர் துன்பங்களைத் தரும்.

அர்ச்சுனன்: பகவானே!சாத்வீகம்,இராட்சதம், தாமஸம் எனும் முக்குணங்களின் செயற்கையால் இன்னும் எந்தப் பொருட்களில் எல்லாம் மூன்று வித்தியாசங்கள் ஏற்படுகின்றன?

பகவான்:அர்ச்சுனா! ஒரு பேருண்மையை புரிந்து கொள்.இம்மூன்று குணங்களின் செயற்கையால் பாகுபாடு ( பேதம்) காணாத பொருள் எதுவும் இந்த பிரபஞ்சத்தில் இருக்க முடியாது .பூமியிலும் ,மேலுலகிலும்,மனிதர்களிடமும் தேவர்களிடமும்,மற்ற இடங்களிலும், இனங்களிலும் எந்தவொரு பொருளும், இயற்கை ஏற்படுத்தியுள்ள அம் மூன்று குணங்களையும் சார்ந்திராமல் தனித்திருக்க முடியாது.இவை எங்கும் எவற்றிலும் எக்காலத்திலும் வியாபித்திருக்கின்றன.

அர்ச்சுனன்: இந்தக்  குணங்களில் இருந்து விடுபட என்ன வழி பகவானே?

பகவான்:அர்ச்சுனா! இந்த உலகத்தில் படைக்கப்பட்ட மனிதர்களின் இயல்பான குணங்களை அடிப்படையாக கொண்டுதான் பிராமணர்,சத்திரியர்,வைசியர்.சூத்திரர்( அந்தணர்,அரசர்,வணிகர்,உழவர்)எனும் நான்கு வகை வர்ணங்கள்( இனங்கள்) வகுக்கப்பட்டன.ஆகையால் நால்வகையினரும் தம்மினத்திற்கு ஏற்புடைய கருமங்களை சரிவரச் செய்து வருவதால் தான் முக்குணங்களின் பாதிப்பிலிருந்து விடுபடவழி வகுக்கும்.

அர்ச்சுனன்: பகவானே! பிராமணருக்கு விதிக்கப்பட்ட கருமங்கள் எவை?அவற்றை அறிய ஆவலாய் உள்ளேன்?

பகவான்: அர்ச்சுனா!

1, உள்ளத்தை அடக்கி வாழுதல்.
2. புலன்களை தம்வசப்படுத்தி வாழுதல்.
3. அறநெறிகளை பேணிவளர்க்க உடல்வருத்தம் போன்ற சிரமங்களை சகித்து கொள்ளல்.
4.உள்ளும் புறமும் தூய்மையுடன் இருத்தல்.
5.பிறர் புரிந்த குற்றங்களை பொறுத்தல் மன்னித்தல்.
6.உள்ளம் உடல் இரண்டையும் வலிமையுடன் வைத்திருத்தல்
.

7.வேதங்கள் சாஸ்திரங்கள் ஆகியவைகளை நன்கு பயின்று நல்லறிவு வளர்த்தல்.
8.வேல்வி முதலான தூய நெறிகளை நடைமுறைப்படி செயல்படுத்தல்.
9. பரமாத்மா வேதம் முதலியவற்றில்  நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்டு நல்ல ஆத்திகனாக மக்களுக்கு முன் மாதிரியாக வாழவேண்டும்.இவைதான் பிராமணர்களின் இயல்பான கருமங்கள்.

அர்ச்சுனன்: பகவானே!சத்திரியர்களுக்குரிய( அரசர்களுக்குரிய) காரியங்கள் எவை?

பகவான்:

1. திறமையும்  துணிவும் மிகுந்த வீரம்.
2. பொலிவு( தேஜஸ்)
3.உறுதி
4.மக்கள் பராமரிப்பு ஆட்சி பரிபாலனம்.
5.போர்க்களத்தில் புறம்காணத தீரம்.
6.தானதர்மங்களில் தராள குணம்.
7.ஆட்சிபுரியும் நிர்வாக திறமை இவைகளே சத்திரியர்களுக்குரிய இயல்புகள் செயல்கள்.

அர்ச்சுனன்: பகவானே! வைசியர்களுக்குரிய இயல்புகள் எவை?

பகவான்:
1. நிலசாவுபடிக்கு உதவுதல்,பயிரிடல்,விவசாயம்
2. பசுக்களை பராமரித்தல்
3. நேர்மையுடன் வியாபாரம் தொழில் நடத்துதல் இவைகளே வைசீயர்களுக்கு வணிகர்களுக்குள்ள இயல்பான செயல்கள்.

அர்ச்சுனன்: பகவானே! சூத்திரர்களுக்கு உள்ள பணிகள் எவை?

பகவான்: தம்மினத்தவர்களோடு மற்ற மூன்று இனத்தவர்களையும் வாழ்வித்தலும்,வளர்த்து வலிமையுள்ளவர்களாக ஆக்குவதும் பயிர்த்தொழில் மூலம் மக்களுக்கு பணிபுரிவதும் இவர்களுக்குரிய பணிகள்.

அர்ச்சுனன்: பகவானே! இந்த நான்கு வர்ணத்தார்களும் தமக்கென விதிக்கப்பட்ட பணிகளை செய்து வருவதால் என்ன ஆகும்?

பகவான்: அர்ச்சுனா! இந்த நால்வகை இனத்தவரும் ஒன்றுபட்டு இணைந்து செயல்படுவதால் சமூகமும் நாடும் மேம்பாடும் ஒவ்வொரு இனத்தவரும் தமக்குரிய பணிகளில் சுயநல வேட்கையில்லாமல் பற்றுதலான ஈடுபாடுடன் முனைந்திருப்பவர்கள் பரமாத்மாவை அடைகிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! அவர்கள் எவ்விதம் பரமாத்மாவை அடைகிறார்கள்?

பகவான்:அர்ச்சுனா! பரமாத்மாவிடமிருந்து எல்லா உலகங்களும் உயிரனங்களிலும் உற்பத்தியாகின்றன.எல்லாப் பிராணிகளிடத்திலும் எல்லா இடங்களிலும் பரமாத்மா வியாபித்திருக்கிறார்.பரமாத்மாவிற்கு மனிதன் செய்யும் பூசை அவன் அவனுக்கு ஏற்பட்ட பணிகளை ஒழுங்காக செய்வதுதான் .அதன்மூலமே மனிதன் காரிய சித்தியடைகிறான்.அதாவது பரமாத்மாவிடம் ஒன்றிணைகிறான்.

அர்ச்சுனன்: கண்ணா! மனிதன் தன் இனத்திற்கேற்பட்ட கருமங்களை மட்டும் ஏன் செய்து வரவேன்டும்? பிற இனத்திற்குரிய பணிகளையும் ஏன் இணைத்துச் செய்யக் கூடாது?

பகவான்: தம்பி அர்ச்சுனா! அவரவர் தமக்கு ஏற்பட்ட அவைகளுக்கென்ற விதிக்கப்பட்ட கர்மங்களை சரிவரச் செய்து வந்தாலே போதும்.தன்னினத்திற்குரிய செயல்களை விட பிற இனத்தின் செயல் உயர்ந்ததாகவோ, சிறந்ததாகவோ இருந்தாலும் அதை மேற்கொள்ளலாகாது.தனக்கென உரிய செயலை அது தாள்வானதுஎன்று கருதி புறக்கணிக்கவும் கூடாது.இயல்புக்கு ஏற்ப ஏற்படுத்தப்பட்டுள்ள சுயதர்மமான கடமைப் பணிகளை செய்யும் மனிதன் ஒருபோதும் பாவத்திற்கு இலக்காவது இல்லை.குந்தியின் மைந்தனே!குற்றம் குறை இருந்தாலும் மனிதன் சுயதர்மத்தை ( கடமைப்பணியை) விட்டுவிடலாகாது.நெருப்பு எரியத்தொடங்கும்போது புகையைக் கக்குவது போல் ஒவ்வொரு கருமம் தொடக்கத்தில் ஏதாவது குற்றம் குறையுள்ளதாக இருக்கும்.

அர்ச்சுனன்: பகவானே! கருமங்களில் சிறிதளவுகூட குறையில்லாதிருக்க ஏதாவது உபயம் ( வழிவகைகள்) உள்ளதா?

பகவான்:அர்ச்சுனா! இருக்கிறது. சாங்கியயோகத்தால் சாதிக்கலாம்.எவருடைய புத்தி எல்லா இடங்களிலும் முற்றிலும் பற்றுதல் இல்லாமல் இருக்கிறதோ, எவருடைய உடல் கட்டுபாட்டில் உள்ளதோ , எவர் எந்தப் பொருளிலும் சிறிதளவு கூட ஆசாபாசம் வைப்பதில்லையோ அத்தகையவர் சாங்கிய யோகம் மூலமாக ” நைஷகர்மியசித்தி”( செயல் ஒழிந்த பிரம்ம நிலை)அடைகிறார்.அதாவது அவருடைய எல்லா செயல்களும் செயலற்றுப் போகின்றன.செயல்களால் ஏற்படும் சிறிதளவு தோஷம் கூட அவரைத் தீண்டுவதில்லை. ( 49)

அர்ச்சுனன்: பகவானே! நீங்கள் குறிப்பிட்ட  நைஷகர்மியசித்தியை அடையும் வழிமுறைகள் என்ன?

பகவான்:அர்ச்சுனா! அந்தக்கரணம் பரிசுத்தமாக இருப்பது சித்தி இதைப் பெற்ற மனிதன் ஞானத்தின் மேலான நிலையான பிரம்மத்தை எந்த வழிமுறையில் அடைகிறானோ ,அதை சுருக்கமாக சொல்லுகிறேன்.நன்கே அறிந்து கொள்.அர்ச்சுனா! அந்த மனிதன் சாத்வீக புத்தி கொண்டவன்,வைராக்கிய சித்தமுள்ளவன்.தனிமையில் தன்வயத்தில் வாழப் பழக்கப்பட்டவன்.ஆகார நியமம் கொண்டவன்.துணிவுடன் புலன்களை அடக்கி வைத்துக்கொள்ளும் சாதகன்,,உள்ளம்,உரை,செயல் இவற்றை கட்டுப்படுத்தி புலனுகர்ச்சியை தியாகம் செய்பவன்.அவன் விருப்பு , வெறுப்பை கடந்து பராமாத்மா தியானத்தில் லயிக்கிறான். அவன் அகங்காரம், பிடிவாதம்,செருக்கு,காமம் , வென்சினம், பொருள் சேகரிக்கும் பேராசை ஆகியவைகளை துறந்து மமதையில்லாமல் மன அமைதியாக வழ்ந்து பிரம்ம நிலையை அடைய தகுதி பெறுகிறான்.

அர்ச்சுனன்: பகவானே! பிரம்ம நிலையை அடையத் தகுதி பெற்ற பின் என்னாகிறது?

பகவான்:அர்ச்சுனா! பிரம்ம மயமான நிலையை அடைந்து மகிழ்ச்சி கொண்ட சாதகன் எதற்காகவும் , எவருக்காகவும் ,வருத்தமோ விருப்பமோ கொள்ளுவதில்லை.சகல பிராணிகளிடமும் அந்த ஞானி சமநிலையுடன் அன்பும் பரிவும் காட்டுகிறான்.இத்தகைய சாதக புருஷருக்கு பரமாத்வாகிய என்னிடம் பராபக்தி (உத்தமமான பக்தி) நிறைந்திருக்கிறது.

அர்ச்சுனன்: பராபக்தி ஏற்படுவதால் என்ன ஆகிறது பகவானே?

பகவான்: இந்த உத்தம பக்தியால் சாதக புருஷன் என்னுடைய சத்திய சொரூபத்தை உள்ள படி அறிகிறான் தத்துவ ஞானத்தின் துணைகொண்டு நல்லுணர்வுடன் அதன் பயனாக என்னுள் ஐக்கியம் அடைகிறான்.

அர்ச்சுனன்: பகவானே!உங்களை அடைவதற்கு வேறு சிறந்த உபாயமும் உள்ளதா?

பகவான்: மிகச் சிறந்த வழியிருக்கிறது.

அர்ச்சுனன்: எம்பெருமானே! அது என்ன என்பதை அறியத்தரும்படி வேன்டுகிறேன்?

பகவான்: அர்ச்சுனா! எந்த உத்தமமான பக்தன் என்னையே சரணாகதியாக அடைகிறானோ,என்னையே எண்ணியே எண்ணி எனக்கே சமர்ப்பணமாக எல்லா காரியங்களையும் செய்து வருகிறானோ அவன் என் அருளால் சாசுவதமான உத்தம நிலையை ( பரமபதம்)அடைகிறான்.

அர்ச்சுனன்: பகவானே! இந்த நிலைக்கு நான் செய்ய வேண்டியது என்ன?

பகவான்: தம்பி அர்ச்சுனா!நீ என்றுமே என்னிடம் முழு ஈடுபாட்டுடன் இரு.நீ செய்யும் எல்லாக் காரியங்களையும் எனக்கே அர்ப்பணித்து விடு.நீ செய்யும் எல்லாச் செயல்களிலும் பொருள்களிலும் நீ கொண்டிருக்கும் பற்றுதலை அகற்றிக் கொள்.எல்லாவற்றிலும் சமநிலையை மேற்கொள்.எல்லாவற்றிலும் சமநிலையை மேற்கொள்.எப்போது என்னிடமே சிந்தையை செலுத்தி வாழ்ந்து வா.என் சார்பிலேயே செயலாற்றுவதாக கருதிக்கொள்.

அர்ச்சுனன்: பகவானே! உங்களிடமே எப்போதும் சிந்தையை செலுத்தி வாழ்வதில் என்ன ஆகும்?

பகவான்:  அர்ச்சுனா!என்னிடம் சிந்தையை செலுத்தி வாழ்வதால் என் அருள் உனக்கு இலகுவில் கிட்டுகிறது.இதனால் இன்னல்கள் இடையூறுகளில் இருந்து விடுபடுவாய்.ஒருவேளை நீ மமதையின் காரணமாக என்னையும் என் பேச்சையும் மதிக்காது போனால் உனக்கு வீழ்ச்சி ஏற்படுவது நிச்சயம்.

அர்ச்சுனன்: எப்படியான வீழ்ச்சி எனக்கு ஏற்படும்?

பகவான்:  அர்ச்சுனா! அகங்காரத்தை துணைகொண்டு நீ இப்போது போர்புரிய வேண்டாம் என்று தீர்மானித்திருக்கிறாயே,இந்த தீர்மானம் பொய்யானது.காரணம் உன்னுடைய சத்திரய சுபாவம் ( இயல்பு) உன்னை போரில் ஈடுபடுத்தத்தான் செய்யும்.குந்தியின் மைந்தனே!தன் இயல்புக்கேற்ப விதிக்கப்பட்ட அல்லது ஏற்கப்பட்ட கர்மத்திற்கு கட்டுப்பட்டவன் நீ.உன் மதிமயக்கம் ( மோகம்) காரணமாக போர் புரிய விரும்பதாதது நீடிக்காது.இந்த போரையே நீ ஷத்திரிய சுபாவத்திற்கு ஆட்பட்டு அதன் தூன்டுதல்களுடன் செய்யத்தான் போகிறாய். தொடர்ந்து செய்.நீயே வெற்றி பெறுவாய்.

அர்ச்சுனன்: பகவேனே! இந்தசத்திரிய சுபாவம் போர்புரிதல் எனும் சுயதர்ம கர்மத்தை எப்படிச் செய்யத் தூண்டும்.எப்படி செய்விக்க முடியும்?

பகவான்:  அர்ச்சுனா! எல்லப் பிராணிகளுக்கும் புகுந்திருக்கும் அந்தர்மியாமியான சர்வேஸ்வரன்( பரமாத்மா) தன்மானத்தினால் சரீரம் எனும் இயந்திரத்தில் அமர்ந்து எல்லாப் எல்லாப் பிராணிகளையும் அவரவர் இயல்புப்படி ( சுபாவ சுய தர்மப்படி) இயக்குகிறான்.செயல் புரிய வைக்கிறான்.ஆட்டிப்படைக்கிறான்.

அர்ச்சுனன்: பகவேனே! இந்தப் பரவசமான ( பிறசக்திக்கு ஆள்பட்டிருக்கும்) நிலையிலிருந்து வெளிவர என்ன வழி?( சுபாப தர்மத்தின் ஆதிக்கத்திலிருந்து எப்படி விடுபடுவது)

பகவான்:  பரதவம்சத்தின் வீரப் புதல்வனே!நீ “எல்லாமே அவன் தான்” எனும் நம்பிக்கையுடன் அந்தர்யாமியான சர்வேஸ்வரினிடம் சரணடைந்து விடு.அவருடைய பேரருளால் உனக்கு இந்த உலகத்திலிருந்து விடுபட்ட நிம்மதியுடன் சாசுவதமான பரமபதம் கிடைக்கும்.இது மிக மிக ரகசியமான சரணாகதி தத்துவம்.இந்த அரிய தத்துவத்தை உனக்கு உபதேசிக்கிறேன்.நீ இதுபற்றி நன்கு சிந்தித்து உன் விருப்பப்படி தெரிவு செய்.

பகவானே! நான் என்னுடைய விருப்பப்படி எதுவும் செய்யவில்லை.நீங்களே கூறுங்கள்.நான் என்ன செய்ய வேண்டும்.

பகவான்: அப்படியானால் மிக்க ரகசியமான பரம தத்துவத்தை மறுபடியும் கேள்.நீ எனக்கு மிகவும் பிரியமானவன்.ஆதலால் உன் நன்மைக்கு வேண்டியதைக் கூறுவேன்.

அர்ச்சுனன்: சர்வேசா ! எனக்கு நன்மை தரும் இதமான அருளுரை எது?
பகவான்: நீ என்னையே போற்றி ஆராதிக்கும் பரம பக்தனாகி விடு.என்னிடமே உன் மனதைச் செலுத்து.இப்படி இருப்பதால் நீ என்னைப் பெறுவாய்.இதை நான் உனக்குச் சத்திய பிரதிக்கினையாகக் கூறுகிறேன்.என் அன்புக்கு உரியவன் நீ.உன்னை மிகவும் நேசிக்கிறேன்.

அர்ச்சுனன்: நான் நீங்கள் அறிவுறுத்துமாறு செய்ய இயலாமல் போனால் என் நிலை என்ன பகவானே?

பகவான்: அர்ச்சுனா! எல்லாத் தருமங்களையும் விட்டுவிட்டு என்னையே சரணாகப் பற்றிக்கொள்.நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிடுத்து விடுகிறேன்,நீ கவலை கலக்கம் இல்லாமல் தெளிவாக பூரண நம்பிக்கையோடு இரு.

அர்ச்சுனன்: பகவானே!நீங்கள் மிகவும் சுலபமானதும்,உத்தமமானதுமான தத்துவத்தை உபதேசித்திருக்கிறீர்கள்.இதை நான் மற்றவர்களுக்கெல்லாம் தெரிவிக்கலாமா?

பகவான்: கூடாது.கூடாது.இது மிகவும் பத்திரமாக ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டியது.சகிப்புத்தன்மையில்லாத மனத்திட்பம் இல்லாத,நம்பிக்கை இல்லாத எவடுக்கும் சொல்லி விடாதே!மேலும் எவர் என்னிடம் பக்தி கொள்ளவில்லையோ, இத்தத்துவத்தை கேட்க விரும்பவில்லையோ, குற்றமுள்ள நெஞ்சும் நோக்கமும் கொண்டிருக்கிறார்களோ ,அவர்களுக்கெல்லாம் இந்த அரிய ரகசிய தத்துவத்தை சொல்லிவிடாதே.

அர்ச்சுனன்: இதைத்தவிர நீங்கள் கூறிய மற்ற விஷயங்களை எவருக்குச் சொல்லலாம்?
பகவான்: என்னிடம் பக்தி கொன்டவர்களிடம் சொல்.எந்த ஞானவான் என்னிடம் பராபக்தி( மிக ஆழ்ந்த பக்தி சிரத்தை)கொண்டிருப்பதால் உந்தப்பட்டு மிக அரிய ரகசியத் தத்துவங்கள் நிரம்பிய இந்த பகவத் கீதையை ( பகவான் கருத்துரை) என் பக்தர்களுக்கு எடுத்துச் சொல்கிறானோ, அவன் என்னைப் பெறுகிறான்.மேலும் அவனைப் போல் என்னும் இல்லை.இப்பூமண்டலத்திலேயே அவனுக்கு நிகரான என் அன்பன் வேறு எவனும் இல்லை.

அர்ச்சுனன்: இதகைய அரிய உயரிய பணியைச் செய்ய முடியாது போனால்?

பகவான்: எனக்கும் உனக்கும் இடையில் இப்போது நிகழ்ந்த இந்த உடையாடல்களைக் கவனத்துடன் பயின்றால் போதும்.அவன் ஞானக்ஞம் செய்து என்னைப் பூசித்து போற்றியதாகும்.இதுவே எனது கொள்கை.

அர்ச்சுனன்:இதைப் பயிலவும் இயலாது போனால்?

பகவான்: இந்த உரையாடல்கள் மூலம் உபதேசிக்கப்பட்ட தத்துவங்களைப் பிறரும் கூற ஒருமுறை கவனமாக ,சிரத்தையுடன் கேட்டுக் கொண்டாலும் போதும்,கேட்பவன் பாவபந்தங்களிலிருந்து விடுபடுகிறான்.புண்ணியசாலிகள் மேலான உலகில் இடம் பெறுகிறான்.
அர்ச்சுனா! நான் உபதேசித்ததை எல்லாம் மனப்பூர்வமாக,கவனமாகக் கேட்டுக் கொண்டாயா?அக்ஞானத்தால் ஏற்பட்டிருந்த உன் மோகமயக்கம் விலகிவிட்டதா?

அர்ச்சுனன்:அச்சுதா!எம் பெருமானே!என் மோக மயக்கம் விலகியது.நல்ல தெளிந்த நினைவு ஏற்பட்டிருக்கிறது.இதெல்லாம் உங்கள் அருளால் ஏற்பட்டதுதான்.உங்கள் கீதோபதேசத்தைக் கேட்டதால் மட்டும் அல்ல.உங்களது கிருபைக்கே இந்த சக்தி உள்ளது.நான் ஐயம் திரிபு இல்லாமல் தெளிவாக திடமாக இப்போது இருக்கிறேன்.இப்போது நான் மேலான மகிமையான ஆணையைச் சிரமேற்கொண்டு போர் செய்து என் கடமையை நிறைவேற்றுவேன்.

போர்க்களத்தில் நடந்த சகல நிகழ்ச்சிகைளையும் திருதராஷ்டின மன்னனுக்கு சொல்லிக் கொண்டு வந்த சஞ்சயனை மகாராஜாதிரும்பவும் அவனிடம் வினவுகிறார்.அதற்கு சஞ்சயன் சொல்கிறான் மகாராஜாவே பகவான் வாசுதேவருக்கும் மகாத்மா அர்ச்சுனனுக்கும் இடையில் நிகழ்ந்த சகல உரையாடலையும் கேட்கும் பாக்கியம் பெற்றேன்.மிகவும் அற்புதமான இந்த தத்துவ விளக்க கருத்துரையை கேட்கும் போதும் அவற்றை நினைக்கும் போதும் என்னுடம்பு சிலிர்க்கிறது.பேரின்பம் பொங்குகிறது.

திருதராஷ்டின மன்னர்: சஞ்சயா!உனக்கு இந்த உரையாடலைக் கேட்கும் பாக்கியம் எப்படிக் கிட்டியது?
சஞ்சயன்: இது மிகவும் இரகசியமான தத்துவங்களை நிறைந்த உரையாடல். போர்க்கள நிகழ்ச்சிகளை தாங்கள் அறிய வேண்டும் என்ற ஆர்வத்தினால் வியாச பகவானின் அருளாசியால் எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது .சாட்சாத் சர்வேசுவரனான , யோகேஸ்வரனான ஸ்ரீ பரமாத்மா திருவாய் மலர்ந்தருள பரம பக்தனான அர்ச்சுனன் கேட்டுக்கொண்டிருக்க அந்த நிலையிலேயே ( குருபரம்பரை வழியாக இல்லாமல்) நான் கீதோபதேசத்தை செவிமடுத்திருக்கிறேன்.

 திருதராஷ்டினன்: சஞ்சயா! இதைக்கேட்டு கொண்டிருந்ததால் இதன் மூலம் உனக்கு ஏற்பட்ட பிரபாவம் என்ன?

சஞ்சயன்: பேரரசே! பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் பக்த  அர்ச்சுனனும் தமக்குள் நிகழ்த்திய இந்த அற்புதமான் உரையாடலை நினைத்து நினைத்து புல்லரித்து போனேன்.மகிழ்ந்து பெருமிதம்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

திருதராஷ்டினன்: சஞ்சயா! இப்பெருமித மகிழ்ச்சிக்கு உனக்கு வேறு காரணமும் உள்ளதா?

சஞ்சயன்: உள்ளது மகராஜா பகவான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் மிக அற்புதமான ஒப்புயர்வில்லாத அந்த விஸ்வரூப தரிசனத்தை நான் என்னுக்குள் நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் பேராச்சரியம் ஏற்படுகிறது.அதை எண்ணி எண்ணி ஆனந்தப்பரவசம் அடைகிறேன்.

திருதராஷ்டினன்: சஞ்சயா! இப்போழுது நீ என்ன தீர்மானத்திற்கு வந்திருக்கிறாய்?

சஞ்சயன்: மகாராஜா! எந்த இடத்தில் எவர்தரப்பில் யோகேஸ்வராரன ஸ்ரீகிருஷ்ண பகவான் இருக்கிறாரோ, எங்கு காண்டீப தனுர்தாரியான மாவீரர் அர்ச்சுனன் இருக்கிறாரோ ,அங்கு தான் வெற்றி ஐஸ்வரியம்,திடமான நீதி, நெறி இடம் பெறும். இதுவே திண்ணம், இதுதான் எனது திடமான தீர்மானம்

17.நம்பிக்கையின் பிரிவுகள்

November 19, 2009 Leave a comment

அர்ச்சுனன்: வேண்டுகோள்:
 கிருஷ்ண பரமாத்மாவே சாஸ்திர நியமங்களையும் விதிமுறைகளையும் அறியாத மனிதர்கள் பக்தி சிரத்தையுடன் உங்களைப் பூசிக்கிறார்கள்.வேள்வி முதலான புனித அநுட்டானங்களை மேற்கொள்கிறார்கள். அவர்களுடைய பக்தி சிரத்தை சாத்வீகமானதா? ராஜஸமானதா? அல்லது தாமசமானதா?( அமைதியானதா? ஆடம்பரமானதா? கொடுமையனதா?)

பகவான்: அர்ச்சுனா!! மனிதர்களின் இயல்பு வழியாக ஏற்படும் சிரத்தை ஈடுபாடு மூன்று வகைப்படும்.அவை சாத்வீகம் ராச்சதம், தாமசம்.

அர்ச்சுனன்: மனித இயல்பின் மூலம் ஏற்படும் அந்த ஈடுபாடு ஏன் 3 வகைப்பட வேண்டும்?

பகவான்: பரத வம்சத்து புதல்வனே! எல்லா மனிதர்களிடமும் இடம்பெற்றுள்ள சிரத்தை அவர்களுடைய அந்தக் கரணம் எனும் உள்மன உணர்வுக்கு ஏற்றவாறு அமைகிறது. ஈடுபாடு கொண்டு முனைபவன் சிரத்தை மயமானவன்.ஆகையால் எந்த மனிதனுக்கு எத்தகைய சிரத்தையுள்ளதோ அதன் சொரூபமாக அவன் இயல்பும் அமையும்.அவனது செயலும் நிலையும் அந்த இயல்புப்படியே அமையும்.

அர்ச்சுனன்: அப்படியானால் பகவானே அந்த சிரத்தையை எப்படி இனம் கண்டு கொள்வது?

பகவான்: சாத்வீகமான இயல்பு கொன்ட மனிதன் தேவதைகளை பூசித்து ஆராதிக்கின்றான்.இராட்சத இயல்பு கொண்டவன் யட்சர்களையும்,இராட்சதர்களையும் பூசிக்கிறார்கள்.தாமச குணம் கொண்டவர்கள் பூதங்கள் பிரேதங்களை பூசிக்கிறார்கள்.

அர்ச்சுனன்: சிரத்தை ஈடுபாடு இல்லாத மனிதர்களுக்கு என்ன அடையாளம்?

பகவான்: அர்ச்சுனா! சிரத்தையில்லாத மனிதர்கள் வீண் பெருமை கர்வம், பேராசை தீவிர ஈடுபாடு பிடிவாதம் உள்ளவர்களாக இருப்பார்கள்.சாத்திர விதிகளுக்கு புறம்பாக கொடும் தவத்தை மேற்கொள்கிறார்கள்.ஐம்பூதப் பொருட்களால் ஆன சரீரத்தையும் அந்தக் கரணத்தில் உள்ள என்னையும் துன்புறுத்துகிறர்கள்.இத்தகைய அஞ்ஞானிகளை நீ அசுர சுபாவம் உள்ளவர்கள் என்பதை உணர்ந்து கொள்.

அர்ச்சுனன்: பகவானே! இதுவரையில் நீங்கள் பூசை, ஆராதனை, தவம் மூலமாக சிரத்தை கொண்டவர்கள், சிரத்தை இல்லாதவர்கள் என்னும் மனிதர்களை இனம் காண்பதைப் பற்றி உபதேசித்தீர்கள்.ஆனால் எவர் பூசை தவம் செய்யாதிருக்கிறார்களோஅவர்களை எப்படி அறிந்து கொள்வது?

பகவான்:அர்ச்சுனா! உணவின் சுவையைக் கொண்டு அதனை விரும்புபவர்களை அடையாளம் காணலாம்.( உணவு பழக்கம் மூலம் உண்பவர்களின் தராதரம் தெரியவரும்). காரணம் எல்லா மனிதர்களுக்கும் மூன்றுவகை உணவுகள் பிரியமானவை.இதைப் போல் வேள்வி,தவம், தானம் மூன்றும் மூன்று வகைப்பட்டவர்களுக்கும் பிரியமானவை. இந்த வித்தியாசத்தை இப்போது சொல்கிறேன் கேள்.

அர்ச்சுனன்: சாத்வீகமான மனிதனின் சுவை ஈடுபாடு எத்தகைய உணவில் ஏற்படுகின்றது?

பகவான்:அர்ச்சுனா! ஆயுள்,சாத்வீக குணங்கள்,உடல் வலிமை,ஆரோக்கியம்,சுகம்,மகிழ்ச்சி இவைகளை வளர்ப்பவையும் ,நிலையாக இருப்பவையும் இதயத்திற்கு வலிமை அளிப்பவையும் சுவையானவையும், ஈரப்பசை கொண்டவையுமான உணவுப்பண்டங்கள் சாத்வீகமான மனிதனிற்கு பிரியமானவைகள்.

அர்ச்சுனன்: இராட்சத மனிதனிற்கு பிடித்தமான உணவுகள் எவை?

பகவான்:மிகக் கசப்பும், புளிப்பும், உப்பும் உள்ளவை.மிகச் சூடானவை,காரமானவை,எரிச்சல் ஏற்படுத்துபவை.இத்தகைய பதார்த்தங்கள் இராட்சத குணம்படைத்தவர்களுக்கு பிடித்தவை.இவை துன்பத்தையும் சோகத்தையும், வருத்தத்தையும் நோயையும் ஏற்படுத்துகின்றன.

அர்ச்சுனன்: தாமச இயல்பு கொண்டவர்களுக்கு விருப்பமானவை எவை?

பகவான்: அர்ச்சுனா! அரைகுறையாக வெந்து சுவையில்லாதது,கொடுநாற்றம் கொண்டது.( மதுவகை,வெங்காயம்,உள்ளிப்பூண்டு போன்றவை)பழையது, ஊதிப்போனது, தீண்டத்தகாதது( இறைச்சி, மீன்,முட்டை முதலியவை).இப்பொருட்களில் தாமச குணமுள்ள மனிதர்களுக்கு ருசி சுவை மிக விருப்பம் அதிகம்.

அர்ச்சுனன்: பகவானே! ஆகாரவகைகள் மூன்றுவகைப்படுவதை அறிந்தேன்.இதேபோல் வேள்வி,தவம், தானம் இவையும் மூன்று வகைப்படும் என்றீர்கள்.இவைகளுக்குள்ள வேள்வியின் பிரிவுகளைப் பற்றி கூற வேண்டும்?

(முதலில் யசனம், பூசனம், போசனம், வேள்வி வழிபாடு உணவு மூன்றின் மூலமாக ஈடுபாடு சிரத்தையை அறியச்செய்தார்.அதன்மூலம் சாஸ்திர விதிகளை அறியாமை காரணமாகப் புறக்கணிக்கப் படுபவர்களை இனம் காணமுடியும்.ஆனால் சாஸ்திர விதிமுறைப்படி வேள்வி வழிபாடு உண்ணுதல் புரிபவர்களின் வித்தியாசங்ளை அறியச் செய்வதே இங்கு வேள்வி,தவம்,தான்ம் மூன்றுக்குரிய மூவகைப் பேதங்களையும் போதிக்கலானார்)

பகவான்: அர்ச்சுனா! வேள்வி செய்வது,நம் கடமையெனும் உணர்வோடு, மனப் பக்குவத்தோடு பயனை பற்றிச் சிந்திக்காமல் , சாஸ்திர விதிமுறைப்படி செய்யப்படும் வேள்வி சாத்வீகமானது.

அர்ச்சுனன்: இராட்சத வேள்வி எத்தகையது?

பகவான்: பரதகுல செல்வனே! பயனை எதிபார்த்து சுயநலத்திற்காக செய்யப்படுவதும் பிறர் பராட்ட வேண்டும் என்னும் நோக்கத்தில் பகட்டாக செய்யப்படுவதும் இராட்சத வேள்வி எனப்படும்.

அர்ச்சுனன்: பகவானே! தாமச வேள்வி எத்தகையது?

பகவான்: சாஸ்திர விதிகளிற்கு புறம்பானதும் அன்னதானம் இல்லாததும் மந்திர உச்சரிப்பு அற்றதும் தட்சணை அளிப்பு இல்லாததும் சிரத்தையற்றதுமான வெறும் பகட்டு வேள்வி தாமச வேள்வி எனப்படும்.

அர்ச்சுனன்: பகவானே! தவம் எத்தனை வகைப்பட்டது என்பதை உபதேசிக்க வேன்டுகிறேன்?

பகவான்: அர்ச்சுனா!தவஸ்( தவம்) மூன்று வகைப்பட்டது.உடலால் வாக்கால், மனத்தால் புரிவது.தேவதைகள், பிராமணர்கள், குருமார்கள்,ஜீவன் முத்தர்களான் மகாபுருஷர்கள் இவர்களை போற்றி பூசிப்பது.நீர், மண் முதலியவற்றால் உடலைப் பரிசுத்தமாக்கி கொள்வது.உடல்சார்ந்த பணிகளை எளிதாகவும், நேரியதாகவும் வைத்திருத்தல்( பதட்டம் பிடிவாதம் கொள்ளாது இருத்தல்) பிரம்ம சரியத்தை கடைப்பிடித்தல். உடலால் பிறருக்கு தீங்கு செய்யாதிருத்தல் .இதுதான் உடல் சார்ந்த தவம்.

அர்ச்சுனன்: வாக்கினால் புரியும் தவம் எத்தகையது கண்ணா?

பகவான்: எரிச்சல் ஊட்டுவதும் ஆத்திரம் ஊட்டுவதுமாக இல்லாத, உண்மையாக,பிரியமான நலம் தரும் வார்த்தைகளைப் பேசுவது.கல்வி வேள்விகளில் ஈடுபட்டிருப்பது.ஜெபம், அர்ச்சனை முதலியவற்றை பயில்வது.இவைதான் வாக்கினால் புரியும் தவம்.

அர்ச்சுனன்: மனத்தால் புரியும் தவம் எது கண்ணா?

பகவான்: அர்ச்சுனா! மனத்தை மகிழ்சியாக வைத்து கொள்வது.எப்போழுதும் இனிதாகப் பழகுவது.சிந்திக்கும் திறன்,மனவடக்கம்,தூயகருத்து இவற்றை முறையாக பயன்படுத்துவது தான் மானசீக தவம்.

இம்மூன்று வகை தவங்களையும் மிக்க ஈடுபாட்டுடன் பயனீட்டும் ஆசையில்லாமல் நன்றாக செய்து வந்தால் அதுதான் சாத்வீகமான தவம் எனப்படும்.

அர்ச்சுனன்: இராட்சத தவம் எது கண்ணா?

பகவான்: அர்ச்சுனா! எந்தத் தவம் சொந்த நலனுக்காகவும் , கெளரவுத்துக்காகவும் , போற்றுதலுக்காகவும் செய்யப்படுகிறதோ மேலும் பிறரை வியக்க வைக்க வேண்டிய பாசாங்காக செய்யப்படுகிறதோ,அதுதான் ரஜோகுணம் மேலோங்கிய பகட்டுத்தவம் .இதனால் நல்ல பலன் ஏற்படாது.கிடைக்கும் சிறிதளவு பலனும் அழிந்தே போகும்.

அர்ச்சுனன்: பகவானே! தாமசகுணம் மேலோங்கும் தவம் எது?

பகவான்: எந்த தவம் அறியாமையும் பிடிவாதமும் கொண்டு தம்மை வருத்திக்கொண்டு பிறரையும் துன்புறுத்திக் கொண்டு செய்யப்படுகிறதோ அது தாமச தவம் எனப்படும்.

அர்ச்சுனன்: பகவானே! இப்போது தானம் மூன்றுவகைப்படுவது எப்படி என்பது உபதேசிக்க வேண்டுகிறேன்?

பகவான்: அர்ச்சுனா! தானம் கொடுப்பது நம் கடமை எனும் கருத்துடன் பிரதிபலன் எதையும் எதிர்பராமல் செய்ய வேண்டும்.மேலும் இடம் , காலம், தகுதி அறிந்து நல்லவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.இத்தகைய தானம் சாத்வீகமானது.

அர்ச்சுனன்: இராட்சத தான்ம் எத்தகையது பகவானே?

பகவான்: அர்ச்சுனா! எந்தத் தானம் பிரதி உபகாரம்  பெறுவதற்காகவோ அல்லது பிரதி பலனை எதிர்பார்த்து கொடுக்கப்படுகிறதோ,மேலும் கொடுத்து தொலைக்க வேண்டியிருக்கிறதே என்று வேண்டா வெறுப்பாக கட்டாயமாக அளிக்கபடுகிறதோ அதுவே இராட்சத தானம்.

அர்ச்சுனன்: தாமச தானம் எத்தகையது?

பகவான்: எந்தத் தானம் மரியாதையில்லாமல் அலட்சியமாக அவமதிப்புடன் தகுதியற்றவர்களுக்கு தகாத காலத்தில் அளிக்கப்படுகிறதோ அது தாமச தானம்.

அர்ச்சுனன்: பகவானே! சிரத்தையுள்ள மனிதன் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட வேள்வி,தவம்,தானம் முதலிய அறப்பணிகளை எவ்வாறு தொடங்க வேண்டும்?

பகவான்: அர்ச்சுனா! ஓம்,தத்,சத்( பிரணவ சொருபமான பரமாத்மா தான் உண்மையில் நிலையானது) எனும் மூன்று சொற்களால் குறிக்கப்படும் பரமாத்மா தான் படைப்பின் தொடக்கத்தில் வேதங்களையும் பிராமண சாஸ்திர கிரந்தங்களையும் வேள்விகளையும் படைத்தது.ஆகையால் பரமாத்மாவின் பெயரைப் போற்றி வேள்வி முதலான பணிகளை தொடங்க வேண்டும்.

அர்ச்சுனன்: பகவானே! ஓம் என்ற பிரணவம் எங்கு பயன் படுத்தப்படுகிறது?

பகவான்: அர்ச்சுனா! வைத்தீக சித்தாத்தங்களை ( கோட்பாடுகளை) ஏற்றுக் கொண்ட மனிதர்களுக்கு சாஸ்திர விதிப்படி ஏற்படுத்தப்பட்ட வேள்வி, தானம்,தவம் எனும் பணிகளை ஓம் என்று உச்சரித்துத் தான் ஆரம்பிக்கப்படவேண்டும்.அதுதான் தொன்று தொட்ட வழக்கம்.

அர்ச்சுனன்: பகவானே! தத் எங்கே பயன்படுத்தப்படுகிறது?

பகவான்:அர்ச்சுனா! தத் எனும் பெயரால் கூறப்படும் பரமாத்மாவிற்கு எல்லாமே உள்ளது.எல்லாம் அதற்கே உரிமையானவை என்கிற எண்ணம் நம்பிக்கையாக அமைய வேண்டும் .இந்த திட நம்பிக்கையுடன் உலக பந்தங்களிலிருந்து முத்தி பெற விரும்பும் மனிதர்கள்  பயனைக் கருதாமல் வேள்வி முதலிய கடமைகளை செய்துவர வேண்டும்.

அர்ச்சுனன்: பகவானே!  சத் எங்கே பயன்படுத்தப்படுகிறது?

பகவான்:பார்த்தா!பரமாத்மாவின் சத் எனும் திருநாமம் எல்லா இருப்பிற்கும் ( நிலைப்பாடு)சிரேஷ்டமான தன்மைக்கு பயன்படுத்தப்படுகிறது.போற்றத் தகுந்தது.சிரேஷ்டமான செயலுடன் “சத்” எனும் சொல் சேர்க்கப்படுகிறது.வேள்வி, தவம், தானம் இவைகளில் மனிதனுக்கு நிலைகூட “சத்” எனப்படுகிறது.எவ்வளவுதான் சொல்கிறது? அந்த பராத்மாவிற்காக செய்யப்படும் செயல்கள் யாவுமே “சத்” என்ப்படும்.

அர்ச்சுனன்: பகவானே!  சத் என்பதற்கு மாறான அசத் காரியங்கள் எவை?

பகவான்:பார்த்தனே! சிரத்தையில்லாமல் செய்யப்படும் வேள்வி கொடுக்கப்படும் தானம், அநுட்டிக்கப்படும் தவம் முதலிய காரியங்களை சத் எனப்படும்.அசத் காரியங்களுக்கான பலன் இப்பிறவியிலும் இறந்த பிறகும் கூட ஏற்படுவதில்லை .அதாவது அசத்துக்கு எங்குமே நல்ல பலன் ஏற்படுவதில்லை.

16.தெய்வீக மற்றும் அசுர இயல்புகள்

November 19, 2009 Leave a comment

அர்ச்சுனன்: மிகவும் ரகசியமான் அந்தத் தத்துவங்களைஅறிந்துகொள்ள தகுதி கொண்டவர் யார்?

கண்ணன்: இறையருளும் செல்வமுள்ள பக்தன் அந்தத் தகுதியை கொண்டவனாகிறான்.
இறைவன்( தேவன்) பரமாத்மா   இறைவனின் அருட்செல்வம் நற்குணம் இதைத்தான் இறையருட்செல்வம் (சம்பத்) என்பர்.இதன் மூலமாக பரமாத்மாவை அடைய முடியும்.

அர்ச்சுனன்: கண்ணா இறையருட் செல்வங்கள் பெற்றவனின் ( இலட்சணங்கள்)என்ன?

பகவான்: அர்ச்சுனா!

1. என்னிடமே திட நம்பிக்கையுடன் ஈடுபட்டு அச்சமின்றி வாழுதல்.
2. அந்தக் கரணத்தில்( உள்மனதில்) என்னை அடைய வேண்டும் எனும் திடமான் தீவிர நிச்சயம் கொள்வது.
3. என்னை தத்துவ விளக்கத்துடன் அறிவதற்கு ஒவ்வொரு சூழ்நிலையிலும் சமநிலையில் இருப்பது.
4.சாத்வீக தானம் செய்வது.
5 ஐம்புலன்களையும் சுயகட்டுப்பாட்டில் வைத்திருத்தல்
6 தன் கடமைகளை முறையாக செய்து வருதல்.
7.சாஸ்திரங்களின் தீர்ப்புகளை( சித்தாத்தங்களை) விழுமிய கருத்துகளாக கொன்டு சொந்த வாழ்வில் செயல்படுத்தல்.
8. தன் கடமைகளைச் செய்து வரும்போது ஏற்படும் இன்னல் இடையூறுகளை மகிழ்ச்சியுடன் பொறுத்துக் கொள்வது.

9. உடலாலும் உள்ளத்தாலும் வாக்காலும் எளிமையாக வாழ்வது.
10. உடல்,உள்ளம் வாக்குகளால் எந்தப்  பிராணிக்கும் சிறிதளவாகிலும்துன்பம் தராது இருத்தல்
11. கண்டதையும் , கேட்டதையும் , அறிந்ததையும்  உள்ளபடியே இனிய சொற்களால் சொல்வது.
12. எவரிடமும் எதனிடமும் குரோதம் ( வெறுப்பேறிய வென்சினம்) கொள்ளாது இருத்தல் .எல்லாமே ஈஸ்வர சொரூபம் என்ற உணர்வுடன் பழகுதல்.

13. உலகியல் ஆசை அபிலாசைகளை துறப்பது.
 14. அந்தக் கரணத்தில் விருப்பு வெறுப்புகளால் எழும் கொந்தளிப்புகளை அடக்குவது
 15.கோள் பேசாதிருத்தல்.
 16. எல்லா உயிரினங்களிடத்திலும் இரக்கம் பரிவு கொண்டு பழகுதல்.
 17. உலகியல் பொருட்களில் பேராசை கொள்ளாது இருத்தல்.
 18. எந்நேரமும் மென்மையான இதயம் கொண்டிருத்தல்.
  19. செய்யத்தகாததை செய்வதில் வெட்கப்படுதல்.
 20 சபலசித்தம், அவசரப்படுதல் இரண்டும் இல்லாதிருத்தல்.

 21. உடல், வாக்கு இரண்டிலும் செல்வாக்கும் பொலிவும் கொண்டிருத்தல்.
22. தண்டனை அளிக்கும் அதிகாரம் , திறமை இருந்தாலும் குற்றவாளியின் குற்றத்தை மன்னித்தல்.
23. எந்தச் சூழ்நிலையிலும் தைரியமும் பொறுமையும் கொண்டிருத்தல்.
24. உடலை தூயதாக வைத்திருத்தல்.
25 பழிவாங்கும் உணர்ச்சி இல்லாதிருத்தல்.
26. உயர்வு மனபன்மையும் செருக்கும் கொல்ளாது இருத்தல்.

பரதவம்சத்து வீரனே! இவையாவும் தெய்வீக சம்பத்து ( இறையருள் செல்வம்) பெற்ற மனிதனின் இலட்சணங்கள், இந்த இயல்புகளைக் கொண்டிருக்கும் மனிதன் தான் என்னிடம் பக்தி செலுத்த தகுதி பெற்றவன்.

இந்த இடத்தில் ஓர் சந்தேகம் எழும்.மேற்கூறிய இலட்சணங்கள் கொண்ட மனிதன் தான் ஆன்டவனிடம் பக்தி செலுத்த தக்கவர்கள்.மற்றவர்கள் அல்லர்.தீய இயல்புகள் கொண்டவர்கள் பக்தி புரியக் கூடாதா?பக்தி புரியலாம்.தீயமனிதன் மன்ம்திருந்தி ஆண்டவனை வழிபட்டு மேன்மையை பெற முயன்றால் அவனுக்கு நற்பலன் கிட்டும்.அவன் விரைவிலேயே   அறநெறி சீலராக மாறுகிறான்.திருந்திய மேம்பட்ட அந்த மனிதரிடமும் இறையருள் செல்வம் இடம் பெறுகிறது. பகவத்கீதை அத்தியாயம் 9 சுலோகம் 30.3

அர்ச்சுனன்: பகவானே! தெய்வீக சம்பத்துக்கு அருகதையற்றவன் எவன்?

கண்ணன்: அசுரத்தன்மையுள்ள செல்வத்தைக் கொண்டவன்.( அசு என்றால் உயிர் . உயிர் நிலைகளிலேயே பற்றுக்கொண்டு வாழ்பவர்கள்.அவைகளை விரும்புவர்கள்”அசுரர்” எனப்படுவர்.உடலைப்பேணி உடல் இன்பத்திற்கககவே வாழ்ந்தும்
 வாழ விரும்பியும் இந்த உடலே நான் தான் என்று கருதுபவர் அசுரர்.நான் இறக்க மாட்டேன்.எப்போதும் வாழ்ந்து மகிழவேண்டும்.சுகபோகங்களை அநுபவித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.இந்த நினைப்பும் இதற்கான முனைப்பும்தான் அசுர சம்பத்து ( தீயசெல்வம்) எனப்படும்.

அர்ச்சுனன்: பகவானே! அசுரசம்பத்துக் கொண்டவனின் அடையாளங்கள் எவை?

பகவான்: அர்ச்சுனா! 

1. வெளிப்பகட்டுடன் செயற்கைப் பெருமையை காட்டிக் கொள்ளுதல்.
2.கர்வம் கொள்ளுதல் , பற்றுதல் கொண்டுள்ள பொருட்களை வைத்துக் கொண்டு செருக்குடன் பெருமைப்படுதல்.
3.செருக்கடைய வைக்கும் பொருட்களிலும் கருத்துக்களிலும் ஈடுபட்டு பெருமிதம் கொள்ளுதல்.
4. குரோதம் கொள்ளுதல்.
5.மனம், வாக்கு செயல்களில் கடுமையும் கொடுமையும் கொள்ளாதிருத்தல்.
6.நல்லது பொல்லாதது.உண்மை -பொய், கடமை -கடமையில்லாதது,செய்யத்தக்கது செய்யத்தகாததுமுதலியவற்றை பகுத்தறிந்து கொள்ளும்  விவேகத்திற்கு மதிப்பு அளிக்காது இருத்தல்.

அர்ச்சுனா! இவைதான் அசுரசம்பத்தைப் பெற்ற மனிதருக்குள்ள அடையாளங்கள். இவர்கள் என்னிடம் பக்தி செலுத்த தகுதியற்றவர்கள்.

அர்ச்சுனன்: பகவானே! இந்த இறையருட் செல்வத்திற்கும்  அசுர இயல்பிற்கும் ஏற்படும் இயல்புகள் என்ன?

கண்ணன்: அர்ச்சுனா! தெய்வீகச் செல்வம் பிறவிப் பெருந்தளைகளைப் போக்கி முத்தியெனும் வீடுவேறு அளிக்க வல்லது.அசுரசம்பத்து பந்தங்களை ஏற்படுத்தி ஜனன மரணச் சூழல்களில் சிக்க வைக்கிறது.எனவே இவற்றையிட்டு நீ கவலைபடாதே.நீ தெய்வீகச் செல்வத்தை பெற்றிருப்பவன்.

அர்ச்சுனன்: பகவானே! அசுரசம்பத்து எப்படி பந்தங்களில் சிக்க வைக்கிறது?

கண்ணன்: அர்ச்சுனா! இந்த உலகில் இருவகைப் பிராணிகளின் படைப்பு நிகழ்கிறது.தெய்வீக  சிருஷ்டி , அசுரத்தனமான சிருஷ்டிதெய்வீக சம்பத்து பற்றி  விளக்கமாக சொன்னேன்.இப்போது அசுரசம்பத்து  அசுர இயல்பான செல்வம் பற்றி விரிவாக கேட்டுக் கொள்.அசுரசம்பத்துள்ளவர் எதில் ஈடுபடவேண்டும்.எதிலிருந்து விலகியிருக்க வேன்டும் எனும் முறையை அறிந்து கொள்வதில்லை.அவர்களிடம்தூய நடத்தைகளும் இருப்பதில்லை.அவர்கள் சத்தியத்தை கடைப்பிடிப்பதில்லை.

அர்ச்சுனன்: பகவானே! அசுரசம்பத்துக் கொன்ட மனிதரிடம் ஆசார அநுஷ்டானங்கள் முதலியவை ஏன் இருப்பதில்லை? அவைகளை அவர்கள் ஏன் கடைப்பிடிப்பதில்லை?

கண்ணன்: அர்ச்சுனா! அவர்களுடைய நோக்கமே விபரீதமானது.அவர்களுடைய கருத்து இந்த உலகம் பொய்.இதிலுள்ள சாஸ்திரம்,அற்நெறி,தர்மம் எதுவும் உண்மையில்லை.இந்த உலகில் தர்மம்,அதர்மம்,புண்ணியம்,பாவம் முதலியவற்றிற்கு சிறிதும் மதிப்புக் கிடையாது.இந்த உலகை படைத்தவன் கடவுள் இல்லை.ஆணும்பெண்ணும் ஒருவரையொருவர் விரும்பினார்கள்.அந்த இருபாலரின் சேர்க்கையால் இந்த மானிட சமூகமும் பிறந்தது.உலகம் உருவாகிற்று.ஆகையால் இந்த உலக உற்பத்திக்கு காரணம் காம இம்சைதான் .இதைதவிர வேறு எதுவும் எவருக்கும் காரணமில்லை.

அர்ச்சுனன்: பகவானே! அசுரசம்பத்துக் கொண்டவர்களின் செயல்கள் எவ்வாறு இருக்கின்றன?
கண்ணன்: அர்ச்சுனா! மேல்சொன்ன நாத்திக நோக்கை புகலடைந்த அவர்கள் தனது நித்திய அளிவற்ற சொருபமான ஆத்மாவை ஒப்புக்கொள்வதில்லை.அவர்களுடைய அறிவு கீழ்த்தரமாக உள்ளது.அவர்களுடைய செயல்கள் யாவும் அச்சமூட்டுபவை.உக்கிரமானவை..அவர்கள் இந்த உலகிற்கே எதிரிகள். இத்தகைய அசுரத்தன்மை கொண்டவர்களின் திறமை , வலிமை எல்லாம் பிறரை அழிப்பதற்காகவே ஏற்பட்டிருக்கிறது.

அர்ச்சுனன்: நாத்திக நோக்கைப் புகலடைந்த அசுரத்தன் மையர் என்ன செய்கிறார்கள்?

கண்ணன்: அவர்கள் எப்போதுமே நிறைவேறாத பேராசைகளுக்கு அடிமையாகிறார்கள். பகட்டு, செருக்கு, மமதைவெறி நிறைந்து செயல்படுகிறார்கள்.மிக மோசமான வழிமுறைகளை கடைப்பிடிக்கிறார்கள்.அவர்கள் மதிமயக்கம் காரணமாக பல தீய கருத்துகளைப் பிடிவாதமாக மேற்கொண்டு சமூகத்தைச் சீர்குலைந்து வருகிறார்கள்.

அர்ச்சுனன்: அவர்களின் கருத்துக்கள் எத்தகையவை பகவானே?

கண்ணன்:அர்ச்சுனா அவர்கள் மரண காலம் வரையும் தொடரும் பெரும் கவலைகளுக்கும் குழப்பங்களுக்கும்  அடிமையாகிறார்கள்.பெளதீக பொருட்கள் சேகரிப்பதிலும் ,அவற்றைச் சேமிப்பதிலும் அவற்றால் அநுபவிப்பதிலுமே ஈடுபட்டிருப்பவர்கள்.உலகில் வாழ்வது , உண்டு உறங்கி சுகித்திருப்பதற்கே என்று தீர்மானிப்பத்ற்கு எல்லாமே இந்த சுயநல வாழ்க்கைதான் என்ற நிர்ணயத்துடன் அவர்கள் செயல்படுகிறார்கள்.

அர்ச்சுனன்: அவர்கள் எந்த நோக்கத்தை முன்னிட்டு செயல்படுகிறார்கள் பகவானே!

கண்ணன்: அர்ச்சுனா! ஏராளமான ஆசைகளில் சிக்கிய அவர்கள் கொடூரமான அசுரத்தன்மை கொண்டவர்கள்.காமம் குரோதம்,மதம் மாச்சரியம் முதலிய தீய இயல்புகளை சரணடைகிறார்கள்.சுகபோகம் தான் வாழ்க்கை என்று நம்பி அநியாய வழிகளில் பொருளீட்டுகிறார்கள் இதற்காக பலமுறைகேடுகளையே மேற்கொள்கிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! அவர்களுடைய இலட்சிய ஆசைகள் எத்தகையவை?

கண்ணன்: அர்ச்சுனா! இன்று இவ்வள்வு பண்ம் சம்பாதித்துவிட்டோம்.இனி இதைக்கொண்டு எம் மனோரதங்களை நிறைவேற்றிக்கொள்வோம்.இவ்வள்வு செல்வம் இப்போது இருப்பது இந்தளவு செல்வத்தை சம்பாதிக்க வேண்டும் என்று ஆசை கொள்கிறார்கள்.

அர்ச்சுனன்: அவர்களுக்கு மேலும் என்னவெல்லாம் ஆசைகள் ஏற்படுகின்றன?

கண்ணன்: அர்ச்சுனா! அவர்கள் இவ்வாறு சிந்திக்கிறார்கள்.அதாவது நாம் அந்த சத்துருவை அழித்துவிட்டோம்.இதேபோல் மற்ற எதிரிகளையும் அழிப்போம். நாம் சர்வ வல்லமை கொண்டவர்கள் .பல வெற்றிகளைக் கண்டவர்கள்.வலிமை மிகுந்தவர்கள்.சுகபோகிகள், செல்வந்தர்கள்,ஏராளமான மனிதர்கள் நம்மிடம் நம் தரப்பில் துணையிருக்கிறார்கள்.இங்கு நமக்கு நிகர் எவருமில்லை .எவரால் நம்மை எதிர்க்க முடியும்? நம் விருப்பப்படியே யக்ஞங்களைச் செய்வோம்.தான தர்மங்களைச் செய்வோம்.பிறகு ஆனந்தமாக கேளிக்கைகளில் மூழ்கி மகிழ்வோம்.இவ்வாறு எல்லாம் அறியாமையில் மதிமயங்கி மனேரதங்களை ( தனது தீவிர விருப்பங்களை)வளர்த்துக் கொள்கிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! இப்படியானவர்கள் இறந்த பிறகு எந்தக் கதியை அடைகிறார்கள்?

கண்ணன்: அர்ச்சுனா! பலதரப்பட்ட பிரமைகளிலும் பேதமைகளிலும் சிக்கிய நாத்தியர்கள் மோக வலைக்குள் கட்டுண்டு கிடக்கிறார்கள்.இதனாலேயே பொருள்களைச் சேகரிப்பதிலும் அநுபவிப்பதிலும் தீவிர விருப்புடன் ஈடுபட்டிருப்பதால் கொடிய பயங்கரமான நரகத்தில் விழுகிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! சுகபோகங்களில் விருப்புற்று வாழும் அந்த அசுர சொத்துக்காரர்களை அழிவுப் பாதையில் தள்ளும் இயல்புகள் தன்மைகள் எவை?

கண்ணன்: இவர்கள் தம்மையே மதிப்பு மிக்கவர்களாகவும் தாங்களே மேம்பட்டவர்களாகவும் கருதுகிறார்கள்.இவர்கள் மிகவும் பிடிவாதக்காரர்கள்.செல்வமும் செல்வாக்கும் இருப்பதில் செருக்குள்ளவர்கள்.

அர்ச்சுனன்: இத்தகையவர்கள் சுபகாரியங்களையும் செய்யலாம் அல்லவா?

கண்ணன்: ஆம் அர்ச்சுனா. செய்யலாம் செய்கிறார்கள்.ஆனால் பகட்டாக போலித்தனமாக செய்கிறார்கள்.தம் பெருமையை பறை சாற்றிக் கொள்வதற்காக செய்கிறார்கள்.முறைப்படி ஒழுங்காக செய்வதில்லை.செய்வதாக பெயர்பெறவே விரும்புகிறார்கள்.

அர்ச்சுனன்: ஏன் அவர்கள் இப்படிச் செய்கிறார்கள் பகவானே?

கண்ணன்: காரணம் இதுதான்.அர்ச்சுனா அகந்தை , வீண் பிடிவாதம், கர்வம், பேராசை, வென்சினம் இவைகளை சரணடைந்து இவைகளால் ஈற்கப்படுகிறார்கள்.

அர்ச்சுனன்: அவர்களுடைய தன்மைகள் மேலும் எத்தகையது?

கண்ணன்: அசுரத்தன்மையுள்ல அந்தமனிதர்கள் தம்மிடமும் பிறரிடமும் அந்தர்யாமியாக உள்ள என்னை வெறுக்கிறார்கள்.என்னிடமும் என் பக்தர்களிடமுள்ள பண்புகளை குற்றமாக தீமையாகக் கருதுகிறார்கள்.

அர்ச்சுனன்: இத்தகைய அசுரத்தன்மையின் விளைவுகள் என்ன?

கண்ணன்: அர்ச்சுனா! அந்த வெறுப்புற்ற , குரூரமான, கொடிய இயல்புகளைக் கொண்ட மனிதர்களை மிகவும் நீசர்கள் புனிதமற்றவர்கள் என்பதால் அவர்களை நாய்,கழுதை, புலி, காக்கை,ஆந்தை, கழுகு, பாம்பு, தேள் முதலிய அசுரத்தன்மை கொண்ட இனங்களில் பிறந்து மறுபடியும் இறக்கும்படி செய்து வருகிறேன்.

அர்ச்சுனன்: அதன் பிறகு என்ன ஆகிறது பகவானே?

கண்ணன்:  குந்தியின் மைந்தனே! அந்த மூடர்கள் என்னை அடைய முடியாமல் எல்லா பிறவிகளிலும் அசுரப் பிறவிகளாக பிறக்கிறார்கள். பிறகு அதனிலும் மோசமான நரகங்களில் வீழ்கிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே! அவர்கள் அதமப் பிறவியிலும் அதமகதியான நரகத்திலும் உழல்கிறதிற்கு காரணம் என்ன?

கண்ணன்:  அர்ச்சுனா! தீவிர இச்சை , குரோதம், பேராசை இவை மூன்றுவகையான நரகங்களுக்கு வாசல்கள்.இவையே மனிதனை கீழ்நிலையில் தள்ளுபவை.ஆகையால் இம்மூன்று தீய இயல்புகளையும் விட்டு விட வேண்டும்.

அர்ச்சுனன்: காமம், குரோதம், உலோபம்  இம் மூன்று இழி இயல்புகளையும் துறப்பதால் என்ன ஆகும்?

கண்ணன்:  குந்தியின் மைந்தனே! எந்த மனிதன் நரகத்திற்கு இட்டுச் செல்லும் அம்மூன்று இயல்புகளையும் அண்டவிடாமல் , தன் ஆத்ம சேஷமத்திற்காக அறநெறியுடன் வாழ்கிறானோ அவன் மேலான நற்கதியை அடைகிறான். சாஸ்திரங்களுக்குப் புறம்பான செயல்களைத் துறந்து விட்டு , தன் மேம்பாட்டுக்காக , பற்றுதல், பேராசை இல்லாமல் கடமைகளைச் செய்து வருவதால் அவன் நன்னெறியாளனாக மதிக்கப்படுகிறான்.

அர்ச்சுனன்: மேலான நற்கதி ( பரமகதி)எவருக்குக் கிட்டுவதில்லை பகவானே?

கண்ணன்:  எந்த மனிதர்கள் சாஸ்திர விதிகளைப் புறக்கணித்து விட்டு தம் மனம் போனபடி நடந்து கொள்கிறார்களோ, தம் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்பச் செயலாற்றுகிறார்களோ , நல்லவைகளை ஒதுக்கியும், தீயவைகளை மேற் கொண்டும் வாழ்கிறார்களோ, அவர்களுக்கு நற்கதி கிட்டுவதில்லை.மேலும் அவர்களுக்கு அந்தக்கரண சுத்தி ( உள்ளத்தூய்மை) ஏற்படுவதில்லை. உண்மையான சுகம் கிட்டுவதில்லை.நற்கதி கிட்ட வாய்பே இல்லை.

அர்ச்சுனன்: நல்ல செயல், தீய செயல் இவைகளை எப்படி இனம் கண்டு கொள்வது?

கண்ணன்:  செய்யத்தக்கது.தகாதது பற்றி சாஸ்திரம் தான் பிரமாணம். இதை அறிந்து கொண்டு சாஸ்திரம் விதித்துள்ள கடமைகளைச் செய்து வரவேண்டும்.சாஸ்திரத்தில் மறுக்கப்பட்டதை ஏற்கப்படாததை செய்யலாகாது.செய்யத்தக்கது.தகாதது எனும் காரியங்களுக்கும் சாஸ்திரப்பிரமாணம் தான் எடுத்துக்காட்டு.

 

14.ஜட இயற்கையும் முக்குணங்கள்

November 19, 2009 Leave a comment

பகவான்: அர்ச்சுனா!

ஞானங்களில் சிறந்த பரமஞானத்தை நான் உனக்கு மறுபடியும் போதிக்கிறேன் .இதை அறிந்ததால் எல்லாச் சிந்தனையாளர்களான ஞானிகள் பரம சித்தியை அடைந்திருக்கிறார்கள். எல்லா ஞானங்களிலும் தலை சிறந்த உத்தம ஞானம் இது.

அர்ச்சுனன்:  உத்தம ஞானத்திற்கு மேலும் என்ன மகிமை பகவானே?

கண்ணன்: அந்த ஞானத்தின் மூலம் என்னுடைய தருமநிலையை அடைந்த மகான்கள் எனது மேலான தன்மையை அடைகிறார்கள். அவர்கள் மஷா சிருஷ்டி காலத்தில் பிறப்பதுமில்லை. மஹா பிரளய காலத்தில் வருந்துவதுமில்லை.அமரத்துவம் பெற்றவர்கள்.

அர்ச்சுனன்: மஷா சிருஷ்டி காலத்தில் பிராணிகள் எப்படிப் பிறக்கின்றன?
 
கண்ணன்: பரமவம்சத்தின் பெருமகனே! என் மூல பிரகிருதிதான் உற்பத்தி இடம். நான் அதில் உயிரை( ஜீவன், சேதனன்) கருவாக அமைக்கிறேன்.அதிலிருந்து  எல்லாப் பிராணிகளும் உற்பத்தியாகின்றன.குந்தியின் மைந்தனே! வெவ்வேறு கருவறையிலிருந்து எவ்வளவு பிராணிகள் பிறக்கின்றனவோ,அவைகளின் உற்பத்தியில் தாயின் சொரூபமாகவும் ,தாயாகவும் என் மூல பிரகிருதி உள்ளது.விதை தூவும் பணியில் தந்தையின் இடத்தில் நான் இருக்கிறேன்.

 (மகா சிருஷ்டியின் ஆரம்ப காலத்தில் ஜீவன்களுக்கு அவைகளின் குணம், செயல், இயல்புகளுக்கு ஏற்ப பிரகிருதியுடன் தொடர்பை ஏற்படுத்தி வைப்பதுதான் பகவானின் விதை தூவும் பணியாகும்)

அர்ச்சுனன்: பகவானே! நீங்கள் எல்லா ஜீவன்களுக்கும் பிதா, இருந்தாலும் அந்த ஜீவன்கள் சம்சார பந்தத்தில் ( பிறப்பு -இறப்பு  எனும் தளையில்) ஏன் சிக்கி கொள்ளுகின்றன?
 
கண்ணன்: வீரத்திருமகனே! சத்துவம் ரஜஸ்,தமஸ், இம் மூன்று குணங்களும் பிரகிருதியில் இருந்து பிறக்கின்றன.ஆனால் இவைகளுடன் தொடர்பு கொள்ளுவதால்  அழிவில்லாத ( ஆத்மாவை) தேகத்தில்( உடலில்) இவை சிக்க வைத்து விடுகின்றன.

அர்ச்சுனன்:  சத்துவ குணத்தின் சொரூபம் என்ன?அது தேகியை (உடலுள் உறைபவனை) தேகத்துடன் எப்படிப் பந்தப்படுகிறது?

கண்ணன்: புனிதனான அர்ச்சுனா! அம் மூன்று குணங்களிலும் சத்துவ குணம் இயல்பாகவே நிர்மலமானது, மாறுதலற்றது,எங்கும் பிரகாசிப்பது,ஆனால் அது சுகம்,ஞானம் இரண்டிலும் உள்ள ஈடுபாட்டினால் தேகியை ஆத்மாவை தேகத்தினுள் கட்டுப்பட வைக்கிறது.

அர்ச்சுனன்:  ரஜோ குணத்தின் சொரூபம் என்ன? அது தேகியை தேகத்திலும் எப்படிக் கட்டுப்படுத்துகிறது?

கண்ணன்: குந்தியின் மைந்தனே! ஆசையையும் பற்றுதலையும் ஏற்படுத்தும் ரஜோ குணத்தைத் தீவிர விருப்பின் சொரூபம் என்பதை உணர்ந்து கொள்.அது கருமங்களில் ஏற்படும் ஈடுபாட்டினால் தேகியை ஆத்துமாவை தேகத்தினுள் கட்டுப்படுத்தி வைக்கிறது.

அர்ச்சுனன்:  தமோ குணத்தின் சொரூபம் என்ன? அது தேகியை எப்படிக் கட்டுப்படுத்துகிறது?

கண்ணன்:  தமோ குணம் அக்ஞானத்திலிருந்து ஏற்படுகிறது.எல்லாப் பிராணிகளையும் மதிமயங்க வைக்கிறது.அது அறியாமை, பேதமை, சோம்பல், தூக்கம் மூலமாக தேகியை ஆத்துமா அவை தேகத்தில் கட்டுப்படுத்தி வைக்கிறது.

அர்ச்சுனன்:  பகவானே! கட்டுபாட்டிற்கு முன்னதாக  அம்முக்குணங்களும் என்ன செய்கின்றன?

கண்ணன்:  பரதவம்சத்து பெருமானே!சத்துவ குணம் சுகபோகத்தில் ஈடுபடுத்தி மனிதனிடம் தன் அதிகாரத்தைக் காட்டுகிறது.ரஜோ குணம் கருமத்தில் ஈடுபடுத்தி தன் உரிமையை மனிதரிடம் நிலை நாட்டுகிறது.தமோ குணமோ ஞானத்தை மறத்து தவறு இழைக்கும் பேதமையில் ஈடுபடுத்தி மனிதனை ஆட்கொண்டு விடுகிறது. தாழ்வுக்கு கீழ்நிலைக்கு தள்ளி விடுகிறது.

அர்ச்சுனன்: பகவானே! இம் மூன்று குணங்களிலும் ஒவ்வொன்றுக்கும் எப்படி மனிதர்டம் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது? வலுவடைகிறது?

கண்ணன்:  பரமவம்சத்து வீரனே! ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் அழுத்தி விட்டு சத்துவ குணம் வளர்கிறது.சத்துவ குணத்தையும்  தமோ குணத்தையும் அழுத்தி விட்டு ரஜோ குணம் வளர்கிறது.இதேபோல் சத்துவ குணத்தையும் , ரஜோ குணத்தையும் அழுத்தி விட்டு தமோ குணம் மேலே எழும்புகிறது.

அர்ச்சுனன்:மேம்பட்டு எழும்பும் சத்துவகுணத்தின் இலட்சணங்கள் எவை?

கண்ணன்:எப்போது இந்த மனித சரீரத்தில் எல்லாப் புலன்களிலும் அந்தக்கணமெனும் உள்ளத்திலும் தூய்மையும் பகுத்தறிவும் வளர்கின்றனவோ, அந்நிலையில் சத்துவ குனப் வளர்வதை உனர்ந்துகொள்ள வேண்டும்.

அர்ச்சுனன்: வளரும் ரஜோ குணத்தின் இலட்சணங்கள் எவை பகவானே?

கண்ணன்: மனிதரின் அந்தக்கரணத்தில் ( உள்மனம்) பண  ஆசையும், செயலாற்றும் முனைப்பும், சுக போகங்களுக்காகவும் சொத்துக்கள் சேர்க்கவும்.புதுப்புதுக் காரியங்களைத் தொடங்குவதும், மன அமைதி இன்மையும், தீவிர ஆசையும் எப்போது அதிகரிக்கின்றனவோ, அப்போது ரஜோ குணம் தலை தூக்குவதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அர்ச்சுனன்: வளரும் தமோ குணத்தின் இலட்சங்கள் எவை?

கண்ணன்: எப்போது புலன்களிலும் அந்தக்கரணத்திலும் உணர்வுத் தூய்மை இல்லாதிருக்கிறதோ, எக்காரியத்தையும் முறையாகச் செய்ய மனம் ஈடுபடுவதில்லையோ, செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமலும் செய்யக்கூடாத காரியத்தைச் செய்வதும் அதிகரிக்கிறதோ, உள் மனதில் மோக மயக்கம் பரவியுள்ளதோ, அப்போது தெரிந்து கொள்ளலாம்.தமோ குணம் மேலோங்கியுள்ளது.

அர்ச்சுனன்: இம்மூன்று குணங்களும் மாறி மாறித் தற்காலிகமாக மேலெழும் நிலையில் மனிதன் மரித்து விட்டால் , அவனுக்கு என்ன கதி கிடைக்கும்?

கண்ணன்: சத்துவ குணம் மேலோங்கியிருக்கும் போது மனிதன் மரித்தானானால் புன்ணியாத்மாக்கள் மட்டுமே எட்டத்தக்க நிர்மலமான உத்தம லோகங்களுக்குப் போய் சேருகிறான்.

ரஜோ குணம் மேலோங்கியிருக்கும் தருணத்தில் இறந்தால் மனித குலத்தின் மறு பிறவி பெறுகிறான்.
தமோ குணம் மிகுந்திருக்கும் நிலையில் மரித்தால் பிராணிகளாக மிருகம், பறவை முதலியவைகளாகப் பகுத்தறிவு இல்லாத இனத்தில் பிறக்கிறான்.

அர்ச்சுனன்: பகவானே! இந்தக் குணங்களால் இத்தகைய பிறவி நிலைகள் ஏன் ஏற்படுகின்றன?

கண்ணன்: காரணம் இதுதான். குணங்களின் ( இயல்புகள்) செயல் போக்கு எப்படி இருக்கினறன்வோ அதே போலத்தான் ( அவைகளுக்கு ஏற்ப) காரியங்களும் அமைகின்றன.ஆகையால் சாத்வீக குணத்தின் காரியங்களுக்கான பயன் தூயதாக இருக்கிறது.ராட்சத குணத்தின் பலன் துயரம், துன்பம் தாமஸ குணத்தின் பயன் அஞ்ஞானம், மடமை சாத்வீகம் முதலிய காரினனின் செயல்பாடுகளுக்கு ஏற்பதாக சாத்வீகம் முதலிய குணங்களின் செயல்பாடுகளுக்கு ஏற்பத்தான் சாத்வீகம் முதலிய காரியங்களின் பலனும் அமைகிறது.

அர்ச்சுனன்: விருத்தி எனும் செயல் போக்கு அல்லது செயட்பாட்டிற்கும் அதைச் சார்ந்த கர்ம ( காரியம்)விற்கும் அடிப்படையில் எது உள்ளது?

கண்ணன்:  சத்துவம்,ரஜஸ், தமஸ், மூன்று குணங்களும் ( இயல்புகள்) சத்துவ குணத்திலிருந்து நல்லறிவு ( ஞானம்) ஏற்படுகிறது.ரஜோ குணத்திலிருந்து உலோபம் எனும் பேராசை ஏற்படுகிறது.தமோ குணத்திலிருந்து மதிமயக்கம், மோகம், அறியாமை தீயபழக்கம், குறைபாடு எல்லாம் ஏற்படுகின்றன.

அர்ச்சுனன்:  இம்மூன்று குணங்களிலும் நிலைத்திருப்பவர்களின் இறுதி நிலை எத்தகையது?

கண்ணன்:  சத்துவ குணத்தில் நிலையாக இருப்பவர்கள் சுவர்க்கம் முதலிய மேல் உலகங்களுக்குப் போகிறார்கள். ரஜோ குணத்தில் இருப்பவர்கள் மானுடவுலகில் பிறக்கிறார்கள். நிந்திக்கத்தக்க தமோகுணத்தில் இருப்பவர்கள் நரகம் முதலிய துன்பம் மிகுந்த உலகில் உழல்வார்கள்.

அர்ச்சுனன்:   அப்படியானால் உங்களை எத்தகைய மனிதன் வந்தடைகிறான் பகவானே?

கண்ணன்:   செய்பவனின் குணமே செயலின் காரணமாக அமைகிறது.இதை அறிபவன் செயல், குணம் இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டவானாக தன்னை உணர்ந்தவனாய் எனது ஸ்வரூபத்தையே அடைகிறான்.அவன் விவேகி. உடலை உருவாக்கும் சத்துவம் முதலிய முக்குணங்களையும் கடந்து பிறப்பு, இறப்பு, மூப்பு சார்ந்த துன்பங்களிலிருந்து விடுபட்டு அமரத்துவ நிலையை அநுபவிக்கிறான்.

அர்ச்சுனன்:   சர்வேசா! முக்குணங்களையும் கடந்த மாமனிதர் எத்தகைய இலட்சணங்களைக் கொண்டிருப்பார்?

கண்ணன்:   பாண்டுவின் செல்வனே! சத்துவ குணத்தின் போக்கு ஒளிமயமாகவும் ரஜோ குணத்தின் போக்கு காரியத்தில் ஈடுபாடாகவும்,தமோ குணத்தின் போக்கு மோகம் ( மதி மயக்கம்) ஆகவும் வெளிப்படும்போது அவைகளை அவ்விவேகி வெறுப்பதில்லை.வெளிப்படாதிருக்கும் போது இவைகளுக்காக ஆசைப்படுவதுமில்லை.இக் குணங்களிடம் விருப்பு வெறுப்பு இல்லாமல் இருப்பார்.இக் குணங்ககளால் பாதிக்கப்பட்டாலும் இருப்பார்.மேலும் குணங்களே தம்மை வெளிப்படுத்திக் கொண்டும் செயல்படுத்திக் கொண்டும் இருப்பதை உணர்கிறார்.தம் சொரூபத்திலேயே நிலைத்திருக்கிறார்.தாமாக எந்தச் செயலிலும் ஈடுபட இயலாது என்பதை உணர்ந்து அமைதியாக வாழ்கிறார்.

அர்ச்சுனன்:  குணங்களைக் கடந்த மனிதரின் செயல்பாடுகள் எப்படி அமைகின்றன?

கண்ணன்:  அம் மாமனிதரின் நடவடிக்கைகள் சத்துவ நிலை கொண்டவை.திட சித்தம் கொண்ட அம்மனிதர் தம் சொரூபத்தில் எப்போதும் இருந்து வருகிறார்.அவருடைய சமநிலைப்போக்கு எல்லாவற்றிலும் நிரந்தரமாக இருப்பது.சுகத்திலும் , துக்கத்திலும் மண்கட்டியிலும் , தங்கக்கட்டியிலும் , உடல் பொறிகள் சார்ந்த விருப்பு வெறுப்புகளிலும், புகழ்ச்சியிலும், இகழ்ச்சியிலும், மதிப்பு அவமதிப்புகளிலும், பகைவர்  நண்பர்களிடமும் சமநிலை பிறழாமல் இருப்பவர். அவர் ஆவல், ஆர்வம், ஈடுபடு கொன்டு எந்தப் புதிய காரியத்தையும் தொடங்குவதில்லை. இதனாலேயே அவர் குணங்களைக் கடந்தவர் என்று சொல்லப்படுகிறார்.

அர்ச்சுனன்:  குணங்களைக் கடந்து இருப்பதற்கு  என்ன வழி கண்ணா?

கண்ணன்:   எந்த மனிதன் திடமான பக்தி ஈடுபாட்டுடன் என்னைப் போற்றுகிறானோ, அவன் மூன்று குணங்களையும் கடந்து பிரும்மத்தை அடையும் தகுதியைப் பெறுகிறான்.

அர்ச்சுனன்:  பகவேனே! உங்களிடம் திட பக்தி கொண்டிருப்பவன் பிரும்ம நிலையை எப்படி அடைய முடியும்?

கண்ணன்:   தம்பி அர்ச்சுனா! பிரும்மம் அழிவற்ற அமுதமான நிலைகளுக்கும், சனாதன தர்மத்திற்கும், ஒப்பற்ற பரமானந்த சுகத்திற்கும் புகலிடம் நான் தான். இவையெல்லாமே என்னுடைய பெயர்கள், நிலைபாடுகள். பிரும்மத்தை அடைபவன் என்னை வந்தடைகிறான்.

05.கர்மயோகம், கிருஷ்ண உணர்வில்செயல்

November 19, 2009 1 comment

அர்ச்சுனன்: பகவானே!ஒரு சமயம் நீங்கள் கருமங்களை துறப்பதை( சாந்திய யோகம்) புகழ்கிறீர்கள்.வேறொரு சமயம் கருமங்கள் செய்ய வேண்டியதை (கருமயோகம்)வலியுறித்துகிறீர்கள்.ஆகையால் இந்த இரு சாதனங்களிலிருந்து ஏதாவது ஒன்றை எது நிச்சயமாக நன்மை பார்ப்பதோ அதை மட்டும் எனக்கு எடுத்துச் சொல்லுங்கள்?

கண்ணன்: வீரனே! சாங்கிய யோகம் கருமயோகம் இரண்டுமே சிறந்தவை.ஆனால் இவ்விரண்டிலும் சாங்கிய யோகத்தைவிட கரும யோகம் சிறந்தது.

அர்ச்சுனன்: பெருமானே! கருமயோகம் ஏன் சிறந்ததாக கருதப்படுகின்றது?

கண்ணன்:  புஜபலம் மிக்க வீரனே!கருமயோகி எவரிடமும் எதனிடமும் விருப்போ வெறுப்போ கொள்ளுவதில்லை.அவர் நித்திய சந்நியாசி என்பதை உணர்ந்து கொள்.விருப்பு வெறுப்புகளை கடந்திருப்பதால் அவர் சம்சார பந்தங்களிலிருந்து எளிதாக விலகி வாழமுடிகிறது.

அர்ச்சுனன்: பகவானே! இந்த இருயோகங்களும் சிறந்தவை என்கிறீர்கள் இரண்டிலுமிருந்து கிட்டும் பயன்களில் ஏதும் வேறுபாடு இல்லையா?

கண்ணன்: அர்ச்சுனா! அறியாமையில் உழலும் மூடர்கள் சாங்கிய யோகம்,கர்மயோகம் இரண்டும் தனித்தனி பயன்கள் அளிப்பவை என்று கருதுகிறார்கள்.புத்திமான்கள் அப்படிக் கருதுவதில்லை .நிலைத்திருந்தாலும் யோக சாதகருக்கு இரு யோகங்களின் பயன்களும் ஒன்ருபோல் கிடைத்து விடுகின்றது.எந்தப் பயன் சாந்தியயோகிக்கு கிடைக்கிறதோ, அதெ பயன் கருமயோகிக்கு கிடைக்கிறது.ஆனால் இரு யோகங்களையும் ஒரே நிலையில் காண்பவர்தான் சரியான நோக்கம் கொண்டவர்.

அர்ச்சுனன்: இருயோகங்களின் பயன்களும் ஒன்றுதான் என்றால் கரும யோகம் சாலவும் சிறந்ததாக எப்படி ஆகும்?

கண்ணன்: வீரப்பெருமானே! கருமயோகம் நிறைவு,நிறைவின்மை( சித்தி,அசித்தி) இரண்டிலும் சமநிலை எட்டுகிறது.இந்நிலையை பெறாமல் சாங்கிய யோகம் சித்திபெறாது.( சமநிலையில் நீடித்திருக்க இயலாது)ஆனால் சிந்தனைத் திறன் மிக்க கருமயோகி சித்தி அசித்திகளில் சமநிலை பெற்று விரைவிலேயே பேதம் அற்ற பிரமத்தை அடைகிறார்.

அர்ச்சுனன்:  கர்மயோகத்தின் மூலமாக அவர் பிரம்மத்தை எப்படி அடைகிறார்?

கண்ணன்: ஜம்புலன்களையும் அடக்கி வென்றவர்.அப்பழுக்கற்ற உள்ளப்பாங்கு கொண்டவர்.உடலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்.எல்லாப் பிராணிகளிடத்திலும் தம்மை காணும் கருமயோகி செயல்புரிந்து வந்தாலும் செயல்களின் ஆசா பாசங்களில் சிக்குவதில்லை.அந்த சாதகர் பரமாத்மா நிலையை அடைகிறார்.

அர்ச்சுனன்: பகவானே! சாங்கியயோகி கர்மங்களிலிருந்து எப்படிச் சிக்காமல் தனித்திருகிறார்?

கண்ணன்:  ஸத் ( உண்மை) அஸத்( உண்மையற்றது) இவ்விரண்டு தத்துவத்தையும் உணர்ந்து ஸத்தில் நிலைத்திருக்கும் சாங்கியயோகி உலகியல் வாழ்வில் ஈடுபட்டு ஜம்புலன்களின் செயல்களில் பங்குகொள்கிறார்.அவர் காணல்,கேட்டல்,தொடல்,நுகர்தல்  உண்ணுதல்,நடத்தல்,உறங்குதல்,சுவாசித்தல், பேசுதல்,மலஜலம்,கழித்தல்,பெறுதல்,கண்களைமூடித் திறத்தல்(இமைத்தல்)இச் செயல்களையெல்லாம் புலன்கள் செய்கின்றன.நான் செய்யவில்லை என்பதை உனர்ந்து என்பதை உணர்ந்து கொண்டு செயல்களுக்கு கட்டுப்படாமல் ஆசாபாசங்களுக்கு அடிமையாகாமல் வாழ்கிறார்.

அர்ச்சுனன்: இந்த இருவகை யோகிகளுமே செயல்களில் கட்டுப்படாமல் வாழ்கிறார்கள்.ஆனால் இப்படிச் சிக்காமல் இருப்பதற்கு வேறு உபயமும் உள்ளதா?

கண்ணன்: உண்டு அதுதான் பக்தியோகம் பக்தியோகி ஈடுபடும் ஆர்வத்தை துறந்து எல்லாச் செயல்களையும் பகவானிற்கே அர்ப்பணித்து விடுகிறார்.ஆகையால் அவரும் நீரின் மேல் இருக்கும் தாமரை இலைபோல் சகல பாவங்களிலும் சிக்காமல் சுயவிருப்பு வெறுப்பு இல்லாமல் வாழ்கிறார்.

அர்ச்சுனன்: பகவானே! பக்தியோகி சகலதையும்
உங்களுக்கே அர்ப்பணித்து விடுவதால் கருமங்களில் சிக்காமல் இருக்கிறார். ஆனால் கருமயோகி எந்த நோக்கத்துடன் செயல்புரிகிறார்.எப்படிச் செயல்கலில் சிக்காமல் இருக்கிறார்?

கண்ணன்: கர்மயோகி தம் அந்தக் கரணத்தில்(உள்மனம்)தூய்மைக்காகவே உடல் ,உள்ளம்,அறிவு இவைகளிடம் பற்றோ செருக்கோ கொல்ளாமல் இருக்கிறார்.இதனால் அவர் செயலின் பயனை ஆசையுடன் எதிர்ப்பார்பதில்லை.ஆதலால் அவருக்கு நிலையான நிம்மதி( பரமசாந்தி)கிட்டிகிறது.இந்நிலையை எட்டாதவர்கள் பயனில் ஆசைகொண்டு செயலாற்றுவதால் சம்சார பந்தத்தில் உலகியல் தளைகளில் கட்டுண்டு உழல்கிறார்கள்.

அர்ச்சுனன்: சாங்கிய யோகியின் மூலம் வெளிப்படும் செயல்கள்?

கண்ணன்: அர்ச்சுனா! உடல்,புலன்கள்மனம் இவைகளை தம்வசம் அடக்கி வைத்திருக்கும் சாங்கிய யோகி மனத்திலிருந்து எல்லாக் கருமங்களையும் ஒன்பது துவாரங்களை கொண்ட சரீரத்திடம் விட்டு விடுகிறார்.இதனால் கருமங்களை தான் செய்வதாகவே செய்விப்பதாகவோ கருதாமல் சுகமாக நிம்மதியாக தம் யோகி நிலையில் நிலைத்திருக்கிறார்.

அர்ச்சுனன்: சாங்கிய யோகி எந்தச் செயல்களையும் செய்வதில்லை செய்விப்பதுமில்லை. அனால் பரமாத்மா செய்விப்பார் தானே?

கண்ணன்: இல்லை. பரமாத்மா எந்த மனிதனையும் செயலாற்றும் திறன் உள்ளவனாக ஆக்குவதில்லை.எந்தச் செயலையும் பிறரைக் கொண்டு செய்விப்பதுமில்லை.கரும பலத்துடன் எவரையும் சம்பத்தபடுத்துவதுமில்லை.ஆனால் மனிதர்கள் தம்  சுபாவத்தின்படி இயல்பாக செயல்புரிந்து வருகிறார்கள் அச் செயல்களுக்கு  தங்களையே கர்த்தாவாக எண்ணிக் கொள்கிறார்கள்.பிறகு கரும பலத்துடன் செயலின் விளைவு சம்பந்தம் தானாகவே ஏற்பட்டுவிடுகிறது.

அர்ச்சுனன்: பரமாத்மா எவருக்கும் செயாற்றும் சுதந்திரத்தை அழிப்பதில்லை ஆனாலும் பிராணிகள் மனிதர்கள் புரியும் செயல்களுக்கு பயனை ஏற்கிறார் இல்லையா?

கண்ணன்: சர்வவியாபியான எங்கும் பரந்துள்ள பரமாத்மா எவருடைய பாவ புண்ணியங்களையும்  ஏற்பதில்லை.அறியாமை காரணமாக ஜீவன்கள் தம் சொரூபத்தை உணர முடியாததால் மதிமயங்கி போகின்றன. இதனாலேயே ஜீவன்கள் செயல்களுக்கு தம்மையே கர்தாக்களாகவும்  செயலின் பயனை அநுபவிப்பவர்களாகவும் நினைத்துக் கொள்கிறார்கள்.இதன் விலைவாக பிறப்பு இறப்பு எனும் சூழலில் ஜீவராசிகள் உழன்று கொண்டிருகிறார்கள்.

அர்ச்சுனன்: பகவானே அப்படியானால் எல்லா ஜீவன்களும் இதெபொலா தம்மைக் கர்த்தாகவும் போக்தாகவாகவும் ( அநுபவிப்பவர்களாக) மதி மயங்கிப் போகிறார்கள்?

கண்ணன்: இல்லை அர்ச்சுனா! விவேகிகள் மெய்ஞானம் மூலமாக அஞ்ஞானத்தை அழித்து விடுகிறார்கள்.சூரியனைப் போன்ற அவர்களுடைய ஞானம் பரமாத்மாவை அறிந்து கொள்ள உதவுகிறது.

அர்ச்சுனன்: அந்தப் பரமாத்மா தத்துவத்தின் அநுபவம் எவருக்கு ஏற்படுகிறது கண்ணா?

கண்ணன்: எவருடைய அறிவும் உள்ளமும் பரமாத்மவிடமே லயித்து இருக்கின்றனவோ, எவர் பரமாத்ம தத்துவத்தில் நிலைத்திருக்கின்றாரோ அவர்கள் அத்தகைய பரமாத்ம சாதகமான ஞானத்தின் மூலமாக பாவ புண்ணிய தளைகளிலிருந்து விடுபட்டு பரமத்மாவிடம் சேர்ந்து புன்ணிய விட்டுகிறார்கள்.அவர்களுக்கு மறுபடியும் பிறவி ஏற்படுவதில்லை.

அர்ச்சுனன்: பரமாத்மாவை உணர்ந்து கொண்ட மகா புருஷர்களின் ஞானம் நடைமுறை நிலையில் எப்படி இருக்கிறது கிருஷ்ணா?

கண்ணன்: தத்துவஞானியான மகாபுருஷர்கள் கல்வியிலும் பண்பிலும் சிறந்து விளங்கும் பிராமனிடமும் அவையில்லாத சண்டாளனிடமும் சமநிலையில் பழகி பரமாத்ம சொரூபத்தை காண்கிறார்கள்.இதேபோல் பசு,யானை,நாய் முதலிய பிராணிகளிடமும் சமநிலையுடன் பரமாத்ம தத்துவத்தை தரிசிக்கிறார்கள்.ஆனால் இந்த சமநிலை அவர்களுடன் கூடி வாழ்வதற்கோ, உறவாடுவதற்கோ பயன்படுத்துவதில்லை.

அர்ச்சுனன்:சமநிலை நோக்கைக் கொண்டிருப்பதால் என்ன ஆகிறது? என்ன பயன் கிட்டுகிறது?

கண்ணன்: எவருடைய உள்ளம் எல்லா நிலைகளிலும் சமத்துவ நிலையில் அதாவது பரமாத்ம தத்துவத்தில் திடமாக இருக்கிறதோ, அவர் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டே இவ்வுலகை வென்றவராகிறார்.இதன் உலகாயுத நிலையிலிருந்து மேம்பட்டு விளங்குகிறார்.காரணம் பிரமம் குற்றம் குறையில்லாதது.எனுனும் சமநிலையிலுல்ளது.ஆகையால் அந்த மகான்கள் சமநிலையில் உள்ள பிரமத்திடமே நிலைத்திருக்கிறார்கள்.

அர்ச்சுனன்: கண்ணா!இத்தகைய சமத்துவ நிலையில் நீடித்திருக்க என்ன வழி?

கண்ணன்: நடைமுறை வாழ்வில் விரும்புவது -விரும்பாதது அனுகூலம் பிரதிகூலம் சார்ந்த சூழ்நிலை ஏற்பட்டாலும்மகிழ்ச்சியோ வருத்தமோ கொள்ளாதவர்.மோக மயக்கங்கள் இல்லாதிருப்பார்.அன்றியும் நிலையான  பகுத்தறிவாளியாக இருப்பார்.பிரமத்தை அறிந்திருப்பார்.பரமாத்மாவிடமே நிலைத்திருப்பார்.

அர்ச்சுனன்: பகவானே! இந்த சமத்துவ நிலை எந்த நிலையில் ஏர்படுகிறது?

கண்ணன்: .வெளிப்பொருட்களிடம்( பெளதீக பொருட்கள்) பற்றுதல் கொள்ளாத ஞானி முதலில்  தம்முள் இருக்கிற சாத்வீகமான சுகத்தை அடைகிறார்.பிறகு அவர் பரமாத்வோடு ஒருங்கிணைந்து சாசுவதமான ஆனந்தத்தை அநுபவிக்கிறார்.

அர்ச்சுனன்: உலகாயுத( பெளதீக) பொருள்களின்பால் ஏற்படும் பற்றுதல்களிலிருந்து எப்படி தப்புவது?

கண்ணன்: .குந்தியின் புதல்வனே!புலன்களும் போகப் பொருட்களும் சேர்ந்து ஏற்படுத்தும் அநுபவங்கள் எல்லமே துன்பம் விளைவிப்பவைதாம்.ஆதியும் அந்தமும்(பிறப்பு-இறப்பு) உள்ளவைதாம்.ஆகையால் விவேகமான மனிதன் அவைகளின் ஈடுபடமாட்டான்.அநுபவிக்கவும் விருப்பமாட்டான்.

அர்ச்சுனன்: கணணா! அந்தச் சுகபோக அநுபவங்களில் ஈடுபடாத மனிதரின் சிறப்புகள் தான் என்ன?

கண்ணன்: .எந்தவொரு மனிதன் தன் உடலை திறப்பதற்கு முன்பே காமம், குரோதம் முதலியவற்றின் உத்துவேகத்தை சகித்துக் கொள்ளும் திறன் பெற்றுவிடுகிறானோ, அதாவது காமம் ,குரோதம்முதலியவற்றின் உத்வேகம் தலைகாட்டவே விடாமல் செய்து விடுகிறானோ அவன் தான் சுக புருஷன்.அவனே யோகி,அவன் தான் தீரனான  ஆண்மகன்.

அர்ச்சுனன்: அந்த நிலையை எய்திய பின் என்ன ஆகிறது கண்ணா?

கண்ணன்: .காம குரோதிகளின் உத்வேகம் எழாதிருப்பதால் அந்த ஆண்பிள்ளைக்கு பரமாத்ம தத்துவத்தில் ஏற்படும் நித்திய சுகம் கிட்டுகிறது.அவன் அதில் இலயித்து ஆனந்தமடைகிறான்.அவனுடைய ஞானம் தெளிவாக நிலைத்திருக்கிறது.அவன் பிரம்ம சொரூபமாகிறான்.அந்த சாதகன்( சாதனையில் வெற்றி கண்டவன்)சாந்தமான பிரமத்தை அடைகிறான்,பிரம்மஞானி என போற்றப்படுகிறான்.

அர்ச்சுனன்: அந்த சாந்தமான யோகத்தை மேலும் எவர் பெறுகிறார்?

கண்ணன்:எந்த சாதகருக்கு உடல், புலன்கள் மனம், புத்தியெல்லாம் தன் வசத்தில் இருக்கின்றனவோ ,எல்லாப் பிராணிகளின் நலன்களிலும் நாட்டமுள்ளதோ, எவருடைய மனச் சஞ்சலங்கள் அழிந்து போகின்றனவோ, எவருடைய எல்லப் பாவங்களும்விலகி விட்டனவோ, அத்தகைய விவேகிகளான ஞானசாதகர்களுக்கு நிர்வாண பிரமம் கிட்டுகிறது.

அர்ச்சுனன்: கண்ணா! நிர்வாண பிரமம் அடைந்தவர்களில் இலட்சணங்கள் எவை?

கண்ணன்:அர்ச்சுனா சுத்த பிரம்மத்தை அடைந்தவர்களிடம் காமம்,குரோதம் சிறிதும் இருக்காது.மனம் அவர்கள் வசமே இருக்கும்.அவர்கள் சுய உண்மை நிலையை ( சொரூபத்தை) அறிந்தவர்கள்.அவர்களை சாங்கிய யோகி என்பர். அவர்கள் வாழும்போதும் இறந்த பிறகும் சுத்த( நிர்வாண) பிரமத்தை அடைந்தவர்கள் ஆவர்.

அர்ச்சுனன்: இந்த நிர்வாண பிரமம் வேறு சாதனங்கள் மூலமும் அடையக்கூடியதா?

கண்ணன்:ஆம் அர்ச்சுனா! தியான யோகத்தால் பெறமுடியும்.வெளி விஷயங்களை வெளியே விட்டுவிட்டு அதாவது எல்லா போகப் பொருட்களையும் துறந்துவிட்டு கண்களின் பார்வையை புருவங்களின் இடையில் நிலைநிறுத்தி நாசித் துவாரங்களில் சஞ்சரிக்கும் பிராணன் ( பூரகம்) அபானம் ( சேரகம்) எனும் மூச்சுக் காற்றை சமானமாக்கி எல்லாப் புலன்களையும் மனத்தையும் ,புத்தியையும் தன்வசப்படுத்தி வைத்திருக்கும் சாதகர் ஆசை,பயம், குரோதம் முதலியவற்றைத் துறந்தவர்.மோட்சத்தை விரும்பும் அவர் எப்போதும் முத்தர் நிலையில் இருப்பர்.

அர்ச்சுனன்: பகவானே! எல்லாத் தளைகளிலிருந்து எளிதாக விடுபட வேறு சுலபமான சாதனம் உள்ளதா?

கண்ணன்: உள்ளது.பக்தியோகம் எவர் என்னை எல்லா உலகங்களுக்கும் பாதுகாவலனாகவும்,பரிபாலகனாகவும் மதிக்கிறாரோ,எவர் எல்லா உயிரணங்களுக்கும் பரம கர்த்தாவாக(சுயநலமற்ற இரக்கமுள்ள அன்பன்) என்கிறாரோ,எவர் என்னை எல்லா யக்ஞங்களுக்கும் தவங்களுக்கும் அநுபவ பாத்தியதை கொண்டவராக உணர்கிறாரோ( தம்மை ஒருக்காலும் அநுபவிப்பவராக என்ணாதிருகிறாரோ) அவருக்கு பரமசாந்தி பேரமைதி கிட்டுகிறது.

04.உன்னத அறிவு

November 19, 2009 Leave a comment

அர்ச்சுனன்: பகவானே! கர்மயோகமான கடமைச் செயற்பாட்டில் தீவிர விருப்பமான சுயந்ல வேட்கையை ( காமம்) அழிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினீர்கள்.இந்த கர்ம யோகத்தின் மரபுத்தொடர்( பரம்பரை) எப்படியானது?

கண்ணன்: அர்ச்சுனா! இந்த அழிவில்லத கர்ம யோகத்தை நான் முதலில் சூரியனுக்கு உபதேசித்தேன்.பின் சூரியன் தன் மகன் மனுவிற்கும் .மனு தன் மகன் இஷ்வகுவிற்கும் உபதேசித்தார்கள்.இவ்வாறு வழி வழியாக உபதேசிக்கப்பட்டு வந்திருக்கும் இந்த கர்மயோகத்தை உலகை ஆன்டு வந்த ராஜரிஷிகள் அறிந்திருந்தார்கள்.பல ஆண்டுகள் கடந்து போனதால் இந்த யோகம் மனிதர்களிடம் அரிதாகி விட்டது. அர்ச்சுனா! நீ என் நெருங்கிய பக்தன் பிரியமான தோழன் இதனாலேயே இப் புராதனமான கர்மயோகத்தை உனக்கு உபதேசிக்கிறேன்.இது மிகவும் இரகசியமான அரியதத்துவம்.

அர்ச்சுனன்: பரம்பொருளே!நீங்கள் எந்தச் சூரியனுக்கு உபதேசித்தீர்களா அவர் வெகு காலத்தில் முன்பே பிறந்தவர்.ஆனால் நீங்கள் அவதரித்ததோ இந்தக் காலத்தில். சிருஷ்டி காலத்தில் தொடக்கத்திலே நீங்கள் இந்த அரிய யோகத்தை சூரியனுக்கு உபதேசித்ததை நான் எப்படி தெரிந்து கொள்ளமுடியுமா?

கண்ணன்: பிரதாபம் மிகுந்த வீரனே!இந்த விசயம் எனது இந்தப் பிறவியைச் சார்ந்தது அல்ல.எனக்கும் உனக்கும் பல பிறவிகள் ஏற்பட்டு விட்டன. அவையெல்லாம் எனக்குத் தெரிந்தவைதான் ஏதாவது எந்தப் பிறவியில் நீயும் நானும் என்னவெல்லாம் செய்து கொன்டிருந்தோம் என்பதை நான் நன்கு அறிவேன்.ஆனால் நீ உன் பிறவிகளையும் பிறவிச்செயல்களையும் அறியவே மாட்டாய்.

அர்ச்சுனன்: எனக்கு ஏற்பட்ட பிறவிபோல் உங்களுக்கு ஏற்படவில்லை?

கண்ணன்: இல்லை. நான் பிறப்பு இறப்புகளைக் கடந்தவன்.பிறவி இல்லாதவன்.மரணமில்லாதவன்.உயிரினங்களிற்கு எல்லாம் ஈஸ்வரன்( ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவன்)எனினும் என் வசத்திலுள்ள இயற்கை நியதியை கட்டுப்படுத்திக்கொண்டு யோக மாயையில் நான் வெளிப்படுகிறேன். ( பிறக்கிறேன் அவதாரம் செய்கிறேன்).

அர்ச்சுனன்: நீங்கள் வெளிப்படும் தருணம் எது?

கண்ணன்: பரத வம்சத்தில் உதித்த அர்ச்சுனா! எப்பொதெல்லாம் தர்மத்திற்கு கேடு ஏற்படுகிறதோ அதர்மம் மேலோங்கி பெருகிறதோ அப்போதெல்லாம் நான் அவதாரம் எடுக்கிறேன்.( விரும்பி பிறக்கிறேன்)

அர்ச்சுனன்: நீங்கள் அவதாரம் எடுப்பதால் பயன் என்ன கண்ணா?

கண்ணன்:நல்லவர்களான நன்னெறியாளர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அழிப்பதற்கும்,தர்ம நெறிகளை நடைமுறைப் படுத்தி நிலை நாட்டுவதற்கும் நான் ஒவ்வொரு யுகத்திலும் பிறக்கிறேன்.

அர்ச்சுனன்: பகவானே! இம்மாதிரி அடிக்கடி பிறவி எடுப்பதால் உங்களை பந்தபாசம் கட்டுப்படுத்துவது இல்லையா?

கண்ணன்: இல்லை. என்னுடைய பிறவியும் செயலும் தெய்வாம்சம் பொருந்தியவை. எனக்கென்று எந்தச் சுயநலமும் கொள்ளாமல் உலக நன்மைக்காகவே நான் பிறவி எடுக்கிறேன்.இந்த உண்மையை எந்த மனிதன் தத்துவ ஞானத்துடன் உணர்கிறானோ,அவன் இறந்த பின் மறுபிறவி பெறாமல் என்னையே வந்தடைகிறேன்.

அர்ச்சுனன்: அத்தகைய தத்துவஞானி உங்களையே வந்தடைகிறான் என்பதற்கு என்ன அத்தாட்சி?

கண்ணன்: அத்தாட்சி உள்ளாது.என்னோடு ஒன்றி, என்னையே புகலாக கொன்ட தத்துவஞானிகள் என் பிறப்பு இறப்புகளின் திவ்விய தன்மையை அறிந்து ளொண்டதால் புனிதர்களாகி, ஆசை,அச்சம் சினம் முதலிய தீய இயல்புகளில் இருந்து விடுபட்டு என்னையே வந்தடைகிறார்கள்.

அர்ச்சுனன்: அவர்கள் எந்தத் தன்மையுடன் உங்களைப் புகலடைகிறார்கள்?

கண்ணன்: பார்த்தனே! உலகியல் உறவுகளோடு ஒட்டாமல் எந்தத் தன்மையுடன் என்னை மனிதர்கள் புகலடைகிறார்களோ, நானும் அவர்களுடன் அதே தன்மையுடன் தான் ஒட்டுறவு கொள்ளுகிறேன்.எனது இந்த உறவால் சம்சாரிகளான மனிதர்களிடம் சிறப்பான எதிர் விளைவுகள் ஏற்படுகிறது.நற்குணங்கள் நிரம்பிய அவர்கள் சுயநலம்,செருக்கில்லாமல் பிறருக்கு நன்மை புரிவதில் தீவிரமாக ஈடுபடுகிறார்கள்.

அர்ச்சுனன்: அச்சுதா! உங்களைப் புகலடைந்தவர்களை நீங்கள் பாசத்துடன் ஆட்கொள்கிறீர்கள். அப்படியிருந்தும் மனிதர்கள் உங்களைவிட்டு வேறு தேவதைகளைப் பூசிக்கவும் உபாசிக்கவும்செய்கிறார்களே ஏன்?
கண்ணன்:அத்தகைய மனிதர்களின் மனபாங்கில் உலகியல் ஆர்வம் ஆதிக்கம் செலுத்துகிறது.அதனால் கர்ம அனுஷ்டானங்களால் ஏற்படும்.பயனை சித்தியாக பெற விரும்புவார்கள்.இதனாலேயே அவர்கள் என்னை விட்டுவிடு பிற தேவதைகளை உபாசிக்கிறார்கள்.ஏனென்றால் இந்த மாதிரி மாநிட உலகில் கர்மாக்களில் ஏற்படும் பயன் விரைவில் கிட்டி விடுகிறது.

அர்ச்சுனன்: பகவானே! எப்படி மனிதர்கள் கர்மாக்களில் ஏற்படும் சுயநல பயனிற்காக பிற தேவதைகளை உபாசிக்கிறார்களோ, அதே போல் நீங்களும் ஏதாவது ஒரு பயனை வேண்டிய தக்க கர்மாவை செய்வதுண்டா?

கண்ணன்: நான் ஜீவன்களின் குணங்களுக்கும் செயல்களுக்கும் ஏற்ப நால்வகைப் பிரிவுகளை( வர்ணங்கள்,இனங்கள்) உருவாக்குகிறேன்.அவை பிராமணன், சத்திரியன்,வைசீகன்,சூத்திரன் என்னும் இனங்கள்.ஆனால் நான் படைப்பு முதலிய பணிகளை பயன் கருதியோ செருக்குடனோ செய்வதில்லை. இதேபோல் என்னைத் தத்துவ ஞானத்துடன் அறிந்துள்ள ஞானிகளும் விருப்பு வெறுப்பு இல்லாமல் செலாற்றுவதால் கர்ம பந்தங்களிற்கு ஆட்படுவதில்லை.

அர்ச்சுனன்: இதேபோல் இவ்வுலகில் எவராவது பணி புரிந்து இருக்கிறார்களோ?

கண்ணன்: செய்திருகிறார்கள். முதலில் முத்தி பெற விரும்பிய ஞானிகள் இந்தக் கர்ம தத்துவத்தை அறிந்து கொண்டு பயனில் ஆசையில்லாது பணிபுரிந்திருக்கிறார்கள்.நீயும் அந்த முன்னோர்களைப் போல் அவர்கள் காட்டிய வழியில்பணிபுரிந்து வா.

அர்ச்சுனன்: அர்த முமுசுக்கள் செய்து காட்டியதும் ,நீங்கள் உத்தரவிடுவதும் உபதேசிப்பதுமான கர்மா எனும் கடமை பணி எத்தகையது?

கண்ணன்: செயல் ( கர்மா) எது? செயலின்மை ( அகர்மா) எது? இந்த விஷயத்தில் மகா வித்துவான்களே தடுமாறி விடுகிறார்கள்.எனவே செயல் தத்துவத்தை உனக்கு உபதேசிக்கிறேன்.இதை உணர்ந்த நீ உலகியல் தளைகளிருந்து விடுபடுவாய்.கர்மா மூன்று வகைப்படும்.கர்மம், அகர்மம்,விகர்மம்( செயல்,செயலின்மை, தகாத செயல்).இம்மூன்று கர்ம பேதங்களையும் இவைகளின் நிலைகளையும் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும்.இதைத்தான் கர்ம தத்துவம் என்பர்.இது மிகவும் ஆழ்ந்த தத்துவம்.

அர்ச்சுனன்: கர்மம் அகர்மம் இவைகளில் உண்மைத் தத்துவத்தை அறிவது என்பது என்ன?

கண்ணன்: கர்மத்தில் அகர்மத்தையும் அகர்மத்தில் கர்மத்தையும் காண்பது, உணர்வது செயல்படுத்துவது தான் கர்ம தத்துவம்.அதாவது செயலில் ஈடுபடும்பொது பற்றுதல் , ஒட்டுறவு இல்லாமல் இருப்பது, பற்றுதல் அற்ற நிலையில் செயற்படுவது
( நாம் இந்தக் காரியத்தைச் செய்யவில்லை.இக்காரியம் ந்ம்மை இதில் ஈடுபடுத்தியிருக்கிறது என்ற உணர்வுடன் செயல்படுவது).இவ்வாறு செயல் செயலின்மை இரண்டையும் ஒருநிலையில் கொண்டுள்ளவர் தான் யோகி புத்திமான்.

அர்ச்சுனன்: பகவானே! அந்தப் புத்திமானுக்குரிய சிறப்புக்கள் என்ன?

கண்ணன்: எவருடைய செயல்கள் யாவும் தன்னல முனைப்பும் தீவிர விருப்பமும் இல்லாதவையோ, மேளும் அவை நல்லறிவு எனும் தீயில் இட்டு புடம்போட்டவையோ அத்தகைய திறன் கொண்டவரை ஞானிகள்.பேரறிவாளர்கள்.பண்டிதர் என்பர். அத்திறன் தான் அவைகளுடைய புத்திசாலித்தனம் எனும் சிறப்பியல்பாகும்.

அர்ச்சுனன்: அத்தகைய சிறந்த மனிதர்களின் நிலைப்படுகள் என்ன?

கண்ணன்: செயல்திறன் கொண்ட பண்டிதர்கள் செயல் , செயலின் பயன் இரண்டிலுமே பற்றுதல் கொள்வதில்லை. மேலும் அவர்களைச் சார்ந்திருப்பதில்லை.அவர்கள் எப்போதும் மனதிருப்தியுடன் வாழ்பவர்கள். ஆகையால் அவர்கள் எல்லாம் செய்து கொண்டிருந்தாலும் எதுவும் செய்யாதவர்களாகவே இருப்பார்கள்.செயல்,செயலின்மை இருநிலைகளும் அவர்களிற்கு சமம்.

அர்ச்சுனன்:அத்தகைய சாதனையாளர்கள் செயலில் ஈடுபடாமல் இருந்துவிட்டால் என்னவாகும்?

கண்ணன்: சரீரம் ,அந்தகரணம் இரண்டையும் கட்டுபாட்டில் வைத்திருப்பவரும் .சேமித்து வைத்துள்ள சகலதையும் தியாகம் செய்பவரும்,உலகியல் ஆசைகளும் இல்லாதவருமான சாதகர் உடல் சம்மந்தப்பட்ட கருமங்களை செய்து கொண்டிருந்தாலும் கர்மபந்தத்தில் சிக்குவதில்லை.

அர்ச்சுனன்:அத்தகைய சாதகர்கள் செயலில் ஈடுபாடு கொண்டவராக இருந்தால் என்னவாகும்?

கண்ணன்: அந்தச் சாதனையாளரும் சூழ்நிலைக்கு ஏற்பதாக தம்மை மாற்றிக் கொண்டு மனநிறைவு பெறுகிறார்கள்.பொறாமை  சஞ்சலம் விருப்பு வெறுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பார்கள்.செயலின் நிறைவு ( பயன்) நிறைவின்மை (பயனின்மை)இவ்விரண்டையும் சமமாக கருதியவாறு செயலில் ஈடுபட்டு இருப்பதால் கர்ம பந்தங்கள் அவர்களை கட்டுப்படுத்துவதில்லை.மேலும் எவர் விருப்பு வெறுப்புகளை கடந்தவரோ,சுதந்திரமானவரோ எவருடைய குறிக்கோள் பரமாத்மாவை அடையும் முனைப்பு உள்ளதோ அத்தகைய சாதகர் உலக நன்மைக்காகவே செயலை புரிந்து வருவார் .ஆகையால் அவர் செயலில் ஈடுபட்டிருந்தாலும் அதில் சிக்காமல் செயலின்மை நிலையில் நிலைத்திருக்க வல்லவர்.

அர்ச்சுனன்:அச்சாதகர்கள் செய்யும் உலக நன்மைக்காக காரியங்கள் எத்தனை வகையானது?

கண்ணன்: நன்மைகள் பலவகை
1. எந்த நன்மைகளில் எல்லாச் சாதனங்களும் உபகரணங்களும்,செயல்முறையும் செய்பவரும் பிரும்ம சொரூபமான்வையோ அது பிரும்ம யக்ஞம்.

2. எதில் எல்லாமே எனக்கு அர்ப்பணிக்கப்பட்டவையோ, அது “பகவதர்ப்பண ரூபமான யக்ஞம்”
3. எதில் சாதகர் தம்மை பிரமத்தில் இரண்டறக் கலந்துவிடக் செய்திருக்கிறாரோ அது பேதமற்ற ” அபின்னதாரூப யக்ஞம்”
4. எந்த நற்செயலில் சாதகர் தம் ஜம்புலன்களையும் அடக்கியிருக்கிறரோ,அவைகளைத் தத்தம் பொருள்களிருந்து( விஷயங்களிலிருந்து விடுவிதிருக்கிராரோ அது” ” ஸம்யம ரூபமானயக்ஞம்”.

5.எதி சாதகர் விருப்பு வெறுப்பு இல்லாமல் அடங்கியுள்ள புலன்களால் பொருட்களில் ஈடுபடுகிறாரோ அதற்கு பெயர் விஷயஹவன ரூபயக்ஞம்
6. உயிரெ நிலைகள், புலன்கள், உள்ளம் இவைகளின் செயல்களைத் தடுத்து ,அறிவு விழிப்புடன் இருக்கும் போதே சஞ்சலம் இல்லாத திட நிலையை எட்டுவது “அமாதி ரூபமானயக்ஞம்.
7.உலக நலனிற்காக தன்செல்வத்தை செலவிடுவது ” திரவிய யக்ஞம்”
8.தன் தர்மத்தை ( அற நெறிகளை) கடைப்பிடிப்பதில் ஏற்படும் இடர்பாடுகளையும் இன்னல்களையும் மகிழ்ச்சியுடன் சகித்துக் கொள்வது ” தபோ யக்ஞம்”.

9. செய்யும் காரியம் நிறைவு பெற்றாலும் , பெறாது விட்டாலும் பயன் கிடத்தாலும் ,கிடைக்காது விட்டாலும் சமமான மனநிலையில் இருப்பது ” யோக யக்ஞம்”
10 சீரிய நெறி நூல்ககளை நற்சாத்திரங்களை கற்பதும் கற்பிப்பதும் பகவானின் திருநாமங்களை ஜெயிப்பதும் முதலான பக்தி நெறிகளை அனுட்டிப்பது ” சுவாத்யாய ரூபமான ஞானயக்ஞம்”.
11. யோக நியமங்களிற்கேற்ப பூரகம் ( மூச்சை உள்ளே இழுப்பதும்) கும்பகம் ( மூச்சை நிறுத்தி வைப்பதும்) ரேசகம்( மூச்சை வேளியே விடுவது) எனும் முறையில் ப்ராணயாமம் செய்வது பிராணாயாம ரூபமான யக்ஞம்”
12. நியம ஒழுங்கு முறை ஆகாரம் உட்கொண்டு பிராணன்களை தத்தம் இடங்களில் நிறுத்தி வைப்பது “ஷ்தம்பனவிருத்தி பிராணாயாம ரூப யக்ஞ்ம்”.

இந்த எல்லா யக்ஞங்களும் செயற்பாடுகளில் இருந்து செய்பவர்கள் ஏற்படும் ஈடுபாட்டை( பந்த பாசம்) அகற்றுவதற்குத்தான் இந்த உண்மயை உணர்ந்து யக்ஞங்களை அனுஷ்டிக்கும் சாதனையாளருக்கு எல்லா வகை பாவங்களும் அழிந்து போகின்றன.

அர்ச்சுனன்: பகவானே!  பாவங்கள் அழிவதால் என்ன ஆகிறது?

கண்ணன்: குருவம்சத்து வீரனே! நான் மேற்சொன்ன யக்ஞங்களை சரியாக செய்பவர்களுக்கு அமிருத சொரூபமான பரமாத்மாவைப் பெறும் பேறு கிட்டுகிறது.ஆனால் எவ்வித யக்ஞமும் செய்யாத மனிதனுக்கு இந்த உலகம் கூட பயனிளிக்காது.பின் பரலோகம் எப்படிப்பயனுள்ளதாக அமையும்.

அர்ச்சுனன்: இத்தகைய யக்ஞகளைப் பற்றிய வர்ணனை வேறு எங்குள்ளது பகவானே?

கண்ணன்: நான் கூறிய யக்ஞங்களும் மேலும் பலவும் வேதங்களில் விரிவாக வர்ணிக்கப்பட்டுள்ளது.அவை கர்மாக்களிலிருந்து உருவானவை என்பதை அறிந்து கொள். இத்தகைய தத்துவ அறிவுடன் நீ யக்ஞத்தை செய்தால் கர்ம பந்தங்களிலிருந்து விடுபடுவாய்.

அர்ச்சுனன்: எல்லா யக்ஞங்களிலும் தலை சிறந்தது எது?

கண்ணன்: பிரதாபம் மிக்க அர்ச்சுனா!கருமங்களிலிருந்து அமையும் எல்லா யக்ஞங்களிலும் ஞானயக்ஞம் தான் சிறந்தது.ஏனெனில் ஞான யக்ஞத்தில் எல்லாக் கருமங்களிலும் பொருள்களும் அடங்கிவிடுகின்றன.

அர்ச்சுனன்: அந்த ஞானத்தை எப்படிப் பெறுவது

கண்ணன்: ஞானயக்ஞத்திற்கு  அடிப்படையான மெய்யறிவு ஞானம் பெற நீ தத்துவ தரிசிகளான மகா புருஷர்களிடம் செல்ல வேண்டும்.அந்த ஞானிகளின் திருவடிகளில் தண்டனிட்டு வணங்கி ,அவர்களுக்கு தொண்டு புரிந்து அவர்களிடமிருந்து ஞானோபதேசம் பெற வேண்டும்.அவர்களிடம் ஞானப் பசியுடன் யாசித்து வேண்டிக் கொண்டால் ஞானோபதேசம் செய்தருள்வார்கள்.

அர்ச்சுனன்: அந்த ஞானிகள் உபதேசித்தருளும் ஞானத்தால் என்ன விளையும்?

கண்ணன்: அர்ச்சுனா!அந்த பரிசுத்த ஞானத்தை பெற்ற பின் உன்னை மோகம் ,மயக்கம் எதுவும் பாதிக்கமாட்டாது.அந்த ஞானத்தின் திறத்தால் நீ எல்லா ஜீவராசிகளையும் முதலில் உன்னுள் காண்பாய்.பிறகு என்னுள் காண்பாய். இதனால் எல்லா இடங்களிலும் ஒரே பரமாத்மாவின் தத்துவத்தை உணர்ந்து கொள்வாய்.

அர்ச்சுனன்: பகவானே! இந்த ஞானத்திற்கு மேலும் ஏதாவது மகிமையுள்ளதா?

கண்ணன்: உள்ளது.நீ எல்லாப் பாவிகளிலும் கடைசியான பாவியாகி இருந்தாலும் இந்த ஞானம் எனும் ஓடத்தால் நிச்சயம் பாவக்கடலைக் கடந்துகரையேற முடியும்.

அர்ச்சுனன்: எப்படிப் கடலை கடந்த பின் கடல் தன்னிடத்தில் இருந்தபடியே இருக்கிறதோ அதேபோல் பாவங்களை கடந்த பிறகு பாவங்கள் இந்த உலகில் இருந்து கொண்டிருக்கும் தானே?

கண்ணன்: இல்லை அர்ச்சுனா! எப்படித் தீ காய்ந்த கட்டைகளைஎரித்து சாம்பலாக்கி விடுகிறதோ.அதேபோல ஞானமெனும் அக்கினி எல்லாக் கருமங்களையும் பாவங்களையும் பொசுக்கி விடுகிறது.ஆகையால் இந்த உலகத்தில் ஞானத்திற்கு சமமான பவித்திரமானதுவேறெதுவும் கிடையாது. இந்த ஞாத்தை கருமயோகம் மூலமாக சித்தி பெற்ற சாதகர் தாமதமாகவே அடைந்து விடுகிறார்.

அர்ச்சுனன்: கர்மயோகம் மூலமாக சித்தராகிய மனிதருக்குத்தானே ஞானம் கிட்டுகிறது என்பதை அறிந்தேன்.ஆனால் மற்ற சாதகருக்கு எப்படிப் கிட்டுகிறது?

கண்ணன்: அர்ச்சுனா! புலன்களை அடக்கி வைத்திருக்கும் சாதனையைக் புரிந்துவரும் சிரத்தையுள்ள சாதகருக்கு அந்த ஞானம் கிட்டுகிறது.ஞானம் பெற்றதும் அந்த சாதகருக்கு பேரமைதி.பரமசாந்தி கிடைக்கிறது.

அர்ச்சுனன்: இந்த ஞானத்தை பெறுவதில் ஏற்படும் தடை இடையூறுகள் எவை?

கண்ணன்: எந்த மனிதன் தானும் அறியாதிருந்து,பிறரிடமும் நம்பிக்கை ஈடுபாடு கொள்ளாமல் பிறருடைய அறிவுரையை ஏற்காமல்,தன்னுள் தன்னம்பிக்கையும் கொள்ளாது தடுமாறிக் கொண்டிருக்கிறானோ,அவனுக்கு வீழ்ச்சி நிச்சயம் சந்தேகமும் சஞ்சலும் கொண்ட மனிதனிற்கு இந்த உலகமோ,மேலுலகமோ எந்தச்சுகமும் அளிக்காது.

அர்ச்சுனன்: பகவானே! சந்தேகமும் சஞ்சலமும் விலகி விட்டால் ஆவது என்ன?

கண்ணன்: தனஞ்சயா! எந்த மனிதன் நெறியுடன் சமநிலையை மேற்கொண்டு எல்லா கருமங்களிலிருந்தும் தொடர்பில்லாமல் இருந்து வருகிறானோ, அவன் கரும தத்துவமான நல்லறிவும் , ஞானமும் மூலமாக எல்லா விதச் சந்தேகங்களையும் சஞ்சலங்களையும் அழித்து விடுகிறான் அத்தகைய சாதகருக்கு கருமபந்தம் கட்டுபடுவதில்லை.ஆகையால், பரத வம்சத்து வீரத் திருமகனே!நீ உன் உள்ளத்தில் அஞ்ஞானத்தில் ஏற்படும் சந்தேகம் ,சஞ்சலங்களை ஞானமேனும் வாள் கொண்டு அழித்துவிடு ! சமநிலையில் திடமாக இரு! கடமையை நிறைவேற்றப் போர்புரி!போரை தொடர்ந்து புரிவது உன் கடமை அதுவே உன் சத்திரிய தர்மமும் வீர இயல்பும்.

மகாபாரதம்-8 (தமிழ்)

November 17, 2009 Leave a comment

மகாபாரதம்-8 (தமிழ்)

 

மகாபாரதம்-6 (தமிழ்)

November 17, 2009 Leave a comment

மகாபாரதம்-6 (தமிழ்)

 

மகாபாரதம்-5 (தமிழ்)

November 17, 2009 Leave a comment

மகாபாரதம்-5 (தமிழ்)

 

மகாபாரதம்-4 (தமிழ்)

November 17, 2009 Leave a comment

மகாபாரதம்-4


Follow

Get every new post delivered to your Inbox.

Join 50 other followers